யோபு 26

Job 26

யோபு பேசுதல்

அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:

“பெலவீனமானவனுக்கு நீ எப்படி உதவினாய்? ஏசா 35:3-4யோபு 4:3-41 இராஜா 18:27ஏசா 41:5-7யோபு 12:2யோபு 16:4-5யோபு 6:12யோபு 6:25

தளர்ந்த கையை நீ எப்படித் தாங்கினாய்?

ஞானமில்லாத ஒருவனுக்கு நீ எப்படி புத்திமதி கூறி, அப் 20:20அப் 20:27யோபு 12:3யோபு 13:5யோபு 15:8-10யோபு 17:10யோபு 32:11-13யோபு 33:3

சிறந்த மெய்யறிவைக் காட்டியிருக்கிறாய்?

இந்த வார்த்தைகளைச் சொல்ல உனக்கு உதவியவர் யார்? 1 இராஜா 22:23-241 கொரி 12:31 யோவா 4:1-3பிரச 12:7யோபு 20:3யோபு 32:18வெளி 16:13-14

யாருடைய ஆவி உன் வாயிலிருந்து பேசிற்று?

“தண்ணீரின்கீழ் மடிந்தவர்களும் அவர்களோடே இருப்பவர்களும், ஆதி 6:4சங் 88:10யோபு 41:1-34எசேக் 29:3-5சங் 104:25-26

இறந்தவர்களின் ஆவிகளும் பயந்து நடுங்குகின்றன.

பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; நீதி 15:11சங் 139:8எபி 4:13ஆமோ 9:2யோபு 28:22ஏசா 14:9யோபு 11:8யோபு 41:11

நரகம் திறந்திருக்கிறது.

இறைவன் வெறுமையான வெளியில் வடதிசை வானங்களை விரிக்கிறார், யோபு 9:8ஏசா 40:22சங் 104:2-5ஏசா 42:5நீதி 8:23-27சங் 24:2ஆதி 1:1-2ஏசா 40:26

அவர் பூமியை அந்தரத்திலே தொங்கவிடுகிறார்.

அவர் தண்ணீரைத் தம்முடைய மேகங்களில் சுற்றி வைக்கிறார், யோபு 37:11-16நீதி 30:4எரே 10:13ஏசா 5:6யோபு 38:37யோபு 38:9சங் 135:7சங் 18:10-11

ஆனாலும் அவைகளின் பாரத்தால் மேகங்கள் கிழிந்து போவதில்லை.

அவர் சிங்காசனத்தின் மேற்பரப்பின் மேலாகத் தமது மேகத்தை விரித்து, சங் 97:2யோபு 22:141 இராஜா 8:12யாத் 20:21யாத் 33:20-23யாத் 34:3ஆப 3:3-51 தீமோ 6:16

அதை மூடிவைக்கிறார்.

அவர் தண்ணீரின் மேற்பரப்பில் அடிவானத்தை நீதி 8:29யோபு 38:8-11எரே 5:22சங் 33:7ஆதி 8:22ஏசா 54:9-10சங் 104:6-9

ஒளிக்கும் இருளுக்கும் இடையிலுள்ள எல்லையாகக் குறிக்கிறார்.

வானத்தின் தூண்கள், 1 சாமு 2:8ஆகா 2:21யோபு 15:15சங் 18:7எபி 12:26-272 பேது 3:10வெளி 20:11

அவருடைய கண்டனத்தால் திகைத்து நடுங்குகின்றன.

அவர் தமது வல்லமையினால் கடலை அமர்த்துகிறார், ஏசா 51:15எரே 31:35ஏசா 51:9யோபு 12:13யோபு 9:13சங் 89:9-10சங் 74:13சங் 93:3-4

தமது ஞானத்தினால் ராகாப் கடல் விலங்கைத் துண்டுகளாக வெட்டுகிறார்.

அவருடைய சுவாசத்தினால் ஆகாயங்கள் அழகாயின; ஏசா 27:1சங் 104:30சங் 74:13-14ஆதி 1:2சங் 33:6-7வெளி 12:9

அவருடைய கரம் நெளியும் பாம்பை ஊடுருவிக் குத்தியது.

இவை அவருடைய செயல்களில் வெளிப்புற விளிம்பு மட்டுமே; ஏசா 40:26-29யோபு 11:7-9சங் 139:6சங் 145:3ரோம 11:331 கொரி 13:9-121 சாமு 2:10யோபு 36:29

அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்டது மிகக் கொஞ்சமே;

அப்படியானால் அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை விளங்கிக்கொள்பவன் யார்?”