ஏசாயா 45

Isaiah 45

“அபிஷேகம் செய்யப்பட்ட கோரேசைப்பற்றி யெகோவா சொல்கிறதாவது, எரே 51:20-24ஏசா 42:6ஏசா 44:28சங் 73:23ஏசா 41:13எஸ்றா 1:1ஏசா 45:5எரே 50:35

அவனுக்கு முன்பாக நாடுகளை அடக்கும்படியும்,

அரசர்களின் போர் ஆயுதங்களை களையப்பண்ணும்படியும்,

அவனுக்கு முன்பாக வாசல்கள் மூடாதபடி கதவுகள் திறக்கப் பண்ணும்படியும்

நான் அவனுடைய வலதுகையை தாங்கிப் பிடித்துக்கொண்டு,

அவனுக்குச் சொல்வதாவது:

நான் உனக்கு முன்சென்று, ஏசா 40:4ஏசா 42:16லூக் 3:5சங் 107:16எரே 51:30ஏசா 13:4-17அப் 1:15

மலைகளைத் தரைமட்டமாக்குவேன்;

நான் வெண்கலக் கதவுகளை உடைத்து,

இரும்புத் தாழ்ப்பாள்களையும் தகர்ப்பேன்.

நான் இருளில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும், ஏசா 48:15ஏசா 43:1யாத் 33:17யாத் 33:12எஸ்றா 1:2எரே 50:37எரே 51:53ஏசா 49:1

மறைவிடங்களில் சேகரிக்கப்பட்ட புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்;

அப்பொழுது உன்னைப் பெயர்சொல்லி அழைத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா நானே

என்பதை நீ அறிந்துகொள்வாய்.

என் அடியவன் யாக்கோபின் நிமித்தமும், ஏசா 41:8-9அப் 17:23யாத் 19:5-6ஏசா 44:1ரோம 11:7கலா 4:8-9ஏசா 43:14ஏசா 44:28

நான் தெரிந்துகொண்ட இஸ்ரயேலின் நிமித்தமும்

நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து,

நீ என்னை ஏற்றுக்கொள்ளாத போதிலும்,

நான் உனக்குப் பெயரையும் புகழையும் வழங்கினேன்.

நானே யெகோவா, வேறு எவருமில்லை; ஏசா 44:6ஏசா 44:8ஏசா 46:9யோவே 2:271 இராஜா 8:60ஏசா 45:21-22உபா 32:39உபா 4:35

என்னைத்தவிர இறைவனும் இல்லை.

நீ என்னை ஏற்றுக்கொள்ளாத போதிலும்,

நான் உன்னைப் பெலப்படுத்துவேன்.

அப்பொழுது சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, ஏசா 37:20ஏசா 45:5மல்கி 1:11சங் 46:10எசேக் 38:23சங் 83:181 சாமு 17:46-47சங் 102:15-16

அது மறையுமிடம் வரையுமுள்ள மனிதர் எல்லோரும்,

எனக்கிணையானவர் யாரும் இல்லை என்பதை அறிந்துகொள்வார்கள்.

நானே யெகோவா, வேறு யாரும் இல்லை.

ஒளியையும் இருளையும் படைக்கிறவர் நானே, பிரச 7:13-14ஆமோ 3:6சங் 75:7யோபு 2:10ஏசா 31:2ஆமோ 4:13எரே 13:16எரே 31:35

சமாதானத்தையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறவரும் நானே;

நான் யெகோவா, நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன்.

“மேலேயுள்ள வானங்களே, நீதியைப் பொழியுங்கள்; ஓசி 10:12ஏசா 61:11சங் 72:61 கொரி 3:6-9ஏசா 44:3தீத் 3:3-6யோவே 3:18ஏசா 11:1

மேகங்கள் அதைப் பொழியட்டும்.

பூமி அகலமாய்த் திறந்து,

இரட்சிப்பின் கனியைத் தந்து,

நீதி அதனுடன் துளிர்க்கட்டும்;

யெகோவாவாகிய நானே அதைப் படைத்தேன்.

“தன்னைப் படைத்தவருடன் வாதாடுபவனுக்கு ஐயோ, கேடு! ஏசா 64:8ரோம 9:20-21ஏசா 10:15ஏசா 29:16எரே 18:6நீதி 21:30யோபு 40:8-9சங் 2:2-9

அவன் அவருக்கு முன்பாகத் தரையில் கிடக்கும் மண்ணோடுகளில் ஒரு ஓடுதானே.

களிமண் குயவனைப் பார்த்து, ‘நீ என்னத்தை உருவாக்குகிறாய்?’

எனக் கேட்கலாமோ?

நீ செய்யும் பொருள் உன்னிடம்,

‘உனக்குக் கைத்திறன் இல்லை’

என்று சொல்லலாமோ?

தன் தகப்பனிடம், ‘நீ ஏன் என்னைப் பிறப்பித்தாய்?’ என்றும், உபா 27:16மல்கி 1:6எபி 12:9

தன் தாயிடம்,

‘நீ ஏன் என்னைப் பெற்றெடுத்தாய்?’

என்றும் கேட்பவனுக்கு ஐயோ, கேடு!

“இஸ்ரயேலின் பரிசுத்தரும், அதைப் படைத்தவருமாகிய எரே 33:3எசேக் 36:37ஏசா 48:17மாற் 11:24எபே 2:10ஏசா 29:23ஓசி 1:10ஏசா 43:21

யெகோவா சொல்வது இதுவே;

இனி நடக்கப்போவதைக் குறித்து,

எனது பிள்ளைகளைப்பற்றி என்னிடம் கேள்வி கேட்கிறீர்களா?

எனது கைகளின் வேலையைப்பற்றி எனக்குக் கட்டளையிடுகிறீர்களா?

நானே பூமியை உருவாக்கி, ஏசா 42:5ஏசா 44:24எரே 27:5ஆதி 2:1நெகே 9:6ஏசா 45:18எரே 32:17எபி 11:3

அதன்மேல் மனுமக்களையும் படைத்தேன்.

எனது சொந்தக் கரங்களே வானங்களை விரித்தன;

நட்சத்திர சேனைகளையும் நானே அதினதின் இடத்தில் நிலைநிறுத்தினேன்.

நான் எனது நியாயத்தின்படி கோரேசை எழுப்புவேன்; ஏசா 41:22 நாளாக 36:22-23ஏசா 13:17ஏசா 41:25ஏசா 49:25ஏசா 42:6ஏசா 46:111 பேது 1:18-19

அவனுடைய வழிகளையெல்லாம் நேராக்குவேன்.

அவன் திரும்பவும் என் நகரத்தைக் கட்டுவான்,

நாடுகடத்தப்பட்ட எனது மக்களை விலையோ,

வெகுமானமோ பெறாமல் விடுதலையாக்குவான்”

என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.

யெகோவா இஸ்ரயேலுக்கு கூறுவதாவது: ஏசா 49:231 கொரி 14:25எரே 16:19அப் 10:25-26ஏசா 61:5-6சகரி 8:20-23யாத் 11:8எசேக் 23:42

“எகிப்தின் உற்பத்திப் பொருட்களும்,

எத்தியோப்பியாவின் வியாபாரப் பொருட்களும் வரும்;

இவற்றுடன் வளர்த்தியில் உயரமான சபேயரும் உன்னிடம் வந்து,

உன்னுடையவர்கள் ஆவார்கள்.

அவர்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு,

உன் பின்னால் வருவார்கள்.

அவர்கள் உன் முன்னால் விழுந்து வணங்கி,

‘இறைவன் நிச்சயமாகவே உன்னுடன் இருக்கிறார்;

அவரைத்தவிர வேறு எவருமில்லை.

வேறெந்த தெய்வமும் இல்லை’

என்று சொல்லி தங்களுக்கு இரங்கும்படி கேட்பார்கள்.”

இஸ்ரயேலின் இரட்சகரும் இறைவனுமானவரே, ஏசா 8:17சங் 44:24ஏசா 57:17ஏசா 46:13சங் 77:19ரோம 11:33-34ஏசா 45:17யோவா 4:22

உண்மையாகவே உம்மை நீர் மறைத்துக்கொள்கிற இறைவன்.

விக்கிரகங்களை உருவாக்கும் அனைவரும் ஏசா 42:17ஏசா 44:11ஏசா 44:9ஏசா 41:19ஏசா 45:20எரே 10:14-15எரே 2:26-27சங் 97:7

வெட்கமடைந்து அவமானத்திற்கு உள்ளாவார்கள்;

அவர்கள் அனைவரும் ஒன்றாய் கலங்கிப் போவார்கள்.

ஆனாலும் யெகோவாவினால் ரோம 10:11சங் 25:3ஏசா 54:41 பேது 2:6யோவே 2:26-27ஏசா 49:23ரோம 9:33ஏசா 26:4

இஸ்ரயேல் நித்திய இரட்சிப்புடன் பாதுகாக்கப்படும்.

நீங்கள் நித்திய காலங்களுக்கு வெட்கப்படாமலும்,

அவமானத்திற்கு உட்படாமலும் இருப்பீர்கள்.

யெகோவா கூறுவதாவது: சங் 115:16எரே 10:12ஏசா 42:5ஏசா 45:12ஆதி 1:2எசேக் 36:10-12ஆதி 1:26ஆதி 1:28

அவர் வானங்களை உருவாக்கினார்,

அவரே இறைவன்;

அவர் பூமியை உருவமைத்துப் படைத்தார்;

அவரே அதை அமைத்தார்.

அது வெறுமையாயிருக்க அவர் படைக்கவில்லை,

குடியிருப்புக்காகவே அதை உருவாக்கினார்.

அவர் கூறுவதாவது:

“நானே யெகோவா,

என்னையன்றி வேறொருவருமில்லை.

இருளின் நாட்டில் எங்கேயாகிலும் இருந்து ஏசா 48:16ஆமோ 5:4எண் 23:19-20எரே 29:13-14நீதி 30:5யோவா 18:20சங் 9:10யாக் 4:3

நான் இரகசியமாய்ப் பேசவில்லை,

‘வீணாக என்னைத் தேடுங்கள்’

என்று நான் யாக்கோபின் வழித்தோன்றல்களுக்குச் சொல்லவுமில்லை;

நான் யெகோவா, உண்மையையே பேசுகிறவர்;

சரியானதையே நான் அறிவிக்கிறேன்.

“ஒன்றுசேர்ந்து வாருங்கள்; ஏசா 43:9ஏசா 44:17-20எரே 10:5ஏசா 4:2ஏசா 46:1சங் 115:81 இராஜா 18:26-29எபே 2:12

பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகளே, ஒன்றுகூடுங்கள்.

மரச்சிலைகளைச் சுமந்து செல்வோரும்,

இரட்சிக்க முடியாத தெய்வங்களிடம் மன்றாடுகிறவர்களும் அறிவீனர்.

நடக்கப்போவது என்ன? சொல்லுங்கள்; ஏசா 45:5ஏசா 43:11ஏசா 43:9ஏசா 44:7-8ஏசா 46:9-10தீத் 2:13-14ஏசா 43:3ஏசா 45:14

ஒன்றுகூடி ஆலோசித்து அதை அறிவியுங்கள்.

வெகுகாலத்திற்குமுன் இதை முன்னறிவித்தவர் யார்?

ஆதியிலிருந்தே அதை அறிவித்தவர் யார்?

அது யெகோவாவாகிய நான் அல்லவோ!

என்னையன்றி வேறே இறைவன் இல்லை.

நீதியான ஒரு இறைவன், ஒரு இரட்சகர்;

என்னையன்றி வேறொருவரில்லை.

“பூமியின் எல்லைகளிலுள்ளவர்களே, யோவா 6:40மீகா 7:7எபி 12:2எண் 21:8-9சகரி 12:10யோவா 3:13-162 நாளாக 20:12ஏசா 45:21

நீங்கள் எல்லோரும் என்னிடமாகத் திரும்பி இரட்சிப்படையுங்கள்.

ஏனெனில், நானே இறைவன், வேறு ஒருவரும் இல்லை.

என்னைக்கொண்டே நான் ஆணையிட்டேன், பிலி 2:10ரோம 14:10-12ஏசா 55:11எபி 6:13-18உபா 6:13ஏசா 45:19ஏசா 65:16சங் 63:11

இதை உத்தமத்தோடு எனது வாய் பேசியிருக்கிறது.

அந்த வார்த்தை ஒருபோதும் மாறாது:

ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக முடங்கும்;

ஒவ்வொரு நாவும் என் பெயரிலேயே ஆணையிடும்.

‘யெகோவாவிடம் மட்டுமே நீதியும் வல்லமையும் இருக்கிறது’ ஏசா 41:11ஏசா 54:17பிலி 4:132 தீமோ 4:17-18எபே 6:10யோவா 12:321 கொரி 1:302 கொரி 12:9-10

என்று என்னைப்பற்றி அவர்கள் சொல்வார்கள்.”

அவருக்கு எதிராக எழுந்த அனைவரும்

அவரிடம் வந்து வெட்கத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.

ஆனால் இஸ்ரயேலின் வழித்தோன்றல்கள் யாவரும் ஏசா 41:161 கொரி 6:11கலா 3:27-291 நாளாக 16:131 கொரி 1:31அப் 13:39ஏசா 45:17ஏசா 45:19

யெகோவாவிடம் நீதியானவர்களாகக் காணப்பட்டு

மேன்மையடைவார்கள்.