கொலோசெயர் 4

Colossians 4

எஜமான்களே, உங்கள் அடிமைகளுக்கு சரியானதையும் நியாயமானதையும் கொடுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்களுக்கும் ஒரு எஜமான் இருக்கிறாரென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. எபே 6:8-20உபா 24:14-15யாக் 2:13வெளி 17:14லூக் 16:1-13மத் 24:48-51யாக் 5:4பிரச 5:8

அறிவுரைகள்

விழிப்புள்ளவர்களாயும் நன்றி உள்ளவர்களாயும், மன்றாடுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். 1 தெச 5:17-18பிலி 4:6எபே 6:18ரோம 12:12மத் 26:41லூக் 18:1லூக் 21:361 பேது 4:7 கிறிஸ்துவின் இரகசியத்தை நாங்கள் அறிவிக்கும்படி, எங்களுடைய செய்திக்கான வாசலை இறைவன் திறந்துகொடுக்க வேண்டுமென்று எங்களுக்காகவும் மன்றாடுங்கள்; இந்தப் பணிக்காகவே நான் சிறையாக்கப்பட்டிருக்கிறேன். எபே 6:19-20அப் 14:272 தெச 3:1-2பிலி 1:13-142 கொரி 2:12கொலோ 1:261 கொரி 16:91 கொரி 4:1 நான் அந்த இரகசியத்தை தகுந்தபடி தெளிவாய் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மன்றாடுங்கள். 2 கொரி 4:1-4எபே 6:20கொலோ 4:61 கொரி 2:4-52 கொரி 2:14-172 கொரி 3:12அப் 4:29அப் 5:29 திருச்சபைக்கு உட்படாத வெளி ஆட்களுடன் ஞானமாய் நடந்துகொள்ளுங்கள்; கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். எபே 5:15-17யாக் 3:131 தெச 4:12யாக் 3:17ரோம 16:19கொலோ 3:16மத் 10:161 தீமோ 3:7 உங்களது உரையாடல் எப்பொழுதும் கனிவானதாயும் சுவையுள்ளதாயும் இருக்கட்டும். அப்பொழுதே உங்களிடம் கேள்வி கேட்கிறவர்களுக்கு உங்களால் தகுந்த விதத்தில் பதில் சொல்லக்கூடியதாய் இருக்கும். எபே 4:291 பேது 3:15பிரச 10:12மாற் 9:50நீதி 15:4நீதி 15:7கொலோ 3:16நீதி 22:17-18

கடைசி வாழ்த்துகள்

தீகிக்கு என்னைப்பற்றிய செய்தி எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்வான். அவன் அன்பு சகோதரனாகவும், உண்மையுள்ள ஊழியக்காரனாகவும், கர்த்தரில் உடன்வேலைக்காரனாகவும் இருக்கிறான். எபே 6:21-232 தீமோ 4:12அப் 20:4தீத் 3:121 கொரி 4:1-4கொலோ 4:9கொலோ 4:12பிலி 2:25 நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். எபே 6:22கொலோ 2:21 கொரி 4:171 தெச 2:111 தெச 3:21 தெச 3:51 தெச 4:181 தெச 5:11 அவன் எங்கள் அன்புள்ள சகோதரனான நம்பிக்கைக்குரிய ஒநேசிமுவுடன் வருகிறான். அவனும் உங்களில் ஒருவனே. அவர்கள் இங்கு நடப்பவை எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவிப்பார்கள். பிலே 1:10-19கொலோ 4:7

என்னுடன் சிறையில் இருக்கும் அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். அப்படியே பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரனான மாற்குவும் வாழ்த்துதல் அனுப்புகிறான். அவனைக்குறித்து ஏற்கெனவே நீங்கள் அறிவுறுத்தல் பெற்றிருக்கிறீர்கள்; அவன் உங்களிடம் வந்தால், அவனை வரவழைத்துக்கொள்ளுங்கள். 2 தீமோ 4:11அப் 19:29பிலே 1:24அப் 12:12அப் 15:37-39அப் 20:4அப் 27:21 பேது 5:13

யுஸ்து என அழைக்கப்படும் இயேசுவும், உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். இறைவனுடைய அரசின் வேலையில், எனது உடன் ஊழியர்கள் மத்தியில் இருக்கும் யூதர்கள் இவர்கள் மட்டுமே. இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருக்கிறார்கள். அப் 11:21 தெச 3:22 கொரி 6:12 கொரி 7:6-7அப் 10:45கொலோ 4:7பிலே 1:1பிலே 1:24

கிறிஸ்து இயேசுவினுடைய ஊழியனான எப்பாப்பிராத்து உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். அவனும் உங்களில் ஒருவனே. இறைவனுடைய சித்தம் முழுவதிலும் நீங்கள் வளர்ச்சியடைந்தவர்களும் முழுமையான நிச்சயம் உடையவர்களுமாய் உறுதியாய் நிற்கவேண்டும் என்பதற்காக அவன் உங்களுக்காய் எப்பொழுதும் மன்றாட்டிலே போராடுகிறான். ரோம 15:30கொலோ 1:9கொலோ 1:28கொலோ 1:7பிலே 1:232 பேது 1:1கலா 4:19ரோம 15:14 அவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயாவிலும் எராப்போலியிலும் இருக்கிறவர்களுக்காகவும், ஊக்கமாய் வேலைசெய்கிறான் என்பதை நான் சாட்சியாகக் கூறுகிறேன். கொலோ 2:12 கொரி 8:3கொலோ 4:15-16வெளி 1:11வெளி 3:14-18ரோம 10:2

எங்கள் அன்புக்குரிய வைத்தியன் லூக்காவும் தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள். பிலே 1:242 தீமோ 4:10-11

லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களுக்கும், நிம்பாவுக்கும், அவளுடைய வீட்டில் கூடிவருகிற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். ரோம 16:51 கொரி 16:9பிலே 1:2

இந்தக் கடிதம் உங்களிடையே வாசிக்கப்பட்டபின், லவோதிக்கேயாவிலிருக்கிற திருச்சபைகளிலேயும் இதை வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள்; அதுபோலவே, லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தை நீங்கள் வாசியுங்கள். 1 தெச 5:272 தெச 3:14

நீங்கள் அர்க்கிப்புவிடம், “கர்த்தரில் நீ பெற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றும்படி பார்த்துக்கொள்” என்று சொல்லுங்கள். பிலே 1:2அப் 1:171 கொரி 4:1-21 தீமோ 4:161 தீமோ 4:61 தீமோ 6:202 நாளாக 29:112 தீமோ 1:6

பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். நான் சிறையாக்கப்பட்டிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென். எபி 13:31 கொரி 16:211 தீமோ 6:212 தீமோ 4:22எபி 13:252 தீமோ 1:8பிலி 1:7தீத் 3:15