நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? அப் 4:25-26வெளி 17:14சங் 46:6சங் 21:11சங் 83:4-8அப் 17:5-6மத் 21:38லூக் 22:22-23
மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?
பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள், மத் 26:59மத் 27:1வெளி 17:12-14லூக் 23:11-12சங் 45:7அப் 10:38நீதி 21:30யோவா 1:41
ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும்,
அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது:
“அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து, எரே 5:5லூக் 19:141 பேது 2:7-8லூக் 19:27
அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.”
பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; சங் 37:13சங் 59:8நீதி 1:26ஏசா 40:22சங் 11:4ஏசா 57:15சங் 115:3சங் 53:5
யெகோவா அவர்களை இகழ்கிறார்.
அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து, ஏசா 11:4வெளி 19:15சங் 110:5-6சங் 21:9சங் 78:49-50லூக் 19:27ஏசா 66:6சகரி 1:15
தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது:
“நான் எனது அரசனை வெளி 14:1மத் 28:18எபே 1:22ஏசா 9:6-7சங் 45:6எபி 12:22சங் 110:1-2சங் 48:1-2
என் பரிசுத்த மலையாகிய சீயோனில் 1 அமர்த்தியிருக்கிறேன்.”
நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்: எபி 5:5அப் 13:33எபி 1:5-6மத் 3:17மத் 17:5சங் 89:27ரோம 1:4யோவா 3:16
அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்;
இன்று நான் உமக்குத் தந்தையானேன்.
என்னிடம் கேளும், சங் 22:27சங் 89:27சங் 72:8யோவா 17:4-5தானி 7:13
நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன்,
பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன்.
நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; வெளி 12:5வெளி 2:26-27சங் 89:23வெளி 19:15ஏசா 30:14சங் 110:5-6சங் 21:8-9தானி 2:44
மண்பாண்டத்தை உடைப்பதுபோல்,
நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.”
ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; ஓசி 14:9ஏசா 60:10-11ஏசா 52:15ஏசா 60:3சங் 45:12சங் 72:10-11சங் 82:1-8ஏசா 49:23
பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள்.
பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், பிலி 2:12எபி 12:25எபி 12:28-29சங் 119:119-120சங் 89:7எபி 4:1-2சங் 97:1சங் 95:1-8
நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள்.
இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்; சங் 40:4யோவா 5:23சங் 34:8சங் 84:12ஏசா 30:18நீதி 16:202 தெச 1:8-9எரே 17:7
நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்;
ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும்.
அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.