“பூமியில் வாழ்வது மனிதனுக்கு போராட்டந்தானே? யோபு 14:5-6சங் 39:4யோபு 5:7யோபு 14:13-14லேவி 25:50உபா 15:18பிரச 8:8ஏசா 40:2
அவனுடைய நாட்கள் கூலிக்காரனின் நாட்களைப் போன்றதல்லவா?
ஒரு வேலையாள் மாலை நிழலுக்கு ஏங்குவது போலவும், லேவி 19:13உபா 24:15யாக் 5:4மல்கி 3:5எரே 6:4சங் 119:131சங் 143:6
கூலியாள் தன் கூலிக்காக காத்திருப்பது போலவும்,
பயனற்ற மாதங்களும், சங் 6:6பிரச 1:14யோபு 16:7யோபு 29:2சங் 39:5
துன்பமான இரவுகளும் எனக்கு ஒதுக்கப்பட்டன.
நான் படுக்கும்போது, ‘எழும்ப எவ்வளவு நேரமாகும்?’ என எண்ணுகிறேன்; உபா 28:67யோபு 7:13-14சங் 77:4யோபு 30:17சங் 130:6சங் 6:6யோபு 17:12ஏசா 54:11
இரவு நீண்டுகொண்டே போகிறது, நானோ விடியும்வரை புரண்டு கொண்டிருக்கிறேன்.
என் உடல் புழுக்களினாலும் புண்களின் பொருக்குகளினாலும் மூடப்பட்டிருக்கிறது, ஏசா 14:11யோபு 17:14யோபு 2:7-8அப் 12:23எசேக் 20:43ஏசா 1:6ஏசா 66:24யோபு 19:26
எனது தோல் வெடித்துச் சீழ்வடிகிறது.
“நெய்கிறவர்களின் நாடாவைவிட என் நாட்கள் வேகமாய் போகின்றன; யோபு 9:25யோபு 17:15யோபு 17:111 பேது 1:24ஏசா 38:12-13ஏசா 40:6-7யோபு 16:22நீதி 14:32
அவை எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமலேயே முடிவடைகின்றன.
என் இறைவனே, என் வாழ்வு ஒரு சுவாசம்தான் என்பதை நினைவுகூரும்; யாக் 4:14சங் 78:39எரே 15:15சங் 89:47யோபு 10:21-22சங் 74:18சங் 89:50ஆதி 42:36
என் கண்கள் இனி ஒருபோதும் சந்தோஷத்தைக் காண்பதில்லை.
இப்பொழுது என்னைக் காணும் கண்கள், இனி ஒருபோதும் என்னைக் காண்பதில்லை; யோபு 20:9சங் 37:36யோபு 8:18யோபு 13:27யோபு 14:3சங் 39:11சங் 90:8-9
நீ என்னைத் தேடுவாய், நான் இருக்கமாட்டேன்.
மேகம் கலைந்து போவதுபோல், 2 சாமு 14:14யோபு 10:21யோபு 30:152 சாமு 12:23யோபு 14:10-14யோபு 16:22சங் 39:13ஏசா 38:11
பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை.
அவன் இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், யோபு 8:18யோபு 20:9சங் 103:16யோபு 27:21யோபு 27:23
அவனுடைய இடம் இனி அவனை அறிவதுமில்லை.
“ஆதலால் நான் இனி அமைதியாய் இருக்கமாட்டேன்; 1 சாமு 1:10சங் 40:9யோபு 10:1ஏசா 38:15ஏசா 38:17யோபு 21:25யோபு 6:262 கொரி 2:4
எனது ஆவியின் வேதனையினால் நான் பேசுவேன்,
எனது ஆத்தும கசப்பினால் நான் முறையிடுவேன்.
நீர் என்மேல் காவல் வைத்திருப்பதற்கு நான் கடலா? எசேக் 32:2-3யோபு 38:6-11யோபு 7:17புலம் 3:7யோபு 41:1-34
அல்லது ஆழங்களில் இருக்கிற பெரிய விலங்கா?
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், சங் 6:6சங் 77:4யோபு 7:3-4யோபு 9:27-28
என் படுக்கையில் எனக்கு அமைதி கிடைக்கும் என்றும் நான் நினைத்தாலும்,
நீர் கனவுகளால் என்னைப் பயமுறுத்தி, தானி 2:1ஆதி 40:5-7ஆதி 41:8நியாயாதி 7:13-14மத் 27:19
தரிசனங்களால் என்னைத் திகிலடையச் செய்கிறீர்.
இவ்வாறாக நான் என் உடலில் வேதனைப்படுவதைப் பார்க்கிலும், 2 சாமு 17:23மத் 27:5
குரல்வளை நெரிக்கப்பட்டு சாவதை விரும்புகிறேன்.
நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்; 1 இராஜா 19:4யோபு 10:1யோபு 14:6யோபு 9:21யோபு 10:20யோபு 6:9யோனா 4:8சங் 39:13
என்றென்றும் நான் உயிரோடிருக்க விரும்பவில்லை,
என்னை விட்டுவிடுங்கள்; என் வாழ்நாட்கள் பயனற்றவை.
“நீர் மனிதனை முக்கியமானவன் என எண்ணுவதற்கும், எபி 2:6சங் 8:4சங் 144:3யோபு 34:14-15யோபு 7:121 சாமு 24:14
அவனில் நீர் கவனம் செலுத்துவதற்கும்,
காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், 1 பேது 1:7ஏசா 38:12-13எரே 9:7தானி 12:10உபா 8:16யாத் 20:5ஆதி 22:1ஏசா 26:14
ஒவ்வொரு வினாடியும் அவனைச் சோதித்தறிவதற்கும் அவன் யார்?
நீர் உமது பார்வையை என்னைவிட்டு ஒருபோதும் அகற்றமாட்டீரோ? யோபு 9:18யோபு 14:6சங் 13:1-3சங் 6:3சங் 94:3வெளி 6:10
ஒரு நொடிப்பொழுதேனும் என்னைத் தனிமையில் விடமாட்டீரோ?
மானிடரைக் காப்பவரே, புலம் 3:12யோபு 3:24யோபு 7:11-12சங் 36:6யோபு 13:26யோபு 14:16யோபு 16:12-14யோபு 22:5
நான் பாவம் செய்திருந்தால், உமக்கெதிராய் நான் செய்தது என்ன?
நீர் என்னை உமது இலக்காக வைத்திருப்பது ஏன்?
நான் உமக்குச் சுமையாகிவிட்டேனா?
நீர் ஏன் என் குற்றங்களை அகற்றவில்லை? தானி 12:2யோபு 10:141 யோவா 1:9பிரச 12:7ஏசா 64:9புலம் 5:20-221 யோவா 3:52 சாமு 24:10
என் பாவங்களை ஏன் மன்னிக்கவில்லை?
இப்பொழுதே நான் இறந்து தூசியில் போடப்படுவேன்.
நீர் என்னைத் தேடும்போது, நான் இருக்கமாட்டேன்.”