சங்கீதங்கள் 11

Psalms 11
சங்கீதம் 11

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். ஏசா 26:3-4சங் 56:111 சாமு 23:14சங் 25:2லூக் 13:312 நாளாக 16:8நீதி 6:5சங் 16:1

அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்:

“ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ.

பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; எரே 9:3சங் 21:12சங் 37:14சங் 64:3-51 சாமு 18:211 சாமு 23:9மத் 26:4சங் 10:2

நேர்மையான இருதயம் உள்ளவர்மேல்

இருளிலிருந்து எய்வதற்காக

தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.

அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, சங் 82:52 தீமோ 2:19ஏசா 58:12சங் 75:3அப் 4:24-332இராஜா 19:13-182 நாளாக 32:13-15தானி 3:15-18

நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?”

யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; சங் 103:19சங் 18:6சங் 2:4ஆப 2:20ஏசா 66:1எரே 23:24சங் 33:13சங் 34:15-16

யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்;

அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.

யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; நீதி 6:16-19யாக் 1:12சங் 7:91 பேது 1:7ஆதி 22:1சங் 21:8சங் 26:2சங் 5:4-5

வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ,

அவர் மனதார வெறுக்கிறார்.

அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், எசேக் 38:22ஆதி 19:24எசேக் 13:13லூக் 17:29சங் 75:8யோபு 18:15யோபு 20:23ஆப 2:16

எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்;

வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.

யெகோவா நீதியுள்ளவர், வெளி 22:4சங் 17:151 பேது 3:12சங் 45:71 யோவா 3:2யோபு 36:7சங் 33:18சங் 34:15

அவர் நீதியை நேசிக்கிறார்;

நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.