ஈசாயின் கிளை
ஈசாயின் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் வரும்; எரே 23:5வெளி 22:16சகரி 6:12வெளி 5:5அப் 13:22-23எரே 33:15ஏசா 53:2சகரி 3:8
அவனுடைய வேர்களிலிருந்து வரும் ஒரு கிளை கனிகொடுக்கும்.
யெகோவாவின் ஆவியானவர் அவரில் தங்குவார். ஏசா 61:1யோவா 16:13எபே 1:17-182 தீமோ 1:7ஏசா 42:1மத் 3:16கொலோ 1:8-9யோவா 3:34
ஞானத்தையும், விளங்கும் ஆற்றலையும், ஆலோசனையையும்,
பெலனையும், அறிவையும், யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும்
அருளும் ஆவியானவரே அவரில் தங்குவார்.
அவரும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் மகிழ்ச்சிகொள்வார். யோவா 7:24லூக் 2:521 சாமு 16:7யோவா 8:15-161 கொரி 2:13-15நீதி 2:51 இராஜா 3:28எபி 5:14
அவர் தம் கண்களால் காண்பதைக்கொண்டு மட்டும் நியாயந்தீர்க்கமாட்டார்;
காதுகள் கேட்பதால் தீர்மானம் எடுக்கவுமாட்டார்.
ஆனால் அவர் எளியவர்களை நீதியுடன் நியாயந்தீர்த்து, 2 தெச 2:8வெளி 19:15யோபு 4:9மல்கி 4:6நீதி 31:8-9ஏசா 61:1மத் 5:5சங் 72:12-14
பூமியிலுள்ள ஏழைகளுக்காக நியாயத்துடன் தீர்ப்பளிப்பார்.
அவர் தன் வார்த்தை என்னும் கோலினால் பூமியை அடிப்பார்,
தனது உதடுகளின் மூச்சால் கொடியவர்களைக் கொல்வார்.
நீதி அவரது அரைக்கச்சையாகவும், எபே 6:141 யோவா 1:92 கொரி 6:7ஏசா 25:1ஏசா 59:171 பேது 4:1ஓசி 2:20வெளி 1:13
உண்மை அவரின் இடைக்கச்சையாகவும் இருக்கும்.
ஆட்டுக்குட்டியுடன் ஓநாய் வசிக்கும், ஏசா 65:25ஓசி 2:18எசேக் 34:25வெளி 5:9-10கலா 3:26-27கொலோ 3:3-8தீத் 3:3-51 கொரி 6:9-11
சிறுத்தை வெள்ளாட்டுடன் படுத்துக்கிடக்கும்.
பசுங்கன்றும், சிங்கமும், கொழுத்த காளையும் ஒன்றாய் வாழும்;
ஒரு சிறுபிள்ளை அவைகளை வழிநடத்தும்.
பசு கரடியுடன் மேயும்,
அவைகளின் குட்டிகளும் சேர்ந்து படுத்திருக்கும்;
மாட்டைப்போல் சிங்கமும் வைக்கோல் தின்னும்.
பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்பின் புற்றினருகே விளையாடும்; ஏசா 59:5சங் 140:3
சிறுபிள்ளை விரியன் பாம்பின் புற்றுக்குள் தன் கையை வைக்கும்.
எனது பரிசுத்த மலையெங்கும் ஆப 2:14ஏசா 52:10சங் 98:2-3மீகா 4:2-4யோபு 5:23ஏசா 60:1-22ஏசா 59:19சங் 72:19
தீங்கு செய்பவரோ அழிப்பவரோ எவருமில்லை.
ஏனென்றால் கடல் தண்ணீரினால் நிறைந்திருப்பதுபோல,
பூமி யெகோவாவைப்பற்றிய அறிவினால் நிறைந்திருக்கும்.
அந்த நாளிலே ஈசாயின் வேர் மக்களுக்கு ஒரு கொடியாக நிற்பார்; பிறநாடுகள் அவரிடம் கூடிவரும். அவர் இருக்கும் இடம் மகிமையுள்ளதாயிருக்கும். ரோம 15:9-12லூக் 2:32ஏசா 11:1மத் 2:1-2யோவா 12:32மத் 12:21மத் 8:11அப் 11:18 அந்த நாளில் யெகோவா அசீரியா, எகிப்து, பத்ரோஸ் எத்தியோப்பியா, ஏலாம், சிநெயார், ஆமாத், தொலைதூர கடற்தீவுகள் ஆகிய இடங்களிலிருந்து தம் மக்களில் மீதமிருப்பவர்களை மீட்க இரண்டாம் முறையும் தமது கரத்தை நீட்டுவார். சகரி 10:8-12ஏசா 10:20மீகா 7:12ஓசி 3:4-5உபா 4:27-31ஓசி 11:11எரே 30:8-11லேவி 26:40-42
அவர் எல்லா தேசத்தாருக்கும் ஒரு கொடியை ஏற்றி, ஏசா 43:6ஏசா 56:8சங் 147:2செப்ப 3:10ஏசா 11:10சகரி 10:6ஏசா 27:13சங் 68:22
நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ப்பார்.
சிதறடிக்கப்பட்டிருந்த யூதா மக்களை,
பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து ஒன்றுகூட்டுவார்.
அப்பொழுது எப்பிராயீமின் பொறாமை ஒழிந்துபோகும், எரே 3:18எசேக் 37:16-24ஓசி 1:11ஏசா 9:21ஏசா 7:1-6
யூதாவின் பகைவர் அகற்றப்படுவார்கள்;
எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமைகொள்ளவோ,
யூதா எப்பிராயீமைப் பகைக்கவோ மாட்டாது.
அவர்கள் மேற்குத் திசையில் உள்ள பெலிஸ்திய மலைச்சாரலின்மேல் யோவே 3:19தானி 11:41ஏசா 25:10எரே 49:28ஆமோ 9:12மத் 8:11எசேக் 38:1-23ஏசா 16:14
திடீரெனப் பாய்வார்கள்;
அவர்கள் ஒன்றிணைந்து கிழக்கிலே இருப்பவர்களையும் சூறையாடுவார்கள்.
அவர்கள் ஏதோமையும், மோவாபையும் கைப்பற்றுவார்கள்;
அம்மோனிய மக்கள் அவர்களுக்கு அடிமைகளாவார்கள்.
யெகோவா எகிப்தின் வளைகுடா கடலை வெளி 16:12சகரி 10:11ஏசா 50:2ஏசா 19:16ஏசா 7:20எசேக் 29:10எசேக் 30:12ஏசா 19:5-10
முழுவதும் வற்றப்பண்ணுவார்;
யூப்ரட்டீஸ் நதியின்மேல்
ஒரு வெப்பக் காற்றுடன் தமது கரத்தை வீசி அடிப்பார்.
மக்கள் உலர்ந்த நிலத்தில் நடக்கக் கூடியதாக
அவர் அதை ஏழு நீரோடைகளாகப் பிரிப்பார்.
இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வரும்போது, ஏசா 19:23ஏசா 35:8-10ஏசா 11:11யாத் 14:26-29ஏசா 62:10ஏசா 40:3-4ஏசா 51:10ஏசா 57:14
அவர்களுக்குப் பாதை இருந்ததுபோல,
அசீரிய நாட்டில் மீதமிருக்கும் அவரது மக்கள் திரும்பி வருவதற்கும்,
பெரும்பாதை ஒன்று இருக்கும்.