ஓசியா 2

Hosea 2

“அந்நாளிலே உங்கள் சகோதரர்களைப் பார்த்து, ‘நீங்கள் என் மக்கள்’ என்றும், உங்கள் சகோதரிகளைப் பார்த்து, ‘என் அன்புக்குரியவள்’ என்றும் சொல்லுங்கள். 1 பேது 2:101 தீமோ 1:13எசேக் 37:27ஓசி 2:23ரோம 11:30-312 கொரி 4:1யாத் 19:5-6எசேக் 11:20

இஸ்ரயேல் தண்டிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுதல்

“உங்கள் தாயைக் கண்டியுங்கள், அவளைக் கண்டியுங்கள், ஏசா 50:1எசேக் 16:25எசேக் 23:45எரே 3:13எரே 3:1ஓசி 1:2ஓசி 2:5எரே 19:3

அவள் என் மனைவி அல்ல,

நான் அவள் கணவனும் அல்ல.

அவள் தன் விபசாரப் பார்வையை தன் முகத்தை விட்டகற்றட்டும்;

தன் உண்மையற்ற தன்மையைத் தன் மார்பகங்களிடையே இருந்தும் விலக்கட்டும்.

இல்லாவிட்டால் நான் அவளை உரிந்து நிர்வாணமாக்கி, எசேக் 16:22ஆமோ 8:11-13எசேக் 19:13ஏசா 32:13-14எரே 13:22யாத் 17:3எரே 22:6எசேக் 16:37-39

அவள் பிறந்த நாளில் இருந்ததுபோலவே அவளை வெறுமையாக வைப்பேன்;

அவளைப் பாலைவனத்தைப் போலாக்குவேன்,

வறண்ட நிலமாக்கி,

அவளைத் தாகத்தினால் சாகப்பண்ணுவேன்.

நான் அவளது பிள்ளைகளில் அன்புகாட்டமாட்டேன். எசேக் 8:18எசேக் 9:10ஓசி 1:2ஓசி 1:6யாக் 2:13எரே 13:14எரே 16:52இராஜா 9:22

ஏனெனில் அவர்கள் வேசிப்பிள்ளைகள்.

அவர்களின் தாய் எனக்கு உண்மையற்றவளாயிருந்தாள்; எரே 44:17-18ஓசி 2:8ஓசி 3:1ஏசா 1:21ஓசி 2:12-13எரே 3:1-9தானி 9:5-8எசேக் 16:15-16

அவர்களை வெட்கக்கேடான முறையில் கர்ப்பந்தரித்தாள்.

அவளோ, ‘நான் காதலர்களுக்குப் பின்னே போவேன்,

அவர்கள் எனக்கு உணவும், தண்ணீரும்,

கம்பளி உடையும், மென்பட்டு உடையும், எண்ணெயும், பானமும் தருவார்கள்’ என்றாள்.

எனவே நான், அவளது பாதையை முட்புதர்களினால் அடைப்பேன்; யோபு 19:8புலம் 3:7-9யோபு 3:23லூக் 19:43லூக் 15:14-16

அவள் தன் வழியை கண்டுபிடிக்க முடியாதபடி அவளைச்சுற்றி மதில் கட்டுவேன்.

அவள் தன் காதலர்கள் பின்னால் ஓடுவாள்; எரே 2:2ஓசி 5:13எரே 14:22லூக் 15:17-20உபா 8:17-18எசேக் 23:22எசேக் 23:4ஓசி 13:6

ஆயினும் அவர்களைக் கண்டுபிடிக்கமாட்டாள்.

அவள் அவர்களைத் தேடுவாள்,

ஆனாலும் கண்டுபிடிக்கமாட்டாள்.

அப்பொழுது அவள்,

‘நான் முன்னிருந்ததுபோல என் கணவனிடம் திரும்பிப் போவேன்;

ஏனெனில் அப்பொழுது நான் இதைவிட நலமாயிருந்தேன்’ என்பாள்.

நானே அவளுக்கு தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஏசா 1:3எசேக் 16:16-19ஓசி 13:2ஓசி 4:11ஓசி 8:4ரோம 1:28அப் 17:23-25தானி 5:23

ஆகியவற்றைக் கொடுத்தேன் என்றும்,

நானே அவளுக்கு வெள்ளியையும் தங்கத்தையும் ஏராளமாய்க் கொடுத்தேன்

என்றும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை;

ஆயினும் அவர்களோ அவற்றைப் பாகால் தெய்வத்துக்குப் பயன்படுத்தினார்கள்.

“ஆகையால், நான் எனது தானியம் முதிரும்போது, அதை எடுத்துப்போடுவேன், எசேக் 23:26ஆகா 1:6-11ஓசி 2:3ஏசா 17:10-11மல்கி 1:4மல்கி 3:18தானி 11:13எசேக் 16:27

எனது புதுத் திராட்சை இரசம் ஆயத்தமாகும்போது, அதையும் எடுத்துப்போடுவேன்.

அவளது நிர்வாணத்தை மூடுவதற்கு நான் கொடுத்திருந்த எனது கம்பளி உடையையும்,

எனது மென்பட்டு உடையையும் எடுத்துப்போடுவேன்.

நான் அவளது காதலர்களின் கண்களுக்கு முன்பாக, எசேக் 23:29லூக் 12:2-31 கொரி 4:5எசேக் 16:36-37ஓசி 13:7-8ஓசி 2:3ஓசி 5:13-14ஏசா 3:17

அவளது வெட்கக்கேட்டை வெளிப்படுத்துவேன்;

எனது கைகளிலிருந்து ஒருவராலும் அவளை விடுவிக்க முடியாது.

நான் அவளது எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்துவேன்: ஏசா 1:13-14ஆமோ 5:21ஆமோ 8:5எரே 16:9எரே 7:34வெளி 18:22-231 இராஜா 12:32ஆமோ 8:3

வருடாந்தர விழாக்கள், அமாவாசைகள், ஓய்வுநாட்கள் ஆகிய

அவளது நியமிக்கப்பட்ட எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்திவிடுவேன்.

தனது காதலர்களினால் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி ஏசா 5:5ஏசா 7:23ஓசி 13:8ஓசி 2:5ஓசி 9:1ஏசா 29:17ஏசா 32:13-15எரே 26:18

என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்,

அவளுடைய திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் நான் பாழாக்குவேன்.

நான் அவற்றை புதர்க் காடாக்குவேன்,

காட்டு மிருகங்கள் அவற்றை அழித்துப்போடும்.

அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டிய நாட்களுக்காக, நியாயாதி 3:7ஓசி 13:6ஓசி 11:2ஓசி 13:1எரே 7:9ஓசி 4:6ஓசி 8:14ஓசி 9:7

நான் அவளைத் தண்டிப்பேன்;

அவள் தன் காதணிகளினாலும் நகைகளினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு,

தன் காதலர்களைப் பின்தொடர்ந்து போனாள்.

என்னையோ மறந்துவிட்டாள்” என்று யெகோவா சொல்கிறார்.

“நான் அவளை வசப்படுத்தப் போகிறேன்; ஏசா 40:1-2எசேக் 20:35-36வெளி 12:6ஏசா 30:18ஆதி 34:3யோவா 6:44வெளி 12:14ரோம 11:26-27

நான் அவளை பாலைவனத்திற்கு அழைத்துச்சென்று,

அங்கே அவளோடு அன்பாகப் பேசுவேன்.

அங்கே அவளுடைய திராட்சைத் தோட்டங்களை எசேக் 28:26எரே 2:2ஓசி 11:1யோசு 7:26அப் 14:27ஆமோ 9:14எசேக் 16:22எசேக் 16:60

நான் அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்;

நான் ஆகோர் என்னும் கஷ்டத்தின் பள்ளத்தாக்கை,

எதிர்பார்ப்பின் கதவாக ஆக்குவேன்.

அவள் தன் வாலிப நாட்களில் தான் எகிப்திலிருந்து வந்தபோது,

பாடியதுபோல் அங்கே பாடுவாள்.

“அந்த நாளிலே, நீ என்னை ஏசா 54:5ஓசி 2:7எரே 3:14வெளி 19:72 கொரி 11:2யோவா 3:29எபே 5:25-27

‘என் பாகாலே’ என்று அழைக்காமல்,

‘என் கணவனே’ என்று அழைப்பாய்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

“நான் அவளுடைய உதடுகளிலிருந்து பாகால்களின் பெயர்களை அகற்றிவிடுவேன்; யாத் 23:13யோசு 23:7சங் 16:4சகரி 13:2எரே 10:11

அவற்றின் பெயர்கள் இனி ஒருபோதும் சொல்லி வணங்கப்படமாட்டாது.

அந்நாளிலே நான் அவர்களுக்காக வெளியின் மிருகங்களோடும், எசேக் 34:25எசேக் 39:9-10ஏசா 11:6-9சங் 46:9ஏசா 65:25எரே 23:6ஏசா 2:4யோபு 5:23

ஆகாயத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் பிராணிகளோடும்

ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்.

நான் வில்லையும் வாளையும்

யுத்தத்தையும் நாட்டில் இராதபடி செய்வேன்;

அதனால் அவர்கள் எல்லோரும் படுக்கும்போது பாதுகாப்பாய் இருப்பார்கள்.

நான் உன்னை என்றென்றைக்கும் எனக்கென்று நிச்சயித்துக்கொள்வேன்; 2 கொரி 11:2வெளி 21:2ஏசா 54:14ஏசா 54:8-10எசேக் 37:25-28யோவா 3:29சங் 85:10வெளி 19:7-9

நான் உன்னை நீதியுடனும், நியாயத்துடனும்,

அன்புடனும், கருணையுடனும் நிச்சயித்துக்கொள்வேன்.

நான் உண்மையோடு உன்னை எனக்காக நிச்சயித்துக்கொள்வேன்; யோவா 17:31 யோவா 4:61 யோவா 5:20எரே 24:7கொலோ 1:10ஓசி 2:19எசேக் 38:23எரே 31:33-34

நீயும் யெகோவாவை ஏற்றுக்கொள்வாய்.

“அந்த நாட்களிலே நான் பதில் கொடுப்பேன்” சகரி 8:12ஏசா 65:24ஏசா 55:10மத் 6:33ரோம 8:321 கொரி 3:21-23சகரி 13:9

என்கிறார் யெகோவா:

“நான் ஆகாயங்களுக்குக் கட்டளை கொடுப்பேன்,

அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும்.

பூமியானது தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் யோவே 2:19ஓசி 1:11ஓசி 1:4எரே 31:12

ஆகியவற்றுக்கு மறுமொழி கொடுக்கும்;

இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும்.

நாட்டில் நான் அவளை எனக்கென்று நாட்டுவேன்; ரோம 9:25-261 பேது 2:9-10சகரி 13:9ஓசி 1:9-10ரோம 3:29சகரி 2:11வெளி 21:3-4உபா 26:17-19

‘என் அன்புக்குரியவள் அல்ல’ என்று நான் அழைத்தவளுக்கு

நான் எனது அன்பைக் காட்டுவேன்.

‘என்னுடைய மக்கள் அல்ல 1’ என்று அழைக்கப்பட்டவர்களை,

‘நீங்கள் என்னுடைய மக்கள்’ என்று சொல்வேன்;

அவர்களும், ‘நீரே எங்கள் இறைவன்’ என்று சொல்வார்கள்.”