இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே யெகோவாவுக்குப் பிரியம் என்று பிலேயாம் பார்த்தபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல யெகோவாவைப் பார்க்கப் போகாமல், வனாந்திரத்திற்கு நேராகத் தன்னுடைய முகத்தைத் திருப்பி, எண் 23:23எண் 22:13எண் 23:15எண் 23:20எண் 23:28எண் 23:3எண் 31:16வெளி 2:14 தன்னுடைய கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன்னுடைய கோத்திரங்களின்படியே முகாமிட்டிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது. 1 சாமு 19:202 நாளாக 15:11 சாமு 10:101 சாமு 19:23எண் 11:25-29எண் 2:2-34யோவா 11:49-51லூக் 10:20 அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: எண் 23:7எண் 24:16எண் 22:31எண் 23:18எண் 24:4
“பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது,
கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, வெளி 1:17வெளி 1:102 கொரி 12:1-4எசேக் 1:28எண் 12:61 சாமு 19:24அப் 10:10அப் 10:19
சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது,
யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே,
உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்!
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், சங் 1:3ஏசா 58:11சங் 104:16எசேக் 31:3-4எசேக் 47:12ஆதி 13:10ஆதி 2:8-10ஏசா 41:19
நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும்,
யெகோவா நாட்டின சந்தனமரங்களைப்போலவும்,
தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது.
அவர்களுடைய வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்; 2 சாமு 5:121 நாளாக 14:2எரே 51:13வெளி 17:11 சாமு 15:8-9வெளி 17:15வெளி 19:161 இராஜா 4:21
அவர்கள் விதை திரளான தண்ணீர்களில் பரவும்;
அவர்களுடைய ராஜா ஆகாகை விட உயருவான்;
அவர்களுடைய ராஜ்ஜியம் மேன்மையடையும்.
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; சங் 45:5எரே 50:17எண் 14:9எண் 23:22எண் 23:24சங் 2:9ஏசா 38:13எரே 50:9
காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு;
அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று,
அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி,
அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள்.
சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆதி 12:3ஆதி 27:29ஆதி 49:9எண் 23:24மத் 25:45யோபு 38:39-40மத் 25:40அப் 9:5
அவர்களை எழுப்புகிறவன் யார்?
உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்,
உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்”
என்றான். அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் வந்தவனாகி, கையோடு கைதட்டி, பிலேயாமை நோக்கி: “என்னுடைய எதிரிகளைச் சபிக்க உன்னை அழைத்து வந்தேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய். எசேக் 21:14எண் 23:11எசேக் 21:17எசேக் 22:13யோபு 27:23யோசு 24:9-10நெகே 13:2உபா 23:4-5 ஆகையால் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போ; உன்னை மிகவும் மேன்மைப்படுத்துவேன் என்றேன்; நீ மேன்மை அடையாதபடி யெகோவா தடுத்தார் என்றான். எண் 22:17எண் 22:371 பேது 5:2-32 யோவா 1:8அப் 8:20எபி 11:24-26மத் 19:28-30பிலி 3:8 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என்னுடைய மனதாக நன்மையையோ தீமையையோ செய்கிறதற்குக் யெகோவாவின் கட்டளையை மீறக்கூடாது; யெகோவா சொல்வதையே சொல்வேன் என்று, எண் 22:18எண் 22:38 நீர் என்னிடத்திற்கு அனுப்பின தூதுவர்களிடத்தில் நான் சொல்லவில்லையா? எண் 16:28எண் 22:18எண் 22:20 இதோ, நான் என்னுடைய மக்களிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த மக்கள் உம்முடைய மக்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும்” என்று சொல்லி. மீகா 6:5ஆதி 49:1வெளி 2:14தானி 2:282 தீமோ 3:1அப் 2:17தானி 10:14ஓசி 3:5
பிலேயாமின் நான்காவது தேவ வாக்கு
அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: எண் 23:7எண் 24:3-4யோபு 27:1மத் 13:35எண் 23:18
“பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது,
கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, எண் 24:41 கொரி 13:21 கொரி 8:12 சாமு 23:1-2
உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து,
உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு,
தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது;
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; வெளி 22:16லூக் 1:32-33ஆதி 49:10வெளி 1:7வெளி 11:152 பேது 1:19மத் 2:2-9சங் 45:6
அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல;
ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்,
ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்;
அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி,
சேத் சந்ததி 1 எல்லோரையும் நிர்மூலமாக்கும்.
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்; ஆமோ 9:122 சாமு 8:14ஆதி 27:29ஆதி 27:40ஆதி 32:3ஏசா 34:5ஏசா 63:1சங் 60:1
இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.
யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; ஆதி 49:10மத் 28:18மீகா 5:2சங் 2:1-121 கொரி 15:251 பேது 3:22எபே 1:20-22ஏசா 11:10
பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார்”
என்றான்.
பிலேயாமின் கடைசி தேவ வாக்கு
மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, யாத் 17:14யாத் 17:81 நாளாக 4:431 சாமு 14:481 சாமு 15:3-81 சாமு 27:8-91 சாமு 30:11 சாமு 30:17
தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.
அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, ஆதி 15:19நியாயாதி 1:16யோபு 29:18
தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“உன்னுடைய தங்குமிடம் பாதுகாப்பானது;
உன்னுடைய கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; எஸ்றா 4:2ஆதி 10:11ஆதி 10:22சங் 83:8ஓசி 14:3
அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும்” என்றான்.
பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்; எண் 23:232இராஜா 5:1மல்கி 3:2 கித்தீமின் கடல் துறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான்” என்றான். ஆதி 10:4தானி 10:20தானி 11:30ஆதி 10:21-25எண் 24:20தானி 11:45தானி 2:35தானி 2:45 பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன்னுடைய வழியே போனான். எண் 31:8யோசு 13:22எண் 24:11