பாபிலோனும் தேவனின் நியாயத்தீர்ப்பின் வாளும்
அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன்னுடைய வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி. எசேக் 20:46எசேக் 4:7எசேக் 25:2எசேக் 28:21அப் 6:13-14ஆமோ 7:16உபா 32:2எபே 6:19 இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் நீதிமானையும் துன்மார்க்கனையும் அழிப்பேன். எசேக் 5:8எரே 21:13யோபு 9:22எசேக் 14:17எசேக் 14:21எசேக் 21:19எசேக் 21:9-11எசேக் 5:12 நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அழிக்கப்போகிறதினால் தெற்கு துவக்கி வடக்குவரையும் உள்ள எல்லா மாம்சத்திற்கும் எதிராக என்னுடைய வாள் அதின் உறையிலிருந்து புறப்படும். எசேக் 20:47எசேக் 7:2எசேக் 6:11-14 அப்பொழுது யெகோவாகிய நான் என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை. எசேக் 21:30நாகூ 1:91 சாமு 3:12எசேக் 20:48எரே 23:201 இராஜா 9:7-9உபா 29:24-28ஏசா 45:23 ஆதலால் மனிதகுமாரனே, உன்னுடைய இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிடு; அவர்களுடைய கண்களுக்கு முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவிடு. எசேக் 6:11ஏசா 22:4தானி 5:6தானி 8:27எசேக் 12:3-5எசேக் 21:12எசேக் 37:20எசேக் 4:12 நீ எதற்காக பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதற்காகவே; அதினால், இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல தள்ளாடும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். எசேக் 7:17எசேக் 7:26எபி 12:12ஏசா 13:7எரே 50:43நாகூ 2:102இராஜா 21:122 சாமு 17:10 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: வாள் கூர்மையாக்கப்பட்டது, வாள் கூர்மையாக்கப்பட்டது; அது தீட்டப்பட்டும் இருக்கிறது. எசேக் 21:28எசேக் 21:3ஏசா 34:5-6ஆமோ 9:4உபா 32:41-42எசேக் 21:15ஏசா 27:1ஏசா 66:16 பெரிய அழிவுண்டாக்குவதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாக அது தீட்டப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என்னுடைய மகனுடைய கோல், அது எல்லா மரங்களையும் அலட்சியம்செய்யும். சங் 110:5-6எசேக் 20:472 சாமு 7:14ஆமோ 6:3-7பிரச 3:4எஸ்த 3:15எசேக் 19:11-14எசேக் 21:25-27 அதைக் கையாடும்படி அதைத் துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது தீட்டப்பட்டதுமாக இருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல். எசேக் 21:19எரே 25:33எரே 25:9எரே 51:20-23 மனிதகுமாரனே, நீ சத்தமிட்டு கதறு; வாள் என்னுடைய மக்களின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதற்காக என்னுடைய மக்களுக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன்னுடைய விலாவிலே அடித்துக்கொள். எசேக் 21:6யோவே 1:13எசேக் 21:14எசேக் 30:2எசேக் 6:11எசேக் 9:8எரே 25:34எரே 31:12 யாவையும் கண்டிக்கிற கோல் வந்தால் தவிர இனிச் சோதனையினால் தீருகிறது என்னவென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 2 கொரி 8:2எசேக் 21:10எசேக் 21:25யோபு 9:23 ஆகையால் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைதட்டு; வாள் மூன்றுமுறை இரட்டித்துவரும்; அது கொலை செய்யப்பட்டவர்களின் வாள்; அது கொலைசெய்யப்படப்போகிற பெரியவர்களின் உள் அறைகளில் நுழைகிற வாள். 2இராஜா 24:1எண் 24:102இராஜா 24:10-16எசேக் 6:11லேவி 26:21லேவி 26:241 இராஜா 20:301 இராஜா 22:25 அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் அதிகமாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் சம்பவிக்கக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது. எசேக் 21:10எரே 17:272 சாமு 17:10எசேக் 15:7எசேக் 20:47எசேக் 21:22எசேக் 21:28எசேக் 21:7 ஒரே பலமாக வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன்னுடைய முகம் 1 திரும்புகிற திசையெல்லாம் வெட்டு. எசேக் 14:17எசேக் 16:46எசேக் 21:20எசேக் 21:4ஆதி 13:9 நானும் கையுடன் கைதட்டி, என்னுடைய கடுங்கோபத்தை ஆறச்செய்வேன் என்று யெகோவாகிய நான் சொன்னேன் என்றார். எசேக் 5:13எசேக் 21:14எசேக் 22:13சகரி 6:8உபா 28:63எசேக் 16:42ஏசா 1:24எண் 24:10 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவின் வாள் வரக்கூடிய இரண்டு வழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்திற்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள். எசேக் 4:1-3எரே 1:10எசேக் 5:1-17 வாள் அம்மோனியர்களின் பட்டணமாகிய ரப்பாவுக்கு விரோதமாக வரக்கூடிய ஒரு வழியையும், யூதாவில் இருக்கிற பாதுகாப்பான எருசலேமுக்கு விரோதமாக வரக்கூடிய ஒரு வழியையும் குறித்துக்கொள். ஆமோ 1:14எரே 49:2உபா 3:11எசேக் 25:5சங் 125:1-2சங் 48:12-132 நாளாக 26:92 நாளாக 32:5 பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே குறிபார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, சிலைகளை ஆட்டி, ஈரலால் குறிபார்ப்பான். நியாயாதி 17:5நியாயாதி 18:20நீதி 16:33அப் 16:16ஆதி 31:19ஆதி 31:301 சாமு 15:232இராஜா 23:24 தலைவரை நியமிக்கிறதற்கும், அழிக்கும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாகச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் இயந்திரங்களை வைக்கிறதற்கும், மண்மேடு போடுகிறதற்கும், முற்றுகைச் சுவர்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து குறிபார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும். எசேக் 4:2எசேக் 26:91 சாமு 17:20யாத் 32:17-18எரே 32:24எரே 33:4எரே 51:14எரே 52:4 இந்த குறியானது வாக்கு கொடுத்தவர்களுக்கு முன்பாகப் பொய்யாகத் தோன்றும்; ஆயினும் அவர்கள் பிடிக்கப்படும்படி அவன் அவர்களுடைய துரோகத்தை நினைப்பான். எண் 5:15எசேக் 21:24எசேக் 29:161 இராஜா 17:182 நாளாக 36:132இராஜா 24:20எசேக் 11:3எசேக் 12:22 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்களுடைய செய்கைகளிலெல்லாம் உங்களுடைய பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்களுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்கிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாக பிடிக்கப்படுவீர்கள். ஓசி 4:2ஆமோ 9:1-3எசேக் 16:16-22எசேக் 22:24-31எசேக் 22:3-12எசேக் 23:5-21எசேக் 24:7ஏசா 22:17-18 இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்திற்கு முடிவு வருங்காலத்தில் உன்னுடைய நாள் வந்தது. எசேக் 35:52 நாளாக 36:13எசேக் 17:19எசேக் 21:29எரே 52:2எசேக் 30:3எசேக் 7:6எரே 24:8 தலைப்பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு; அது இனி முன்பு போல இருக்காது; தாழ்ந்தவனை உயர்த்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன். எசேக் 17:24சங் 75:7எரே 13:18எரே 52:31-34எசேக் 16:12எரே 52:9-11லூக் 1:521 சாமு 2:7-8 அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வரும்வரை அது இல்லாமல் இருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். மீகா 5:2எரே 23:5-6லூக் 1:32சகரி 9:9சங் 2:61 பேது 3:22ஆதி 49:10ஆகா 2:21-22 பின்னும் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோனியர்களையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், எசேக் 21:20எசேக் 21:9-10செப்ப 2:8-10ஆமோ 1:13-15எசேக் 25:2-7எரே 12:12எரே 49:1-5 அக்கிரமத்திற்கு முடிவு வருங்காலத்தில் வந்த தங்களுடைய நாளுக்கு ஏதுவாகி, கொலைசெய்யப்பட்டு போனவர்களுடைய பிடரிகளோடேகூட உன்னைத் துன்மார்க்கரின் கையினால் விழச்செய்யும்படி, உனக்கு பொய்யானது பார்க்கப்படுகிறபோதும், உனக்குப் பொய்குறி பார்க்கப்படுகிறபோதும் வாள் உருவப்பட்டது, வாளே உருவப்பட்டது; வெட்டவும், அழிக்கவும் அது மின்னக்கூடியதாகத் தீட்டப்பட்டிருக்கிறது. எசேக் 21:25எசேக் 22:28எரே 27:9சங் 37:13எசேக் 12:24எசேக் 13:10எசேக் 13:23எசேக் 13:6 உன்னுடைய வாளை நீ திரும்ப அதின் உறையிலே போடு; நீ உண்டாக்கப்பட்ட இடமாகிய உன்னுடைய பிறந்த நாட்டிலே நான் உன்னை நியாயந்தீர்த்து, எசேக் 16:38ஆதி 15:14எரே 47:6-7எசேக் 16:3-4எசேக் 21:4-5எசேக் 28:13எசேக் 28:15 என்னுடைய கோபத்தை உன்மேல் ஊற்றுவேன்; நான் என்னுடைய கடுங்கோபத்தின் நெருப்பை உன்மேல் ஊதி, மிருககுணமுள்ளவர்களும், அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்களுமாகிய மனிதர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன். எசேக் 14:19எசேக் 7:8ஆகா 1:9ஏசா 30:33எரே 4:7எரே 6:22-23நாகூ 1:6சங் 18:15 நீ நெருப்புக்கு இரையாவாய்; உன்னுடைய இரத்தம் உன்னுடைய தேசத்தின் நடுவில் சிந்தப்படும்; நீ இனி நினைக்கப்படுவதில்லை; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்றார். எசேக் 25:10மல்கி 4:1எசேக் 20:47-48எசேக் 21:30ஏசா 34:3-7மத் 24:35மத் 3:10மத் 3:12