ரோமர் 10

Romans 10
அத்தியாயம் 10

சகோதரர்களே, இஸ்ரவேல் மக்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனிடம் செய்யும் விண்ணப்பமாகவும் இருக்கிறது. 1 கொரி 9:20-22யோவா 5:34ரோம 9:1-3யாத் 32:13எரே 17:16எரே 18:201 சாமு 12:23யாத் 32:10 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியம் உண்டு என்று அவர்களைக்குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆனாலும் அது அறிவிற்குரிய வைராக்கியம் இல்லை. அப் 21:20ரோம 9:31-32நீதி 19:2பிலி 1:9பிலி 3:6ரோம 10:3கலா 1:142 கொரி 4:4 எப்படியென்றால், அவர்கள் தேவனுடைய நீதியை அறியாமல், தங்களுடைய சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறதினால் தேவனுடைய நீதிக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். லூக் 16:15பிலி 3:92 கொரி 5:21லூக் 18:9-12வெளி 3:17-18ரோம 5:19ரோம 1:17ஏசா 51:8 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார். கலா 3:24ரோம 8:3-4மத் 5:17-18அப் 13:38-39யோவா 1:17எபி 10:14ஏசா 53:11கொலோ 2:10 மோசே நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைக்குறித்து: இவைகளை செய்கிற மனிதன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான். லேவி 18:5எசேக் 20:11நெகே 9:29எசேக் 20:13எசேக் 20:21கலா 3:12லூக் 10:27-28ரோம 7:10 விசுவாசத்தினால் வரும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணுவதற்காக பரலோகத்திற்கு ஏறுகிறவன் யார்? உபா 30:11-14நீதி 30:4எபே 4:8-10யோவா 3:12-13யோவா 6:58பிலி 3:9ரோம 3:22ரோம 4:13 அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; எபி 13:20வெளி 1:18ரோம 4:251 பேது 3:181 பேது 3:22

இந்த வார்த்தை உன் அருகில் உன் வாயிலும் உபா 30:14ரோம 1:16-171 தீமோ 4:61 பேது 1:25கலா 3:2அப் 10:43கலா 3:5ரோம 10:17

உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது;

இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் என்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். லூக் 12:8அப் 16:31பிலி 2:11மத் 10:32-331 யோவா 4:2-31 பேது 1:21ரோம 8:341 கொரி 15:14-18 இருதயத்திலே விசுவாசிக்கிறதினால் நீதி உண்டாகும். வாயினாலே அறிக்கைபண்ணுகிறதினால் இரட்சிப்பு உண்டாகும். 1 யோவா 4:15ரோம 10:9கலா 2:16யோவா 1:12-13யோவா 3:19-21எபி 10:22எபி 3:12லூக் 8:15 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவது இல்லை என்று வேதம் சொல்லுகிறது. ஏசா 28:16ரோம 9:331 பேது 2:6ஏசா 49:23எரே 17:7 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லோருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற எல்லோரையும் அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார். பிலி 4:19வெளி 17:14கலா 3:28ரோம 3:22கொலோ 3:11சங் 86:5சங் 145:18எபே 1:7 எனவே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அப் 2:21யோவே 2:32 அவரை விசுவாசிக்காதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? மாற் 16:15-16அப் 26:17-18தீத் 1:3அப் 8:31எபி 11:62 தீமோ 4:17எபே 4:21யாக் 5:15 அனுப்பப்படவில்லை என்றால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைச் சொல்லி, நல்ல காரியங்களை நற்செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. ஏசா 52:7நாகூ 1:15எபே 2:17மத் 28:18-20ஏசா 61:1எபே 6:15ஏசா 40:9எபே 3:8 ஆனாலும் நற்செய்திக்கு அவர்கள் எல்லோரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். ஏசா 53:1ரோம 3:3யோவா 12:38-40எபி 4:22 தெச 1:8கலா 5:71 பேது 2:8எபி 11:8 எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும். கலா 3:2கலா 3:5லூக் 11:28கொலோ 3:161 தெச 2:13மாற் 4:24லூக் 8:21ரோம 1:16 இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே. சங் 19:4மத் 24:14ரோம 1:81 தெச 1:8கொலோ 1:23கொலோ 1:6மாற் 16:15மத் 28:19 இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது மோசே: உபா 32:21ரோம 11:11ரோம 11:141 பேது 2:10தீத் 3:31 கொரி 1:12ஏசா 44:18-20சங் 115:5-8

என் மக்களாக இல்லாதவர்களைக் கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்;

புத்தியீனமுள்ள மக்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன்” என்றான். அல்லாமலும் ஏசாயா: ஏசா 65:1-2ரோம 9:30ஏசா 55:4-5மத் 22:9-10ஏசா 49:6எபே 6:19-20ஏசா 52:15லூக் 14:23

என்னைத் தேடாதவர்களாலே கண்டுபிடிக்கப்பட்டேன்,

என்னைக் கேட்காதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்” என்று தைரியத்தோடு சொல்லுகிறான்.

இஸ்ரவேலரைக்குறித்தோ: “கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன்” என்று அவன் சொல்லியிருக்கிறான். ஏசா 65:2-51 பேது 2:8எரே 35:15மத் 21:33-43நெகே 9:26நீதி 1:241 தெச 2:16அப் 13:46-47