கோத்திர முகாம்களை அமைத்தல்
யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “இஸ்ரவேல் சந்ததியார்கள் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தைச் சேர்ந்த தங்கள் தங்கள் கொடியருகில் தங்களுடைய கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் முகாமிடவேண்டும். 1 கொரி 14:401 கொரி 14:33யோசு 3:4எண் 1:50எண் 1:52-53எண் 10:22எண் 10:25கொலோ 2:19 யூதாவின் முகாமின் கொடியை உடைய இராணுவங்கள் சூரியன் உதிக்கும் கிழக்குப்புறத்திலே முகாமிடவேண்டும்; அம்மினதாபின் மகனாகிய நகசோன் யூதா சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். 1 நாளாக 2:10ரூத் 4:20லூக் 3:32-33எண் 1:7எண் 10:14-161 நாளாக 5:2ஆதி 49:8-10நியாயாதி 1:1-2 எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 74,600 பேர். எண் 1:27எண் 26:22 அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:8எண் 7:18எண் 7:23எண் 1:28-29எண் 10:15எண் 26:23-25 எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 54,400 பேர். எண் 1:29எண் 26:25 அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏலோனின் மகனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:9எண் 1:30-31எண் 10:16எண் 7:24எண் 7:29 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 57,400 பேர். எண் 1:31எண் 26:26-27 எண்ணப்பட்ட யூதாவின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,86,400 பேர்; இவர்கள் பயணத்தில் முதல் முகாமாகப் போகவேண்டும். எண் 10:14 “ரூபனுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் தென்புறத்தில் முகாமிடவேண்டும்; சேதேயூரின் மகனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:51 நாளாக 5:1ஆதி 49:3-4எண் 10:18எண் 7:30எண் 7:35 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர். எண் 1:21எண் 26:7 அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:6எண் 10:19எண் 7:36எண் 7:41 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர். எண் 1:23எண் 26:14 அவன் அருகே காத் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ரேகுவேலின் மகனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்கு படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:14எண் 7:42எண் 10:20எண் 7:47 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது 45,650 பேர். எண் 1:25எண் 26:18 எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,51,450 பேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும். எண் 10:18எண் 2:24எண் 2:31எண் 2:9 “பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியர்களின் இராணுவத்தோடு முகாம்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படி முகாமிடுகிறார்களோ, அப்படியே அவரவர் தங்களுடைய வரிசையிலே தங்களுடைய கொடிகளோடு பிரயாணமாகப் போகவேண்டும். எண் 10:21எண் 10:171 கொரி 14:40கொலோ 2:5எண் 1:50-53எண் 3:38எண் 2:1 “எப்பிராயீமுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் மேற்கு புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் மகனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:10எண் 10:22ஆதி 48:14-201 நாளாக 7:26-27உபா 33:17ஆதி 48:5எரே 31:18-20எண் 1:32 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர். எண் 1:33எண் 26:37 அவன் அருகே மனாசே கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; பெதாசூரின் மகனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:10எண் 10:23எண் 7:54எண் 7:59 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 32,200 பேர். எண் 1:35எண் 26:34 அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; கீதெயோனின் மகனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:11எண் 10:24எண் 7:60எண் 7:65சங் 68:27 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 35,400 பேர். எண் 1:37எண் 26:41 எண்ணப்பட்ட எப்பிராயீமின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,08,100 பேர்; இவர்கள் பயணத்தில் மூன்றாம் முகாமாகப் போகவேண்டும். எண் 10:22எண் 2:16எண் 2:31எண் 2:9சங் 80:2 “தாணுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:12எண் 10:25எண் 7:66எண் 7:71 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 62,700 பேர். எண் 1:39எண் 26:43 அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஓகிரானின் மகனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:13எண் 7:72எண் 7:77 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 41,500 பேர். எண் 1:41எண் 26:47 அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:15எண் 1:42-43எண் 10:27எண் 26:48-50எண் 7:78எண் 7:83 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர். எண் 1:42-43எண் 26:50 எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் 1,57,600 பேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு கடைசியிலும் போகவேண்டும்”. எண் 10:25எண் 2:16எண் 2:24எண் 2:9 இவர்களே தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள். முகாம்களிலே தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 6,03,550 பேராயிருந்தார்கள். எண் 1:46யாத் 38:26யாத் 12:37எண் 11:21எண் 2:9எண் 26:51 லேவியர்களோ, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்குள்ளே எண்ணப்படவில்லை. எண் 1:47-49எண் 26:57-62 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் முகாமிட்டு, தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சங்களின்படியே பயணப்பட்டுப் போனார்கள். சங் 119:6லூக் 1:6எண் 24:2எண் 24:5-6யாத் 39:42எண் 1:54எண் 10:28எண் 2:2