எரேமியா 6

Jeremiah 6

எருசலேமின் முற்றுகை

“பென்யமீன் மக்களே, பாதுகாப்புக்காக தப்பி ஓடுங்கள். நெகே 3:142 நாளாக 11:62 சாமு 14:2நியாயாதி 1:21எரே 4:5-6எரே 6:22யோசு 18:21-28ஆமோ 1:1

எருசலேமைவிட்டுத் தப்பி ஓடுங்கள்!

தெக்கோவாவில் எக்காளத்தை ஊதுங்கள்!

பெத்கேரேமில் சைகை காட்டுங்கள்!

ஏனெனில் ஒரு பேராபத்து வடக்கிலிருந்து வருகிறது.

அது பயங்கர பேரழிவாய் வருகிறது.

அழகும் மென்மையுமுள்ள ஏசா 1:8எரே 4:31ஏசா 3:16-17புலம் 2:1புலம் 2:13

சீயோன் மகளை நான் அழிப்பேன்.

மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு அவளுக்கெதிராக வருவார்கள். லூக் 19:43எரே 39:1-32இராஜா 24:10-122இராஜா 24:22இராஜா 25:1-4எரே 12:10எரே 4:16-17நாகூ 3:18

அவளைச் சுற்றித் தங்கள் கூடாரங்களை அடித்து,

அவனவன் தான் தெரிந்துகொண்ட பகுதியில் தன் மந்தைகளை மேய்ப்பான்.”

“அவளுக்கெதிராக ஒரு யுத்தத்தை ஆயத்தப்படுத்துங்கள், எரே 15:8யோவே 3:9செப்ப 2:4எரே 8:20ஏசா 13:2-5ஏசா 5:26-30எரே 5:10எரே 51:27-28

எழுந்திருங்கள், நண்பகலில் தாக்குவோம்.

ஆனால் ஐயோ! பகல் வெளிச்சம் மங்குகிறது.

அந்திப்பொழுதும் சாய்கிறது.

ஆகவே எழும்புங்கள். ஏசா 32:14எரே 52:132 நாளாக 36:19ஆமோ 2:5ஆமோ 3:10-11ஓசி 8:14எரே 17:27எரே 9:21

நாம் இரவில் தாக்கி அவளுடைய கோட்டைகளை அழிப்போம்.”

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: உபா 20:19-20எரே 32:24

“மரங்களை வெட்டி வீழ்த்தி

எருசலேமிற்கு எதிராக முற்றுகைக் கொத்தளங்களைக் கட்டுங்கள்.

இந்தப் பட்டணம் தண்டிக்கப்பட வேண்டும்;

அது அடக்கு முறையால் நிறைந்திருக்கிறது.

ஊற்றிலிருந்து தண்ணீர் சுரப்பதுபோல, எசேக் 7:11எசேக் 7:23எரே 20:8ஏசா 57:20யாக் 3:10-12எசேக் 22:3-12மீகா 2:1-2மீகா 2:8-10

அவளிலிருந்து கொடுமை சுரந்துகொண்டே இருக்கிறது.

வன்செயலும், அழிவுமே அப்பட்டணத்தின் வீதிகளில் எதிரொலிக்கின்றன;

அவளுடைய நோய்களும், காயங்களும் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கின்றன.

எருசலேமே, இந்த எச்சரிப்பைக் கவனி. எசேக் 23:18ஓசி 9:12எரே 17:23எரே 32:33எரே 35:13-15சங் 50:17செப்ப 3:7உபா 32:29

இல்லாவிட்டால் நான் உன்னைவிட்டுப் போய்விடுவேன்,

ஒருவரும் அதில் குடியிருக்கமாட்டார்கள்.

அப்பொழுது உன் நாடு பாழாகும்.”

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: எரே 16:16எரே 49:9ஒபதி 1:5-6எரே 52:28-30வெளி 14:18

“திராட்சைக்கொடிகளில் பறிக்காமல் விடப்பட்ட பழங்களை திரும்ப சேர்த்தெடுப்பதுபோல்,

இஸ்ரயேலில் மீதியாயிருப்பவர்களை சேர்த்தெடுங்கள்.

திராட்சைப் பழங்களைச் சேர்க்கிறவனைப்போல,

திரும்பவும் கிளைகளுக்கு இடையில் உனது கையைப் போடு.”

நான் யாரோடு பேசி எச்சரிக்கை கொடுப்பேன்? அப் 7:51எரே 7:26எபி 11:7யோவா 7:7யாத் 6:12ஏசா 53:12 நாளாக 36:15-162 தீமோ 4:3

யார் எனக்குச் செவிகொடுப்பான்?

கேட்க முடியாதபடி அவர்களின்

காதுகள் மூடப்பட்டிருக்கின்றன 1.

யெகோவாவின் வார்த்தை அவர்களுக்கு வெறுப்பாயிருக்கிறது.

அதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்ளவில்லை.

நான் யெகோவாவினுடைய கடுங்கோபத்தினால் நிறைந்திருக்கிறேன், எரே 20:9எரே 9:21யோபு 32:18-19மீகா 3:8அப் 17:16அப் 18:5அப் 4:20எசேக் 3:14

என்னால் அதை அடக்கிக்கொண்டிருக்க முடியாது.

“அதை வீதிகளில் இருக்கும் பிள்ளைகள் மேலும்,

ஒன்று கூடியிருக்கும் இளைஞர் மேலும் ஊற்றிவிடு;

கணவனும் மனைவியும் முதியவர்களும் வயது சென்றவர்களுங்கூட

அதில் அகப்படுவார்கள்.

அவர்களுடைய வீடுகளும் வயல்களும் மற்றவர்களுக்குச் சொந்தமாகும். எரே 8:10ஏசா 5:251 நாளாக 21:16உபா 28:30-33உபா 28:39-43ஏசா 10:4ஏசா 65:21-22ஏசா 9:12

மனைவிகளுங்கூட மற்றவர்களுக்குச் சொந்தமாவார்கள்.

நாட்டில் குடியிருப்பவர்களுக்கு எதிராக

நான் என்னுடைய கையை நீட்டும்போது, இது நிகழும்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

ஏனெனில், “தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை, எரே 23:11எரே 8:10மீகா 3:11எரே 22:17மீகா 3:2-3எசேக் 22:25-28ஏசா 57:17எரே 14:18

எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள்.

இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும்

ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள்.

என் மக்களின் கடுமையான காயத்தை, எசேக் 13:10எரே 23:17எரே 4:10புலம் 2:14எரே 14:13எரே 8:11-122 பேது 2:18-19மீகா 2:11

கடுமையற்றதைப்போல் மருந்திட்டுக் கட்டுகிறார்கள்.

சமாதானம், சமாதானம் என்று சொல்கிறார்கள்,

ஆனால் சமாதானமோ அங்கே இல்லை.

அவர்கள் தங்களுடைய அருவருக்கத்தக்க நடத்தையைக் குறித்து எரே 8:12மத் 15:14எரே 3:3பிலி 3:19யாத் 32:34எசேக் 14:9-10எசேக் 16:24-25எசேக் 2:4

வெட்கப்படுகிறார்களா?

இல்லை, அவர்களுக்குச் சிறிதளவும் வெட்கம் இல்லை;

நாணங்கொள்ளவும் அவர்கள் அறியார்கள்.

ஆதலால் அவர்கள் விழுந்தவர்கள் மத்தியில் விழுவார்கள்;

நான் அவர்களைத் தண்டிக்கும்போது, தள்ளுண்டு போவார்கள்”

என்று யெகோவா சொல்கிறார்.

யெகோவா சொல்வது இதுவே: ஏசா 30:21உபா 32:7எரே 18:15மத் 11:28-29எரே 7:23கொலோ 2:6ஏசா 2:5எரே 18:12

“வழியின் நாற்சந்திகளில் நின்று பாருங்கள்.

முன்னோர்களின் வழிகளைக் கேட்டு விசாரியுங்கள்.

நன்மையான வழி எங்கே என்று கேட்டு அதிலே நடவுங்கள்.

அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு ஆறுதல் கிடைக்கும்.

ஆனால் நீங்களோ, ‘நாங்கள் அதில் நடக்கமாட்டோம்’ என்றீர்கள்.

நான் உங்கள்மேல் காவற்காரரை நியமித்து, எரே 25:4ஏசா 58:1ஏசா 21:11சகரி 7:11ஆப 2:1ஏசா 56:10அப் 20:27-31ஆமோ 3:6-8

‘எக்காள சத்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்!’ என்று சொன்னேன்.

ஆனால் நீங்களோ, ‘நாங்கள் அதைக் கேட்க மாட்டோம்’ என்றீர்கள்.

ஆகையால் நாடுகளே! கேளுங்கள்; உபா 29:24-28ஏசா 5:3எரே 31:10எரே 4:10மீகா 6:5சங் 50:4-6

கூடியிருப்போரே! அவர்களுக்கு

என்ன நடக்கப்போகிறது என்பதைக் கவனியுங்கள்.

பூமியே கேள்: ஏசா 1:2அப் 8:22எரே 17:10எரே 8:9ஓசி 10:13ஓசி 4:6எரே 22:29எரே 6:10

இந்த மக்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவரப் போகிறேன்.

அவர்களுடைய சதித்திட்டங்களின் பலனே இது.

அவர்கள் என் வார்த்தைகளைக் கவனித்துக் கேட்கவில்லை.

என் சட்டத்தையும் புறக்கணித்துவிட்டார்கள்.

சேபாவிலிருந்து வரும் தூபவர்க்கமும், ஏசா 1:11ஆமோ 5:21-22மீகா 6:6-8சங் 40:6யாத் 30:23ஏசா 43:23-24ஏசா 60:6ஏசா 66:3

தூரதேசத்திலிருந்து வரும் நறுமணப் பொருட்களும் எனக்கு எதற்கு?

உங்கள் தகனபலிகள் எனக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல;

உங்கள் பலிகளும் என்னை மகிழ்விப்பதில்லை.”

ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ஏசா 8:14எசேக் 3:20எரே 13:16ஏசா 9:14-171 பேது 2:82 நாளாக 36:17எசேக் 5:10எசேக் 9:5-7

“நான் இந்த மக்களுக்கு முன்பாக தடைகளை வைப்பேன்.

தந்தையரும், மகன்களும் அவைகளின்மேல் இடறி விழுவார்கள்;

அயலவரும், சிநேகிதரும் அழிந்துபோவார்கள்.”

யெகோவா சொல்வது இதுவே: எரே 10:22எரே 50:41-43எரே 1:14-15எரே 25:9எரே 5:15எரே 6:1

“பாருங்கள்! வடதிசை நாட்டிலிருந்து

ஒரு படை வருகிறது.

ஒரு பெரிய நாடு

பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது.

அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; ஏசா 13:18எரே 50:42எசேக் 23:22-25ஆப 1:6-10ஏசா 19:4ஏசா 5:26-30எரே 30:14எரே 4:13

அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள்.

அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம்,

இரைகிற கடலைப் போலிருக்கிறது;

சீயோன் மகளே! அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல்

உன்னைத் தாக்க வருகிறார்கள்.”

அவர்களைப்பற்றிய செய்தியை நாங்கள் கேள்விப்பட்டோம்; எரே 4:31எரே 49:24எரே 50:43ஏசா 21:3ஏசா 28:19எரே 13:21எரே 30:6எரே 4:19-21

எங்கள் கைகள் தளர்ந்து செயலிழந்தன.

பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணைப்போல

பயமும் வேதனையும் எங்களைப் பற்றிக்கொண்டது.

வயல்வெளி இடங்களுக்குப் போகவோ எரே 49:29எரே 14:18எரே 20:10யோபு 18:11சங் 31:132 நாளாக 15:5ஏசா 1:20நியாயாதி 5:6-7

வீதிகளில் நடக்கவோ வேண்டாம்.

ஏனெனில் பகைவன் வாளை வைத்திருக்கிறான்.

நாற்புறமும் பயங்கரம் இருக்கிறது.

என் மக்களே, நீங்கள் துக்கவுடை உடுத்தி, எரே 4:8சகரி 12:10ஆமோ 8:10எசேக் 27:30-31எசேக் 7:16-18ஏசா 22:12ஏசா 22:4ஏசா 30:13

சாம்பலில் புரளுங்கள்;

ஒரே மகனுக்காக மனங்கசந்து

அழுவதைப்போல் துக்கப்படுங்கள்.

ஏனெனில் அழிக்கிறவன்

நம்மேல் திடீரென வருவான்.

“எரேமியாவே! உன்னை உலோகங்களைப் பரிசோதிப்பவனாகவும், எரே 1:18எரே 15:20எசேக் 20:4எசேக் 22:2எசேக் 3:8-10எரே 9:7

என் மக்களை உலோகத் துகள்களாகவும் ஆக்கினேன்.

நீயே என் மக்களுடைய வழிகளைக் கவனித்து,

பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.

அவர்கள் யாவரும் மனக்கடினமுள்ள கலகக்காரர். எரே 9:4எரே 5:23எசேக் 22:18-22எரே 18:18ஏசா 1:4-5ஏசா 31:6எரே 20:10எரே 6:30

தூற்றுவதற்காக சுற்றித் திரிகிறார்கள்.

அவர்கள் வெண்கலமும் இரும்புமே;

அவர்கள் எல்லோரும் சீர்கேடாய் நடக்கிறார்கள்.

நெருப்பினால் ஈயத்தை எரித்துப்போடுவதற்கு 1 பேது 4:12எசேக் 24:13ஓசி 11:7ஏசா 49:4எரே 9:7மல்கி 3:2-3நீதி 17:3சகரி 13:9

உலைத்துருத்தி பயங்கரமான காற்றை ஊதுகிறது;

ஆனால் புடமிடுதல் பலனின்றி வீணாய்ப் போகிறது.

கொடுமை அவர்களிடமிருந்து அகற்றப்படவில்லை.

அவர்கள் புறக்கணித்து விடப்பட்ட வெள்ளி என அழைக்கப்படுகிறார்கள். ஓசி 9:17ஏசா 1:22சங் 119:119ஏசா 1:25எசேக் 22:18-19எரே 14:19எரே 7:29புலம் 5:22

ஏனெனில் யெகோவா அவர்களைப் புறக்கணித்துவிட்டார்.”