1 இராஜாக்கள் 19

1 Kings 19

எலியா ஓரேபுக்குத் தப்பியோடுதல்

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் இறைவாக்கினர் யாவரையும் எப்படி வாளால் கொன்றான் என்பதையும் ஆகாப் யேசபேலுக்குச் சொன்னான். 1 இராஜா 18:401 இராஜா 21:251 இராஜா 21:5-71 இராஜா 16:31 அப்பொழுது யேசபேல் எலியாவிடம் ஒரு ஆள் அனுப்பி, “நாளைக்கு இந்நேரம், நீ அவர்களுக்குச் செய்ததுபோல் உன் உயிருக்கும் நான் செய்யாவிட்டால், தெய்வங்கள் அதற்கு அதிகமாகவும் என்னைத் தண்டிக்கட்டும்” என்று சொல்லி அனுப்பினாள். 1 இராஜா 20:102இராஜா 6:31ரூத் 1:17யாத் 10:28நீதி 27:11 இராஜா 2:282இராஜா 19:10-122இராஜா 19:27-28

எலியா பயந்து தன் உயிரைக் காப்பாற்றும்படி அங்கிருந்து தப்பி ஓடினான். யூதாவிலிருக்கும் பெயெர்செபாவுக்கு வந்தபோது தன் வேலைக்காரனை அங்கு நிறுத்திவைத்து, ஆதி 21:31மத் 26:56மத் 26:70-742 கொரி 12:71 இராஜா 4:251 சாமு 27:1ஆமோ 7:12-13யாத் 2:15 அவன் ஒரு நாள் பயணம்பண்ணி பாலைவனத்துக்குப் போனான். அவன் ஒரு சூரைச்செடியின் அடியில் உட்கார்ந்து, தான் சாகவேண்டுமென்று மன்றாடினான். அவன், “யெகோவாவே, நான் பட்ட பாடு போதும்; என்னுடைய உயிரை எடுத்துக்கொள்ளும். நான் என்னுடைய முற்பிதாக்களைப் பார்க்கிலும் சிறந்தவன் அல்ல” என்று சொன்னான். யோனா 4:3எண் 11:15யோனா 4:8எரே 20:14-18பிலி 1:21-241 இராஜா 13:141 இராஜா 19:32இராஜா 2:11 அதன்பின் அவன் அந்தச் சூரைச்செடியின்கீழ் படுத்து உறங்கினான். அப் 12:7சங் 34:7தானி 10:9-10தானி 8:19தானி 9:21ஆதி 28:11-15எபி 1:14எபி 13:5

அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றான். எலியா சுற்றிப் பார்த்தபோது நெருப்புத் தணலின்மேல் சுடப்பட்ட அப்பத்தையும், ஒரு ஜாடி தண்ணீரையும் அவன் தலைமாட்டில் கண்டான். அவன் சாப்பிட்டு, குடித்துத் திரும்பவும் படுத்துவிட்டான். மத் 4:111 இராஜா 17:61 இராஜா 17:9-15ஏசா 33:16யோவா 21:5யோவா 21:9மத் 6:32மாற் 8:2-3

அப்போது யெகோவாவின் தூதன் இரண்டாம் தரமும் வந்து அவனைத் தட்டியெழுப்பி, “எழுந்து சாப்பிடு. ஏனென்றால் நீ போகவேண்டிய பயணம் மிகவும் தூரமானது” என்றான். சங் 103:13-14உபா 33:25 அப்படியே அவன் எழுந்து சாப்பிட்டு, குடித்தான். அந்த உணவினால் பெலனடைந்தவனாய், இறைவனுடைய மலையான ஓரேப் மலையை அடையும் வரை இரவும் பகலும் நாற்பது நாட்கள் பயணம் பண்ணினான். உபா 9:18யாத் 34:28யாத் 24:18யாத் 3:1மத் 4:22 கொரி 12:9லூக் 4:2மல்கி 4:4-5 அங்கே ஒரு குகைக்குள் போய் அந்த இரவைக் கழித்தான். ஆதி 3:91 இராஜா 19:13யாத் 33:21-22ஆதி 16:8எரே 2:18எபி 11:38எரே 9:2யோனா 1:3-4

இறைவன் எலியாவுக்குக் காட்சியளித்தல்

அப்போது யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்து, “எலியாவே இங்கே என்ன செய்கிறாய்?” என்றார்.

அதற்கு அவன், “நான் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவிடம் மிகவும் பக்தி வைராக்கியம் உள்ளவனாய் இருந்தேன். இஸ்ரயேல் மக்களோ உம்முடைய உடன்படிக்கையைப் புறக்கணித்து, உமது பலிபீடங்களை உடைத்து, உமது இறைவாக்கினரையும் வாளால் வெட்டிக் கொன்றுபோட்டார்கள். நான் மட்டும்தான் மீதியாயிருக்கிறேன். இப்போது என்னையுங்கூட கொல்ல முயற்சிக்கிறார்கள்” என்று சொன்னான். 1 இராஜா 18:4யாத் 34:141 இராஜா 18:221 இராஜா 18:30யாத் 20:5ரோம 11:2-4எண் 25:11எண் 25:13

அதற்கு அவர், “இதோ, யெகோவா மலையைக் கடந்துபோகப் போகிறார். ஆகையால் நீ வெளியே போய் மலையின்மேல் யெகோவா முன்னிலையில் நில்” என்றார். எசேக் 1:4சங் 50:3ஏசா 30:30யோபு 38:1எபி 12:26யாத் 19:20யாத் 34:2எசேக் 37:7

அப்பொழுது பெரிதும் பலமான ஒரு காற்று யெகோவாவின் முன்பாக மலைகளைப் பெயர்த்து, பாறைகளை உடைத்துச் சிதறடித்தது. ஆனால் யெகோவா அந்தக் காற்றில் இருக்கவில்லை. காற்றின் பின் ஒரு பூமி அதிர்ச்சி உண்டானது. ஆனால் யெகோவா அந்த பூமி அதிர்ச்சியிலும் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சியின் பின்பு நெருப்பு உண்டானது. ஆனால் யெகோவா அந்த நெருப்பிலும் இருக்கவில்லை. நெருப்பு வந்தபின் மெல்லிய காற்றின் சத்தம் உண்டானது. யோபு 4:16சகரி 4:6உபா 4:33உபா 4:11-12யாத் 34:6யோபு 33:7யாத் 3:2ஆதி 15:17 எலியா அதைக் கேட்டபோது, தன் மேலுடையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே போய் குகை வாசலில் நின்றான். 1 இராஜா 19:91 இராஜா 18:42யாத் 33:23ஆதி 16:8ஏசா 6:2ஏசா 6:5யோவா 21:15-17யாத் 3:5-6

அப்பொழுது அவனிடம், “எலியாவே இங்கு என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது.

அவன் அதற்கு மறுமொழியாக, “நான் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவனாக இருந்தேன். இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையைப் புறக்கணித்து, உமது பலிபீடங்களையும் உடைத்து, உமது இறைவாக்கினரையும் வாளினால் கொன்றுபோட்டார்கள். நான் மட்டுமே மீதியாயிருக்கிறேன். இப்போது என்னையுங்கூட கொல்வதற்கு முயற்சி செய்கிறார்கள்” என்று சொன்னான். 1 இராஜா 19:9-10தானி 11:30உபா 29:25உபா 31:20எபி 8:9ஓசி 6:7ஏசா 1:4ஏசா 62:1

அப்பொழுது யெகோவா அவனிடம், “நீ வந்த வழியாய்த் திரும்பி தமஸ்குவின் பாலைவனத்திற்குப் போ. நீ அங்கு போய்ச்சேர்ந்ததும் ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம்பண்ணு. ஏசா 45:1எரே 1:102இராஜா 8:7-152இராஜா 8:282இராஜா 9:14ஆமோ 1:4ஆதி 14:15எரே 27:2-22 அதோடுகூட இஸ்ரயேல் அரசனாக நிம்சியின் மகன் யெகூவையும் அபிஷேகம்பண்ணு. ஆபேல் மெகொலா ஊரைச்சேர்ந்த சாப்பாத்தின் மகன் எலிசாவை உனக்குப்பின் வரப்போகும் இறைவாக்கினனாகவும் அபிஷேகம்பண்ணு. 1 இராஜா 19:19-212இராஜா 2:92இராஜா 9:1-142இராஜா 2:151 இராஜா 4:12நியாயாதி 7:22லூக் 4:27 ஆசகேலின் வாளுக்குத் தப்பி ஓடுபவனை யெகூ கொல்வான். யெகூவின் வாளுக்குத் தப்பியவனை, எலிசா கொன்றுபோடுவான். 2இராஜா 13:222இராஜா 13:32இராஜா 8:122இராஜா 10:32ஓசி 6:52இராஜா 2:23-242இராஜா 9:14ஆமோ 2:14 இருந்தாலும் பாகாலுக்கு முன் முழங்கால்களை முடக்காத, தங்கள் வாய்களினால் அவனை முத்தமிடாத ஏழாயிரம்பேரை இன்னும் இஸ்ரயேலில் ஒதுக்கி வைத்திருக்கிறேன்” என்றார். ரோம 11:4-5ஏசா 1:9ஏசா 10:20-22ஓசி 13:2பிலி 2:10சங் 2:12யாத் 20:5யோபு 31:27

எலிசாவின் அழைப்பு

அப்படியே எலியா அங்கிருந்துபோய் சாப்பாத்தின் மகன் எலிசாவைக் கண்டான். அவன் பன்னிரண்டு ஜோடி எருதுகளைப் பூட்டிய கலப்பையினால் உழுது கொண்டிருந்தான். பன்னிரண்டாவது ஜோடியை அவன் தானே ஓட்டிக்கொண்டிருந்தான். எலியா அவனுக்குக் கிட்டப்போய் தன் மேலுடையை அவன்மேல் எறிந்தான். 2இராஜா 2:82இராஜா 2:13-141 சாமு 28:14சங் 78:70-721 இராஜா 19:13யாத் 3:1நியாயாதி 6:11மத் 4:18-19 அப்பொழுது எலிசா எருதுகளை விட்டுவிட்டு எலியாவின் பின்னாலே ஓடிப்போய், “என் தகப்பனிடமும் தாயிடமும் விடைபெற்று வர அனுமதிக்கவேண்டும். அதன்பின் உம்முடன் வருகிறேன்” என்றான். லூக் 9:61-62மத் 8:21-22அப் 20:37மத் 19:27மத் 4:20மத் 4:22மத் 9:9

அதற்கு எலியா, “நீ திரும்பிப்போ. நான் உனக்கு என்ன செய்தேன் என்பதைக் கவனத்தில்கொள்” என்றான்.

எனவே எலிசா அவனைவிட்டுத் திரும்பிப்போனான். அவன் தனது ஏர் மாடுகளைப் பிடித்து, அவைகளைக் கொன்று, கலப்பையை எரித்து அந்த இறைச்சியைச் சமைத்து அதை மற்றவர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் சாப்பிட்டார்கள். அதன்பின் எலியாவைப் பின்தொடர்ந்து போய் அவனுக்கு உதவிகளைச் செய்தான். 2 சாமு 24:222 தீமோ 4:11யாத் 24:13லூக் 5:28-29பிலே 1:131 இராஜா 18:432இராஜா 2:32இராஜா 3:11