1 இராஜாக்கள் 1

1 Kings 1

சாலொமோன் அரசனாதல்

தாவீது அரசன் முதிர்ந்த கிழவனாய் படுக்கையிலேயே கிடந்தான். அவனை துணிகளினால் போர்த்தியபோதும் அவனுக்குக் குளிர் தாங்கமுடியாதிருந்தது. 1 நாளாக 29:27-28யோசு 23:1-21 நாளாக 23:1சங் 90:102 சாமு 5:4ஆதி 18:11ஆதி 24:1லூக் 1:7 எனவே அவனுடைய பணியாட்கள் அவனிடம், “அரசனைப் பராமரிப்பதற்கு ஒரு கன்னிப் பெண்ணைத் தேடுவோம். அவள் அரசனுக்கு உதவி வேலையைச் செய்யட்டும். அவள் எஜமானாகிய அரசன் சூடாக இருக்கும்படி அவருக்குப் பக்கத்திலேயே படுத்துக்கொள்ளட்டும்” என்றார்கள். பிரச 4:11ஆதி 16:5மீகா 7:51 சாமு 16:21-222 சாமு 12:3உபா 10:8உபா 13:62 நாளாக 29:11

அதன்படியே அவர்கள் இஸ்ரயேல் நாடு முழுவதிலும் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் நாட்டைச் சேர்ந்த அபிஷாக் என்னும் அழகிய பெண்ணைக் கண்டு அரசனிடம் கொண்டுவந்தார்கள். எஸ்த 2:4யோசு 19:18எஸ்த 2:22இராஜா 4:81 சாமு 28:41 இராஜா 2:17-252இராஜா 4:25 அவள் அதிக அழகுள்ள பெண்ணாக இருந்தாள். அவள் அரசனைக் கவனித்து அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்துவந்தாள். ஆனால் அரசன் அவளுடன் உடலுறவு கொள்ளவில்லை. மத் 1:25

அந்த வேளையில் அரசன் தாவீதின் மகன் அதோனியா முன்வந்து, “நான் அரசனாவேன்” என்றான். அவனுடைய தாயின் பெயர் ஆகீத். எனவே அவன் தேர்களையும், குதிரைகளையும், ஐம்பது மனிதரையும் தனக்கு முன் செல்வதற்கு ஆயத்தப்படுத்தினான். 2 சாமு 15:12 சாமு 3:41 நாளாக 28:51 நாளாக 29:11 இராஜா 1:111 இராஜா 2:24உபா 17:15-16யாத் 9:17 அவனுடைய தகப்பனான அரசன் தாவீது, “நீ ஏன் இவ்விதம் நடக்கவேண்டும்” என்று கேட்டு அவன் செயல்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை. அப்சலோமுக்குப் பின் பிறந்த இவன் மிகவும் அழகிய தோற்றமுள்ளவனாய் இருந்தான். 2 சாமு 3:3-41 சாமு 3:131 நாளாக 3:2எபி 12:5-6நீதி 22:15நீதி 23:13-14நீதி 29:151 சாமு 10:23

அதோனியா செருயாவின் மகன் யோவாபுடனும், ஆசாரியனான அபியத்தாருடனும் ஆலோசித்தான். அவர்கள் அவனுக்குத் தங்கள் ஆதரவைக் கொடுத்தார்கள். 2 சாமு 20:251 இராஜா 2:221 நாளாக 11:61 இராஜா 2:26-351 சாமு 22:20-232 சாமு 15:122 சாமு 15:24-292 சாமு 15:35 ஆனால் ஆசாரியனான சாதோக்கும், யோய்தாவின் மகன் பெனாயாவும், இறைவாக்கினனான நாத்தானும், சீமேயியும், ரேயியும் தாவீதின் விசேஷ காவலனும் அதோனியாவுடன் சேரவில்லை. 1 இராஜா 4:182 சாமு 20:252 சாமு 23:8-391 நாளாக 11:10-471 நாளாக 27:5-61 இராஜா 2:352 சாமு 12:1-152 சாமு 7:2-4

அதன்பின் அதோனியா என்ரொகேலுக்கு அருகேயிருந்த சோகெலேத் என்னும் கல்லின்மேல் செம்மறியாடுகளையும், மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். மேலும் அவன் தன்னுடைய சகோதரரையும், அரசனின் மகன்களையும், யூதாவிலிருந்த அரச அதிகாரிகளான எல்லா மனிதர்களையும் அழைத்தான். 2 சாமு 17:172 சாமு 13:23-272 சாமு 15:11-12யோசு 15:7நீதி 15:8 ஆனால் இறைவாக்கினனான நாத்தானையோ, பெனாயாவையோ, விசேஷ காவலனையோ, தனது சகோதரன் சாலொமோனையோ அவன் அழைக்கவில்லை. 2 சாமு 12:241 இராஜா 1:191 இராஜா 1:82 சாமு 12:1-15

அப்பொழுது நாத்தான், சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் போய், “ஆகீத்தின் மகனாகிய அதோனியா எங்கள் தலைவனாகிய தாவீதுக்குத் தெரியாமலேயே அரசனாகியதை நீ கேள்விப்படவில்லையா? 2 சாமு 3:41 நாளாக 22:9-101 நாளாக 28:4-51 நாளாக 29:12 சாமு 12:24-252 சாமு 7:12-17 இப்போது உனது உயிரையும், உனது மகன் சாலொமோனின் உயிரையும் காப்பாற்ற நீ விரும்பினால், நான் உனக்கு ஆலோசனை சொல்வேன். 1 இராஜா 1:212 நாளாக 21:42 நாளாக 22:102இராஜா 11:1அப் 27:31ஆதி 19:17நியாயாதி 9:5எரே 38:15 நீ தாவீது அரசனிடம் போய், ‘என் தலைவனாகிய அரசே, அடியாளாகிய எனக்கு: “உமது மகன் சாலொமோனே உமக்குப்பின் உமது அரியணையிலிருந்து அரசாளுவான் என்று ஆணையிட்டு வாக்களித்தீரல்லவா”? அப்படியிருக்க ஏன் அதோனியா அரசனாகிறான்?’ என்று கேள். 1 இராஜா 1:301 இராஜா 1:171 நாளாக 22:6-131 இராஜா 2:12லூக் 1:32-33சங் 132:11-121 நாளாக 29:231 இராஜா 1:11 அவ்வாறு நீ அரசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் வந்து நீ கூறியவற்றை உறுதிப்படுத்துவேன்” என்றான். 2 கொரி 13:11 இராஜா 1:17-27

அப்பொழுது பத்சேபாள் மிகவும் வயதுசென்றவனாயிருந்த அரசனின் அறைக்குள் அவனைப் பார்க்கச் சென்றாள். அங்கு சூனேம் ஊராளான அபிஷாக், அரசனுக்கு உதவி வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். 1 இராஜா 1:1 பத்சேபாள் அரசனின் முன் தலைகுனிந்து முழங்காற்படியிட்டாள். 1 சாமு 20:411 சாமு 24:81 சாமு 25:231 இராஜா 1:231 இராஜா 2:20எஸ்த 7:2மத் 20:21மத் 20:32

அரசன் அவளைப் பார்த்து, “உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டான்.

அதற்கு அவள், “என் தலைவனே, உமக்குப்பின் எனது மகனாகிய சாலொமோனே உமது அரியணையில் இருக்கும் அடுத்த அரசனாவான் என்று, உமது இறைவனாகிய யெகோவாவின் பேரில் உமது அடியவளாகிய எனக்கு நீர் வாக்குப்பண்ணினீரே. 1 இராஜா 1:131 இராஜா 1:301 பேது 3:6ஆதி 18:12 ஆனால் இப்போது அதோனியா அரசனாகிவிட்டான். என் தலைவனாகிய அரசனுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. 1 இராஜா 1:241 இராஜா 1:111 இராஜா 1:271 இராஜா 1:52 சாமு 15:10அப் 3:17 அவன் பெருந்தொகையான மாடுகளையும், கொழுத்த கன்றுகளையும், செம்மறியாடுகளையும் பலிசெலுத்தினான். அது மட்டுமல்லாமல் அரசனின் எல்லா மகன்களையும் ஆசாரியனான அபியத்தாரையும், இராணுவத் தளபதியான யோவாப்பையும் அழைத்திருந்தான். உமது அடியவனாகிய சாலொமோனையோ அழைக்கவில்லை. 1 இராஜா 1:251 இராஜா 1:7-10 என் தலைவனாகிய அரசே, இப்பொழுது என் தலைவனாகிய அரசனின் அரியணையில் அவருக்குப் பின் யார் அரசனாய் இருப்பான் என்று அறிவதற்காக எல்லா இஸ்ரயேலருடைய கண்களும் உம் மேலேயே இருக்கின்றன. 1 நாளாக 22:8-101 நாளாக 28:101 நாளாக 28:5-61 நாளாக 29:12 நாளாக 20:122 சாமு 23:2சங் 123:2சங் 25:15 இல்லாவிட்டால் என் தலைவனாகிய அரசன் உமது முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டபின்பு, நானும் என் மகன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள். 1 இராஜா 2:10உபா 31:161 இராஜா 2:151 இராஜா 2:22-242 சாமு 7:12ஆதி 15:15

அவள் இவ்வாறு அரசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இறைவாக்கினன் நாத்தான் அங்கு வந்தான். தானி 9:20ஆதி 24:15யோபு 1:16-18 அவர்கள் அரசனிடம், “இறைவாக்கினன் நாத்தான் இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள். அப்பொழுது நாத்தான் அரசனிடம் வந்தபோது, அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கினான். 1 இராஜா 1:161 பேது 2:17ரோம 13:7

நாத்தான் அரசனிடம், “தலைவனாகிய அரசனே! உமக்குப்பின் அதோனியாவே அரசனாக உமது அரியணையில் இருப்பான் என்று எப்போதாகிலும் நீர் அறிவித்திருக்கிறீரோ? 1 இராஜா 1:13-141 இராஜா 1:17-181 இராஜா 1:5 இன்று அவன் பெருந்தொகையான மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் அநேகம் செம்மறியாடுகளையும் பலி செலுத்தியிருக்கிறான். அவன் அரசனின் எல்லா மகன்களையும் இராணுவ தளபதிகளையும் ஆசாரியன் அபியத்தாரையும் அழைத்திருக்கிறான். அவர்கள் இப்பொழுது அவனுடன் சாப்பிட்டுக் குடித்து, ‘அரசனாகிய அதோனியா நீடூழி வாழவேண்டும்’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள். 1 சாமு 10:241 இராஜா 1:191 இராஜா 1:91 நாளாக 29:131 நாளாக 29:211 இராஜா 1:341 சாமு 11:14-152 நாளாக 23:11 ஆனால் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியன் சாதோக்கையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும் உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை. 1 இராஜா 1:81 இராஜா 1:101 இராஜா 1:192 சாமு 12:252 சாமு 7:12-172 சாமு 7:2 இது, எங்கள் அரசனாகிய தலைவன் தமக்குப்பின்பு யார் அரியணையில் இருக்கவேண்டும் என தமது பணியாட்களுக்கு அறிவிக்காமல் செய்த ஒரு காரியமோ?” என்றான். 1 இராஜா 1:242இராஜா 4:27யோவா 15:15

தாவீது சாலொமோனை அரசனாகத் தெரிந்தெடுத்தல்

அப்பொழுது தாவீது, “பத்சேபாளை இங்கு கூப்பிடுங்கள்” என்று கூறினான். அவள் உள்ளே வந்து அரசனுக்கு முன்பாக நின்றாள்.

அப்பொழுது அரசன் தாவீது அவளிடம் ஆணையிட்டுச் சொன்னதாவது: “என்னை எல்லா ஆபத்திலிருந்தும் விடுவித்த யெகோவா இருப்பது நிச்சயமெனில், 2 சாமு 4:9சங் 136:241 இராஜா 17:11 இராஜா 18:101 இராஜா 2:241 சாமு 14:391 சாமு 14:451 சாமு 19:6 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரால் எனக்குப்பின் உன் மகன் சாலொமோனே அரசனாவான் என்றும், அவனே என் அரியணையில் எனக்குப்பின் எனது இடத்தில் இருப்பான் என்றும் முன்பு உனக்கு ஆணையிட்டுச் சொன்னதை நிறைவேற்றுவேன் என்பதும் நிச்சயம்” என்று ஆணையிட்டான். 1 இராஜா 1:131 இராஜா 1:17

பின்பு பத்சேபாள் மறுபடியும் தரைமட்டும் குனிந்து அரசனை வணங்கிய பின், அரசனுக்கு முன் முழங்காற்படியிட்டு, “என் தலைவனாகிய அரசன் தாவீது நீடூழி வாழ்வாராக” என்றாள். தானி 2:4தானி 3:9தானி 5:101 இராஜா 1:252 சாமு 9:6தானி 6:21தானி 6:6எஸ்த 3:2

அப்பொழுது தாவீது, “ஆசாரியனான சாதோக்கையும், இறைவாக்கினனான நாத்தானையும், யோய்தாவின் மகன் பெனாயாவையும் அழையுங்கள்” என்றான். அவர்கள் உள்ளே வந்தபோது அவர்களிடம், 1 இராஜா 1:81 இராஜா 1:261 இராஜா 1:38 “என் மகன் சாலொமோனை என் சொந்தக் கோவேறு கழுதையில் ஏற்றி, என் ஊழியக்காரருடன் அவனை கீகோனுக்கு அழைத்துப் போங்கள். 2 நாளாக 32:301 இராஜா 1:382 நாளாக 33:141 இராஜா 1:44-451 இராஜா 1:52 சாமு 20:6-7எஸ்த 6:6-11ஆதி 41:43 அங்கே ஆசாரியனான சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாக அபிஷேகம் பண்ணட்டும். அதன்பின்பு எக்காளங்களை ஊதி, ‘சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க’ என்று ஆர்ப்பரியுங்கள். 1 இராஜா 1:251 சாமு 10:12 சாமு 15:101 இராஜா 19:161 சாமு 16:32இராஜா 11:122இராஜா 9:132இராஜா 9:3 பின்பு அவனோடு நீங்கள் வந்து அவனை அரசனாக எனது அரியணையில் அமர்த்துங்கள். அவன் எனது இடத்தில் அரசனாக வேண்டும். இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் நான் அவனை ஆளுநனாக நியமித்திருக்கிறேன்” என்றான். 1 நாளாக 23:11 நாளாக 28:4-51 இராஜா 1:131 இராஜா 1:171 இராஜா 2:121 இராஜா 2:15சங் 2:6சங் 72:1-2

யோய்தாவின் மகனான பெனாயா அரசனிடம், “ஆமென், என் தலைவனாகிய அரசனின் இறைவனாகிய யெகோவாவும் அவ்வாறே அறிவிப்பாராக. 1 நாளாக 17:271 கொரி 14:161 சாமு 25:29உபா 27:15-26எரே 11:5எரே 28:6மத் 28:20மத் 6:13 யெகோவா என் தலைவனாகிய அரசனோடு இருந்ததுபோல, சாலொமோனோடுங்கூட இருந்து, அவனுடைய அரியணையை என் தலைவனாகிய தாவீது அரசனின் அரியணையைப் பார்க்கிலும் இன்னும் பெரிதாக்குவாராக” என்றான். 1 இராஜா 1:471 சாமு 20:13யோசு 1:17யோசு 1:51 நாளாக 28:201 இராஜா 3:7-92 நாளாக 1:12இராஜா 2:9

அப்படியே ஆசாரியன் சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும், யோய்தாவின் மகனான பெனாயாவும், கிரேத்தியரும், பிலேத்தியரும் போய், சாலொமோனை அரசன் தாவீதின் கோவேறு கழுதையில் ஏற்றி கீகோனுக்கு அழைத்துப் போனார்கள். 2 சாமு 8:181 இராஜா 1:81 நாளாக 18:171 இராஜா 1:261 இராஜா 1:331 சாமு 30:142 சாமு 15:182 சாமு 20:20-23 ஆசாரியன் சாதோக் பரிசுத்த கூடாரத்திலிருந்த தைலக் கொம்பை எடுத்து சாலொமோனை அபிஷேகம் பண்ணினான். பின்பு அவர்கள் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா மக்களும், “சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க” என்று ஆர்ப்பரித்தார்கள். சங் 89:201 நாளாக 29:221 இராஜா 1:341 சாமு 10:241 இராஜா 1:251 சாமு 16:132 நாளாக 23:112 நாளாக 23:13 அதன்பின் சாலொமோனுடன் எல்லா மக்களும் புல்லாங்குழலை ஊதிக்கொண்டு நிலம் அதிரத்தக்க பெரும் குதூகலத்துடன் அவனுக்குப்பின் சென்றார்கள். 1 நாளாக 12:38-401 சாமு 11:152இராஜா 11:142இராஜா 11:20தானி 3:5லூக் 19:37சங் 97:1வெளி 11:15-18

அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகள் யாவரும் தங்கள் விருந்தை முடிக்கும் வேளையில் இதைக் கேட்டார்கள். எக்காள சத்தத்தைக் கேட்டதும் யோவாப், “பட்டணத்தில் கேட்கும் இந்தச் சத்தம் என்ன?” என்று கேட்டான். அப் 21:31பிரச 7:4-6யாத் 32:17யோபு 15:21-22யோபு 20:5லூக் 17:26-29மத் 21:15மத் 21:9-11

இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆசாரியனான அபியத்தாரின் மகன் யோனத்தான் விரைவாக உள்ளே வந்துசேர்ந்தான். அதோனியா அவனிடம், “உள்ளே வா, உத்தமனான நீ ஒரு நல்ல செய்தியைத்தான் கொண்டுவருவாய்” என்றான். 2 சாமு 15:362 சாமு 17:172 சாமு 18:272 சாமு 15:271 இராஜா 22:181 தெச 5:2-32இராஜா 9:22ஏசா 57:21

அதற்கு யோனத்தான், “அப்படியல்ல” என்றான். “எங்கள் தலைவனான அரசன் தாவீது சாலொமோனை அரசனாக்கியிருக்கிறார். அரசன் அவனை ஆசாரியனான சாதோக், இறைவாக்கினனான நாத்தான், யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பிலேத்தியர் ஆகியோருடன் அரசனின் கோவேறு கழுதையில் ஏற்றி அனுப்பியிருக்கிறார். ஆசாரியன் சாதோக்கும் இறைவாக்கினனான நாத்தானும் அவனை கீகோனில் அரசனாக அபிஷேகம் செய்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் போகிறார்கள். பட்டணத்தில் அச்சத்தம் கேட்கிறது. அந்த ஆர்ப்பரிப்புதான் நீர் கேட்கும் சத்தம் என்றான். 1 இராஜா 1:401 இராஜா 14:61 சாமு 28:141 சாமு 4:5தானி 5:26-28எஸ்றா 3:13 மேலும், சாலொமோன் அரியணையில் அமர்ந்திருக்கிறான். 1 நாளாக 29:23சங் 132:111 இராஜா 1:13ஆகா 2:22 அத்துடன் அரசனின் அதிகாரிகள் அரசன் தாவீதிடம், ‘உமது இறைவன் சாலொமோனின் பெயரை உமது பெயரிலும் புகழுடையதாகவும், அவனுடைய அரியணையை உமது அரியணையிலும் பார்க்க பெரிதாகவும் மேன்மைப்படுத்துவாராக’ என்று சொல்லி தாவீது அரசனை வாழ்த்துகிறார்கள். அப்பொழுது அரசன் தன் படுக்கையிலிருந்து தலைகுனிந்து வழிபட்டார். 1 இராஜா 1:37ஆதி 47:312 சாமு 21:32 சாமு 8:10யாத் 12:32எஸ்றா 6:10எபி 11:21லூக் 19:38 மேலும் அரசன், ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. எனக்குப்பின் ஒருவனை எனது அரியணையில் அமர்த்தி, இன்று என் கண்கள் காணும்படியாகச் செய்தாரே’ என்று கூறினார்” என்றான். 1 இராஜா 3:6சங் 132:11-121 நாளாக 17:11-141 நாளாக 17:171 நாளாக 29:101 நாளாக 29:201 பேது 1:32 சாமு 24:3

இதைக் கேட்டதும் அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகளும் திடுக்கிட்டு எழுந்து சிதறி ஓடினார்கள். தானி 5:4-6ஏசா 21:4-5நீதி 28:1 அதோனியா சாலொமோனுக்கு பயந்து ஓடி பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்றான். 1 இராஜா 2:28யாத் 21:14யாத் 27:2யாத் 38:2சங் 118:27 பின்பு அதோனியா, அரசன் சாலொமோனுக்குப் பயந்து பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான் என்றும், சாலொமோன் அரசன் வாளினால் தன்னைக் கொல்வதில்லை என இன்றைக்குத் தனக்குச் சத்தியம் பண்ணிக் கூறவேண்டும் என்றும் அதோனியா கேட்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கு சாலொமோன் மறுமொழியாக, “அவன் உத்தமனாக நடந்துகொண்டால், அவனுடைய தலைமயிரில் ஒன்றுகூட நிலத்தில் விழமாட்டாது. ஆனால் அவனிடம் தீமை காணப்பட்டால் அவன் சாவான்” என்று கூறினான். 1 சாமு 14:452 சாமு 14:11நீதி 13:61 இராஜா 2:21-25யோபு 15:22நீதி 21:12அப் 27:34லூக் 21:18 மேலும் அரசனாகிய சாலொமோன் அவனை பலிபீடத்திலிருந்து கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான். அதன்படி அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தனர். அவன் சாலொமோனின் முன்வந்து தலைகுனிந்து வணங்கினான். அப்பொழுது சாலொமோன் அவனைப் பார்த்து, “நீ உன் வீட்டிற்குப் போ” என்றான். 1 இராஜா 1:161 இராஜா 1:311 இராஜா 2:362 சாமு 1:22 சாமு 14:242 சாமு 14:28நீதி 24:21