யாத்திராகமம் 14

Exodus 14

பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: யாத் 12:1யாத் 13:1 “நீங்கள் திரும்பிவந்து மிக்தோலுக்கும், கடலுக்கும் இடையேயுள்ள பிகாஈரோத் அருகே முகாமிடுங்கள் என்று இஸ்ரயேலருக்குச் சொல். அவர்கள் கடலருகே பாகால் செபோனுக்கு நேரெதிராக முகாமிடவேண்டும். எரே 44:1எண் 33:7-8யாத் 13:17-18யாத் 14:9எரே 46:14எசேக் 29:10 ‘இஸ்ரயேலர் மனங்குழம்பி நாட்டைச் சுற்றி அலைந்து திரிகிறார்கள். பாலைவனம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது’ என்று பார்வோன் நினைப்பான். அப் 4:28எசேக் 38:17சங் 139:41 சாமு 23:231 சாமு 23:7உபா 31:21யாத் 7:3-4எசேக் 38:10-11 எனவே, நான் பார்வோனின் மனதைக் கடினப்படுத்துவேன். அவன் உங்களைப் பின்தொடர்ந்து வருவான். நானோ பார்வோனாலும், அவனுடைய படைகள் எல்லாவற்றினாலும் மகிமையடைவேன். அப்பொழுது நானே யெகோவா என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார். இஸ்ரயேலர் அவ்வாறே செய்தார்கள். ரோம 9:22-23யாத் 7:5ரோம 9:17யாத் 7:3யாத் 9:16யாத் 4:21-31யாத் 7:17எசேக் 28:22

இஸ்ரயேலர் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்திய அரசன் பார்வோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவனும் அவனுடைய அதிகாரிகளும் இஸ்ரயேலரைக் குறித்து தங்கள் மனங்களை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள், “நாம் என்ன செய்துவிட்டோம்? இஸ்ரயேலரை போகவிட்டு, அவர்களுடைய வேலையை இழந்துவிட்டோமே!” என்றார்கள். சங் 105:25யாத் 12:33எரே 34:10-17லூக் 11:24-262 பேது 2:20-22 எனவே பார்வோன், தன் தேரை ஆயத்தப்படுத்தி, தன் இராணுவவீரரையும் தன்னுடன் கூட்டிச்சென்றான். அவன் எகிப்திலுள்ள மற்ற எல்லா தேர்களோடு, மிகச்சிறந்த அறுநூறு தேர்களையும் மற்றும் அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு போனான். யாத் 15:4சங் 20:7யாத் 14:23ஏசா 37:24நியாயாதி 4:15நியாயாதி 4:3சங் 68:17யோசு 17:16-18 யெகோவா எகிப்திய அரசன் பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினபடியால், அவன் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றான். ஆனால் இஸ்ரயேலரோ துணிவுடன் அணிவகுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். அப் 13:17எண் 33:3உபா 26:8யாத் 13:16யாத் 14:4யாத் 6:1உபா 32:27யாத் 13:18 எகிப்தியர் பார்வோனின் குதிரைகளோடும், தேர்களோடும், குதிரைவீரர்களோடும், இராணுவப்படைகளோடும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றனர். பாகால் செபோனுக்கு எதிரே, பிகாஈரோத்துக்கு அருகே கடல் பக்கத்தில் இஸ்ரயேலர் முகாமிட்டிருந்தபோது, அவர்களை எகிப்தியர் பின்தொடர்ந்து வந்துசேர்ந்தனர். யாத் 15:9யோசு 24:6யாத் 14:2

பார்வோன் நெருங்கி வந்தபொழுது இஸ்ரயேலர் நோக்கிப்பார்த்து, தங்களுக்குப்பின் எகிப்தியர் அணிவகுத்து வருவதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் பயந்து, யெகோவாவை நோக்கிக் கதறினார்கள். சங் 107:6யோசு 24:7நெகே 9:9சங் 34:17ஏசா 51:12-13மத் 8:25-262 நாளாக 18:31மத் 14:30-31 அவர்கள் மோசேயிடம், “எகிப்தில் பிரேதக்குழிகள் இல்லையென்று எங்களைச் சாகும்படி பாலைவனத்திற்குக் கொண்டுவந்தீரோ? எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்து எங்களுக்கு என்ன செய்திருக்கிறீர்? எண் 14:1-4சங் 106:7-8யாத் 15:23-24யாத் 16:2-3யாத் 17:2-3எண் 11:1எண் 11:15யாத் 5:22 ‘எங்களைச் சும்மாவிடும்; நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்வோம்’ என்று, நாங்கள் எகிப்திலிருக்கும்போதே உமக்குச் சொல்லவில்லையா? பாலைவனத்தில் நாங்கள் சாகிறதைவிட, எகிப்தியருக்கு வேலை செய்வது நலமாயிருந்திருக்குமே!” என்றார்கள். யோனா 4:3யாத் 6:9யோனா 4:8யாத் 3:9யாத் 5:21ஓசி 4:17மாற் 1:24மாற் 5:17-18

மோசே இஸ்ரயேல் மக்களிடம், “பயப்படாதிருங்கள். உறுதியாய் நில்லுங்கள்; யெகோவா இன்று உங்களுக்குக் கொண்டுவரப்போகும் விடுதலையைக் காண்பீர்கள். நீங்கள் இன்று காணும் எகிப்தியரை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள். 2 நாளாக 20:172 நாளாக 20:15யாத் 14:30ஏசா 41:10-142இராஜா 6:16புலம் 3:26ஏசா 35:4சங் 27:1-2 யெகோவா உங்களுக்காகப் போராடுவார்; நீங்கள் அமைதியாய் மட்டும் இருங்கள்” என்றான். உபா 3:22உபா 20:42 நாளாக 20:17உபா 1:30யோசு 23:3ஏசா 30:15யோசு 23:10யாத் 15:3

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ என்னிடம் முறையிட்டு அழுவது ஏன்? இஸ்ரயேலரை முன்னேறிப்போகச்சொல். யோசு 7:10எஸ்றா 10:4-5யாத் 17:4நெகே 9:9 நீ உன் கோலை உயர்த்தி, தண்ணீரைப் பிரிக்கும்படி கடலின்மேல் உன் கையை நீட்டு. அப்பொழுது இஸ்ரயேலர் கடலின் நடுவாகக் காய்ந்த தரையில் நடந்து போகக்கூடியதாய் இருக்கும். யாத் 7:19யாத் 4:17யாத் 4:2யாத் 4:20யாத் 14:26யாத் 7:9ஏசா 10:26யாத் 14:21-22 நான் எகிப்தியரின் உள்ளத்தைக் கடினப்படுத்துவேன். அதனால் அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடருவார்கள். நானோ பார்வோனாலும், அவனுடைய எல்லா படைகள், தேர்கள், குதிரைவீரர் முதலியவற்றாலும் மகிமையடைவேன். யாத் 14:8யாத் 14:4உபா 32:39எசேக் 34:11எசேக் 34:20யாத் 7:13-14எசேக் 5:8எசேக் 6:3 இப்படியாக நான் பார்வோனாலும், அவன் தேர்கள், குதிரைகளாலும் மகிமையடையும்போது நானே யெகோவா என்பதை எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார். யாத் 7:5யாத் 14:4யாத் 7:17

அப்பொழுது இஸ்ரயேலரின் படைக்கு முன்னாகச் சென்றுகொண்டிருந்த இறைவனின் தூதனானவர், அவ்விடத்தைவிட்டு அவர்களுக்குப் பின்னாகப் போனார். அவர்களுக்கு முன்பாக இருந்த மேகத்தூணும் விலகி, அவர்களுக்குப் பின்னாக வந்துநின்றது. ஏசா 63:9யாத் 32:34யாத் 23:20-21எண் 20:16யாத் 13:21-22யாத் 14:24 அது எகிப்திய படைகளுக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் வந்துநின்றது. அந்த மேகம் இரவு முழுவதும் ஒரு பக்கத்துக்கு இருளையும், மற்றொரு பக்கத்துக்கு வெளிச்சத்தையும் கொடுத்தது. இதனால் இஸ்ரயேலரோ, எகிப்தியரோ இரவு முழுவதும் ஒருவரையொருவர் நெருங்கவில்லை. 2 கொரி 2:15-16ஏசா 8:14நீதி 4:18-19சங் 18:11

பின்பு மோசே, கடலின்மேல் தன் கையை நீட்டினான். யெகோவா இரவு முழுவதும் பலத்த கீழ்காற்றினால் கடல்நீரைப் பின்வாங்கச்செய்து, அதை வறண்ட நிலமாக மாற்றினார். தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது. ஏசா 63:12யாத் 15:8சங் 66:6நெகே 9:11ஏசா 51:10யோசு 4:23சங் 74:13சங் 78:13 இஸ்ரயேலர் கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்து சென்றார்கள். அவர்களுடைய வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் தண்ணீர் மதில்போல எழுந்து நின்றது. எபி 11:29யாத் 15:19சங் 66:6யாத் 14:29சங் 78:131 கொரி 10:1யாத் 15:8ஏசா 63:13

எகிப்தியர் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். பார்வோனின் எல்லா குதிரைகளும், தேர்களும், குதிரைவீரரும், இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து கடலுக்குள் வந்தார்கள். யாத் 14:17யாத் 15:191 இராஜா 22:20பிரச 9:3யாத் 15:9ஏசா 14:24-27 யெகோவா விடியற்காலையில் நெருப்புத்தூணிலும், மேகத்தூணிலுமிருந்து எகிப்திய படையைப் பார்த்து அவர்களைக் கலங்கப்பண்ணினார். யாத் 13:21யாத் 14:25சங் 77:16-19யாத் 14:19-20யோபு 23:15-16யோபு 34:20யோபு 34:29யோபு 40:12 யெகோவா அவர்களுடைய தேர்களின் சக்கரங்களைக் கழறப்பண்ணியதால், தேரை ஓட்டுவதற்கு அவர்களுக்குக் கஷ்டமாயிருந்தது. எனவே எகிப்தியர், “நாம் இஸ்ரயேலரைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா எகிப்தை எதிர்த்து அவர்களுக்காகப் போராடுகிறார்” என்றார்கள். யாத் 14:141 சாமு 4:7-8உபா 3:22எரே 51:21யோபு 20:24ஆமோ 5:19ஆமோ 9:1யோபு 11:20

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “கடல் தண்ணீர் எகிப்தியர்மேலும் அவர்களுடைய தேர்கள், குதிரைவீரர்மேலும் வரும்படி நீ உன் கையை கடல்மேல் நீட்டு” என்றார். யாத் 14:16யாத் 8:5யாத் 1:22யாத் 7:19யாக் 2:13நியாயாதி 1:6-7மத் 7:2மத் 8:27 அப்படியே மோசே தன் கையை கடலுக்கு மேலாக நீட்டினான். அதிகாலையில் கடல் தண்ணீர் திரும்பி, அதன் இடத்திற்கு வந்தது. ஆனால் எகிப்தியரோ கடலை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தார்கள். யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திவிட்டார். யோசு 4:18சங் 78:53உபா 11:4எபி 11:29யாத் 14:21-22யாத் 15:1-21நியாயாதி 5:20-21 கடல் தண்ணீர் திரும்பிவந்து, தேர்களையும், குதிரைவீரர்களையும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பார்வோனின் படை முழுவதையும் கடலுக்குள் மூடிவிட்டது. அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. சங் 78:53சங் 106:9-11ஆப 3:13ஆப 3:8-10சங் 136:15எபி 11:292 நாளாக 20:24உபா 11:4

இஸ்ரயேலரோ கடலின் நடுவேயுள்ள காய்ந்த நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள். அவர்களுடைய வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் தண்ணீர் மதில்போல நின்றது. யாத் 14:22ஏசா 43:2ஏசா 51:10ஏசா 51:13ஏசா 63:12-13யோபு 38:8-11யோசு 3:16சங் 77:19-20 இவ்விதமாக யெகோவா அன்றையதினம் எகிப்தியரின் கைகளிலிருந்து இஸ்ரயேலரைக் காப்பாற்றினார். கடற்கரையிலே எகிப்தியர் இறந்துகிடப்பதை இஸ்ரயேலர் கண்டார்கள். சங் 106:10சங் 106:8யூதா 1:5சங் 58:10சங் 92:9-111 சாமு 14:23யாத் 14:13சங் 59:10 எகிப்தியருக்கு எதிராகக் காண்பிக்கப்பட்ட யெகோவாவின் வல்லமையை இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும், அவருடைய அடியானாகிய மோசேயினிடத்திலும் நம்பிக்கை வைத்தார்கள். யோவா 2:11யோவா 11:45யோவா 2:23-25யோவா 8:30-32சங் 106:12-131 சாமு 12:182 நாளாக 20:20யாத் 19:9