மூன்று விருந்தினர்கள்
வெப்பமான பகற்பொழுதிலே, ஆபிரகாம் தன்னுடைய கூடாரவாசலில் உட்கார்ந்திருக்கையில், மம்ரேயின் மரச்சோலையருகே, யெகோவா இன்னும் ஒருமுறை அவனுக்குத் தரிசனமானார். ஆதி 14:13ஆதி 13:18ஆதி 48:3அப் 7:2ஆதி 17:22ஆதி 26:22 நாளாக 1:7ஆதி 17:1-3 ஆபிரகாம் நிமிர்ந்து பார்த்தபோது, சிறிது தொலைவில் மூன்று மனிதர் நிற்கிறதைக் கண்டான். அவன் அவர்களைக் கண்டபோது, அவர்களைச் சந்திக்கும்படியாக, தன் கூடாரவாசலில் இருந்து விரைந்து சென்று தரைமட்டும் தலைகுனிந்து வணங்கினான். எபி 13:2ஆதி 18:22ஆதி 19:1நியாயாதி 13:3ஆதி 23:7ஆதி 18:16ஆதி 32:24ஆதி 43:26
அவன், “என் ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது அடியானிடம் வராமல் போய்விடாதேயும். ஆதி 32:5 என் வேலைக்காரர் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், நீங்கள் யாவரும் உங்கள் கால்களைக் கழுவி இம்மரத்தின் கீழ் இளைப்பாறலாம். ஆதி 19:2ஆதி 24:32ஆதி 43:24லூக் 7:441 சாமு 25:41யோவா 13:5-151 தீமோ 5:10 இப்பொழுது நீங்கள் அடியேனிடம் வந்திருக்கிறபடியால், சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன்; பின்பு நீங்கள் இளைப்பாறி, உங்கள் வழியே போகலாம்” என்றான். சங் 104:15நியாயாதி 13:15நியாயாதி 6:18ஆதி 19:8ஆதி 33:10நியாயாதி 19:5மத் 6:11ஏசா 3:1
அதற்கு அவர்கள், “நல்லது, நீ சொன்னபடியே செய்” என்றார்கள்.
உடனே ஆபிரகாம் கூடாரத்துக்குள் சாராளிடம் விரைந்து சென்று, “சீக்கிரமாய் மூன்றுபடி 1 அளவு சிறந்த மாவை எடுத்துப் பிசைந்து கொஞ்சம் அப்பங்கள் சுடு” என்றான். கலா 5:13மத் 13:33ரோம 12:131 பேது 4:9அப் 16:15எபி 13:2ஏசா 32:8லூக் 10:38-40
ஆபிரகாம் தன் மாட்டு மந்தைக்கு விரைந்து சென்று, ஒரு நல்ல இளங்கன்றைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு வேலைக்காரனிடம் கொடுத்தான்; அவன் அதைச் சமைப்பதற்கு விரைந்தான். நியாயாதி 13:15-16ஆமோ 6:4ஆதி 19:3லூக் 15:23லூக் 15:27லூக் 15:30மல்கி 1:14மத் 22:4 பின்பு ஆபிரகாம், வெண்ணெயையும் பாலையும், சமைத்த இளங்கன்றின் இறைச்சியையும் கொண்டுவந்து அந்த மனிதர்கள் முன்பாக வைத்தான். அவர்கள் சாப்பிடும்போது, அவன் அவர்களுக்கு அருகே மரத்தின்கீழ் நின்றுகொண்டிருந்தான். ஆதி 19:3அப் 10:41உபா 32:14கலா 5:13நியாயாதி 13:15நியாயாதி 5:25யோவா 12:2லூக் 12:37
அவர்கள் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டார்கள். தீத் 2:5ஆதி 24:67ஆதி 4:9ஆதி 31:33
“அவள் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான்.
அப்பொழுது அம்மூவரில் ஒருவர், “அடுத்த வருடம் ஏறக்குறைய இதே காலத்தில் நான் நிச்சயமாகத் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது உன் மனைவி சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். ஆதி 21:2ஆதி 17:21ரோம 9:8-92இராஜா 4:16-17ஆதி 17:16ஆதி 17:19கலா 4:23கலா 4:28
சாராள், அவர்களுக்குப் பின்னால் இருந்த கூடாரத்தின் வாசலிலே நின்று அதைக்கேட்டுக் கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள், சாராளும் பிள்ளைபெறும் வயதைத் தாண்டினவளாக இருந்தாள். ஆதி 17:17எபி 11:11-12லூக் 1:36ரோம 4:18-21ஆதி 17:24எபி 11:19லேவி 15:19லூக் 1:18 எனவே சாராள், “என் உடல் தளர்ந்துவிட்டது, என் கணவரும் வயது சென்றவராகிவிட்டார், இப்பொழுது இந்த இன்பம் எனக்கு இருக்குமோ?” என நினைத்துத் தனக்குள்ளே சிரித்தாள். 1 பேது 3:6ஆதி 17:17லூக் 1:18-20ஆதி 18:13ஆதி 21:6-7லூக் 1:34-35எபே 5:33எபி 11:11-12
அப்பொழுது யெகோவா ஆபிரகாமிடம், “ ‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்கையில் உண்மையாய்ப் பிள்ளை பெறுவேனோ என சாராள் கூறிச் சிரித்தது ஏன்?’ யோவா 2:25 யெகோவாவுக்கு செய்யமுடியாத கடினமானது ஏதேனும் உண்டோ? நான் அடுத்த வருடம் நியமிக்கப்பட்ட காலத்தில் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். லூக் 1:37மத் 19:26மாற் 10:27எரே 32:27எபே 3:20யோபு 42:2பிலி 4:13எரே 32:17
சாராள் பயந்ததினால், “நான் சிரிக்கவில்லை” என்று பொய் சொன்னாள். நீதி 28:131 யோவா 1:8எபே 4:23சங் 44:21ஆதி 12:13ஆதி 4:9யோவா 18:17யோவா 18:25-27
அதற்கு அவர், “ஆம், நீ உண்மையாய்ச் சிரித்தாய்” என்றார்.
ஆபிரகாம் சோதோமுக்காக மன்றாடுதல்
பின்பு அந்த மனிதர் புறப்படுவதற்கு எழுந்தபோது, சோதோமை நோக்கிப் பார்த்தார்கள்; ஆபிரகாம் அவர்களை வழியனுப்பும்படி அவர்களோடுகூடப் போனான். அப் 21:53 யோவா 1:6அப் 15:3அப் 20:38ரோம 15:24 அப்பொழுது யெகோவா, “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்கு மறைக்கலாமா? ஆமோ 3:7சங் 25:14யோவா 15:15ஆதி 19:24யாக் 2:232 நாளாக 20:72இராஜா 4:27 நிச்சயமாகவே ஆபிரகாம் பெரிதும் வலிமைமிக்கதுமான ஒரு நாடாக வருவான், அவன்மூலம் பூமியின் எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும். கலா 3:8ஆதி 26:4கலா 3:14ஆதி 12:2-3ஆதி 22:17-18அப் 3:25-26எபே 1:3சங் 72:17 ஏனெனில் நானே ஆபிரகாமைத் தெரிந்தெடுத்தேன், அவன் தனக்குப்பின் தனது பிள்ளைகளும், தனது குடும்பமும் சரியானதையும் நீதியானதையும் செய்து, யெகோவாவின் வழியைக் கடைப்பிடிப்பதற்கு அவர்களை வழிநடத்துவான். அப்பொழுது யெகோவா ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்” என்றார். 1 தீமோ 3:4-5உபா 6:6-7உபா 4:9-10எபே 6:42 தீமோ 3:15நீதி 6:20-22உபா 32:461 நாளாக 28:9
அதன்பின் யெகோவா, “சோதோம், கொமோராவின் பாவம் மிகவும் கொடியதாய் இருக்கிறது, அவர்களுக்கு விரோதமான கூக்குரலும் அதிகமாய் எழும்பியிருக்கின்றது. ஆதி 19:13எசேக் 16:49-50ஏசா 3:9ஆதி 13:13ஆதி 4:10யாக் 5:4ஏசா 5:7எரே 14:7 அவர்களின் செய்கைகள், எனக்கு எட்டிய கூக்குரலுக்கேற்ப கொடியதாய் இருக்கின்றனவோ என்று நான் போய்ப்பார்ப்பேன். அப்படியில்லையென்றால், அதையும் அறிவேன்” என்றார். யாத் 3:8ஆதி 11:5யோசு 22:22உபா 13:3உபா 8:2யாத் 33:5ஆதி 11:7எரே 17:10
பின்பு அந்த மனிதர் அவ்விடத்தைவிட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள், ஆனால் ஆபிரகாம் யெகோவாவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். ஆதி 19:11 தீமோ 2:1அப் 7:55எசேக் 22:30எரே 18:20சங் 106:23ஆதி 18:1-2எரே 15:1 ஆபிரகாம் யெகோவாவை அணுகி, “கொடியவர்களுடன் நீதிமான்களையும் அழிப்பீரோ? எண் 16:222 சாமு 24:17ஆதி 20:4ஆதி 18:25எபி 10:22யோபு 34:17சங் 11:4-7ரோம 3:5-6 ஒருவேளை பட்டணத்தில் நீதிமான்கள் ஐம்பதுபேர் இருந்தால் அதை அழித்து விடுவீரோ? நீதிமானான அந்த ஐம்பது பேர்களுக்காகிலும் அதை அழியாமல் விடமாட்டீரோ? ஏசா 1:9எரே 5:1ஆதி 18:32மத் 7:13-14அப் 27:24 கொடியவர்களுடன் நீதிமான்களையும் கொல்லுவதும், கொடியவர்களையும் நீதிமான்களையும் ஒரேவிதமாக நடத்துவதும் உமக்கு ஒருபோதும் ஏற்றதல்ல. அது உமக்குத் தூரமாயிருப்பதாக! பூமி முழுவதற்கும் நீதிபதியானவர் நியாயத்தைச் செய்யமாட்டாரோ?” என்று கேட்டான். யோபு 8:20ஏசா 3:10-11யோபு 8:3சங் 58:11உபா 32:4சங் 94:2ரோம 3:5-62 கொரி 5:10
அதற்கு யெகோவா ஆபிரகாமிடம், “நீதிமான்கள் ஐம்பது பேரை சோதோம் பட்டணத்தில் நான் காண்பேனாகில், அவர்களுக்காக அந்த முழு இடத்தையும் தப்பவிடுவேன்” என்றார். எரே 5:1மத் 24:22எசேக் 22:30ஏசா 65:8ஏசா 10:22ஏசா 19:24ஏசா 6:13
மறுபடியும் ஆபிரகாம் யெகோவாவிடம், “புழுதியும் சாம்பலுமான நான் யெகோவாவுடன் பேசத் துணிவுகொண்டேன், ஏசா 6:5ஆதி 3:19லூக் 5:81 கொரி 15:47-48ஏசா 64:8யோபு 30:19பிரச 12:7ஆதி 18:30-32 ஒருவேளை நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் மட்டும் இருந்தால், ஐந்துபேர் குறைவாக இருப்பதனால் அந்த முழுப்பட்டணத்தையும் அழிப்பீரோ?” எனக் கேட்டான். 1 இராஜா 20:32-33ஆதி 18:26ஆதி 18:29யோபு 23:3-4எண் 14:17-19
அதற்கு யெகோவா, “நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
மேலும் ஆபிரகாம் அவரிடம், “ஒருவேளை நீதிமான்கள் நாற்பது பேர் மட்டும் இருந்தால்?” என்றான். எபே 6:18எபி 4:16
அதற்கு அவர், “நாற்பது பேர் இருந்தாலும் நான் அழிக்கமாட்டேன்” என்றார்.
பின்பு ஆபிரகாம், “நான் மறுபடியும் பேசுவதற்காக யெகோவா கோபிக்காதிருப்பாராக, முப்பது பேர் மட்டும் இருப்பார்களானால் என்ன செய்வீர்?” என்றான். ஏசா 55:8-9யோபு 40:4சங் 10:17எஸ்த 4:11-16ஆதி 44:18எபி 12:28-29ஏசா 6:5நியாயாதி 6:39
அதற்கு அவர், “முப்பது பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
ஆபிரகாம், “நான் இப்பொழுது யெகோவாவுடன் பேசத்துணிந்தேன், ஒருவேளை இருபது பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான். லூக் 11:8எபே 6:18ஆதி 18:27எபி 10:20-22எபி 4:16லூக் 18:1மத் 7:11மத் 7:7
அதற்கு அவர், “அந்த இருபது பேருக்காகவும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
மறுபடியும் ஆபிரகாம், “நான் இன்னும் ஒருமுறை பேசுவதற்கு யெகோவா என்னோடு கோபிக்காதிருப்பாராக. பத்துப்பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான். யாக் 5:15-17நியாயாதி 6:39மத் 7:71 யோவா 5:15-16எபே 3:20மீகா 7:18யாத் 32:14யாத் 32:9-10
அதற்கு யெகோவா, “அந்த பத்துப்பேருக்காகவும் அதை நான் அழிக்கமாட்டேன்” என்றார்.
யெகோவா ஆபிரகாமோடு பேசியபின், அவ்விடத்தைவிட்டுப் போனார். ஆபிரகாமும் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச்சென்றான். ஆதி 32:26ஆதி 18:22ஆதி 18:16ஆதி 31:55