யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; 1 நாளாக 16:34சங் 107:1சங் 106:1எரே 33:11சங் 118:291 நாளாக 16:8சங் 103:17சங் 136:1
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று சங் 115:9-11சங் 145:10சங் 135:19-20சங் 147:19-201 பேது 2:9-10கலா 6:16எபி 13:15
இஸ்ரயேலர் சொல்வார்களாக.
“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று சங் 134:1-31 பேது 2:5வெளி 1:6வெளி 4:7-11வெளி 5:8-10
ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக.
“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று சங் 22:23வெளி 19:5
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக.
நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து, சங் 18:19சங் 18:6சங் 120:1சங் 107:19சங் 130:1-2சங் 31:81 சாமு 30:6-8சங் 107:13
விசாலமான இடத்தில் என்னை நடத்தினார்.
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; எபி 13:6ரோம 8:31சங் 56:4சங் 56:11மீகா 7:8-10சங் 27:1-3சங் 56:9எரே 20:11
மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்; சங் 59:10சங் 54:4சங் 54:7சங் 55:18சங் 112:8சங் 92:111 நாளாக 12:18
என்னைப் பகைக்கிறவர்களுக்கு நேரிடுவதை நான் காண்பேன்.
மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், சங் 40:4எரே 17:5-7சங் 62:8-9மீகா 7:5-7
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.
அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், சங் 146:3-5எசேக் 29:7ஏசா 31:1ஏசா 30:2-3ஏசா 31:8ஏசா 30:15-17ஏசா 36:6-7
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது.
எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; சங் 88:17வெளி 20:8-92 சாமு 10:1-192 சாமு 8:1-18சங் 18:40சகரி 14:1-32 சாமு 5:1-25வெளி 19:19-21
ஆனாலும் யெகோவாவின் பெயரில் நான் அவர்களை மேற்கொண்டேன்.
அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்; சங் 88:171 சாமு 23:26சங் 22:12-161 நாளாக 19:10
ஆனாலும் யெகோவாவின் பெயரிலேயே நான் அவர்களை மேற்கொண்டேன்.
அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; உபா 1:441 சாமு 17:45சங் 20:5பிரச 7:6சங் 20:12 சாமு 23:6சங் 58:9சங் 8:9
ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்;
யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன்.
நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்; சங் 140:4சங் 86:17மீகா 7:8சங் 18:17-18மத் 4:1-111 சாமு 25:292 சாமு 17:1-3சங் 56:1-3
ஆனால் யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்; ஏசா 12:2சங் 18:2யாத் 15:2-6சங் 27:1மத் 1:21-23ஏசா 45:17ஏசா 45:22-25
அவரே எனக்கு இரட்சிப்புமானார்.
நீதிமான்களின் கூடாரங்களில், அப் 2:46-47சங் 89:13சங் 60:12யாத் 15:6சங் 98:1லூக் 1:51அப் 16:34ஏசா 65:13
வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன:
“யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது.
யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யாத் 15:6அப் 2:32-36
யெகோவாவின் வலதுகரம் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறது.”
நான் வாழுவேன், சாகமாட்டேன். யோவா 11:4சங் 71:17-18ஏசா 38:16-20சங் 6:5சங் 73:28ஆப 1:12ரோம 14:7-9சங் 145:4
நான் வாழ்ந்து யெகோவா செய்தவற்றை அறிவிப்பேன்.
யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார், 1 கொரி 11:322 கொரி 6:9யோபு 5:17-18நீதி 3:11-122 கொரி 1:9-11சங் 94:12-13யோனா 2:6சங் 66:10-12
ஆனாலும் அவர் என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
நீதியின் வாசல்களை 1 எனக்காகத் திறவுங்கள்; ஏசா 26:2வெளி 22:14சங் 100:4சங் 9:13-14ஏசா 38:20ஏசா 38:22சங் 116:18-19சங் 66:13-15
நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன்.
இதுவே யெகோவாவின் வாசல்; வெளி 21:24-27ஏசா 26:2சங் 24:7ஏசா 35:8-10சங் 24:3-4சங் 24:9வெளி 22:14-15
நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள்.
நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; சங் 116:1யாத் 15:2ஏசா 12:2ஏசா 49:8சங் 118:14சங் 22:23-24சங் 69:33-34
என் இரட்சிப்பு நீரே.
வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே லூக் 20:17மத் 21:421 பேது 2:4-8அப் 4:11மாற் 12:10-11எபே 2:20-22சகரி 4:7
மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
யெகோவாவே இதைச் செய்தார், யோபு 5:9அப் 13:41எபே 1:19-22அப் 4:13அப் 5:31-32அப் 2:32-36அப் 3:14-15
இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
யெகோவா உண்டாக்கின நாள் இதுவே; சங் 84:10ஏசா 58:13நெகே 8:102 நாளாக 20:26-281 இராஜா 8:66வெளி 1:10அப் 20:7யோவா 20:19-20
இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
யெகோவாவே, எங்களை இரட்சியும்; சங் 90:17சங் 20:9சங் 69:13சங் 22:21சங் 69:1
யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும்.
யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்; லூக் 19:38மத் 21:9யோவா 12:13மத் 23:39லூக் 13:35மாற் 11:9-10சங் 129:8சங் 134:3
யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
யெகோவாவே இறைவன், யோவா 8:12சங் 18:281 பேது 2:9எஸ்த 8:16ஏசா 60:1ஏசா 9:21 இராஜா 18:39சங் 37:6
அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்;
பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு,
பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி
ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.
நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; ஏசா 25:1சங் 146:2யாத் 15:2ஏசா 12:2ஏசா 25:9சங் 145:1
நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்.
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; எஸ்றா 3:11சங் 118:1சங் 103:17ஏசா 63:7
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.