யோவான் 18

John 18

இயேசு கைதுசெய்யப்படுதல்

இயேசு மன்றாடி முடித்தபின்பு, அவர் அங்கிருந்து தமது சீடர்களுடன் கெதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றார். அதன் மறுபக்கத்தில் ஒரு தோட்டம் இருந்தது. இயேசுவும், அவருடைய சீடர்களும் அங்கே சென்றார்கள். 2 சாமு 15:23மத் 26:36மாற் 14:32யோவா 18:26லூக் 22:39-401 இராஜா 15:132 நாளாக 15:162 நாளாக 30:14

அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் அந்த இடத்தை அறிந்திருந்தான். ஏனெனில் இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்கே கூடிவருவார்கள். லூக் 21:37லூக் 22:39மாற் 11:11-12 எனவே யூதாஸ் படைவீரரில் ஒரு பிரிவினரையும், தலைமை ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர் ஆகியோருடைய சேவகர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு அந்த தோட்டத்திற்கு வந்தான். அவர்கள் தீப்பந்தங்களையும், விளக்குகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தார்கள். யோவா 18:12லூக் 22:47-53அப் 1:16சங் 22:12சங் 3:1-2யோவா 13:2யோவா 13:27-30மத் 26:47-56

இயேசு தமக்கு நடக்கப்போவதையெல்லாம் அறிந்து, அவர்களுக்கு முன்பாக வந்து, “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார். யோவா 13:1யோவா 18:7அப் 2:28அப் 20:22-23சங் 27:31 இராஜா 18:101 இராஜா 18:14-18அப் 4:24-28

அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள். ஏசா 3:9எரே 8:12யோவா 1:46யோவா 19:19மத் 2:23மத் 21:11

இயேசு அவர்களிடம், “நானே அவர்” என்றார். துரோகியான யூதாஸ் அவர்களுடன் நின்றுகொண்டிருந்தான். “நானே அவர்” என்று இயேசு சொன்னபோது, அவர்கள் பின்னடைந்து தரையிலே விழுந்தார்கள். சங் 27:2சங் 70:2-32இராஜா 1:9-15அப் 4:29-30லூக் 9:54-56சங் 129:5சங் 40:14

அவர் மறுபடியும் அவர்களிடம், “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் மறுபடியும்: யோவா 18:4

“நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள்.

அதற்கு இயேசு, “நானே அவர் என்று உங்களுக்குச் சொன்னேனே. நீங்கள் என்னைத்தான் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். யோவா 10:282 கொரி 12:91 பேது 5:7ஏசா 53:6யோவா 13:11 கொரி 10:13எபே 5:25யோவா 13:36 “நீர் எனக்குக் கொடுத்தவர்களில் நான் ஒருவரையும் இழந்துவிடவில்லை” 1 என்று அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் நிறைவேறும்படி இது நடந்தது. யோவா 17:12

அப்பொழுது வாள் வைத்துக்கொண்டிருந்த சீமோன் பேதுரு அதை உருவி எடுத்து, பிரதான ஆசாரியரின் வேலைக்காரனைத் தாக்கினான். அவனது வலது காது வெட்டுண்டது. அந்த வேலைக்காரனின் பெயர் மல்குஸ். மத் 26:51-54மாற் 14:47லூக் 22:49-51யோவா 18:26லூக் 22:33மாற் 14:30

அப்பொழுது இயேசு பேதுருவிடம், “உனது வாளை உறையிலே போடு!” என்று கட்டளையிட்டு, “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்திலிந்து நான் குடியாதிருப்பேனோ” என்றார். மத் 20:22மத் 26:39யோவா 20:17யோவா 12:27-28எபி 12:2யோவா 15:102 கொரி 10:42 கொரி 6:7

அப்பொழுது படைவீரரும், அவர்களுடைய படைத்தளபதியும், யூத அதிகாரிகளும் இயேசுவைக் கைது செய்தார்கள். அவர்கள் அவரைக் கட்டி, யோவா 18:3மத் 26:57அப் 21:31அப் 21:37அப் 22:24-28ஆதி 22:9நியாயாதி 16:21லூக் 22:54 முதலில் அவரை அன்னாவினிடம் கொண்டுசென்றார்கள். இந்த அன்னா அந்த வருடத்துக்குரிய பிரதான ஆசாரியன் காய்பாவின் மாமன். யோவா 18:24யோவா 11:51லூக் 3:2மத் 26:3மத் 26:57அப் 4:6 ஒரு மனிதன் எல்லா மக்களுக்காவும் மரிப்பது நல்லது என்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே. யோவா 11:49-52

பேதுருவின் முதல் மறுதலிப்பு

சீமோன் பேதுருவும் இன்னொரு சீடனும் இயேசுவுக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்தார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானபடியால், அவன் இயேசுவுடனே பிரதான ஆசாரியரின் மாளிகை முற்றத்திற்குள் போனான். லூக் 22:54மாற் 14:54மத் 26:58-68மத் 26:3 ஆனால் பேதுருவோ வெளியே வாசல் அருகே நிற்க வேண்டியதாயிருந்தது. பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமான அந்த இன்னொரு சீடன் திரும்பிவந்து, வாசல் காக்கும் பெண்ணுடனே பேசி, பேதுருவை உள்ளே கூட்டிக்கொண்டு போனான். லூக் 22:55-57மத் 26:69மாற் 14:66-68

வாசலில் இருந்த அந்த பெண் பேதுருவிடம், “நீயும் அந்த மனிதனின் சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்றாள். மத் 26:69-70யோவா 18:16யோவா 18:25யோவா 21:15லூக் 22:54லூக் 22:56-57மத் 26:33மாற் 14:66-68

அதற்கு அவன், “நான் அல்ல” என்றான்.

அங்கே மிகவும் குளிராய் இருந்தது. அங்கேயிருந்த வேலைக்காரரும் சேவகர்களும் குளிர்காயும்படி, நெருப்புமூட்டி அதைச் சுற்றி நின்றார்கள். பேதுருவும் அங்கே அவர்களுடன் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான். மாற் 14:54யோவா 18:25லூக் 22:55-56மாற் 14:67எபே 5:11-12ஆதி 49:6யோவா 21:9நீதி 13:20

பிரதான ஆசாரியன் முன் இயேசு

அவ்வேளையில் பிரதான ஆசாரியன், இயேசுவின் சீடரைக் குறித்தும், அவருடைய போதனையைக் குறித்தும் விசாரித்தான். லூக் 11:53-54லூக் 20:20லூக் 22:63-71மத் 26:59-68மாற் 14:55-65

இயேசு அவனுக்கு சொன்னதாவது: “நான் உலகத்துடன் பகிரங்கமாகப் பேசினேன். யூதரெல்லோரும் கூடிவருகின்ற ஜெப ஆலயங்களிலும், எருசலேம் ஆலயத்திலும் எப்பொழுதும் போதித்தேன். நான் இரகசியமாக எதுவுமே சொல்லவில்லை. ஏசா 48:16யோவா 7:26மத் 4:23லூக் 21:37ஏசா 45:19யோவா 7:4லூக் 4:15மத் 26:55 நீங்கள் ஏன் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்? நான் சொன்னவற்றைக் கேட்டவர்களிடம் விசாரியுங்கள். நான் என்ன சொன்னேன் என்பது நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும்.” லூக் 22:67அப் 24:12-13அப் 24:18-20மத் 26:59-60மாற் 14:55-59

இயேசு இப்படியாக சொன்னபோது, அருகே நின்ற காவலரில் ஒருவன் அவருடைய முகத்திலே அறைந்தான். அவன், “பிரதான ஆசாரியனுக்கு இவ்விதமாகவா பதில் சொல்வது?” என்றான். ஏசா 50:5-7யோவா 19:3லூக் 22:63-64மத் 26:67-68மாற் 14:65அப் 23:2-5யோபு 16:10மீகா 5:1

அதற்கு இயேசு, “நான் எதையாவது தவறாகச் சொல்லியிருந்தால், தவறு என்னவென்று சொல். நான் பேசியது உண்மையானால், நீ ஏன் என்னை அடித்தாய்?” என்றார். 1 பேது 2:20-232 கொரி 10:1மத் 5:39அப் 23:2-5 அப்பொழுது அன்னா இயேசுவைக் கட்டப்பட்டவராகவே பிரதான ஆசாரியன் காய்பாவிடம் அனுப்பினான். யோவா 18:13மத் 26:57

பேதுரு இரண்டாம் மூன்றாம்முறை மறுதலித்தல்

சீமோன் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், ஒருவன் அவனிடம், “நீ அவனுடைய சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்று கேட்டான். யோவா 18:17-18மாற் 14:67-72ஆதி 18:15லூக் 22:58-62மத் 26:71-75மாற் 14:37-38நீதி 29:25லூக் 22:56

“நான் அவருடைய சீடன் அல்ல” என்று பேதுரு மறுதலித்தான்.

பேதுருவினால் காது வெட்டப்பட்டவனின் உறவினராகிய ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனாயிருந்தான். அவன் பேதுருவிடம், “நீ இயேசுவுடனே அந்த ஒலிவ தோட்டத்தில் இருந்ததை நான் கண்டேனே” என்றான். யோவா 18:1யோவா 18:10லூக் 22:59-60மத் 26:73மாற் 14:70-71நீதி 12:19 அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான். உடனே சேவல் கூவிற்று. யோவா 13:38லூக் 22:60-62மாற் 14:71-72மத் 26:34மத் 26:74-75மாற் 14:30மாற் 14:68லூக் 22:34

பிலாத்துவின் முன் இயேசு

பின்பு இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநனரின் அரண்மனைக்குக் கொண்டுசென்றார்கள். இதற்குள்ளாகப் பொழுது விடிந்து விட்டது. பஸ்காவைச் சாப்பிடத்தக்க நிலையில் தங்களை வைத்துக்கொள்ள அவர்கள் விரும்பி, அசுத்தப்படாமல் காத்துக்கொள்ளும்படி யூதர்கள் அந்த அரண்மனைக்குள் போகவில்லை. யோவா 18:33யோவா 19:9யோவா 19:14மத் 27:27மாற் 15:1-5அப் 3:13ஏசா 1:10-15யோவா 11:55 எனவே பிலாத்து வெளியே யூதத்தலைவர்களிடம் வந்து, “இந்த மனிதனுக்கு விரோதமாய் என்ன குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான். மத் 27:23மாற் 15:2-5லூக் 23:2-3மத் 27:11-14அப் 23:28-30அப் 25:16

அதற்கு அவர்கள், “இவன் குற்றவாளியாய் இல்லாதிருந்தால், நாங்கள் இவனை உம்மிடம் ஒப்படைத்திருக்க மாட்டோம்” என்றார்கள். அப் 3:13யோவா 19:12லூக் 20:19-26லூக் 23:2-5லூக் 24:7மாற் 10:33மாற் 15:3

அப்பொழுது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் உங்கள் மோசேயின் சட்டத்தின்படி இவனுக்கு நியாயத்தீர்ப்பு வழங்குங்கள்” என்றான். யோவா 19:15யோவா 19:6-7அப் 25:18-20எசேக் 21:26-27ஆதி 49:10ஓசி 3:4-5

அதற்கு அவர்கள், “யாருக்கும் மரண தண்டனை வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்றார்கள். தமக்கு எவ்விதமான மரணம் ஏற்படப்போகிறது என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தது. யோவா 3:14மத் 20:19மத் 26:2யோவா 12:32-33லூக் 18:32-33உபா 21:23யோவா 8:28மாற் 10:33

பின்பு பிலாத்து அரண்மனைக்குள்ளே போய், இயேசுவைத் தன்னிடம் கொண்டுவரும்படிச்செய்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். லூக் 23:3-4அப் 2:34-36யோவா 12:13யோவா 18:37யோவா 19:12யோவா 19:3லூக் 19:38-40மத் 27:11

அதற்கு இயேசு, “இதை நீராகவே கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் உம்மிடம் என்னைக்குறித்து இப்படிச் சொன்னார்களா?” என்று கேட்டார்.

அப்பொழுது பிலாத்து, “நான் என்ன ஒரு யூதனா? உனது மக்களும் உனது தலைமை ஆசாரியர்களுமே உன்னை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நீ செய்தது என்ன?” என்று கேட்டான். யோவா 19:11அப் 18:14-16அப் 21:38அப் 22:22-24அப் 23:29அப் 25:19-20அப் 3:13எஸ்றா 4:12

அதற்கு இயேசு, “நான் இந்த உலகத்துக்குரிய அரசன் அல்ல. அப்படியிருந்தால், யூதர்களிடம் நான் ஒப்புக்கொடுக்கப்படுவதைத் தடுக்கும்படி எனது ஊழியக்காரர்களே போராடியிருப்பார்கள். எனது அரசோ வேறு இடத்தைச் சேர்ந்தது” என்றார். லூக் 17:20-21கொலோ 1:12-14யோவா 6:15ரோம 14:17தானி 2:44தானி 7:14சகரி 9:91 தீமோ 6:13

அதற்கு பிலாத்து, “அப்படியானால், நீ ஒரு அரசன்தானே!” என்று கேட்டான். 1 யோவா 4:6யோவா 8:47யோவா 8:14யோவா 10:26-271 யோவா 3:19யோவா 14:6ஏசா 55:4யோவா 7:17

அதற்கு இயேசு, “நான் ஒரு அரசன் என்று நீர் சொல்வது சரிதான். ஏனெனில் சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கும்படியே நான் பிறந்தேன். அதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். சத்தியத்திற்கு உரியவர்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செவிகொடுக்கிறார்கள்” என்றார்.

அதற்கு பிலாத்து, “சத்தியம் என்றால் என்ன?” என்று கேட்டான். அப்படிக் கேட்ட அவன் மீண்டும் வெளியே போய் யூதரிடம், “நான் இவனுக்கு எதிராய் குற்றம் சாட்டுவதற்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை. யோவா 19:4யோவா 19:6லூக் 23:4அப் 17:321 பேது 1:191 பேது 2:22-23அப் 17:19-20அப் 24:25-26 ஆகவே பஸ்கா என்ற பண்டிகை காலத்தில் ஒரு கைதியை நான் உங்களுக்காக விடுதலை செய்வது வழக்கமல்லவா? எனவே ‘யூதரின் அரசனை’ நான் விடுதலைசெய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். மத் 27:15-18லூக் 23:16-23மாற் 15:6-14மத் 27:20-23

அதற்கு அவர்களோ, “இல்லை, அவனை அல்ல! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். அந்த பரபாஸ் என்பவனோ ஒரு கலவரத்தில் ஈடுபட்டவனாய் இருந்தான். அப் 3:13-14லூக் 23:18-19லூக் 23:25மத் 27:16மத் 27:26மாற் 15:15மாற் 15:7