2 தெசலோனிக்கேயர் 3

2 Thessalonians 3

மன்றாட்டுக்கான வேண்டுகோள்

இறுதியாக பிரியமானவர்களே, கர்த்தருடைய செய்தி உங்களிடையே பரவியதுபோல, அது மகிமைப்பட்டு எங்கும் விரைவாய்ப் பரவவேண்டும் என்று எங்களுக்காக மன்றாடுங்கள். 1 தெச 5:25கொலோ 4:31 கொரி 16:9எபே 6:19-20அப் 19:201 தெச 1:8அப் 12:241 தெச 2:13 கொடியவர்களும், தீயவர்களுமான மனிதரிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்றும் மன்றாடுங்கள். ஏனெனில், எல்லாரிடத்திலும் விசுவாசம் இல்லையே. 2 கொரி 4:3-4ரோம 15:31உபா 32:202 கொரி 1:8-10லூக் 18:8ரோம 10:16அப் 13:45அப் 28:24 ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பெலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாத்துக்கொள்வார். 2 தீமோ 4:181 தெச 5:241 கொரி 10:13சங் 121:71 கொரி 1:9யோவா 17:15மத் 6:13யூதா 1:24 நாங்கள் கட்டளையிடுகிற காரியங்களை நீங்கள் செய்கிறீர்கள் என்றும், தொடர்ந்து செய்வீர்கள் என்றும், கர்த்தரில் நாங்கள் மனவுறுதி உடையவர்களாய் இருக்கிறோம். பிலி 1:61 தெச 4:10பிலே 1:212 கொரி 2:3பிலி 2:121 தெச 4:1-22 தெச 3:122 தெச 3:6 கர்த்தர்தாமே உங்கள் இருதயங்களை இறைவனுடைய அன்புக்குள்ளும், கிறிஸ்துவின் மன உறுதிக்குள்ளும் நடத்துவாராக. சங் 119:361 நாளாக 29:18உபா 30:61 யோவா 4:191 கொரி 8:3எபி 12:2-3வெளி 3:10-11யாக் 1:16-18

சோம்பலுக்கு எச்சரிக்கை

பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறதாவது, சோம்பேறிகளாய் வாழும் ஒவ்வொரு சகோதரரையும்விட்டு விலகியிருங்கள். எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதின்படி நடக்காதவர்களைவிட்டு விலகியிருங்கள். 2 தெச 3:10-112 தெச 3:7கொலோ 3:17ரோம 16:171 தெச 5:141 தெச 4:12 தெச 2:152 தீமோ 3:5 எங்களுடைய முன்மாதிரியை எவ்விதம் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நாங்கள் உங்களுடன் இருந்தபோது சோம்பேறிகளாய் இருக்கவில்லை. 2 தெச 3:62 தெச 3:91 கொரி 4:161 கொரி 11:11 தெச 1:6-7பிலி 3:17தீத் 2:71 தீமோ 4:12 யாரிடமும் உணவை இலவசமாய்ப் பெற்று, நாங்கள் சாப்பிட்டதில்லை. மாறாக, நாங்கள் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இதனால், உங்களில் யாருக்கும் பாரமாய் இருந்ததில்லை. மத் 6:111 தெச 2:9அப் 18:3எபே 4:281 கொரி 4:121 தெச 4:112 தெச 3:12நீதி 31:27 இவ்விதமான உதவியை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்பதனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை. ஆனால் நீங்கள் பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியாக நாங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவே, அப்படிச் செய்தோம். 2 தெச 3:71 கொரி 9:4-141 தெச 2:6கலா 6:6யோவா 13:15மத் 10:101 பேது 2:21 ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோதுங்கூட, இந்த கட்டளையை நாங்கள் உங்களுக்குக் கொடுத்தோம்: “ஒருவன் வேலைசெய்யாவிட்டால், அவன் சாப்பிடவும் கூடாது.” ஆதி 3:191 தெச 4:11நீதி 13:4நீதி 20:4நீதி 21:25நீதி 24:30-341 தெச 3:4யோவா 16:4

உங்களில் சிலர் சோம்பேறிகளாய் இருக்கிறார்கள் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர்கள் எவ்வித வேலையும் செய்யாமல், பிறர் வேலையில் ஈடுபடுகிறார்கள். 1 தீமோ 5:131 தெச 4:112 தெச 3:61 பேது 4:15 அப்படிப்பட்டவர்கள் வேலையில் நிலைத்திருந்து, தங்களுடைய உணவுக்காகத் தாங்களே உழைக்க வேண்டும் என்று, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் நாங்கள் கட்டளையிட்டு வேண்டிக்கொள்கிறோம். எபே 4:281 தெச 4:112 தெச 3:8பிரச 4:6லூக் 11:3நீதி 17:11 தெச 4:1ஆதி 49:14-15 நீங்களோ பிரியமானவர்களே, நல்லதைச் செய்வதில் மனந்தளர வேண்டாம். கலா 6:9-10எபி 12:32 கொரி 4:12 கொரி 4:16ஏசா 40:29-31லூக் 18:11 தெச 4:1எபி 12:5

இந்தக் கடிதத்திலுள்ள அறிவுறுத்தலுக்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அப்படிப்பட்டவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கமடையும்படிக்கு, அவனோடு கூடிப்பழக வேண்டாம். தீத் 3:101 கொரி 5:112 தெச 3:6சங் 83:161 தெச 4:8எரே 6:15நீதி 5:131 கொரி 5:9 ஆனால், அவனைப் பகைவனாக எண்ணவேண்டாம்; ஒரு சகோதரனாக எண்ணி எச்சரியுங்கள். தீத் 3:101 கொரி 5:51 தெச 5:141 கொரி 4:14கலா 6:1நீதி 25:12நீதி 9:92 கொரி 13:10

கடைசி வாழ்த்துதல்

இப்பொழுதும் சமாதானத்திலும் அமைதியிலும் கர்த்தர்தாமே, எல்லா வேளைகளிலும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பாராக. கர்த்தர் உங்கள் எல்லோருடனும் இருப்பாராக. சங் 29:11யோவா 16:33மத் 1:23யோவா 14:27நியாயாதி 6:24ரோம 15:33ரோம 16:20லூக் 2:14

பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை, என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். இதுவே எனது கடிதங்களுக்கெல்லாம் அடையாளமும், நான் எழுதும் முறையும் இதுவே. 1 கொரி 16:21கொலோ 4:182 தெச 1:51 சாமு 17:18யோசு 2:12

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை, உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. ஆமென். ரோம 16:20ரோம 16:23