இறைவனும் விக்கிரகங்களும்
இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவா உங்களுக்குச் சொல்வதைக் கேளுங்கள். 1 தெச 2:13ஆமோ 7:16ஓசி 4:1எரே 13:15-17எரே 42:15வெளி 2:29ஏசா 1:10ஏசா 28:14 யெகோவா சொல்வது இதுவே: லேவி 20:23லேவி 18:3எசேக் 20:32லூக் 21:25-28உபா 12:30-31ஏசா 47:12-14
பிறதேசத்தாரின் வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டாம்.
ஆகாயத்தின் அடையாளங்களைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள்,
நீங்களோ அவற்றிற்கு பயப்படாமல் இருங்கள்.
ஏனெனில் அந்த மக்கள் கூட்டங்களின் வழக்கங்கள் பயனற்றவை. 1 பேது 1:18ஏசா 44:9-20லேவி 18:30எரே 10:8ரோம 1:21ஏசா 45:20மத் 6:71 இராஜா 18:26-28
அவர்கள் காட்டிலிருக்கிற ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்,
தச்சன் அதைத் தன் உளியினால் வடிவமைக்கிறான்.
அவர்கள் அதை வெள்ளியாலும், தங்கத்தாலும் அலங்கரித்து, ஏசா 46:7ஏசா 40:19-20ஏசா 41:6-7ஏசா 44:12சங் 115:4சங் 135:15
சுத்தியலாலும், ஆணிகளாலும் அடித்து
அது சாய்ந்து விழாதபடி இறுக்குகிறார்கள்.
அவை வெள்ளரித் தோட்டத்தின் பொம்மையைப்போல காணப்படுகின்றன. ஏசா 46:71 கொரி 12:2ஏசா 41:23-24சங் 115:5-81 கொரி 8:4ஆப 2:19ஏசா 46:1சங் 135:16-18
அவர்களின் விக்கிரகங்கள் பேசமாட்டாது,
அவைகளால் நடக்கவும் முடியாது.
ஆகையால் அவைகளைச் சுமந்து செல்லவேண்டும்.
அவைகள் நன்மையானதையோ,
தீமையானதையோ செய்ய முடியாதவை.
ஆகையால் அவைகளுக்குப் பயப்படாதிருங்கள் என்றார்.
யெகோவாவே, உம்மைப்போல் ஒருவருமில்லை. யாத் 15:11சங் 96:4சங் 48:1உபா 33:26ஏசா 12:6சங் 145:32 சாமு 7:22தானி 4:3
நீர் வலிமை மிக்கவர்.
உம்முடைய பெயர் ஆற்றலில் வலிமையுள்ளது.
நாடுகளின் அரசரே! வெளி 15:4சங் 22:281 கொரி 1:19-20எரே 10:6எரே 5:22சங் 89:6ஏசா 2:4யோபு 37:23-24
உம்மிடத்தில் பயபக்தியில்லாமல் யார்தான் இருப்பார்கள்?
இது உமக்கு மட்டுமே உரியது.
நாடுகளிலுள்ள எல்லா ஞானிகள் மத்தியிலும்,
அவர்களுடைய எல்லா அரசுகளுக்குள்ளும்,
உம்மைப் போன்றவர் எவருமே இல்லை.
அவர்கள் எல்லோரும் உணர்ச்சியற்றவர்களும் மூடருமாய் இருக்கிறார்கள். எரே 10:14சகரி 10:2ஆப 2:18ஏசா 41:29எரே 51:17-18சங் 115:8சங் 135:18ரோம 1:21-22
பயனற்ற மரத்தாலான விக்கிரகங்களால் அவர்கள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வெள்ளித்தகடு தர்ஷீசிலிருந்தும், சங் 115:4தானி 10:51 இராஜா 10:22ஏசா 40:19எசேக் 27:12
தங்கம் ஊப்பாசிலிருந்தும் கொண்டுவரப்படுகின்றன.
கைவினைஞனாலும், கொல்லனாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு நீலநிற உடைகளும்,
ஊதாநிற உடைகளும் உடுத்தப்பட்டிருக்கின்றன.
இவை எல்லாம் சிறந்த தொழிலாளிகளினால் செய்யப்பட்டவை.
ஆனாலும், யெகோவாவே உண்மையான இறைவன். உபா 32:4ஏசா 57:15நாகூ 1:6சங் 76:7சங் 104:32சங் 18:7சங் 31:5சங் 42:2
அவரே வாழும் இறைவன்; நித்திய அரசர்.
அவர் கோபங்கொள்ளும்போது பூமி நடுங்குகிறது.
அவருடைய கடுங்கோபத்தை நாடுகள் தாங்கிக்கொள்ள மாட்டாது.
வானங்களையும், பூமியையும் படைக்காத இந்த தெய்வங்கள் பூமியிலிருந்தும், வானங்களின் கீழிருந்தும் அழிந்துவிடும் என்பதை அவர்களுக்குச் சொல். 1 சங் 96:5ஏசா 2:18எரே 10:15எரே 51:18புலம் 3:66சகரி 13:2செப்ப 2:11வெளி 20:2
ஆனால் இறைவன் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து, ஆதி 1:1யோபு 9:8நீதி 3:19ஏசா 40:22கொலோ 1:16யோவா 1:3சங் 24:2ஏசா 42:5
தமது ஞானத்தினால் உலகத்தை நிறுவி,
தமது அறிவாற்றலினால் வானங்களை விரித்தார்.
அவர் முழங்கும்போது, வானங்களிலுள்ள திரளான தண்ணீர் இரைகின்றன. சங் 135:7யோபு 38:22யோபு 38:34-35சங் 18:131 இராஜா 18:411 இராஜா 18:45-461 சாமு 12:17-18யாத் 9:23
அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணுகிறார்.
அவர் மழையுடன் மின்னலை அனுப்பி,
தமது களஞ்சியங்களிலிருந்து காற்றை வெளியே கொண்டுவருகிறார்.
ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான். சங் 135:16-18சங் 115:4-8ஏசா 46:7-8ஆப 2:18-19ஏசா 44:18-20ரோம 1:22-23எரே 51:17-18ஏசா 42:17
ஒவ்வொரு கொல்லனும் தன் விக்கிரகங்களால் வெட்கமடைகிறான்.
ஏனெனில் அவனுடைய உருவச்சிலைகள் போலியானவை.
அவைகளில் சுவாசமில்லை.
அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன. ஏசா 41:24எரே 14:22எரே 51:18ஏசா 2:18-21எரே 8:12எரே 8:19யோனா 2:8சகரி 13:2
அவைகளுக்குரிய தண்டனை வரும்போது அவை அழிந்துபோகும்.
யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல. உபா 32:9எரே 32:18எரே 31:35எரே 10:12எரே 51:19சங் 119:57சங் 74:2புலம் 3:24
ஏனெனில், அவரே எல்லாவற்றையும் படைத்தவர்.
அவருடைய உரிமைச்சொத்தான இஸ்ரயேல் கோத்திரத்தையும் அவரே படைத்தார்.
சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்.
வரப்போகும் அழிவு
கைதிகளாக வாழும் எருசலேம் மக்களே! எசேக் 12:3-12எரே 6:1மத் 24:15மீகா 2:10எரே 21:13
நாட்டைவிட்டுப் போவதற்கு உங்கள் பொருட்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில் யெகோவா சொல்வது இதுவே: 1 சாமு 25:29சகரி 1:6உபா 28:63-64எசேக் 6:10எரே 15:1-2எரே 16:13எரே 23:20
“அந்த நாட்டில் குடியிருப்பவர்களை
நான் இப்போதே அகற்றிவிடுவேன்.
நான் அவர்கள்மீது துன்பத்தைக் கொண்டுவருவேன்.
அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள்.”
என் காயத்தினால் எனக்கு எவ்வளவு வேதனை! மீகா 7:9எரே 14:17எரே 4:31புலம் 3:18-21புலம் 3:39-40ஏசா 8:17எரே 17:13எரே 4:19
என் காயம் குணமாக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது.
ஆனால் நானோ,
“இது என் வருத்தம்; நானே அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்” என எனக்குள் கூறினேன்.
என் கூடாரம் அழிந்துவிட்டது. எரே 4:20எரே 31:15ஏசா 49:20-22ஏசா 54:2ஏசா 51:16யோபு 7:8புலம் 1:5புலம் 2:4-6
அதன் கயிறுகளும் அறுந்துபோயின.
என் மகன்கள் என்னைவிட்டு போய்விட்டார்கள். அவர்கள் என்னிடம் இல்லை.
இப்போது என்னுடைய கூடாரத்தைப் போடவோ,
என் புகலிடத்தை அமைக்கவோ யாருமில்லை.
மேய்ப்பர்கள் உணர்வற்றவர்களாய் இருக்கிறார்கள். எசேக் 34:2-10எரே 12:10எரே 23:1-2ஏசா 56:10-12எசேக் 22:25-30எசேக் 34:12எரே 10:8எரே 2:8
அவர்கள் யெகோவாவிடம் விசாரிக்கிறதில்லை.
ஆகையினால் அவர்கள் செழித்தோங்கவில்லை.
அவர்கள் மந்தைகளும் சிதறிப்போயின.
கேளுங்கள்! செய்தி ஒன்று வருகிறது. எரே 9:11ஆப 1:6-9எரே 1:15எரே 4:6எரே 5:15எரே 6:1எரே 6:22மல்கி 1:3
வடநாட்டிலிருந்து ஒரு பெரும் அமளியின் சத்தம் கேட்கிறது.
அது யூதாவின் பட்டணங்களைப் பாழாக்கி,
அவைகளை நரிகளின் இருப்பிடமாக்கும்.
எரேமியாவின் மன்றாட்டு
யெகோவாவே, ஒரு மனிதனின் உயிர் அவன் வசத்தில் இல்லை என்பதையும், நீதி 20:24நீதி 16:1சங் 37:23சங் 119:116-117சங் 17:5
தன் வழிகளை அமைத்துக்கொள்வதற்கு மனிதனால் இயலாது என்பதையும் நான் அறிவேன்.
யெகோவாவே, என்னை நீதியுடன் சீர்திருத்தும். சங் 38:1சங் 6:1எரே 30:11ஏசா 40:23யோபு 6:18ஆப 3:2ஏசா 41:11-12
நான் அழிந்துபோகாதபடி
உம்முடைய கோபத்தில் தண்டியாதிரும்.
உமது கடுங்கோபத்தை உம்மை ஏற்றுக்கொள்ளாத நாட்டினர்மேலும், சங் 79:6-7எரே 8:16யோபு 18:21சங் 14:41 தெச 4:52 தெச 1:8எசேக் 25:6-8எரே 50:17
உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடாத
மக்கள்மேலும் ஊற்றும்.
ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கினார்கள்.
அவனை முற்றிலுமாக விழுங்கி,
அவனுடைய தாய் நாட்டையும் அழித்துப்போட்டார்கள்.