ஓசியா 14

Hosea 14

மனந்திரும்புதலின் ஆசீர்வாதம்

இஸ்ரயேலே, உன் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பு; ஓசி 6:1யோவே 2:12-13ஓசி 12:62 நாளாக 30:6-9சகரி 1:3-4அப் 26:18-20ஏசா 55:6-7எரே 4:1

உன் பாவங்களே நீ விழுந்துபோவதற்குக் காரணமாய் அமைந்தன.

நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன் எபி 13:15சங் 51:2-10யோபு 34:31-32யோபு 7:21மீகா 7:18-191 யோவா 3:5சங் 69:30-312 சாமு 12:13

யெகோவாவிடம் திரும்புங்கள்;

நீங்கள் அவரிடம்,

“எங்கள் பாவங்களையெல்லாம் மன்னியும்,

எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்ளும்;

அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை

காளைகளின் பலியாய் செலுத்துவோம் என்று சொல்லுங்கள்.

அசீரியா நாடு எங்களைக் காப்பாற்றமாட்டாது; சங் 10:14சங் 68:5ஏசா 31:1யோவா 14:18ஓசி 14:8ஓசி 2:17ஓசி 5:13ஏசா 30:16

நாங்கள் போர்க் குதிரைகளில் ஏறமாட்டோம்.

எங்கள் கைகளினால் நாங்கள் செய்த விக்கிரகங்களை

‘எங்கள் தெய்வம்’ என இனி ஒருபோதும் சொல்லமாட்டோம்;

ஏனெனில் உம்மிடமே திக்கற்றவர்கள் கருணை பெறுகிறார்கள் என்று கூறுங்கள்.”

“நான் அவர்களுடைய பின்மாற்றத்தைக் குணமாக்குவேன், ஏசா 57:18எரே 3:22ஏசா 12:1எபே 2:4-9செப்ப 3:17ஓசி 6:12 கொரி 5:19-21யாத் 15:26

நான் அவர்களில் அதிகமாய் அன்பு செலுத்துவேன்,

எனது கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.

நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்; ஏசா 35:2எபே 3:17ஏசா 27:6மத் 6:28ஏசா 26:19ஏசா 44:3யோபு 29:19மீகா 5:7

அவன் லில்லியைப்போல் பூப்பான்.

லெபனோனின் கேதுருபோல்

வேரூன்றி நிற்பான்.

அவனுடைய இளந்தளிர்கள் வளரும். சங் 52:8சங் 128:3பிலி 4:18ரோம 11:16-242 கொரி 2:14-15தானி 4:10-15எசேக் 17:5-8எசேக் 31:3-10

அவனுடைய புகழ் ஒலிவமரத்தைப் போலவும்,

அவனுடைய வாசனை லெபனோனின் கேதுரு போலவும் இருக்கும்.

திரும்பவும் மனிதர்கள் அவனுடைய நிழலில் குடியிருப்பார்கள்; சங் 91:1யோவா 11:251 கொரி 15:36-38எசேக் 17:23ஓசி 14:5ஓசி 2:22ஓசி 6:2ஏசா 32:1-2

அவன் தானியத்தைப்போல் செழிப்பான்.

திராட்சைக் கொடியைப்போல் பூப்பான்;

அவனுடைய புகழ் லெபனோனின் திராட்சை இரசம்போல் இருக்கும்.

எப்பிராயீமுக்கு விக்கிரகங்களுடன் இனியும் வேலை இல்லை; யோபு 34:32யாக் 1:171 பேது 4:3-4ஏசா 41:19ஏசா 55:13லூக் 15:20பிலி 2:131 பேது 1:14-16

இனிமேல் நான் அவனுடைய வேண்டுதலுக்குப் பதில் கொடுத்து, அவனைப் பராமரிப்பேன்.

நான் அவர்களுக்குப் பசுமையான தேவதாரு மரம் போலிருக்கிறேன்.

அவர்களுடைய பலன்களின் நிறைவுகளெல்லாம் என்னிடமிருந்தே வருகின்றன.”

ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான். நீதி 10:29சங் 107:43யோவா 8:47தானி 12:10நீதி 1:5-6சங் 19:7-8எரே 9:12உபா 32:4

பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான்.

யெகோவாவின் வழிகள் நீதியானவைகள்;

நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள்,

ஆனால் கலகக்காரர்கள் அவைகளில் இடறி விழுகிறார்கள்.