கற்பாறையிலிருந்து தண்ணீர்
இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் சீன் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, யெகோவாவின் கட்டளைப்படி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்தார்கள். பின்பு ரெவிதீம் என்னும் இடத்திற்கு வந்து அங்கே முகாமிட்டார்கள். அங்கே அவர்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. யாத் 16:1யாத் 19:2யாத் 17:8எண் 33:12-14 அதனால் இஸ்ரயேலர் மோசேயுடன் வாக்குவாதம் செய்து, “குடிப்பதற்கு எங்களுக்குத் தண்ணீர் தாரும்” என்றார்கள். சங் 78:181 கொரி 10:9உபா 6:16சங் 78:41எபி 3:9ஏசா 7:12அப் 15:10மத் 4:7
அப்பொழுது மோசே அவர்களிடம், “என்னோடு ஏன் வாக்குவாதம் செய்கிறீர்கள்? யெகோவாவை ஏன் சோதிக்கிறீர்கள்?” என்றான்.
ஆனால் மக்கள் மிகவும் தாகமாயிருந்ததினால் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். அவர்கள் அவனிடம், “எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் வளர்ப்பு மிருகங்களையும் தாகத்தினால் சாகும்படி, ஏன் எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர்?” என்று கேட்டார்கள். யாத் 16:2-3யாத் 15:24
அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்கு என்ன செய்வேன்? அவர்கள் என்னைக் கல்லெறிய ஆயத்தமாயிருக்கிறார்களே” என்றான். 1 சாமு 30:6எண் 14:10அப் 14:19யோவா 10:31யோவா 8:59அப் 7:50யாத் 15:25எண் 16:19
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இஸ்ரயேலின் சபைத்தலைவர்களில் சிலரை உன்னுடன் கூட்டிக்கொண்டு மக்களுக்கு முன்பாக நட. நீ நைல் நதியை அடித்த கோலை கையில் எடுத்துக்கொண்டு போ. யாத் 7:19-20எண் 20:8-11எசேக் 2:6அப் 20:23-24 நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் அருகே உனக்கு முன்பாக அங்கே நிற்பேன். நீ கற்பாறையை அடி. அப்பொழுது மக்கள் குடிப்பதற்கு அதிலிருந்து தண்ணீர் வெளிவரும்” என்றார். மோசே அவ்விதமே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் முன்னிலையில் செய்தான். 1 கொரி 10:4நெகே 9:15எண் 20:9-11சங் 105:41உபா 8:15யோவா 4:10சங் 78:15-16சங் 114:8 இஸ்ரயேலர்கள், “யெகோவா எங்களுடன் இருக்கிறாரா? இல்லையா?” என்று கேட்டு யெகோவாவைப் சோதித்தபடியால் அந்த இடத்திற்கு மாசா 1 என்றும், அவர்கள் வாதாடினபடியால் மேரிபா 2 என்றும் மோசே பெயரிட்டான். சங் 81:7எண் 20:13சங் 95:8உபா 9:22யாத் 17:2எபி 3:8-9அப் 7:37-39எண் 20:24
அமலேக்கியரின் தோல்வி
அதன்பின் அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரயேலரைத் தாக்கினார்கள். உபா 25:17-19ஆதி 36:121 சாமு 15:21 சாமு 30:1எண் 24:20ஆதி 36:16சங் 83:7 அப்பொழுது மோசே யோசுவாவிடம் 3, “எங்கள் மனிதரில் சிலரைத் தெரிந்துகொண்டு அமலேக்கியரோடு சண்டை செய்ய வெளியே போ. நான் நாளை என் கையில் இறைவனின் கோலைப் பிடித்துக்கொண்டு மலையுச்சியில் நிற்பேன்” என்றான். உபா 32:44யாத் 24:13யாத் 4:20யாத் 4:2எபி 4:8அப் 7:45யாத் 17:13எண் 11:28
மோசே உத்தரவிட்டபடியே யோசுவா அமலேக்கியருடன் போரிட்டான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலையுச்சிக்குப் போனார்கள். யாத் 24:14யாத் 17:12யாத் 31:2யோசு 11:15யோவா 15:14யோவா 2:5மத் 28:20 மோசே தன் கைகளை உயர்த்திக்கொண்டிருக்கும்வரை, இஸ்ரயேலர் வென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே தன் கைகளைக் கீழே விடும்பொழுதோ, அமலேக்கியர் வெல்லத்தொடங்கினார்கள். 1 தீமோ 2:8யாக் 5:16லூக் 18:1சங் 56:9 மோசேயின் கைகள் தளர்ந்துபோயின. அப்போது ஆரோனும், ஊரும் ஒரு கல்லை எடுத்து அவனுக்குக் கீழே வைத்தார்கள். அவன் அதன்மேல் உட்கார்ந்தான். ஆரோனும், ஊரும் ஒரு பக்கம் ஒருவனும், மறுபக்கம் மற்றவனுமாக அவனுடைய கைகளை உயர்த்தித் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள். அதனால் சூரியன் மறையும்வரை அவன் கைகள் உறுதியாயிருந்தன. ஏசா 35:3பிலி 1:19எபி 12:122 கொரி 1:11எபே 6:18மாற் 14:37-401 தெச 5:25கொலோ 4:2 எனவே யோசுவா வாளினால் அமலேக்கியப் படையை மேற்கொண்டான். யோசு 10:42யோசு 10:28யோசு 10:32யோசு 10:37யோசு 11:12
அதன்பின் யெகோவா மோசேயிடம், “இன்று நடந்தது நினைவிற்கொள்வதற்காக இதை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, அதை யோசுவா கேட்கும்படி சொல். ஏனெனில், நான் வானத்தின் கீழிருந்து அமலேக்கியரைப் பற்றிய நினைவையே இல்லாது போகும்படி அழித்துவிடுவேன் என்று சொல்” என்றார். யாத் 34:271 சாமு 30:11 சாமு 30:17எண் 24:202 சாமு 8:12உபா 25:17-19எண் 33:21 சாமு 15:2-3
மோசே அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி அவ்விடத்திற்கு யெகோவா என் வெற்றிக்கொடி 4 என்று பெயரிட்டான். ஆதி 22:14நியாயாதி 6:24சங் 60:4ஆதி 33:20 பின்பு மோசே, “யெகோவாவினுடைய அரியணைக்கு விரோதமாக அமலேக்கின் கரங்கள் உயர்த்தப்பட்டிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் யெகோவா அமலேக்கியருக்கு எதிராக யுத்தம் செய்வார்” என்றான். சங் 21:8-11ஏசா 66:1அப் 7:49