ஆதியாகமம் 17

Genesis 17

விருத்தசேதனத்தின் உடன்படிக்கை

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தபோது, யெகோவா அவனுக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன்; நீ எனக்கு முன்பாக உண்மையாய் நடந்து குற்றமற்றவனாய் இரு. பிலி 4:13எபே 3:20லூக் 1:6ஆதி 18:14ஆதி 6:9மத் 5:48சங் 116:9ஏசா 38:3 நான் உனக்கும் எனக்கும் இடையில் என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, மேலும் உறுதிப்படுத்துவேன், உன்னை மிகவும் பெருகப்பண்ணுவேன்” என்றார். ஆதி 17:4-6ஆதி 12:2ஆதி 13:16ஆதி 15:18சங் 105:8-11ஆதி 22:17கலா 3:17-18ஆதி 9:9

ஆபிராம் முகங்குப்புற விழுந்தான், இறைவன் அவனுடன் பேசி, ஆதி 17:17நியாயாதி 13:201 இராஜா 18:39யோசு 5:14மத் 17:6எண் 16:45வெளி 1:17தானி 10:9 “என்னைப் பொறுத்தமட்டில் நான் உன்னுடன் செய்யும் உடன்படிக்கை இதுவே: நீ பல நாடுகளுக்குத் தகப்பனாவாய். ஆதி 35:11ரோம 4:11-18கலா 3:28-29ஆதி 12:2ஆதி 13:16ஆதி 16:10ஆதி 22:17ஆதி 25:1-18 நான் உன்னை அநேக நாடுகளுக்குத் தகப்பனாக்கியிருப்பதால், இனி நீ ஆபிராம் 1 என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம் என்றே அழைக்கப்படுவாய். மத் 1:21-23நெகே 9:7ரோம 4:17ஆதி 17:15ஆதி 32:28ஏசா 62:2-4எரே 20:3வெளி 2:17 நான் உன்னை மிகவும் இனவிருத்தி உள்ளவனாக்குவேன்; உன்னிலிருந்து பல நாடுகளை உருவாக்குவேன், அரசர்கள் உன்னிலிருந்து தோன்றுவார்கள். ஆதி 17:4ஆதி 35:11மத் 1:6-17ஆதி 17:16எஸ்றா 4:20ஆதி 17:20ஆதி 36:31-43 நான் உன் இறைவனாகவும் உனக்குப்பின் உன் சந்ததிகளுடைய இறைவனாகவும் இருப்பேன்; இந்த என் உடன்படிக்கையை, எனக்கும் உனக்கும் இடையில் ஒரு நித்திய உடன்படிக்கையாக உன்னுடனும் உனக்குப்பின் தலைமுறைதோறும் உன் சந்ததிகளுடனும் ஏற்படுத்துவேன். ரோம 9:7-9அப் 2:39ஆதி 26:24ஆதி 15:18ஆதி 28:13எபி 8:10லேவி 26:12கலா 3:16-17 நீ இப்பொழுது அந்நியனாய் வாழும் இந்தக் கானான் நாடு முழுவதையும், உனக்கும் உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடைமையாகக் கொடுப்பேன்; நானே அவர்களுக்கு இறைவனாய் இருப்பேன்” என்றார். லேவி 26:12ஆதி 12:7சங் 105:11யாத் 6:7ஆதி 13:15உபா 14:2உபா 26:18உபா 29:13

அதன்பின் இறைவன் ஆபிரகாமிடம், “உன்னைப் பொறுத்தமட்டில், என் உடன்படிக்கையை நீயும் உனக்குப்பின் உன் சந்ததியும் தலைமுறை தலைமுறையாக அதைக் கடைபிடிக்க வேண்டும். ஏசா 56:4-5சங் 103:18சங் 25:10 நான் உன்னோடும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிகளோடும் செய்துகொள்ளும் என் உடன்படிக்கையில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய பங்காவது: உங்கள் மத்தியில் உள்ள ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். அப் 7:8கொலோ 2:11-12கலா 5:3-6ரோம 4:9-111 கொரி 7:18-19ஆதி 17:11யோசு 5:2பிலி 3:3 நீயும் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும், அது எனக்கும் உனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளமாயிருக்கும். ரோம 4:11அப் 7:8உபா 10:161 சாமு 18:25-272 சாமு 3:14யாத் 12:48யாத் 4:25யோசு 5:3 தலைமுறைதோறும், ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் பிறந்து எட்டாவது நாள் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். உங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும், உங்கள் சந்ததியாய் இராமல், அந்நியரிடமிருந்து பணத்துக்கு வாங்கப்பட்டவர்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். லேவி 12:3லூக் 2:21யாத் 12:48-49லூக் 1:59பிலி 3:5அப் 7:8ஆதி 17:23ஆதி 21:4 அவர்கள் உன் குடும்பத்தில் பிறந்தவர்களாய் இருந்தாலென்ன, பணத்திற்கு வாங்கப்பட்டவர்களாய் இருந்தாலென்ன, அவர்களுக்கும் கட்டாயம் விருத்தசேதனம் செய்யவேண்டும். இவ்வாறு இது உங்கள் உடலில் என் நித்திய உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கும். யாத் 12:44ஆதி 37:36நெகே 5:8யாத் 21:16யாத் 21:2யாத் 21:4ஆதி 14:14ஆதி 15:3 எந்த ஆணுக்கும் தன் உடலில் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருந்தால், அவன் தன் சொந்த மக்களிலிருந்து விலக்கப்படுவான்; ஏனெனில், அவன் என் உடன்படிக்கையை நிராகரித்துவிட்டான்” என்றார். யாத் 4:24-26யாத் 12:19எண் 15:30-311 கொரி 11:271 கொரி 11:29யாத் 12:15யாத் 30:33யாத் 30:38

மேலும் இறைவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராயை இனிமேல் நீ சாராய் என்று அழைக்கவேண்டாம்; சாராள் என்பதே அவள் பெயராகும். 2 சாமு 12:25ஆதி 17:5ஆதி 32:28 நான் அவளை ஆசீர்வதித்து, நிச்சயமாக அவள் மூலம் உனக்கு ஒரு மகனைக் கொடுப்பேன். நான் அவளை ஆசீர்வதிப்பதனால், அவள் நாடுகளுக்குத் தாயாவாள்; மக்கள் கூட்டங்களின் அரசர்களும் அவளிலிருந்து தோன்றுவார்கள்” என்றார். ஆதி 35:111 பேது 3:6கலா 4:26-31ஆதி 17:6ஆதி 18:10-14ஏசா 49:23ஆதி 1:28ஆதி 12:2

அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து, “நூறு வயதுள்ள மனிதனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதில் சாராள் பிள்ளை பெறுவாளோ?” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். ஆதி 18:12ஆதி 21:6ஆதி 17:3யோவா 8:56வெளி 11:16ரோம 4:19-20எசேக் 1:28வெளி 5:8 மேலும் ஆபிரகாம் இறைவனிடம், “இஸ்மயேல் உம்முடைய ஆசீர்வாதத்தில் வாழ்ந்தாலே போதும்!” என்று சொன்னான். அப் 2:39சங் 4:6சங் 41:12ஆதி 4:12ஆதி 4:14ஏசா 59:2எரே 32:39

அதற்கு இறைவன், “ஆம்; ஆனாலும், சாராள் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவனுக்கு ஈசாக்கு 2 என்று பெயரிடு. என் உடன்படிக்கையை நான் அவனுடன் ஏற்படுத்துவேன்; அது அவனுக்குப்பின் அவனுடைய சந்ததிகளுக்கு ஒரு நித்திய உடன்படிக்கையாக இருக்கும். ஆதி 18:10-14ஆதி 21:2-3லூக் 1:13-202இராஜா 4:16-17கலா 4:28-31ஆதி 21:6ரோம 9:6-9ஆதி 17:21 இஸ்மயேலைப் பொறுத்தமட்டில், நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்: நான் அவனை நிச்சயமாக ஆசீர்வதிப்பேன்; நான் அவனை இனவிருத்தி உள்ளவனாக்கி, அவனுடைய சந்ததியையும் பலுகிப் பெருகப்பண்ணுவேன். அவன் பன்னிரண்டு ஆளுநர்களுக்குத் தகப்பனாயிருப்பான், நான் அவனை ஒரு பெரிய நாடாக்குவேன். ஆதி 21:18ஆதி 21:13ஆதி 25:12-18ஆதி 16:10-12 ஆனால், அடுத்த வருடம் இதே காலத்தில், சாராள் உனக்குப் பெறப்போகும் ஈசாக்குடனேயே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார். ஆதி 21:2-3ஆதி 26:2-5கலா 3:29ஆதி 18:10ரோம 9:5-6ரோம 9:9அப் 1:7யாத் 2:24 இறைவன் ஆபிரகாமுடன் பேசி முடித்தபின் மேலெழுந்து போனார். ஆதி 18:33ஆதி 35:9-15உபா 5:4யாத் 20:22ஆதி 17:3நியாயாதி 13:20நியாயாதி 6:21யோவா 1:18

ஆபிரகாம், இறைவன் தனக்குச் சொன்னபடி அந்த நாளிலேயே, இஸ்மயேலுக்கும், தன் வீட்டில் பிறந்தவர்களும், பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமான தன் வீட்டிலுள்ள எல்லா ஆண்களுக்கும் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்தான். சங் 119:60ஆதி 17:10-14ஆதி 17:26-27ஆதி 18:19நீதி 27:11 கொரி 7:18-19அப் 16:3பிரச 9:10 ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் தொண்ணூற்றொன்பது வயதுடையவனாய் இருந்தான். ரோம 4:11ஆதி 12:4ஆதி 17:1ஆதி 17:17ரோம 4:19-20 அவனுடைய மகன் இஸ்மயேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் பதின்மூன்று வயதுடையவனாய் இருந்தான்; ஆபிரகாமும் அவன் மகன் இஸ்மயேலும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். ஆதி 12:4ஆதி 22:3-4சங் 119:60 ஆபிரகாமின் வீட்டில் பிறந்தவர்களும், அவனால் பணங்கொடுத்து அந்நியரிடம் வாங்கப்பட்டவர்களுமான அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களும் ஆபிரகாமுடன் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். ஆதி 18:19