எரேமியா 31

Jeremiah 31

அக்காலத்தில், “இஸ்ரயேலின் எல்லா வம்சங்களுக்கும் நான் இறைவனாயிருப்பேன், அவர்களும் என் மக்களாய் இருப்பார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். எரே 30:22ஏசா 41:10எரே 30:24சகரி 13:9ஆதி 17:7-8எரே 3:18ரோம 11:26-29எசேக் 11:20

யெகோவா கூறுவது இதுவே: எண் 10:33சங் 95:11உபா 1:33மத் 11:28ஏசா 63:7-14உபா 1:30உபா 12:9உபா 2:7

“வாளுக்குத் தப்பிய மக்கள்

பாலைவனத்தில் ஆதரவு பெறுவார்கள்.

இஸ்ரயேலுக்கு ஆறுதல் கொடுக்க நான் வருவேன்” என்கிறார்.

பூர்வகாலத்தில் யெகோவா எங்களுக்குத் தோன்றி சொன்னதாவது: சங் 103:17ஏசா 54:8-9ஓசி 11:4எபே 2:4-5உபா 33:31 யோவா 4:19உபா 7:7-92 தீமோ 1:9

“நான் உங்களை நித்திய அன்பினால் நேசித்திருக்கிறேன்;

ஆதலால், கைவிடாத தயவினால் நான் உங்களை என்னிடமாய் இழுத்திருக்கிறேன்.

இஸ்ரயேல் கன்னிகையே! எரே 33:7எரே 31:13ஆமோ 5:2அப் 15:16எரே 30:18-19வெளி 21:10-272இராஜா 19:21புலம் 2:13

நான் உன்னைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன்.

நீ திரும்பவும் கட்டப்படுவாய்;

உன் மேளவாத்தியங்களை எடுத்துக்கொண்டு

மகிழ்ச்சியுள்ளவர்களுடன் நடனத்திற்குப் போவாய்.

நீ திரும்பவும் சமாரியாவின் ஆமோ 9:14உபா 28:30ஏசா 65:21-22லேவி 19:23-25மீகா 4:41 சாமு 21:5உபா 20:6எசேக் 36:8

மலைகளில் திராட்சைத் தோட்டங்களை நாட்டுவாய்.

விவசாயிகள் அவைகளை நாட்டி

அவைகளின் பலனை அனுபவிப்பார்கள்.

ஒரு நாள் வரும்; எரே 50:4-5ஏசா 2:2-4ஏசா 52:7-8எரே 50:19மீகா 4:1-3சகரி 8:20-232 நாளாக 13:42 நாளாக 30:5-11

அந்நாளில், ‘சீயோனில் நம்முடைய இறைவனாகிய யெகோவாவிடத்தில் ஏறிப்போவோம் வாருங்கள்’

என்று எப்பிராயீம் மலைகளிலுள்ள

காவலாளிகள் சத்தமிட்டுக் கூறுவார்கள்” என்று சொல்லியிருந்தார்.

இப்பொழுது யெகோவா கூறுவது இதுவே: சங் 28:9ஏசா 37:31சங் 14:7ஏசா 42:10-12எரே 23:3ஆமோ 5:15உபா 28:13உபா 32:43

“யாக்கோபுக்காக மகிழ்ச்சியுடன் பாடுங்கள்.

நாடுகளின் முதன்மையானவர்களுக்காகச் சத்தமிடுங்கள்;

உங்கள் துதிகளைக் கேட்கப்பண்ணுங்கள்.

‘யெகோவாவே இஸ்ரயேலில் மீதியாயிருக்கிற

உமது மக்களைக் காப்பாற்றும்’ என்று சொல்லுங்கள்.

இதோ நான் அவர்களை வடநாட்டிலிருந்து கொண்டுவருவேன்; எசேக் 34:16ஏசா 42:16எரே 23:8மீகா 4:6எசேக் 34:13எபி 12:12ஏசா 40:11எரே 3:18

பூமியின் கடைசி எல்லையிலிருந்து அவர்களைக் கூட்டிச்சேர்ப்பேன்.

குருடரும், முடவரும், கர்ப்பவதிகளும்,

பிரசவிக்கும் பெண்களும் அவர்களிடையே இருப்பார்கள்.

இவ்வாறாக ஒரு மக்கள் கூட்டம் திரும்பிவரும்.

நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவருகையில் அவர்கள் அழுகையுடனும், யாத் 4:22எரே 3:4எரே 31:20எரே 50:4மத் 5:4ஏசா 64:8எரே 3:191 நாளாக 29:10

மன்றாட்டுடனும் வருவார்கள்.

நான் அவர்களை இடறாத சமமான பாதையில்,

நீரோடைகள் அருகே வழிநடத்திக் கொண்டுசெல்வேன்.

ஏனெனில் நான் இஸ்ரயேலின் தகப்பன்;

எப்பிராயீம் என் முதற்பேறான மகன்.

“நாடுகளே யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; ஏசா 40:11எசேக் 34:12உபா 30:4ஏசா 66:19யோவா 11:52அப் 20:28-29எசேக் 11:16யோவா 10:27

தூரமான கரையோரங்களில் அதைப் பிரசித்தப்படுத்துங்கள்.

‘இஸ்ரயேலைச் சிதறடித்தவர் அவர்களைக் கூட்டிச்சேர்த்து,

ஒரு மேய்ப்பன் தன் மந்தையை கண்காணிப்பதுபோல் அவர்களை கண்காணிப்பார்.’

யெகோவா யாக்கோபை விடுவிப்பார். ஏசா 44:23ஏசா 48:20தீத் 2:14ஏசா 49:24எரே 15:21சங் 142:6லூக் 11:21-22மத் 12:29

அவர்களிலும் பலவான்களுடைய கையிலிருந்து அவர்களை மீட்பார்.

அவர்கள் வந்து, சீயோன் மலை உச்சியிலிருந்து ஏசா 35:10ஏசா 58:11யோவே 3:18ஏசா 60:20ஏசா 65:19யோவா 16:22எசேக் 17:23எரே 33:9-11

மகிழ்ச்சியுடன் ஆரவாரிப்பார்கள்.

யெகோவாவின் நிறைவான தானியம், புதிய திராட்சரசம், எண்ணெய்,

ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் ஆகிய கொடைகளில் மகிழ்ச்சியடைவார்கள்.

அவர்கள் நன்கு நீர் பாய்ச்சப்பட்ட

தோட்டத்தைப்போல் இருப்பார்கள்.

இனி ஒருபோதும் துக்கமடையமாட்டார்கள்.

அப்பொழுது இளம்பெண்களும், வாலிபரும், முதியோருங்கூட நடனமாடி மகிழ்வார்கள். சங் 30:11ஏசா 61:3ஏசா 51:11ஏசா 51:3எஸ்த 9:22ஏசா 60:20எரே 31:4சங் 149:3

நான் அவர்களுடைய துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.

துயரத்திற்குப் பதிலாக ஆறுதலையும்,

மகிழ்ச்சியையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன்.

ஆசாரியர்களை நிறைவான செழிப்பினால் திருப்தியாக்குவேன். எரே 31:251 பேது 2:9எரே 33:9மத் 5:6வெளி 5:10வெளி 7:16-17உன்னத 5:12 நாளாக 6:41

என் மக்கள் என் கொடைகளினால் திருப்தியடைவார்கள்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

யெகோவா கூறுவது இதுவே: மத் 2:16-18சங் 77:2எரே 40:1ஆதி 35:19ஆதி 37:35ஏசா 22:4எரே 10:20ஆதி 42:13

“ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது.

அது புலம்பலும் பெரிய அழுகையுமாய் இருக்கிறது.

ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள்.

அவர்களை இழந்ததினால்,

ஆறுதல் பெற மறுக்கிறாள்.”

யெகோவா கூறுவது இதுவே: ரூத் 2:12எபி 6:10எரே 30:3எபி 11:6எரே 33:72 நாளாக 15:7பிரச 9:7எரே 30:18

“உன் அழுகையின் குரலை அடக்கி,

கண்ணீர் விடாதபடி உன் கண்களை தடுத்துவிடு.

ஏனெனில் உன் செயலுக்கான பலன் கிடைக்கும்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“உன் பிள்ளைகள் தங்கள் பகைவரின் நாட்டிலிருந்து திரும்பி வருவார்கள்.

எனவே வருங்காலத்திற்கான நல்ல நம்பிக்கை உனக்கு உண்டு” புலம் 3:21ஓசி 3:5ஓசி 2:15எரே 29:11-16புலம் 3:18புலம் 3:26ரோம 11:23-26எசேக் 37:25

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“உன் பிள்ளைகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி வருவார்கள்.

“நான் எப்பிராயீமின் அழுகுரலை நிச்சயமாகக் கேட்டிருக்கிறேன். எரே 31:9சங் 80:3ஏசா 9:13எரே 17:14எரே 3:21-22யோபு 5:17அப் 3:26ஓசி 5:15

‘நீர் என்னை அடங்காத கன்றைப்போல் தண்டித்து பயிற்றுவித்தீர்.

நான் பயிற்றுவிக்கப்பட்டேன்.

என்னைப் புதுப்பியும், நான் திரும்பிவருவேன்.

ஏனெனில், நீரே என் இறைவனாகிய யெகோவா.

நான் வழிதவறிப் போனபின், எசேக் 36:31எரே 3:25எசேக் 21:12லூக் 18:13உபா 30:22 கொரி 7:10-11எபே 2:3-5எஸ்றா 9:6

மனந்திரும்பினேன்.

எனக்கு விளங்கும் ஆற்றல் வந்தபின்,

என் மார்பில் 1 அடித்துக்கொண்டேன்.

என் வாலிபத்தின் நிந்தையைச் சுமந்ததினால்,

நான் வெட்கப்பட்டு சிறுமைப்பட்டேன்.’

எப்பிராயீம் என் அன்பு மகனும், ஏசா 55:7மீகா 7:18-19ஏசா 63:15நியாயாதி 10:16புலம் 3:31-32சங் 103:13ஓசி 14:4லூக் 15:24

நான் மகிழும் பிள்ளையும் அல்லவா?

அவனுக்கு விரோதமாக நான் அடிக்கடி பேசினாலும்,

இன்னும் அவனை நினைவுகூருகிறேன்.

ஆகையினால் என் உள்ளம் அவனுக்காக ஏங்குகிறது.

நான் அவன்மேல் அதிக இரக்கமாயிருக்கிறேன்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“வீதியில் அடையாளச் சின்னங்களை நிறுத்திவை. எரே 50:5ஏசா 62:10எசேக் 40:4ஆகா 1:5ஏசா 48:20ஏசா 52:11-12ஏசா 57:14எரே 3:14

வழிகாட்டிக் கம்பங்களையும் அமைத்துக்கொள்.

நீ நடந்துவருகிற வீதியான

பெரும் பாதையையும் குறித்துவை.

இஸ்ரயேல் கன்னிப்பெண்ணே! திரும்பி வா;

உன்னுடைய பட்டணங்களுக்குத் திரும்பி வா.

உண்மையற்ற மகளே, எரே 49:4எரே 7:24லூக் 1:34-35மத் 1:21ஓசி 11:7ஓசி 4:16ஓசி 8:5எரே 2:18

எவ்வளவு காலத்திற்கு அலைந்து திரிவாய்?

யெகோவா பூமியில் புதியதொரு காரியத்தை உண்டாக்குவார்.

ஒரு பெண் ஒரு மனிதனை பாதுகாத்துக்கொள்வாள்.”

இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “சிறையிருப்பிலிருந்த மக்களை நான் யூதா நாட்டிற்கும் அதன் பட்டணங்களுக்கும் மீண்டும் கொண்டுவருவேன். அப்போது அவர்கள்: திரும்பவும் நீதியின் குடியிருப்பே, பரிசுத்த மலையே, ‘யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்னும் வார்த்தைகளை உபயோகிப்பார்கள். சகரி 8:3ஏசா 1:26எரே 50:7ஏசா 1:21ஏசா 60:21எரே 23:5-8எரே 30:18மீகா 4:1 யூதாவிலும் அதன் பட்டணங்களிலும் வாழ்கிற விவசாயிகளும், மந்தை மேய்க்கிறவர்களுமான மக்கள் ஒன்றுசேர்ந்து வாழ்வார்கள். சகரி 8:4-8எசேக் 36:10எரே 33:11-13சகரி 2:4 நான் களைப்படைந்தவரை ஊக்குவித்து, சோர்ந்துபோனவர்களை திருப்தியாக்குவேன்.” மத் 5:6மத் 11:28சங் 107:9யோவா 4:14எரே 31:14ஏசா 50:4லூக் 1:532 கொரி 7:6

இதைக் கேட்ட நான் விழித்தெழுந்து சுற்றிப் பார்த்தேன். என்னுடைய நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது. சங் 127:2சகரி 4:1-2

“நாட்கள் வருகின்றன; நான் இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும், மனிதரின் சந்ததிகளாலும் மிருகத்தின் குட்டிகளாலும் பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா கூறுகிறார். ஓசி 2:23எசேக் 36:11எசேக் 36:9சகரி 10:9எரே 30:19 “நான் அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், கவிழ்க்கவும், அழித்து பேராபத்தைக் கொண்டுவரவும் எவ்வளவு கருத்தாய் இருந்தேனோ, அவ்வாறே அவர்களைக் கட்டவும், நாட்டவும் கருத்தாய் இருப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். எரே 24:6எரே 1:10எரே 18:7-9எரே 44:27எரே 45:4அப் 15:16தானி 9:14பிரச 3:2-3 “அந்நாட்களில் மக்கள், எசேக் 18:2-3புலம் 5:7எரே 31:30

“ ‘தந்தையர் புளித்த திராட்சைக் காய்களைத் தின்றார்கள்,

பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயிற்று’ என்று இனி ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.

ஆனால் ஒவ்வொருவனும் தன்தன் பாவத்திற்காக சாவான். புளிப்பான திராட்சைப் பழத்தைத் தின்பவன் எவனோ, அவனுடைய பற்களே கூசிப்போகும்.” எசேக் 18:20ஏசா 3:11உபா 24:16கலா 6:5எசேக் 18:4எசேக் 3:18-19எசேக் 33:18எசேக் 33:13

யெகோவா அறிவிக்கிறதாவது, எபி 10:16-17எசேக் 37:26எரே 31:31-34எரே 32:402 கொரி 3:6லூக் 22:20எபி 12:241 கொரி 11:25

“இஸ்ரயேல் குடும்பத்தோடும்

யூதா குடும்பத்தோடும்

நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது.

அது அவர்களுடைய முற்பிதாக்களை யாத் 24:6-8உபா 1:31உபா 5:3யாத் 19:5யோவா 3:29எசேக் 16:59-62எசேக் 16:8ஓசி 3:1

என்னுடைய கரத்தினால்

எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது,

நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை.

ஏனெனில், நான் அவர்கள் கணவனாயிருந்தபோதும்,

அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் 2 கொரி 3:3எபி 10:16எபி 8:10எசேக் 11:19-20எரே 24:7எரே 32:40எசேக் 36:25-27சங் 40:8

செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“நான் எனது சட்டங்களை அவர்களுடைய உள்ளங்களில் வைப்பேன்.

அதை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன்.

நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன்,

அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.

இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ, ஏசா 43:25எபி 8:121 யோவா 2:27ஏசா 54:13எரே 33:8எபி 10:17-18எரே 50:20யோவா 17:3

தன் சகோதரனுக்கோ, ‘யெகோவாவை அறிந்துகொள்’ என்று போதிக்கமாட்டான்.

ஏனெனில், அவர்களில் மிகச் சிறியவனிலிருந்து பெரியவன்வரை

எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன்.

அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.”

யெகோவா சொல்வது இதுவே: ஏசா 51:15எரே 10:16சங் 136:7-9ஆதி 1:14-18எரே 50:34உபா 4:19ஏசா 54:5மத் 5:45

பகலில் ஒளிகொடுக்க

சூரியனை நியமிக்கிறவர் அவரே.

இரவில் வெளிச்சம் கொடுக்க சந்திரனுக்கும்,

நட்சத்திரங்களுக்கும் கட்டளையிடுகிறவர் அவரே.

கடலின் அலைகள் இரையும்படி

அதைக் கலக்குகிறவரும் அவரே.

சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்.

“இந்தக் கட்டளைகள் என் பார்வையில் அகன்றுபோனால் மட்டுமே, ஏசா 54:9-10எரே 33:20-26சங் 89:36-37சங் 148:6ஆமோ 9:8-9உபா 32:26எரே 46:28சங் 102:28

இஸ்ரயேலரின் சந்ததிகள்

என்முன் ஒரு நாடாக இல்லாதபடி ஒழிந்துபோவார்கள்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

யெகோவா கூறுவது இதுவே: எரே 33:24-26ஏசா 40:12எரே 33:22ரோம 11:1-5ரோம 11:26-29எரே 46:28யோபு 11:7-9நீதி 30:4

“மேலே உள்ள வானங்களை அளக்க முடியுமானால்,

கீழேயுள்ள பூமியின் அஸ்திபாரங்களை ஆராயக் கூடுமானால் மட்டுமே,

அவர்கள் செய்திருக்கிற எல்லாவற்றிற்காகவும்

நான் இஸ்ரயேலின் வம்சத்தார் அனைவரையும் புறக்கணிப்பேன்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“நாட்கள் வருகின்றன. அப்பொழுது இந்த நகரம் அனானயேலின் கோபுரத்திலிருந்து, மூலைவாசல் வரையும் எனக்காகத் திரும்பக் கட்டப்படும் என்று யெகோவா அறிவிக்கிறார். சகரி 14:102இராஜா 14:13எரே 30:182 நாளாக 26:9எரே 31:27தானி 9:25எசேக் 48:30-35ஏசா 44:28 அந்நாட்களில் அங்கிருந்து காரேப் குன்றுக்கு நேராக அளவுநூல் பிடிக்கப்பட்டு, அதன்பின் கோவாத் பக்கமாய் திரும்பும். சகரி 2:1-2எசேக் 40:8 செத்த உடல்களும், சாம்பலும் வீசப்படும் பள்ளத்தாக்கு முழுவதும், கிழக்கிலே குதிரை வாசலின் மூலை வரையுள்ள கீதரோன் பள்ளத்தாக்குவரை இருக்கிற நிலங்கள் எல்லாமுமே யெகோவாவுக்குப் பரிசுத்தமாய் இருக்கும். அப்பட்டணம் இனி ஒருபோதும் வேரோடு பிடுங்கப்படுவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை” என்கிறார். 2 சாமு 15:23யோவே 3:172 நாளாக 23:152இராஜா 11:16யோவா 18:12இராஜா 23:122இராஜா 23:6நெகே 3:28