சவுலின் மரணம்
பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்கு முன்பாக தப்பியோடினர். அநேகர் கில்போவா மலையில் வெட்டப்பட்டு விழுந்தனர். 1 நாளாக 10:81 சாமு 31:1-131 சாமு 28:42 சாமு 1:212 சாமு 1:61 சாமு 28:11 சாமு 29:1-22 சாமு 21:12 பெலிஸ்தியர் சவுலையும், அவனுடைய மகன்களையும் பின்தொடர்ந்து துரத்திச்சென்று அவர்களில் யோனத்தானையும், அபினதாபையும், மல்கிசூவாவையும் கொன்றார்கள். 1 நாளாக 9:39ஏசா 57:1-21 நாளாக 8:331 சாமு 14:39-401 சாமு 14:491 சாமு 14:62இராஜா 23:292இராஜா 25:7 சவுலைச் சுற்றிலும் யுத்தம் தீவிரமடைந்தது. வில்வீரர்கள் நெருங்கிவந்து அவனைக் காயப்படுத்தினர். 1 சாமு 31:3-62 சாமு 1:4-10ஆமோ 2:14ஆதி 49:23-24
அப்பொழுது சவுல் தனது யுத்த ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு உனது வாளினால் என்னை உருவக்குத்து” என்றான். 1 சாமு 31:4அப் 1:181 நாளாக 10:51 இராஜா 16:181 சாமு 14:61 சாமு 17:261 சாமு 17:362 சாமு 1:14-16
ஆனால் அவனுடைய யுத்த ஆயுதங்களைச் சுமப்பவன் பயத்தினால் அப்படிச் செய்யவில்லை. எனவே சவுல் தன் சொந்த வாளை எடுத்து அதன்மேல் விழுந்தான். யுத்த ஆயுதம் சுமப்பவன் சவுல் இறந்ததைக் கண்டதும் தானும் தனது வாள்மேல் விழுந்து இறந்தான். இவ்வாறு சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் இறந்தனர்; அவனுடைய முழுக் குடும்பமும் ஒருமித்து அழிந்துபோயிற்று. 1 சாமு 12:25பிரச 9:1-2ஓசி 13:10-111 சாமு 4:10-111 சாமு 4:18
பள்ளத்தாக்கிலே இருந்த இஸ்ரயேல் மக்கள் போர்வீரர் ஓடிப்போவதையும், சவுலும் அவன் மகன்களும் இறந்துபோனதையும் கண்டபோது, அவர்களும் தாங்கள் இருந்த பட்டணங்களைவிட்டு தப்பியோடினர். உடனே பெலிஸ்தியர் அங்கே வந்து குடியேறினர். 1 சாமு 13:61 சாமு 31:7உபா 28:33உபா 28:43நியாயாதி 6:2லேவி 26:31லேவி 26:36
மறுநாள் இறந்தவர்களின் உடைமைகளை எடுத்துக்கொள்ள பெலிஸ்தியர் வந்தபோது, சவுலும் அவனுடைய மகன்களும் கில்போவா மலையில் இறந்துகிடக்கக் கண்டார்கள். 1 சாமு 31:82 நாளாக 20:252இராஜா 3:23 எனவே அவர்கள் அவனுடைய உடையைக் கழற்றி, தலையை வெட்டி அவனுடைய யுத்த கவசங்களையும் எடுத்துக்கொண்டார்கள். பின்பு அச்செய்தியை தங்கள் தெய்வங்களுக்கும் தங்கள் மக்களுக்கும் அறிவிக்கும்படி, தூதுவர்களை பெலிஸ்திய நாடு எங்கும் அனுப்பினார்கள். 1 சாமு 31:9-102 சாமு 1:201 நாளாக 10:4தானி 5:2-4தானி 5:23நியாயாதி 16:23-24மத் 14:11 அவர்கள் அவனுடைய ஆயுதங்களை தங்கள் தெய்வங்களின் கோவிலில் வைத்தனர். அவனுடைய தலையையோ தாகோனின் கோவிலில் கட்டித் தொங்கவிட்டனர். 1 சாமு 31:101 சாமு 5:2-7
பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையும் கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டண மக்கள் கேள்விப்பட்டார்கள். 2 சாமு 2:4-71 சாமு 11:1-111 சாமு 31:11-13 அப்பொழுது அவர்களின் வலிமைவாய்ந்த மனிதர்கள் சென்று, சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் யாபேசுக்குக் கொண்டுவந்தார்கள். அங்கே யாபேசிலுள்ள ஒரு கர்வாலி மரத்தின் கீழே எலும்புகளை அடக்கம்பண்ணி ஏழு நாட்கள் உபவாசம் இருந்தார்கள். 2 சாமு 21:12-142 சாமு 3:35ஆதி 35:8ஆதி 50:10
சவுல் யெகோவாவுக்கு முன்பாக உண்மையற்றவனாகக் காணப்பட்டதால் இறந்தான்; அதோடு அவன் யெகோவாவினுடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல் குறிபார்ப்பவர்களிடத்திலும் ஆலோசனை பெற்றான். லேவி 20:6லேவி 19:311 சாமு 15:23ஏசா 8:191 சாமு 28:7-20உபா 18:10-141 சாமு 15:2யாத் 22:18 அவன் யெகோவாவிடம் விசாரிக்கவில்லை. எனவே யெகோவா அவனைக் கொன்று, அரசாட்சியை ஈசாயின் மகனான தாவீதிற்குக் கொடுத்தார். 1 சாமு 15:281 சாமு 13:141 சாமு 16:11 சாமு 28:171 நாளாக 12:231 சாமு 28:62 சாமு 3:9-10நியாயாதி 10:11-16