நல்ல மேய்ப்பரும் ஆடுகளும்
இயேசு மேலும் சொன்னதாவது: “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆட்டுத் தொழுவத்தினுள்ளே ஒருவன் வாசல் வழியாய் உள்ளே போகாமல் வேறு வழியாய் ஏறி உள்ளே வருகிறவன், அவன் கள்வனும் கொள்ளைக்காரனுமாய் இருப்பான். மத் 7:15யோவா 10:8-101 யோவா 4:1ரோம 16:18எபி 5:41 பேது 1:102 பேது 2:1எசேக் 34:2-5 வாசல் வழியாய் உள்ளே போகிறவனே ஆடுகளின் மேய்ப்பனாய் இருக்கிறான். அப் 20:28யோவா 10:141 பேது 5:4சங் 23:1ஏசா 40:11பிரச 12:111 தீமோ 4:14யோவா 10:11-12 காவலாளி அவனுக்கு வாசல் கதவைத் திறந்து விடுகிறான். ஆடுகளும் அவனுடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வழிநடத்திச் செல்கிறான். எசேக் 34:11-162 தீமோ 2:19யோவா 10:4யோவா 10:14யோவா 10:16சங் 78:52-53வெளி 3:20யோவா 10:26-27 அவன் தனக்குச் சொந்தமான எல்லா ஆடுகளையும் தொழுவத்திற்கு வெளியே கொண்டுவந்து விட்டபின்பு, அவைகளுக்கு முன்னாக நடந்து செல்கிறான். அவனுடைய ஆடுகளும் அவனுடைய குரலை அறிந்திருப்பதால், அவை அவனுக்குப்பின் செல்கின்றன. உபா 1:30யோவா 10:16யோவா 12:261 கொரி 11:11 பேது 2:21யோவா 10:8யோவா 18:371 பேது 5:3 ஆடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்லமாட்டாது; ஒரு அவனுடைய குரலை அவை இன்னாருடைய குரல் என்று அறியாதபடியால், அவை அவனைவிட்டு ஓடிப்போகும்” என்றார். 1 யோவா 4:5-6கொலோ 2:6-101 பேது 2:1-3எபே 4:11-15மாற் 4:24நீதி 19:27வெளி 2:21 யோவா 2:21 இயேசு இதை உவமையாக பேசி அவர்களுக்குச் சொன்னபோது, இயேசு தங்களுக்கு என்ன சொல்கிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. ஏசா 56:11நீதி 28:5சங் 82:5தானி 12:10ஏசா 6:9-10யோவா 16:25மத் 13:51சங் 106:7
எனவே இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ஆடுகளுக்கு வாசல் நானே. யோவா 14:6எபே 2:18யோவா 10:1யோவா 10:9எசேக் 34:31சங் 79:13எபி 10:19-22சங் 100:3 எனக்கு முன்னே வந்த எல்லோரும் கள்வரும் கொள்ளைக்காரருமாய் இருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. எசேக் 34:2எரே 23:1யோவா 10:1அப் 5:36எசேக் 22:25-28ஏசா 56:10-12யோவா 10:27யோவா 10:5 நானே வாசல்; என் வழியாய் உள்ளே போகிறவர்கள் யாரோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்கள் சுதந்திரமாய் உள்ளே வந்து வெளியே போய், தமக்குரிய மேய்ச்சலைப் பெற்றுக்கொள்கிறார்கள். யோவா 14:6எபே 2:18யோவா 10:7யோவா 10:1ரோம 5:1-2சங் 100:3-4சங் 95:7சங் 23:1-6 திருடனோ திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறான்; நானோ அவர்கள் ஜீவனை அடையும்படியாக வந்திருக்கிறேன். அவர்கள் அந்த ஜீவனை நிறைவாய் பெற்றுக்கொள்ளும்படியாகவே வந்தேன். லூக் 19:10யோவா 6:51யோவா 12:47யோவா 3:17யோவா 6:331 தீமோ 1:15மத் 20:28யோவா 10:1
“நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான். சங் 23:1யோவா 10:14-15யோவா 15:13வெளி 7:17ஏசா 40:111 பேது 2:24-251 யோவா 3:16எசேக் 34:23 கூலிக்காரனோ ஆடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகிறதைக் காண்கிறபோது, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது. 2 பேது 2:3அப் 20:29எசேக் 34:2-6சகரி 11:16-17மத் 10:161 பேது 5:21 தீமோ 3:31 தீமோ 3:8 கூலிக்காரனோ தான் கூலிக்காரனாக இருப்பதால், ஆடுகளைக் குறித்து அக்கறை இல்லாமல் அவன் ஓடிப்போகிறான். பிலி 2:20யோவா 12:6அப் 18:17
“நானே நல்ல மேய்ப்பன்; நான் என் ஆடுகளையும் என்னுடைய ஆடுகள் என்னையும் அறிந்திருக்கின்றன. யோவா 10:272 தீமோ 2:19யோவா 10:111 யோவா 5:20எபே 1:17யோவா 17:32 தீமோ 1:12சங் 1:6 பிதா என்னை அறிந்திருக்கிறதுபோல நானும் பிதாவை அறிந்திருக்கிறேன், ஆகையால் நான் ஆடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கிறேன். கலா 1:4யோவா 10:11மத் 11:271 யோவா 2:21 பேது 3:18ஏசா 53:101 தீமோ 2:5-6சகரி 13:7 இந்தத் தொழுவத்திற்குள் இராத வேறு ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகளும் என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாய் இருக்கும். ஏசா 56:8யோவா 11:521 பேது 2:25எசேக் 34:23எபே 2:13-18எசேக் 37:241 பேது 2:10யோவா 6:37 நான் என் உயிரைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். நான் அதைத் திரும்பவும் பெற்றுக் கொள்வேன். யோவா 10:18யோவா 10:15எபி 2:9யோவா 10:11ஏசா 53:7-12யோவா 15:9-10யோவா 17:4-5ஏசா 42:1 என் உயிரை ஒருவரும் என்னிடத்திலிருந்து பறித்துக் கொள்வதில்லை. என் சுயவிருப்பத்தின்படியே நான் என் உயிரைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்த கட்டளையை நான் என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்” என்றார். எபி 2:9தீத் 2:14யோவா 10:17யோவா 2:19-21யோவா 14:31எபி 5:6-9ஏசா 53:10-12யோவா 6:38
இந்த வார்த்தைகளை யூதர்கள் கேட்டபோது, அவர்களிடையே மீண்டும் பிரிவினை ஏற்பட்டது. யோவா 9:161 கொரி 3:3யோவா 7:40-43அப் 14:4அப் 23:7-101 கொரி 11:18லூக் 12:51-53மத் 10:34-35 அவர்களில் பலர், “இவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது, பைத்தியமும் பிடித்துவிட்டது, இவன் பேச்சை ஏன் கேட்கிறீர்கள்?” என்றார்கள். யோவா 7:20மாற் 3:21யோவா 8:52யோவா 8:47-48அப் 18:14-15அப் 25:19-20அப் 26:24அப் 26:30-32
மற்றவர்களோ, “இவை பிசாசு பிடித்தவனுடைய வார்த்தைகள் அல்லவே. பார்வையற்றவனுடைய கண்களைப் பிசாசினால் திறக்க முடியுமோ?” என்றார்கள். யாத் 4:11ஏசா 35:5-6மத் 11:5சங் 94:9யாத் 8:19யோவா 9:32-33யோவா 9:6மத் 4:24
யூதர்களின் அவிசுவாசம்
எருசலேமிலே ஆலயத்தின் அர்ப்பணிப்புப் பண்டிகை நடந்தது. அது குளிர்க்காலமாயிருந்தது. இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக்கொண்டிருந்தார். அப் 3:11அப் 5:12 அப்பொழுது யூதர்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டு, “நீர் எவ்வளவு காலத்துக்கு எங்களைச் சந்தேகப்படவைப்பீர்? நீர் கிறிஸ்துவானால் அதை எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்றார்கள். யோவா 1:19லூக் 22:67-701 இராஜா 18:21யோவா 8:25யோவா 8:53மத் 11:32 கொரி 3:12யோவா 16:25
அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்கள் விசுவாசிக்கவில்லை. என் பிதாவின் பெயரினால் நான் செய்கிற கிரியைகளே என்னைக் குறித்துப் பேசுகின்றன. யோவா 10:38யோவா 8:58எபி 2:3யோவா 14:11யோவா 5:17-43அப் 10:38யோவா 10:32யோவா 11:47 ஆனால், நீங்கள் என்னுடைய ஆடுகளாய் இராதபடியால், விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள். யோவா 8:472 கொரி 4:3-4யோவா 10:27யோவா 12:37-40யோவா 6:65ரோம 11:7-81 யோவா 4:6யோவா 10:4 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிகொடுக்கின்றன. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் என்னைப் பின்பற்றுகின்றன. யோவா 10:16யோவா 10:141 கொரி 8:3வெளி 3:20யோவா 10:3-4எபி 3:7யோவா 5:25யோவா 8:12 நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. யோவா 6:39-40யோவா 6:37யோவா 3:15-16எபி 7:25யோவா 18:9ரோம 8:29ஏசா 54:17பிலி 1:6 அவைகளை எனக்குக் கொடுத்த என்னுடைய பிதா, எல்லோரைப் பார்க்கிலும் மிகவும் பெரியவர்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது. யோவா 6:37யோவா 17:2யோவா 17:9யோவா 14:28யோவா 17:6மல்கி 1:14யோவா 17:11யாத் 18:11 நானும் பிதாவும் ஒன்றே” என்றார். யோவா 1:1-2யோவா 14:9யோவா 17:21-23யோவா 5:23யோவா 8:58மத் 11:27மத் 28:19யோவா 5:17
அப்பொழுது யூதத்தலைவர்கள் இயேசுவின்மேல் எறியும்படி மீண்டும் கற்களை எடுத்துக்கொண்டார்கள். யோவா 5:18யோவா 8:591 சாமு 30:6யாத் 17:4யோவா 11:8அப் 7:52அப் 7:58-59மத் 21:35 ஆனால் இயேசுவோ அவர்களிடம், “என் பிதாவினிடத்தில் இருந்து பல நற்கிரியைகளை நான் உங்களுக்குக் காண்பித்தேன். இவைகளில் எதினிமித்தம் நீங்கள் என்மேல் கல்லெறிகிறீர்கள்?” என்று கேட்டார். 1 யோவா 3:121 சாமு 19:4-62 நாளாக 24:20-22அப் 10:38அப் 2:22பிரச 4:4யோவா 10:37யோவா 5:19-20
அதற்கு யூதர்கள், “நற்செயலினால் நாங்கள் உன்மேல் கல்லெறியவில்லை. ஆனால் ஒரு சாதாரண மனிதனாகிய நீ, உன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கிறாயே. அவ்விதம் நீ இறைவனை நிந்தித்துப் பேசியதற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம்” என்றார்கள். யோவா 5:18யோவா 10:30லேவி 24:16பிலி 2:6சங் 82:6ரோம 13:11 இராஜா 21:10லேவி 24:14
“உங்கள் சட்டத்தில், ‘நீங்கள் “தெய்வங்களாய்” இருக்கிறீர்கள்’ என்று எழுதியிருக்கவில்லையா? 1 என இயேசு அவர்களிடம் கேட்டார். சங் 82:6-7யாத் 7:1சங் 82:1யாத் 4:16சங் 138:1யாத் 22:28யோவா 12:34யோவா 8:17 இறைவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களை அவர், ‘கடவுள்கள்’ என்று சொல்லியிருக்கிறாரே. வேதவசனமும் தவறாக இருக்கமுடியாதே. மத் 24:35ரோம 13:1ஆதி 15:1லூக் 16:17லூக் 24:44-46அப் 1:16யோவா 19:36-37மத் 26:53-56 அப்படியானால் பிதாவினால் தனக்கென வேறுபிரித்து இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவரைக் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் என்னை, ‘இறைவனுடைய மகன்’ என்று சொன்னதால், நான் இறைவனை நிந்திக்கிறேன் என்று நீங்கள் எப்படி என்னில் குற்றம் காணலாம்? யோவா 3:17எரே 1:5யோவா 5:17-18யோவா 10:30-33யோவா 20:28யோவா 20:31யோவா 6:27ஏசா 61:1-3 நான் என் பிதாவுக்குரியவற்றைச் செய்யாவிட்டால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம். யோவா 15:24யோவா 10:25யோவா 10:32யோவா 12:37-40யோவா 14:10யோவா 5:31மத் 11:20-24 ஆனால் அவைகளை நான் செய்தால், நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டாலும் கூட கிரியைகளையாவது விசுவாசியுங்கள். அப்பொழுது பிதா என்னில் இருக்கிறார் என்பதையும், நான் பிதாவில் இருக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிந்து விளங்கிக்கொள்வீர்கள்” என்றார். யோவா 10:30யோவா 14:20யோவா 10:25யோவா 14:9-11அப் 2:22யோவா 17:21-23யோவா 3:2அப் 4:8-12 எனவே அவர்கள் மீண்டும் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் அவரோ அவர்களுடைய பிடியில் அகப்படாமல் தப்பிப்போய்விட்டார். யோவா 7:30யோவா 8:59யோவா 7:44லூக் 4:29-30யோவா 10:31
பின்பு இயேசு மீண்டும் யோர்தானைக் கடந்து ஆரம்ப நாட்களிலே யோவான் திருமுழுக்கு கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு போய், அங்கே தங்கினார். யோவா 1:28யோவா 11:54யோவா 3:26யோவா 7:1 அநேகர் அவரிடத்தில் வந்து. அவர்கள் அவரிடம், “யோவான் ஒருபோதும் ஒரு அடையாளத்தையும் செய்யவில்லை. ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னவை எல்லாம் உண்மையாய் இருக்கிறது” என்றார்கள். யோவா 1:33-34யோவா 1:29-30யோவா 1:27யோவா 2:11யோவா 3:26-36லூக் 12:1லூக் 5:1லூக் 7:26-30 அவ்விடத்திலே அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்தார்கள். யோவா 4:41யோவா 12:42யோவா 11:45யோவா 2:23யோவா 4:39யோவா 7:31யோவா 8:30