சங்கீதங்கள் 56

Psalms 56
சங்கீதம் 56

பெலிஸ்தியர் தாவீதை காத் ஊரில் பிடித்தபோது, “தொலைவில் உள்ள கருவாலி மரத்தில் வாழும் மெளன மாடப்புறா” என்ற இசையில் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.

இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், 1 சாமு 29:4சங் 16:1சங் 31:9சங் 59:1சங் 69:13-161 கொரி 15:541 சாமு 21:11-15சங் 143:12

மனிதன் என்னை தாக்குகிறான்;

நாள்தோறும் போர்செய்து என்னை அடக்குகிறான்.

என் பகைவர்கள் நாள்தோறும் என்னை அழுத்துகிறார்கள்; சங் 118:10-12சங் 57:3அப் 4:25-27தானி 5:18ஏசா 57:15மீகா 6:6சங் 3:1சங் 35:1

அநேகர் தங்கள் பெருமையோடு என்னை எதிர்த்துப் போரிடுகிறார்கள்.

நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன். சங் 34:41 சாமு 30:62 கொரி 7:5-6சங் 55:4-52 கொரி 1:8-101 சாமு 21:122 நாளாக 20:3சங் 11:1

நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்; எபி 13:6சங் 118:6ரோம 8:31-39சங் 27:1ஏசா 41:10லூக் 12:4-5சங் 56:10-11சங் 46:1-2

அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்.

அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?

எப்பொழுதும் அவர்கள் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; மத் 22:15லூக் 11:54சங் 41:7ஏசா 29:20-212 பேது 3:161 சாமு 18:211 சாமு 18:17யோவா 2:19

அவர்களின் திட்டங்கள் அனைத்தும் எனக்குத் தீமை செய்வதற்கே.

அவர்கள் ஒன்றுகூடி பதுங்கி இருக்கிறார்கள், சங் 59:3சங் 71:10சங் 140:2அப் 23:12-14லூக் 20:20அப் 4:5-6தானி 6:4ஏசா 54:15

என் உயிரைப் பறிக்க விருப்பம் உள்ளவர்களாய்

மறைந்திருந்து என் காலடிகளைக் கவனிக்கிறார்கள்.

அவர்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்களைத் தப்பவிடாதேயும்; சங் 55:23பிரச 8:8ஆப 1:13ஏசா 28:15எரே 10:25எரே 18:19-23எரே 7:10சங் 36:12

இறைவனே, உமது கோபத்தில் மக்கள் கூட்டத்தைக் கீழே வீழ்த்திவிடும்.

நீர் என் அலைச்சலை கணக்கில் வைத்திருக்கிறீர்; 2இராஜா 20:5மல்கி 3:16சங் 39:12வெளி 7:17சங் 126:5-6மத் 10:30சங் 139:16சங் 121:8

என் கண்ணீரை உமது தோற்குடுவையில் சேர்த்து வைத்திருக்கிறீர்;

அவை உமது பதிவேட்டில் இருக்கிறது அல்லவா?

நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது, ரோம 8:31சங் 118:6ஏசா 8:9-10சங் 102:2சங் 118:11-13சங் 46:11எரே 33:3சங் 46:7

என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்;

அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன்.

நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்; மத் 24:35ஆதி 32:11சங் 56:42 பேது 1:4எபி 6:18சங் 60:6

யெகோவாவினுடைய வார்த்தையைப் புகழ்வேன்.

நான் இறைவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; சங் 27:1ஏசா 51:12-13ஏசா 51:7-8சங் 112:7-8

மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?

இறைவனே, நான் உமக்கு நேர்த்திக் கடன்களைச் செய்திருக்கிறேன்; சங் 9:1-31 சாமு 1:24-28சங் 50:14பிரச 5:4-6எண் 30:2-16சங் 119:106சங் 76:111 சாமு 1:11

நன்றிக் காணிக்கைகளை நான் உமக்குச் செலுத்துவேன்.

ஏனெனில், நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டீர், சங் 116:8-9யோபு 33:30வெளி 21:23-24சங் 145:14சங் 49:151 தெச 1:10ஏசா 2:5சங் 17:5

என் கால்களை இடறாமல் காத்துக்கொண்டீர்;

இதினால் நான் இறைவனுக்கு முன்பாக

வாழ்வின் வெளிச்சத்தில் நடப்பேன்.