பாபிலோனுக்கு எதிரான இறைவாக்கு
கடல் அருகேயுள்ள பாலைவனத்தைக் குறித்த ஒரு இறைவாக்கு: ஏசா 14:23ஏசா 13:1எரே 51:42சகரி 9:14ஏசா 13:20-22ஏசா 17:1தானி 11:40எசேக் 31:12
புயல்காற்று நெகேவ் பிரதேசமான தென்திசையிலிருந்து வீசுவதுபோல,
பயங்கர நாடான பாலைவனத்திலிருந்து
ஒருவன் படையெடுத்து வருகிறான்.
கொடிய தரிசனம் ஒன்று எனக்குக் காண்பிக்கப்பட்டது: ஏசா 33:1எரே 49:34ஏசா 24:16சங் 60:3தானி 5:28வெளி 13:101 சாமு 24:13தானி 8:20
துரோகி காட்டிக்கொடுக்கிறான், கொள்ளைக்காரன் கொள்ளையிடுகிறான்.
ஏலாமே, தாக்கு! மேதியாவே, முற்றுகையிடு!
அவள் உண்டுபண்ணிய புலம்பலுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
இதனால் என் உடல் நோவினால் வாதிக்கப்படுகிறது; ஏசா 13:8ஏசா 26:17சங் 48:61 தெச 5:3ஏசா 16:11எரே 48:41மீகா 4:9-10தானி 5:5-6
பெண்ணின் பிரசவ வேதனையைப்போல் கடும் வேதனை என்னைப் பிடித்துக்கொண்டது.
நான் கேட்பது என்னைத் தள்ளாடப் பண்ணுகிறது;
நான் காண்பது என்னைக் குழப்பமடையச் செய்கிறது.
எனது இருதயம் தயங்குகிறது, லூக் 21:34-361 சாமு 25:36-382 சாமு 13:28-29தானி 5:1தானி 5:5உபா 28:67எஸ்த 5:12எஸ்த 7:6-10
பயம் என்னை நடுங்கப் பண்ணுகிறது;
நான் எதிர்பார்த்திருந்த மாலைப்பொழுது
எனக்கு பயங்கரமாயிற்று.
அவர்கள் பந்தியை ஆயத்தப்படுத்துகிறார்கள், எரே 51:11எரே 51:39எரே 51:57தானி 5:1-51 கொரி 15:32ஏசா 13:17-18ஏசா 13:2ஏசா 22:13-14
அவர்கள் கம்பளம் விரிக்கிறார்கள்,
அவர்கள் உண்டு குடிக்கிறார்கள்.
அதிகாரிகளே, எழும்புங்கள்,
கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்!
யெகோவா எனக்குக் கூறுவது இதுவே: எசேக் 33:2-7எசேக் 3:17ஆப 2:1-22இராஜா 9:17-20ஏசா 62:6எரே 51:12-13
“நீ போய் காவலாளியை அவனுக்குரிய இடத்தில் அமர்த்து;
அவன் காண்பதை உனக்குத் தெரிவிக்கும்படி சொல்.
குதிரைக் கூட்டங்களுடன் ஏசா 21:9எபி 2:1ஏசா 37:24
வரும் தேர்களையோ,
கழுதைகளின் மேலோ
ஒட்டகங்களின் மேலோ ஏறிச்செல்பவர்களையோ காணும்போது,
அவன் முழு எச்சரிக்கையுடன்
விழிப்பாயிருக்கட்டும்.”
காவலாளி சிங்கத்தைப்போல் சத்தமிட்டு, ஆப 2:1-21 பேது 5:8ஏசா 5:29ஏசா 56:10ஏசா 62:6எரே 25:38எரே 4:7எரே 49:19
“ஆண்டவனே, நான் பகல்தோறும், காவல் கோபுரத்தில் நிற்கிறேன்;
ஒவ்வொரு இரவும் எனக்குரிய இடத்திலேயே இருக்கிறேன்.
இதோ குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு தேரில் ஒருவன் வருகிறான். வெளி 18:2எரே 51:8வெளி 14:8எரே 51:44ஏசா 13:19ஏசா 14:4ஏசா 46:1-2எரே 50:2-3
‘பாபிலோன் வீழ்ந்தது, பாபிலோன் வீழ்ந்தது!
அதன் தெய்வங்களின் உருவச்சிலைகள் எல்லாம்
நிலத்தில் சிதறிக் கிடக்கின்றன!’
என அவன் பதிலளிக்கிறான்”
என்று சொன்னான்.
என் மக்களே, சூடடிக்கும் களத்தில் நசுக்கப்பட்டிருப்பவர்களே, எரே 51:33மீகா 4:132இராஜா 13:7எசேக் 3:17-19ஏசா 41:15-16மத் 3:12ஆப 3:121 இராஜா 22:14
இஸ்ரயேலின் இறைவனாகிய
சேனைகளின் யெகோவாவிடமிருந்து
நான் கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன்.
ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு
தூமாவைப் 1 பற்றிய ஒரு இறைவாக்கு: ஆதி 25:14ஒபதி 1:1-16ஆமோ 1:6யோவே 3:191 நாளாக 1:30உபா 2:5எசேக் 35:1-15ஆதி 32:3
சேயீரிலிருந்து ஒருவன் என்னைக் கூப்பிட்டு,
“காவலாளியே, இரவு முடிய எவ்வளவு நேரமாகும்?
காவலாளியே, இரவு முடிய எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்டான்.
காவலாளி பதிலளித்து, அப் 17:30-32அப் 2:37-38அப் 17:19-20எசேக் 14:1-6எசேக் 18:30-32எசேக் 7:10எசேக் 7:12எசேக் 7:5-7
“காலை வருகிறது, ஆனால் இரவும் வருகிறது.
நீ கேட்க விரும்பினால் திரும்பவும் வந்து கேள்”
என்று கூறினான்.
அரேபியாவுக்கு எதிரான இறைவாக்கு
அரேபியாவைப் பற்றிய இறைவாக்கு: எரே 25:23-241 நாளாக 1:32எசேக் 27:15ஆதி 25:31 நாளாக 1:91 இராஜா 10:15எசேக் 27:20-21கலா 4:25
தெதானியரின் வணிகப் பயணிகள் கூட்டமே,
அரேபியாவின் காடுகளில் முகாமிடுகிறவர்களே,
தாகமுள்ளோருக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள்; ஆதி 25:15யோபு 6:19நீதி 25:21ரோம 12:201 நாளாக 1:301 பேது 4:9ஏசா 16:3-4நியாயாதி 8:4-8
தேமாவில் வசிப்பவர்களே,
நீங்கள் அகதிகளுக்கு உணவு கொண்டுவாருங்கள்.
அவர்கள் பட்டயங்களுக்கும், யோபு 6:19-20ஏசா 13:14
உருவிய பட்டயத்துக்கும்,
நாணேற்றிய வில்லுக்கும்,
போரின் உக்கிரத்துக்கும் பயந்தோடி வருகிறார்கள்.
யெகோவா எனக்கு கூறுவது இதுவே: “ஒப்பந்தத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டவன் தனது வேலை நாட்களைக் கணக்கெடுக்கிறானே; அதுபோல ஒரு வருடத்திற்குள் கேதாரின் எல்லா மகிமையும் முடிவடையும். ஏசா 16:14ஏசா 60:7சங் 120:5உன்னத 1:5எசேக் 27:21எரே 49:28ஆதி 25:13ஏசா 42:11 வில்வீரரில் தப்பிப் பிழைப்போரும், கேதாரின் 2 போர்வீரரும், மிகச் சிலராய் இருப்பார்கள்” என்பதாக இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா பேசியிருக்கிறார். எண் 23:19சகரி 1:6ஏசா 1:20மத் 24:35ஏசா 10:18-19ஏசா 17:4-5எரே 44:29சங் 107:39