இஸ்ரயேலின் எதிர்காலம்
“மனுபுத்திரனே, நீ இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘இஸ்ரயேலின் மலைகளே! யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். எசேக் 20:47எசேக் 33:28எசேக் 34:14எசேக் 36:4எசேக் 36:8எசேக் 37:22எசேக் 37:4எசேக் 6:2-3 ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ஆகா, முற்காலத்து உயர்ந்த மலைகள் எங்கள் உடைமைகளாயிற்றே என்று பகைவர்கள் உங்களைப் பார்த்துச் சொன்னார்களல்லவோ?” ’ உபா 32:13எசேக் 25:3எசேக் 35:10எசேக் 26:2ஆப 3:19ஏசா 58:14எரே 49:1சங் 78:69 ஆகவே மனுபுத்திரனே நீ இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. உங்கள் பகைவர்கள் உங்களைக் கொள்ளையடித்து, ஒவ்வொரு திசைகளிலுமிருந்து உங்களைப் பின்தொடர்ந்து துரத்தியபடியால், நீங்கள் மற்ற நாடுகளின் உடைமையாகி, மக்களின் தீங்கான பேச்சுக்கும் அவதூறுக்கும் ஆளானீர்கள். சங் 44:13-14எரே 18:16புலம் 2:15-161 இராஜா 9:7-8தானி 9:16உபா 28:37எசேக் 13:10எரே 24:9 ஆகையால் இஸ்ரயேலின் மலைகளே, ஆண்டவராகிய யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். மலைகள், குன்றுகள், கணவாய்கள், பள்ளத்தாக்குகள், இடிபாடுகள் ஆகியவற்றிற்கும் உங்களைச் சுற்றிலும் இருக்கிற நாடுகளால் கொள்ளையடிக்கப்பட்டு, கேலிக்கிடமாக்கப்பட்ட, பட்டணங்களுக்கும் ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார். உபா 11:11எசேக் 34:28எசேக் 36:1எசேக் 36:6சங் 79:42 நாளாக 36:17-21எசேக் 36:33-35எசேக் 6:14 ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் என் பற்றியெரியும் வைராக்கியத்தில் மீதியான நாடுகளுக்கும், முழு ஏதோமுக்கும் விரோதமாகப் பேசினேன். ஏனெனில், என் நாட்டிலுள்ள மேய்ச்சல் நிலங்களைக் கொள்ளையிடுவதற்காக அவர்கள் மகிழ்வோடும், கர்வத்தோடும் என் நாட்டைத் தங்கள் உரிமையாக்கிக்கொண்டார்கள்.’ எசேக் 36:3மீகா 7:8உபா 4:24எசேக் 38:19எரே 25:15-29எரே 25:9சங் 137:7சங் 83:4-12 ஆகவே நீ இஸ்ரயேல் நாட்டைக்குறித்து இறைவாக்குரைத்து, மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் பிறநாட்டினரின் அவமானத்தைச் சுமந்தபடியினால், நான் எனது வைராக்கியத்தினாலும், கடுங்கோபத்தினாலும் பேசுகிறேன். எசேக் 34:29சங் 123:3-4சங் 74:10சங் 74:23எசேக் 36:15எசேக் 36:4-5சங் 74:18 ஆகவே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உண்மையாகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் பல நாடுகளும் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய் சுமப்பார்கள் என நான் என் உயர்த்திய கரத்தால் ஆணையிடுகிறேன். எசேக் 20:5ஆமோ 1:1-15உபா 32:40எசேக் 20:15எசேக் 25:1-17எரே 25:15-29எரே 25:9எரே 47:1-7
“ ‘ஆனால், இஸ்ரயேலின் மலைகளே, நீங்களோ என் மக்களாகிய இஸ்ரயேலருக்குக் கிளைகளைப் பரப்பி, பழங்களையும் விளைவிப்பீர்கள். ஏனெனில் அவர்கள் சீக்கிரமாக வீடுதிரும்புவார்கள். ஏசா 27:6எசேக் 34:26-29எபி 10:37ஆமோ 9:13-15எசேக் 12:25எசேக் 17:23ஓசி 2:21-23ஏசா 30:23 பாருங்கள்! நான் உங்களில் அக்கறைகொண்டுள்ளேன். நான் உங்களுக்கு உதவிசெய்ய வருவேன். உங்கள் நிலங்களும் உழப்பட்டு விதைக்கப்படும். சங் 46:11எசேக் 36:34ஓசி 2:21-23ரோம 8:31சகரி 8:12ஆகா 2:19யோவே 3:18மல்கி 3:10-11 மேலும் நான் உங்களிலுள்ள மக்களையும், முழு இஸ்ரயேல் குடும்பத்தாரையும் ஏராளமாகப் பெருகப்பண்ணுவேன். நகரங்கள் குடியிருப்பாகும். இடிபாடுகள் மீண்டும் கட்டப்படும். எசேக் 36:33எரே 30:19எரே 33:12எசேக் 36:37ஏசா 27:6எரே 31:27-28ஆமோ 9:14ஏசா 41:17-23 உங்களிலுள்ள மனிதர்களையும், மிருகங்களையும் எண்ணிக்கையில் பெருகப்பண்ணுவேன். அவர்கள் விருத்தியுள்ளவர்களாய்ப் பெருகுவார்கள். மிருகங்களும் பெருகும். முன்பு இருந்ததுபோலவே மக்களை உங்களில் குடியிருக்கப்பண்ணி, உங்களை முந்தின சிறப்பைவிட செழிப்புள்ளவர்களாக்குவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். எரே 33:12எரே 23:5-8மீகா 7:14எசேக் 37:13எரே 31:27ஆமோ 9:15எசேக் 16:55ஓசி 2:20 மக்களை, என் மக்களாகிய இஸ்ரயேலரை உங்கள் மேலாக நடக்கும்படி செய்வேன். அவர்கள் உங்களை உரிமையாக்கிக்கொள்வார்கள். நீங்கள் அவர்களின் உரிமைச் சொத்தாவீர்கள். இனியொருபோதும் நீங்கள் அவர்களைப் பிள்ளையற்றவர்களாக்க மாட்டீர்கள். எரே 15:7எசேக் 36:13எசேக் 47:14எரே 32:44எண் 13:32ஒபதி 1:17-21எரே 32:15
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேல் நாடு தனது சொந்த மனிதரை விழுங்கி, “தன் நாட்டைப் பிள்ளையற்றதாக்குகிறது என்பதாக மக்கள் உங்களைக் குறித்துச் சொல்கிறார்கள்” எண் 13:32 ஆகையால் இனிமேல் நீங்கள் மனிதரை விழுங்கவோ அல்லது உங்கள் நாட்டைப் பிள்ளையற்றதாக்கவோ மாட்டீர்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். ஆமோ 9:15எசேக் 37:25-28ஏசா 60:21 நான் உங்களை இனிமேல் நாடுகளின் பழிச்சொல்லைக் கேட்கச்செய்யமாட்டேன். மக்கள் கூட்டங்களின் ஏளனத்தால் இனி நீங்கள் வேதனையடைவதுமில்லை. அல்லது உங்கள் நாட்டை நான் விழப்பண்ணப்போவதுமில்லை என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ” எசேக் 34:29சங் 89:50எசேக் 36:6ஏசா 54:4ஏசா 60:14மீகா 7:8-10செப்ப 2:8செப்ப 3:19-20
இஸ்ரேலின் மறுசீரமைப்பு உறுதி
மீண்டும் யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, இஸ்ரயேல் மக்கள் தம் சொந்த நாட்டில் வாழும்போது, அவர்கள் அதைத் தங்கள் நடத்தைகளினாலும், செயல்களினாலும் அசுத்தப்படுத்தினார்கள். எனது பார்வையில் அவர்களின் நடத்தை பெண்ணின் மாத விலக்குபோல் இருந்தது. எரே 2:7மீகா 2:10எண் 35:33-34ஏசா 24:5எரே 16:18லேவி 15:19-33ஏசா 64:6எரே 3:1-2 அவர்கள் தங்கள் நாட்டில் இரத்தம் சிந்தியதாலும், நாட்டைத் தங்கள் விக்கிரகங்களால் அசுத்தப்படுத்தியதாலும், நான் என் கோபத்தை அவர்கள்மேல் ஊற்றினேன். 2 நாளாக 34:21எசேக் 7:8புலம் 2:4புலம் 4:112 நாளாக 34:26எசேக் 14:19எசேக் 16:36-38எசேக் 21:31 நான் அவர்களை நாடுகளுக்குள்ளும் சிதறப்பண்ணினேன். அவர்கள் தேசங்களுக்கிடையே கலைந்துபோனார்கள். அவர்கள் நடத்தைகளுக்கும், செயல்களுக்கும் தக்கதாக நான் அவர்களை நியாயந்தீர்த்தேன். உபா 28:64எசேக் 39:24ஆமோ 9:9எசேக் 18:30எசேக் 22:15எசேக் 5:12ரோம 2:6எசேக் 22:31 நாடுகளின் மத்தியில் அவர்கள் எங்கெங்கு சென்றார்களோ, அங்கெல்லாம் என் பரிசுத்த பெயரை அசுத்தப்படுத்தினார்கள். ஏனெனில் ‘இவர்கள் யெகோவாவினுடைய மக்கள், என்றாலும் இவர்கள் அவருடைய நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது’ என்பதாக அவர்களைக் குறித்துச் சொல்லப்பட்டது. ஏசா 52:5ரோம 2:24எரே 33:24தானி 3:15யாத் 32:11-132இராஜா 18:302இராஜா 18:352இராஜா 19:10-12 இஸ்ரயேல் குடும்பத்தார் சென்றிருந்த நாடுகளின் மத்தியில் அவர்கள் அசுத்தப்படுத்திய எனது பரிசுத்த பெயரைக்குறித்து நான் அக்கறையாயிருந்தேன். ஏசா 48:9சங் 74:18எசேக் 20:9உபா 32:26-27எசேக் 20:14எசேக் 20:22ஏசா 37:35
“ஆதலால், இஸ்ரயேல் குடும்பத்திற்கு நீ கூறவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேல் குடும்பத்தாரே! இக்காரியங்களை நான் செய்யப்போவது உங்கள் நிமித்தமல்ல, என் பரிசுத்த பெயரின் நிமித்தமே. என் பெயரையே நீங்கள் போன நாடுகளுக்குள் எல்லாம் அசுத்தப்படுத்தினீர்கள். சங் 106:8எசேக் 36:32சங் 115:1-2உபா 7:7-8உபா 9:5-7 நாடுகளின் மத்தியில் அசுத்தப்படுத்தப்பட்டதும், அவர்கள் மத்தியில் நீங்கள் அசுத்தப்படுத்தியதுமான என் மகத்துவமான பெயரின் பரிசுத்தத்தை நான் காண்பிப்பேன். அவர்கள் கண்களுக்கு முன்பாக, உங்கள் மூலமாக நான் என்னைப் பரிசுத்தராய்க் காண்பிப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். எசேக் 20:411 பேது 2:9எசேக் 39:7ஏசா 5:16சங் 46:10எசேக் 39:28சங் 126:1-3தானி 2:47
“ ‘நான் உங்களை நாடுகளிலிருந்து வெளியே கொண்டுவருவேன். எல்லா நாடுகளிருந்தும் உங்களை நான் கூட்டிச்சேர்த்து, மீண்டும் உங்கள் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன். எசேக் 37:21எசேக் 34:13ஆமோ 9:14-15சங் 107:2-3உபா 30:3-5எசேக் 11:17ஏசா 43:5-6எரே 23:3-8 சுத்தமான தண்ணீரை நான் உங்கள்மீது தெளிப்பேன். நீங்கள் சுத்தமடைவீர்கள். உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும், உங்கள் சகல விக்கிரகங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்தமாக்குவேன். எபி 10:22யோவா 3:5எரே 33:81 யோவா 1:7தீத் 3:5-6எபே 5:26-27ஏசா 4:4சகரி 13:1-2 நான் உங்களுக்குப் புதியதோர் இருதயத்தைக் கொடுப்பேன். ஒரு புதிய ஆவியையும் கொடுப்பேன். கல்லான உங்கள் இருதயத்தை நீக்கிவிட்டு, சதையான இருதயத்தைக் கொடுப்பேன். எசேக் 11:19-20சங் 51:102 கொரி 5:17உபா 30:6யோவா 3:3-52 கொரி 3:3எரே 32:39எபே 2:10 மேலும் நான் என் ஆவியானவரை உங்களுக்குள் இருக்கும்படி செய்து, நீங்கள் என் சட்டங்களைக் கைக்கொள்ளக் கவனமாயிருக்கவும், என் விதிமுறைகளைப் பின்பற்றவும் செய்வேன். தீத் 3:3-6எபி 13:211 கொரி 3:16எசேக் 39:29எரே 31:33நீதி 1:23தீத் 2:11-14ஏசா 44:3-4 உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த நாட்டில் நீங்கள் வசிப்பீர்கள். நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் இறைவனாயிருப்பேன். எசேக் 37:27எரே 31:33எரே 32:38எசேக் 11:20எசேக் 37:23மத் 22:32வெளி 21:7எசேக் 14:11 உங்களுடைய சகல அசுத்தங்களிலிருந்தும் உங்களை நான் விடுவிப்பேன். நான் தானியத்தை விளையச்செய்து, பெருகப்பண்ணி, உங்கள்மீது பஞ்சம் வராதிருக்கப்பண்ணுவேன். ஓசி 2:21-23யோவா 1:7-9மத் 1:21ஓசி 14:4ரோம 11:26தீத் 2:14எசேக் 34:27-29எசேக் 36:25 நீங்கள் நாடுகளின் மத்தியில் இனியொருபோதும் பஞ்சத்தினால் வாடும் அவமானத்திற்குள்ளாகாதபடி, மரங்களின் பழங்களையும், வயலின் விளைச்சல்களையும் பெருகப்பண்ணுவேன். எசேக் 34:27யோவே 2:26உபா 29:23-28யோவே 2:17லேவி 26:4 அப்பொழுது நீங்கள் உங்கள் பழைய தீயவழிகளையும், கொடிய செயல்களையும் நினைவுகூர்ந்து, உங்கள் பாவங்களுக்காகவும் அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் உங்களை வெறுப்பீர்கள். எசேக் 20:43எசேக் 6:9நெகே 9:26-35எசேக் 16:61-63ஏசா 6:5யோபு 42:6லூக் 18:13தானி 9:4-20 நான் இவ்வாறு செய்யப்போவது நீங்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் என்பதற்காக அல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேல் குடும்பத்தாரே! உங்கள் நடத்தையினிமித்தம் வெட்கித்து அவமானமடையுங்கள். உபா 9:5எசேக் 36:22தீத் 3:3-62 தீமோ 1:91 பேது 4:2-3தானி 9:18-19எசேக் 16:63எஸ்றா 9:6
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்திகரிக்கும் நாளிலே, உங்கள் பட்டணங்களில் குடியேறச்செய்வேன். இடிபாடுகளெல்லாம் மீண்டும் கட்டப்படும். எசேக் 36:10ஏசா 58:12எரே 33:10சகரி 8:7-8ஆமோ 9:14-15எரே 32:43எரே 50:19-20 பாழாக்கப்பட்ட இடங்கள் அதைக் கடந்துசெல்வோர் அனைவரது பார்வையிலும், பாழாய்க்கிடப்பதற்குப் பதிலாகப் பயிரிடப்பட்டதாயிருக்கும். எசேக் 6:14எரே 25:9-112 நாளாக 36:21உபா 29:23-28 “பாழாக்கப்பட்டிருந்த இந்நாடு ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்று. பாழாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் பாழிடங்களாய்க் கிடந்த பட்டணங்கள், இப்பொழுது காவலரண் செய்யப்பட்ட குடியிருப்புகளாகிவிட்டன என்று சொல்வார்கள்.” ஏசா 51:3எரே 33:9யோவே 2:3சங் 58:11எசேக் 37:13ஆதி 13:10சங் 126:2சங் 64:9 அப்பொழுது அழிக்கப்பட்டதைத் திரும்பவும் கட்டியதும், பாழாய்க் கிடந்ததை திரும்பவும் பயிரிட்டதும் யெகோவாவாகிய நானே என்பதை உன்னைச்சூழ இருக்கும் நாடுகள் அறிந்துகொள்ளும். யெகோவாவாகிய நானே இதைக் கூறினேன்; நானே இதைச் செய்வேன்.’ மத் 24:35எசேக் 17:24எசேக் 37:14எண் 23:19ஓசி 14:4-9எசேக் 22:14எசேக் 39:27-29எசேக் 24:14
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. இஸ்ரயேலின் வேண்டுதலுக்கு இன்னொருமுறையும் நான் இடமளித்து அவர்களுக்காக இதைச் செய்வேன். அவர்களுடைய மக்களைச் செம்மறியாடுகள்போல எண்ணற்றவர்களாக்குவேன். 1 யோவா 5:14எபி 10:21-22எசேக் 14:3சகரி 10:6சகரி 10:9எசேக் 20:3யாக் 4:2-3எசேக் 20:31 பண்டிகைக் காலத்தில் எருசலேமுக்குக் கொண்டுவரப்படும் பலிக்கான மந்தைகளைப்போல், அவர்கள் எண்ணற்றவர்களாயிருப்பார்கள். பாழாக்கப்பட்ட பட்டணங்கள் இவ்விதமாய் மக்கள் திரளால் நிரப்பப்படும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.” 1 இராஜா 8:63அப் 2:5-11யோவா 10:162 நாளாக 30:21-272 நாளாக 35:7-192 நாளாக 7:8உபா 16:16யாத் 23:17