ஏசாயா 53

Isaiah 53

எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்? யோவா 12:38ரோம 10:16-171 கொரி 1:18யோவா 1:12மத் 16:171 கொரி 1:24மத் 11:25ஏசா 52:10

யெகோவாவின் கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

யெகோவாவுக்கு முன்பாக அவர் ஒரு இளந்தளிரைப் போலவும், பிலி 2:6-7ஏசா 52:14ஏசா 11:1யோவா 1:10-14மாற் 6:3எசேக் 17:22-24எரே 23:5யோவா 19:14-15

வறண்ட நிலத்தில் வளரும் வேரைப் போலவும் வளர்ந்தார்.

நம்மைக் கவரக்கூடிய அழகோ, மாட்சிமையோ அவரிடம் இருக்கவில்லை;

அவருடைய தோற்றத்தில் நாம் விரும்பத்தக்க எதுவும் அவரில் காணப்படவில்லை.

அவர் மனிதரால் இகழப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்; யோவா 1:10-11மத் 26:67எபி 12:2-3ஏசா 53:10ஏசா 49:7சங் 22:6-8ஏசா 53:4மாற் 14:34

அவர் துன்பத்தின் மனிதனாய் 1 வேதனையில் பங்குகொண்டவராய் இருந்தார்.

அருவருப்புள்ள ஒருவனைக் கண்டு மனிதர் தம் முகத்தை மறைத்துக்கொள்வதுபோல்,

அவர் இகழப்பட்டார், நாமும் அவரை மதிக்கவில்லை.

உண்மையாகவே அவர் நமது வேதனைகளை ஏற்றுக்கொண்டு, 1 பேது 2:24மத் 8:17கலா 3:131 யோவா 2:21 பேது 3:18ஏசா 53:5-6எபி 9:28ஏசா 53:11-12

நமது நோய்களையும் குறைகளையும் சுமந்தார்.

அப்படியிருக்க, நாமோ அவர் தமக்காகவே இறைவனால் அடிக்கப்பட்டு,

அவரால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார் என எண்ணினோம்.

ஆனால், அவரோ எங்கள் மீறுதல்களினிமித்தம் ஊடுருவக் குத்தப்பட்டார், 1 பேது 2:24-251 பேது 3:18மத் 20:282 கொரி 5:21ரோம 5:6-10ஏசா 53:10-12எபி 10:14எபி 9:12-15

எங்கள் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்;

நமக்கு சமாதானத்தைக் கொண்டுவந்த தண்டனை அவர்மேல் வந்தது,

அவருடைய காயங்களினால் நாம் குணமாகிறோம்.

நாமெல்லோரும் ஆடுகளைப்போல, வழிதவறி அலைந்தோம்; 1 பேது 2:251 பேது 3:18சங் 119:176ஏசா 55:7ரோம 4:25ரோம 3:10-19யாக் 5:20மத் 18:12-14

நம்முடைய சொந்த வழிக்கே திரும்பினோம்.

யெகோவாவோ நம் எல்லோருடைய அநியாயத்தையும்

அவர்மேல் சுமத்தினார்.

அவர் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார், அப் 8:32-33மத் 26:631 பேது 2:23மாற் 14:61யோவா 19:9மத் 27:12-14லூக் 23:9மாற் 15:5

அப்படியிருந்தும் அவர் தனது வாயைத் திறக்கவில்லை;

அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டியைப் போலவும்,

மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டைப்போலவும்

அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

ஒடுக்கப்பட்டு நியாயமான தீர்ப்பின்றி அவர் கொண்டுசெல்லப்பட்டார். 1 பேது 3:18அப் 8:33யோவா 19:7மத் 26:65-66யோவா 11:49-52சங் 22:12-21ஏசா 53:12ஏசா 53:5

அவரது தலைமுறையினரைக் குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்?

ஏனெனில் ஜீவனுள்ளோரின் நாட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்;

எனது மக்களின் மீறுதல்களுக்காக அவர் வாதிக்கப்பட்டார்.

அவரிடம் வன்முறை எதுவும் இருந்ததில்லை, 1 பேது 2:22மத் 27:57-601 யோவா 3:5மாற் 15:43-462 கொரி 5:21லூக் 23:50-53யோவா 19:38-42ஏசா 42:1-3

அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை.

ஆனாலும் கொடியவர்களோடு அவருக்கு ஒரு கல்லறை நியமிக்கப்பட்டது;

தம் மரணத்தில் செல்வந்தரோடு அவர் இருந்தார்.

ஆயினும் அவரை நொறுக்கி, வேதனைக்கு உள்ளாக்குவதே 2 கொரி 5:21ரோம 8:32கலா 3:13சகரி 13:7எபே 1:51 யோவா 4:9-10எபி 10:6-12ஏசா 53:3-6

யெகோவாவின் திட்டமாய் இருந்தது,

அவர் தமது உயிரைக் குற்றநிவாரண பலியாக ஆக்கியிருக்கிற போதிலும்,

அவர் நீடித்த நாட்களாய் இருந்து, தம் சந்ததியைக் காண்பார்.

யெகோவாவினுடைய திட்டம் அவரது கரத்தால் நிறைவேறும்.

அவரின் ஆத்துமா வேதனையடைந்தபின் ரோம 5:18-191 பேது 2:24ஏசா 53:4-6வெளி 5:9-101 பேது 3:18ஏசா 53:12யோவா 12:27-32யோவா 17:3

அவர் வாழ்வின் ஒளியைக் கண்டு திருப்தியடைவார்;

நீதியுள்ள எனது ஊழியன் தமது அறிவினால்

அநேகரை நீதியானவர்களாக்குவார்,

அவர்களுடைய அநியாயச் செயல்களை அவரே சுமப்பார்.

ஆகையால், நான் உயர்ந்தோர் மத்தியில் அவருக்கு ஒரு பங்கைக் கொடுப்பேன்; லூக் 22:37எபி 9:28லூக் 23:32-34மாற் 15:271 யோவா 2:12கொலோ 1:13-141 தீமோ 2:5-6எபி 9:26

அவர் பலவான்களுடன் கொள்ளைப்பொருளைப் பங்கிடுவார்.

ஏனெனில், அவர் தம் வாழ்வை மரணம்வரை ஊற்றி,

குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார்.

ஏனெனில் அவர் அநேகருடைய பாவங்களைச் சுமந்து,

மீறுதல் உள்ளோருக்காக பரிந்துவேண்டுதல் செய்தார்.