யாத்திராகமம் 4

Exodus 4

மோசேக்கு வழங்கப்பட்ட அடையாளங்கள்

மோசே மறுமொழியாக, “அவர்கள் என்னை நம்பாமலும், நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும், ‘யெகோவா உனக்கு காட்சி அளிக்கவில்லை’ என்று சொல்வார்களானால் நான் என்ன செய்வேன்?” என்றான். யாத் 3:18யாத் 4:31அப் 7:25யாத் 2:14யாத் 6:30எரே 1:6எசேக் 3:14

அதற்கு யெகோவா அவனிடம், “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். யாத் 4:17யாத் 4:20ஏசா 11:4சங் 110:2ஆதி 30:37லேவி 27:32மீகா 7:14

“ஒரு கோல்” என்றான்.

“அதைத் தரையில் எறிந்துவிடு” என்று யெகோவா சொன்னார். ஆமோ 5:19யாத் 4:17யாத் 7:10-15

மோசே அதைத் தரையில் எறிந்தபோது அது பாம்பாக மாறியது, மோசே விலகி ஓடினான். அப்பொழுது யெகோவா, “உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடித்துத் தூக்கு” என்று சொன்னார். மோசே கையை நீட்டி பாம்பைப் பிடித்தான்; அது அவன் கையில் கோலாக மாறியது. அப் 28:3-6ஆதி 22:1-2யோவா 2:5லூக் 10:19மாற் 16:18சங் 91:13 “ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான அவர்களின் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உனக்கு காட்சியளித்திருக்கிறார் என்பதை அவர்கள் நம்பும்படி இதுவே அடையாளம்” என்று யெகோவா சொன்னார். யாத் 19:9யாத் 3:15ஆதி 12:7ஆதி 18:1ஆதி 26:2ஆதி 48:3யாத் 4:31யோவா 11:42

மேலும் யெகோவா மோசேயிடம், “உன் கையை உன் மேலங்கியினுள் வை” என்றார். எனவே மோசே தன் கையை மேலங்கிக்குள் வைத்தான்; அவன் அதை வெளியே எடுத்தபோது, அவனுடைய கை உறைபனியைப்போல் குஷ்டமாகியிருந்தது. 2இராஜா 5:27எண் 12:10

“இப்பொழுது திரும்ப உனது கையை மேலங்கிக்குள் வை” என்றார். அப்படியே மோசே, மறுபடியும் அங்கிக்குள் கையை வைத்தான். திரும்பவும் கையை வெளியே எடுத்தபோது, அது சுகமடைந்து உடலின் மற்ற பகுதிகளைப்போல் மாறினது. 2இராஜா 5:14உபா 32:39மத் 8:3எண் 12:13-15

பின்பு யெகோவா, “அவர்கள் உன்னை நம்பாமல் அல்லது முதல் அற்புத அடையாளத்தைக் கவனிக்காமல் விட்டிருந்தாலும், இரண்டாவதை நம்பக்கூடும். உபா 32:39யாத் 4:30-31ஏசா 28:102இராஜா 5:7யோபு 5:18யோவா 12:37 இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமல் அல்லது உனக்குச் செவிகொடுக்காமல் போனால், நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதைக் காய்ந்த தரையில் ஊற்று; நீ நதியிலிருந்து எடுக்கிற தண்ணீர் தரையில் இரத்தமாய் மாறிவிடும்” என்றார். யாத் 1:22யாத் 7:19-25மத் 7:2

அதற்கு மோசே யெகோவாவிடம், “யெகோவாவே, கடந்த காலத்திலோ அல்லது நீர் உமது அடியானுடன் பேசியதிலிருந்தோ, நான் ஒருபோதும் பேச்சுத்திறன் உடையவனாய் இருக்கவில்லை; என் வாய் திக்கும், என் நாவு குழறும்.” எரே 1:6யாத் 6:12அப் 7:222 கொரி 11:6யாத் 4:12 கொரி 10:10யோபு 12:21 கொரி 2:1-4

அப்பொழுது யெகோவா அவனிடம், “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? அவனை ஊமையாகவோ செவிடாகவோ ஆக்குகிறவர் யார்? அவனுக்கு பார்வையைக் கொடுப்பதோ, அவனைக் குருடனாக்குவதோ யார்? யெகோவாவாகிய நான் அல்லவா? ஆமோ 3:6எசேக் 3:26-27ஏசா 6:7சங் 146:8சங் 94:9சங் 51:15எரே 1:6எரே 1:9 இப்பொழுதே நீ போ; பேசுவதற்கு நான் உனக்கு உதவிசெய்து, நீ சொல்ல வேண்டியதையும் உனக்குப் போதிப்பேன்” என்றார். எரே 1:9லூக் 12:11-12மத் 10:19-20லூக் 21:14-15மாற் 13:11ஏசா 50:4எபே 6:19யோவா 14:26

அதற்கு மோசேயோ, “யெகோவாவே, தயவுசெய்து இதைச் செய்வதற்கு வேறொருவனை அனுப்பும்” என்றான். யாத் 4:1யோனா 1:3யாத் 23:20எசேக் 3:14-15ஆதி 48:16நியாயாதி 2:1எரே 1:6எரே 20:9

அதனால் மோசேக்கு எதிராக யெகோவாவின் கடுங்கோபம் மூண்டது; அவர், “அப்படியானால் லேவியனாகிய உன் சகோதரன் ஆரோன் இருக்கிறான் அல்லவா? அவன் நன்றாகப் பேசுவான் என்பதை நான் அறிவேன். அவன் உன்னைச் சந்திப்பதற்கு வந்துகொண்டிருக்கிறான், உன்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைவான். 1 நாளாக 21:7யாத் 4:27மாற் 14:13-151 இராஜா 11:91 சாமு 10:1-71 தெச 3:6-72 கொரி 2:132 கொரி 7:6-7 நீ அவனுடன் பேசி, அவன் சொல்லவேண்டிய வார்த்தைகளை அவனுக்குச் சொல்வாய்; அப்பொழுது நான் உங்கள் இருவருக்கும் பேசுவதற்கு உதவிசெய்து, நீங்கள் செய்யவேண்டியதையும் உங்களுக்குப் போதிப்பேன். ஏசா 51:16உபா 18:18லூக் 21:15எண் 23:12எண் 23:16எண் 23:5ஏசா 59:21எரே 1:9 அவன் உனக்காக மக்களிடம் பேசுவான், அவன் உனக்கு வாய் போலிருப்பான்; நீ அவனுக்கு இறைவன்போல் இருப்பாய். யாத் 7:1-2யோவா 10:34-35சங் 82:6யாத் 18:19 ஆனாலும் நீ இந்தக் கோலை கையில் கொண்டுபோ; இதைக்கொண்டு அற்புத அடையாளங்களை உன்னால் செய்யமுடியும்” என்றார். யாத் 4:21 கொரி 1:27யாத் 7:9-20

மோசே எகிப்திற்குத் திரும்புதல்

அதன்பின் மோசே தன் மாமனார் எத்திரோவிடம் திரும்பிப்போய் அவனிடம், “நான் எகிப்திலுள்ள என் சொந்த மக்களிடம் மறுபடியும்போய், அவர்களில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா, என்று பார்க்க என்னைப் போகவிடும்” என்றான். யாத் 3:11 சாமு 1:171 தீமோ 6:1அப் 15:36அப் 16:36ஆதி 45:3லூக் 7:50

அதற்கு எத்திரோ, “என் நல்வாழ்த்துகள்; நீ போய்வா” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தான்.

மீதியான் தேசத்தில் யெகோவா மோசேயிடம், “உன்னைக் கொலைசெய்ய எண்ணியிருந்தவர்களான எல்லோரும் இறந்துவிட்டார்கள். ஆகையால், நீ எகிப்திற்குத் திரும்பவும் போ” என்று சொல்லியிருந்தார். மத் 2:20யாத் 2:15யாத் 2:23 எனவே மோசே தன் மனைவியையும், மகன்களையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்திற்குப் போகப் புறப்பட்டான். மோசே இறைவனின் கோலை தன்னுடன் எடுத்துச் சென்றான். யாத் 17:9எண் 20:8-9யாத் 18:3-4யாத் 4:2எண் 20:11யாத் 4:17

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ எகிப்திற்குத் திரும்பிப் போனபின்பு, நான் உனக்குக் கொடுத்த அற்புதங்களை எல்லாம் என் வல்லமையைக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாகச் செய்துகாட்டு; ஆனால் நானோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன். அதனால் அவன் மக்களைப் போகவிடமாட்டான். ரோம 9:18யாத் 14:8ஏசா 63:17யோசு 11:20யாத் 7:13யாத் 9:12யாத் 9:35யாத் 10:20 அப்பொழுது நீ பார்வோனிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேல் எனது முதற்பேறான மகன், ஓசி 11:1ரோம 9:4எபி 12:23எரே 31:9உபா 14:1யாத் 19:5-6ஏசா 63:16ஏசா 64:8 என் மகனை என்னை வழிபடும்படி போகவிடு என்று நான் உனக்குச் சொன்னேன்; ஆனால் நீயோ, அவனைப் போகவிட மறுத்தாய்; ஆகையால் நான் உன்னுடைய முதற்பேறான மகனைக் கொல்லுவேன்’ என்கிறார் என்று சொல்” என்றார். யாத் 11:5யாத் 12:29சங் 105:36சங் 135:8யாத் 5:1யாத் 7:16சங் 78:51

மோசே பயணம் செய்யும் வழியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் யெகோவா மோசேயை எதிர்த்து, அவனைக் கொல்ல முயன்றார். ஆதி 17:14எண் 22:22-231 நாளாக 21:16யாத் 3:18ஓசி 13:8லேவி 10:31 இராஜா 13:24ஆதி 42:27 உடனே சிப்போராள் ஒரு கூர்மையானக் கல்லை எடுத்து, தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து, அதனால் மோசேயின் பாதங்களைத் 1 தொட்டு, “நிச்சயமாக நீர் எனக்கு இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்றாள். யோசு 5:2-3ஆதி 17:142 சாமு 16:7 எனவே யெகோவா அவனை விட்டுவிட்டார். “இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்று விருத்தசேதனத்தைக் குறித்தே அந்நேரத்தில் அவள் சொன்னாள்.

யெகோவா ஆரோனிடம், “மோசேயைச் சந்திப்பதற்காகப் பாலைவனத்திற்குப் போ” என்றார். அதன்படியே ஆரோன் இறைவனின் மலையில் மோசேயைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான். யாத் 3:11 இராஜா 19:8அப் 10:20அப் 10:5-6பிரச 4:9யாத் 19:3யாத் 20:18யாத் 24:15-17 அப்பொழுது மோசே யெகோவா தன்னை அனுப்பிச் சொல்லும்படிச் சொன்ன எல்லாவற்றையும் ஆரோனிடம் கூறினான். அத்துடன் அவர் தனக்குச் செய்யும்படி கட்டளையிட்ட அற்புத அடையாளங்களைப் பற்றியும் சொன்னான். யாத் 4:15-16யாத் 4:8-9யோனா 3:2மத் 21:29

மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் எல்லோரையும் கூடிவரச் செய்தார்கள். யாத் 3:16யாத் 24:1யாத் 24:11 அப்பொழுது யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்த எல்லாவற்றையும் ஆரோன் அவர்களிடம் கூறினான், அவன் அந்த அடையாளங்களையும் மக்களுக்குமுன் செய்துகாட்டினான். யாத் 4:16 அவர்கள் நம்பினார்கள். யெகோவா இஸ்ரயேலர்களில் கரிசனையாய் இருக்கிறார் என்றும், தங்கள் அவலத்தைக் கண்டிருக்கிறார் என்றும் அவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் தலைகுனிந்து வழிபட்டார்கள். யாத் 3:18யாத் 12:27யாத் 2:25சங் 106:12-13யாத் 3:16யாத் 3:7ஆதி 24:26லூக் 8:13