தகாத பாலுறவுகள்
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் பேசி அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்கள் இறைவனாகிய யெகோவா. யாத் 6:7லேவி 11:44எசேக் 20:5லேவி 20:7யாத் 20:2எசேக் 20:19-20எசேக் 20:7ஆதி 17:7 நீங்கள் முன்பு வாழ்ந்துவந்த எகிப்தில், உள்ளவர்கள் செய்ததுபோல் நீங்களும் செய்யவேண்டாம். நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டில் உள்ளவர்கள் செய்கிறதுபோலவும் செய்யவேண்டாம். அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றவும் வேண்டாம். யாத் 23:24லேவி 20:231 பேது 4:2-4எசேக் 20:7-8எசேக் 23:8உபா 12:30-31உபா 12:4எபே 5:7-11 நீங்களோ என்னுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, என் கட்டளைகளைப் பின்பற்றக் கவனமாயிருங்கள். நான் உங்கள் இறைவனாகிய யெகோவா. எசேக் 20:19லேவி 18:2உபா 6:1எசேக் 36:27யோவா 15:14லேவி 18:26லேவி 19:37லேவி 20:22 ஆகவே நீங்கள் என்னுடைய கட்டளைகளையும் சட்டங்களையும் கைக்கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றிற்குக் கீழ்ப்படிகிறவன் எவனும் அவற்றால் வாழ்வு பெறுவான். நானே யெகோவா. கலா 3:12எசேக் 20:11ரோம 10:5எசேக் 20:13எசேக் 20:21லூக் 10:28யாத் 6:2யாத் 6:6
“ ‘பாலுறவுகொள்ளும்படி யாரும் நெருங்கிய உறவினரை அணுகக்கூடாது. நானே யெகோவா. லேவி 20:17-21லேவி 18:7-19லேவி 20:11-12
“ ‘நீ உன் தாயுடன் பாலுறவுகொண்டு, உன் தகப்பனை கனவீனப்படுத்தாதே. அவள் உன் தாய். அவளுடன் பாலுறவு கொள்ளாதே. லேவி 20:11எசேக் 22:10லேவி 18:8-16லேவி 20:14
“ ‘நீ உன் தகப்பனின் மனைவியுடன் பாலுறவு கொள்ளாதே. அது உன் தகப்பனைக் கனவீனப்படுத்தும். லேவி 20:111 கொரி 5:1உபா 22:30உபா 27:20ஆமோ 2:7ஆதி 49:42 சாமு 16:21-22எசேக் 22:10
“ ‘நீ உன் சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே. உன் தகப்பனின் மகளோடு அல்லது உன் தாயின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. அவள் உன் வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ பிறந்திருந்தாலும் சரி, அவளுடன் பாலுறவு கொள்ளாதே. லேவி 20:17உபா 27:22எசேக் 22:112 சாமு 13:11-14லேவி 18:11
“ ‘உன் மகனுடைய மகளோடு, உன் மகளின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. அதுவும் உன்னைக் கனவீனப்படுத்தும்.
“ ‘உன் தகப்பனுக்குப் பிறந்த, உன் தகப்பனின் மனைவியின் மகளுடன் பாலுறவு கொள்ளாதே. அவளும் உனக்குச் சகோதரிதான்.
“ ‘உன் தகப்பனுடைய சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே. அவள் உன் தகப்பனுடைய நெருங்கிய உறவினள். லேவி 20:19யாத் 6:20
“ ‘உன் தாயின் சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே; ஏனெனில் அவள் உன் தாயினுடைய நெருங்கிய உறவினள்.
“ ‘உன் தகப்பனுடைய சகோதரனின் மனைவியுடன் பாலுறவு கொள்வதற்காக, அவளை நெருங்குவதினால் அவனைக் கனவீனப்படுத்தாதே. அவள் உன்னுடைய சிறியதாய். லேவி 20:20
“ ‘உன் மருமகளுடன் பாலுறவு கொள்ளாதே. அவள் உன் மகனின் மனைவி; அவளுடனும் பாலுறவு கொள்ளாதே. லேவி 20:12எசேக் 22:11ஆதி 38:26ஆதி 38:18-19
“ ‘உன் சகோதரனுடைய மனைவியுடன் பாலுறவு கொள்ளாதே. அது உன் சகோதரனைக் கனவீனப்படுத்தும். உபா 25:5லேவி 20:21மத் 22:24மாற் 12:19லூக் 3:19மத் 14:3-4மாற் 6:17
“ ‘தாயும் மகளுமான இருவருடனும் பாலுறவு கொள்ளாதே. அவளுடைய மகனின் மகளோடு, மகளின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. இவர்களும் அவளுக்கு நெருங்கிய உறவுள்ளவர்கள். இது ஒரு கொடுமையான செயல். லேவி 20:14ஆமோ 2:7உபா 27:23
“ ‘உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்குப் போட்டியாக, அவள் சகோதரியை உனக்கு மனைவியாக்கி அவளுடன் பாலுறவு கொள்ளலாகாது. ஆதி 29:28ஆதி 30:15மல்கி 2:151 சாமு 1:6-8ஆதி 4:19யாத் 26:3
“ ‘ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் அசுத்தமாய் இருக்கும்போது, பாலுறவுகொள்ளும்படி அவளை நெருங்காதே. லேவி 15:24லேவி 20:18எசேக் 22:10எசேக் 18:6லேவி 15:19லேவி 12:2
“ ‘உங்கள் அயலானின் மனைவியுடன் பாலுறவுகொண்டு அவளால் உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். யாத் 20:141 கொரி 6:9எபி 13:4லேவி 20:10மத் 5:27-282 சாமு 11:3-4உபா 5:18நீதி 6:25
“ ‘நீங்கள் உங்கள் பிள்ளைகள் ஒருவரையும், மோளேக்கு தெய்வத்திற்குப் பலியிடப்படுவதற்காகக் கொடுத்து, உங்கள் இறைவனுடைய பெயரை இழிவுபடுத்த வேண்டாம். நானே யெகோவா. உபா 12:31உபா 18:10லேவி 20:2-5லேவி 19:12லேவி 22:321 இராஜா 11:331 இராஜா 11:7அப் 7:43
“ ‘நீங்கள் ஒரு பெண்ணோடு பாலுறவு கொள்வதுபோல், ஆணோடு பாலுறவுகொள்ள வேண்டாம். அது அருவருப்பானது. லேவி 20:131 கொரி 6:9ரோம 1:26-271 தீமோ 1:10யூதா 1:71 இராஜா 14:24உபா 23:18நியாயாதி 19:22
“ ‘எந்தவொரு மிருகத்தோடும் நீங்கள் பாலுறவுகொண்டு அதினாலே உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் மிருகத்தோடு பாலுறவுகொள்ளும்படி, தன்னை ஒப்புவிக்கக் கூடாது. அது இயல்பிற்கு முரணான பாலுறவாகும். யாத் 22:19லேவி 20:15-16லேவி 20:12உபா 27:21
“ ‘இவ்வாறான தீயசெயல்களினால் உங்களை அசுத்தப்படுத்தாதீர்கள். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகும் நாட்டினர் இவ்விதமாகவே அசுத்தமாகினார்கள். உபா 18:12லேவி 18:30லேவி 20:22-231 கொரி 3:17உபா 12:31எரே 44:4லேவி 18:3மத் 15:18-20 இவ்விதமாய் நாடும் அசுத்தப்பட்டது. எனவே அதன் பாவத்திற்காக நான் அதைத் தண்டித்தேன். நாடும் அதன் குடிகளை வாந்திபண்ணியது. லேவி 18:28எரே 2:7லேவி 20:22-23எரே 9:9சங் 106:38எண் 35:33-34உபா 18:12எசேக் 36:17-18 ஆனால் நீங்களோ எனது சட்டங்களையும், கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். தன் நாட்டினனானாலும், உங்களுக்குள் வாழும் பிறநாட்டினனானாலும், யாரும் இந்த அருவருப்பான ஒன்றையும் செய்யக்கூடாது. லேவி 18:5உபா 12:32உபா 4:1-2உபா 4:40யோவா 14:15யோவா 14:21-23யோவா 15:14லேவி 17:10 ஏனெனில், உங்களுக்கு முன்னே இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் இந்தச் செயல்களையெல்லாம் செய்தார்கள். நாடும் அசுத்தமடைந்தது. 1 இராஜா 14:242 நாளாக 36:142இராஜா 16:32இராஜா 21:2உபா 20:18உபா 23:18உபா 25:16உபா 27:15 நாட்டை நீங்கள் அசுத்தப்படுத்தினால், உங்களுக்கு முன்னே அங்கே வாழ்ந்த நாட்டினரை அது வாந்திபண்ணியதுபோல, உங்களையும் அது வாந்திபண்ணிவிடும். லேவி 18:25லேவி 20:22வெளி 3:16எசேக் 36:17எரே 9:19எசேக் 36:13ரோம 8:22
“ ‘யாராவது இந்த அருவருப்பான செயல்களில் எதையாவது செய்தால், அப்படிப்பட்டவர்கள் தங்கள் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். யாத் 12:15லேவி 17:10லேவி 20:6 ஆகவே நீங்கள் என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள். நீங்கள் வரும் முன்பு அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அருவருப்பான வழக்கங்களில் எதையாவது பின்பற்றி, அவற்றால் உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா’ ” என்றார். லேவி 20:23உபா 18:9-12லேவி 22:9லேவி 18:2-4லேவி 18:26-27உபா 11:1