ரோமர் 12

Romans 12
அத்தியாயம் 12

தேவனுடைய கிருபைகள்

அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை. 1 பேது 2:5ரோம 6:13எபி 13:15-16ரோம 6:19எபே 4:1ரோம 12:2சங் 19:141 பேது 2:10-12 நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். 1 பேது 1:14எபே 4:22-242 கொரி 5:17கொலோ 3:101 யோவா 2:15-17எபே 5:17எசேக் 36:261 பேது 4:2 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி, தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும். கலா 6:3பிலி 2:3-8நீதி 26:121 பேது 5:5ரோம 12:16பிரச 7:161 பேது 5:8யாக் 4:6 ஏனென்றால், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக உறுப்புகள் இருந்தும், எல்லா உறுப்புகளுக்கும் ஒரே வேலை இல்லாததைப்போல, 1 கொரி 12:271 கொரி 12:12-14எபே 4:15-161 கொரி 12:4எபே 4:4 அநேகராகிய நாமும் கிறிஸ்துவிற்குள் ஒரே சரீரமாக இருக்க, ஒருவருக்கொருவர் உறுப்புகளாக இருக்கிறோம். 1 கொரி 12:201 கொரி 12:27-281 கொரி 10:17எபே 4:25எபே 5:30கொலோ 2:191 கொரி 10:331 கொரி 12:12-14 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களாக இருக்கிறதினால், நம்மில் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவன் விசுவாசப்பிரமாணத்தின்படி சொல்லட்டும். 1 பேது 4:10-111 கொரி 7:71 கொரி 12:28-311 கொரி 12:4-11ரோம 12:31 கொரி 13:21 கொரி 14:11 கொரி 14:3-5 ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், 1 தீமோ 5:172 தீமோ 4:2அப் 13:1எபே 4:111 தீமோ 2:71 தீமோ 3:21 தீமோ 4:162 தீமோ 2:2 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் நிலைத்திருக்கவேண்டும்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கட்டும்; முதலாளியானவன் கவனமாக இருக்கவேண்டும்; இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யட்டும். 2 கொரி 9:71 தீமோ 5:171 கொரி 12:281 தீமோ 3:4-5அப் 15:321 தெச 5:12-14அப் 13:15அப் 20:2

அன்பும் மற்ற செயல்களும்

உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள். சங் 34:141 பேது 4:81 தீமோ 1:51 யோவா 3:18-201 பேது 3:10-111 தெச 5:211 பேது 1:22ஆமோ 5:15 சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். பிலி 2:3யோவா 13:34-35எபி 13:11 யோவா 4:111 பேது 3:8-91 பேது 1:221 பேது 2:171 தெச 4:9 அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். எபி 6:10-11அப் 18:25நீதி 13:4வெளி 3:15-161 பேது 4:8கொலோ 3:22-24எபி 12:28எபே 4:28 நம்பிக்கையிலே சந்தோஷமாக இருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாக இருங்கள்; ஜெபத்திலே உறுதியாக நிலைத்திருங்கள். ரோம 15:13எபி 10:36சங் 62:8ரோம 5:2-4பிலி 4:6-7யாக் 5:71 பேது 4:131 தெச 5:16-17 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியர்களை உபசரியுங்கள். எபி 13:162 கொரி 9:121 யோவா 3:17கலா 6:10எபி 6:101 பேது 4:9எபி 13:21 தீமோ 3:2 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டுமேதவிர சபிக்காமல் இருங்கள். 1 பேது 3:9மத் 5:441 தெச 5:151 கொரி 4:12-13ரோம 12:21லூக் 6:28யாக் 3:10லூக் 23:34 சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களோடு அழுங்கள். 1 கொரி 12:26எபி 13:3சங் 35:13-14யோவா 11:33-36யோபு 30:25லூக் 1:58பிலி 2:17-18அப் 11:23 ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல், தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம். 1 பேது 3:8நீதி 3:7யாக் 3:13-17பிலி 2:2-3எபி 13:5ரோம 12:31 கொரி 3:18ரோம 15:5 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல் இருங்கள்; எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யுங்கள். நீதி 20:221 தெச 5:151 பேது 3:9மத் 5:392 கொரி 8:20-21பிலி 4:8-9ரோம 12:191 பேது 2:12 உங்களால் முடிந்தவரை எல்லா மனிதர்களோடும் சமாதானமாக இருங்கள். எபி 12:14மத் 5:9ரோம 14:192 கொரி 13:11யாக் 3:16-18கலா 5:22மாற் 9:50நீதி 12:20 பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள். உபா 32:35எபி 10:30நீதி 24:29நீதி 20:22ரோம 12:171 தெச 4:6ரோம 12:14லேவி 19:18 அன்றியும், நீதி 25:21-22மத் 5:44லூக் 6:27யாத் 23:4-52இராஜா 6:221 சாமு 24:16-191 சாமு 26:21உன்னத 8:6-7

உன் பகைவன் பசியாக இருந்தால்,

அவனுக்கு ஆகாரம் கொடு;

அவன் தாகமாக இருந்தால்,

அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு;

நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.”

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. 1 பேது 3:9லூக் 6:27-30நீதி 16:32