லேவியராகமம் 26

Leviticus 26

கீழ்ப்படிதலுக்கான வெகுமதி

“ ‘நீங்கள் விக்கிரகங்களைச் செய்யவேண்டாம். உருவச்சிலையையோ, உங்களுக்காக புனிதக் கல்லையோ அமைக்கவேண்டாம். உங்கள் நாட்டில் தலைகுனிந்து வணங்குவதற்காக ஒரு செதுக்கப்பட்ட கல்லை வைக்கக்கூடாது. நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. லேவி 19:4உபா 27:15யாத் 23:24எண் 33:52யாத் 20:4-51 கொரி 10:19-20வெளி 13:14-15உபா 16:21-22

“ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா. லேவி 19:30

“ ‘நீங்கள் என் விதிமுறைகளைப் பின்பற்றி, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருந்தால், உபா 28:1-14ஏசா 1:19உபா 11:13-15ஏசா 48:18-19சங் 81:12-16நியாயாதி 2:1-2மத் 7:24-25ரோம 2:7-10 மழையை அதன் பருவகாலத்தில் அனுப்புவேன். பூமி தனது விளைச்சலையும், வயல்களின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும். சகரி 8:12சங் 67:6ஏசா 30:23உபா 11:14உபா 28:12எசேக் 34:26-27எசேக் 36:30யோபு 5:10 உங்கள் சூடுமிதிக்கும் காலம், திராட்சைப்பழம் பறிக்குங்காலம்வரை நீடிக்கும். திராட்சைப்பழம் பறிக்குங்காலம், நடுகைக்காலம்வரை நீடிக்கும். ஆகையால் நீங்கள் விரும்பிய எல்லா உணவையும் சாப்பிட்டு உங்கள் நாட்டிலே பாதுகாப்புடன் வாழ்வீர்கள். ஆமோ 9:13யோவே 2:26யோவே 2:19லேவி 25:18-19உபா 11:151 தீமோ 6:17எசேக் 34:25-28நீதி 1:33

“ ‘நாட்டில் சமாதானத்தைத் தருவேன். நீங்கள் பயமில்லாமல் படுத்திருப்பீர்கள். உங்களை ஒருவரும் பயமுறுத்தமாட்டார்கள். நாட்டிலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்திவிடுவேன். உங்கள் நாட்டை வாள் கடந்துவராது. ஏசா 35:9செப்ப 3:13சங் 147:14ஓசி 2:18எரே 30:10எசேக் 34:25ஆகா 2:9சங் 29:11 நீங்கள் உங்கள் பகைவர்களைப் பின்தொடர்ந்து துரத்துவீர்கள். அவர்கள் உங்கள் முன்பாக வாளால் வெட்டுண்டு விழுவார்கள். உங்களில் ஐந்துபேர், நூறுபேரைத் துரத்துவீர்கள். நூறுபேர், பத்தாயிரம்பேரைத் துரத்துவீர்கள். இவ்விதம் உங்கள் பகைவர்கள் வாளினால் உங்கள்முன் விழுவார்கள். யோசு 23:10உபா 28:7உபா 32:301 நாளாக 11:20நியாயாதி 7:19-21எண் 14:91 சாமு 14:6-161 நாளாக 11:11

“ ‘நான் உங்களைத் தயவுடன் பார்த்து, உங்களை வளம்பெறச்செய்து பலுகிப் பெருகப்பண்ணுவேன். நான் உங்களோடு பண்ணின உடன்படிக்கையைக் காத்துக்கொள்வேன். ஆதி 17:6-7நெகே 9:23சங் 107:38எசேக் 16:62ஏசா 55:3ஆதி 28:3சங் 138:6-7உபா 28:11 நீங்கள் இன்னும் கடந்த வருட விளைச்சலைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே புதிய விளைச்சலுக்கு இடம் ஒதுக்கும்படியாக பழையதை அகற்றவேண்டியதாயிருக்கும். லேவி 25:222இராஜா 19:29லூக் 12:17யோசு 5:11 நான் என் வசிப்பிடத்தை உங்கள் மத்தியில் வைப்பேன். உங்களைப் புறக்கணிக்கமாட்டேன். யாத் 25:8வெளி 21:3யாத் 29:45சங் 132:13-14எபே 2:22சங் 106:40சங் 76:2எசேக் 37:26-28 நான் உங்கள் மத்தியில் நடந்து, உங்கள் இறைவனாயிருப்பேன். நீங்களும் என் மக்களாயிருப்பீர்கள். 2 கொரி 6:16எரே 30:22எரே 7:23யாத் 6:7உபா 23:14யோவே 2:27எபி 11:16யாத் 19:5-6 இனிமேலும் நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. உங்கள் நுகத்தின் தடிகளை முறித்து உங்களைத் தலைநிமிர்ந்து நடக்கும்படிச் செய்தேன். எசேக் 34:27சங் 116:161 கொரி 6:19-20யாத் 20:2லேவி 25:38எரே 2:20லேவி 25:55சங் 81:6-10

கீழ்ப்படியாமைக்கான தண்டனை

“ ‘ஆனால் நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்த எல்லா கட்டளைகளையும் கைக்கொள்ளாமலும், உபா 28:15-68புலம் 2:17லேவி 26:18எரே 17:27மல்கி 2:2அப் 3:23எபி 12:25புலம் 1:18 என் விதிமுறைகளைப் புறக்கணித்து, என் சட்டங்களை வெறுத்து, என் கட்டளைகள் எல்லாவற்றையும் செய்யத்தவறி, என் உடன்படிக்கையை மீறுவீர்களானால், 2இராஜா 17:15உபா 31:16எசேக் 16:59ஏசா 24:5எரே 11:10எண் 15:31சகரி 7:11-131 தெச 4:8 அப்பொழுது நான் உங்களுக்குச் செய்வதாவது: உங்கள்மேல் திடீர் பயங்கரத்தையும் அழிக்கும் வியாதிகளையும் கொண்டுவருவேன். உங்கள் கண் பார்வையை அற்றுப்போகச்செய்து, உங்கள் உயிரைக் குடிக்கும் காய்ச்சலையும் கொண்டுவருவேன். நீங்கள் தானியத்தை வீணாகவே விதைப்பீர்கள். ஏனெனில், உங்கள் பகைவர்களே அதைச் சாப்பிடுவார்கள். யோபு 31:8எரே 5:17மீகா 6:151 சாமு 2:33உபா 28:21-22உபா 28:32-35உபா 28:51ஆகா 1:6 நான் என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அப்பொழுது நீங்கள் உங்கள் பகைவர்களால் தோற்கடிக்கப்படுவீர்கள். உங்களை வெறுக்கிறவர்கள் உங்களை ஆளுவார்கள். ஒருவரும் உங்களைத் துரத்தாமலே நீங்கள் பயந்து ஓடுவீர்கள். லேவி 17:10உபா 28:25லேவி 26:36-37நீதி 28:1சங் 53:5சங் 106:41-421 சாமு 31:1நியாயாதி 2:14

“ ‘இவைகளெல்லாம் நடந்த பின்பும் நீங்கள் எனக்குச் செவிகொடாமற்போனால், நான் உங்களை உங்கள் பாவத்தின் நிமித்தம் ஏழுமடங்கு அதிகமாகத் தண்டிப்பேன். லேவி 26:211 சாமு 2:5லேவி 26:24லேவி 26:28தானி 3:19நீதி 24:16சங் 119:164 உங்கள் பிடிவாதமான பெருமையை உடைப்பேன். உங்கள் மேலிருக்கும் வானத்தை இரும்பைப்போலவும், கீழிருக்கும் நிலத்தை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன். உபா 28:231 இராஜா 17:1ஏசா 25:111 சாமு 4:11தானி 4:37எசேக் 30:6எரே 13:9எரே 14:1-6 உங்கள் பெலன் வீணாகப் போகும். ஏனெனில், உங்கள் மண், விளைச்சலைக் கொடுக்காது. உங்கள் நாட்டின் மரங்கள் பழங்களைக் கொடுக்காது. உபா 11:17சங் 127:1ஏசா 49:4ஆப 2:13லேவி 26:41 கொரி 3:6உபா 28:18உபா 28:38-40

“ ‘நீங்கள் என்னுடன் பகைமை பாராட்டி, தொடர்ந்து எனக்குச் செவிகொடுக்க மறுத்தால், உங்கள் பாவத்திற்குத்தக்கதாக உங்கள் வாதைகளை ஏழுமடங்காக அதிகரிப்பேன். லேவி 26:18லேவி 26:27 காட்டு மிருகங்களை உங்களுக்கு எதிராக அனுப்புவேன். அவை உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து கொள்ளையிட்டு, உங்கள் மந்தைகளை அழிக்கும். அவை உங்கள் எண்ணிக்கையை வெகுவாய்க் குறைக்கும். அப்பொழுது உங்கள் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கும். உபா 32:24எசேக் 14:15நியாயாதி 5:6சகரி 7:142 நாளாக 15:52இராஜா 17:25எசேக் 5:17ஏசா 33:8

“ ‘இப்படியிருக்க, நீங்கள் என் கண்டிப்பை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து என்னுடன் பகைமை பாராட்டினால், எரே 2:30எரே 5:3ஆமோ 4:6-12எசேக் 24:13-14ஏசா 1:16-20லேவி 26:21 நானும் உங்களுடன் பகைமை பாராட்டி, உங்கள் பாவத்திற்காக உங்களை ஏழுமடங்காகத் துன்புறுத்துவேன். சங் 18:262 சாமு 22:27ஏசா 63:10யோபு 9:4 என்னுடைய உடன்படிக்கையை நீங்கள் மீறினதினால் உங்களைப் பழிவாங்குவதற்காக வாளை உங்கள்மேல் வரப்பண்ணுவேன். நீங்கள் உங்கள் பட்டணத்திற்குள் பின்வாங்கும்போது உங்களுக்குள் கொள்ளைநோயை அனுப்புவேன். நீங்கள் உங்கள் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். எசேக் 5:17எண் 14:12உபா 28:21உபா 32:25எசேக் 14:17எசேக் 20:37எசேக் 29:8எசேக் 33:2 உங்களுக்கு அன்றாடம் கிடைக்கும் உணவை அகற்றிப்போடுவேன். அப்பொழுது பத்துப் பெண்கள் உங்களுக்கான அப்பத்தை ஒரே அடுப்பிலேயே சுடக்கூடியதாய் இருக்கும். அவர்கள் அப்பத்தை நிறைப்படி பங்கிட்டுக் கொஞ்சமாகக் கொடுப்பார்கள். நீங்கள் சாப்பிடுவீர்கள். ஆனால் திருப்தியடையமாட்டீர்கள். மீகா 6:14ஏசா 3:1சங் 105:16எசேக் 5:16எசேக் 14:13எசேக் 4:16ஆகா 1:6ஏசா 9:20

“ ‘இது இப்படியிருந்தும், நீங்கள் இன்னும் எனக்குச் செவிகொடுக்காமல் தொடர்ந்து என்னுடன் பகைமை பாராட்டினால், லேவி 26:21லேவி 26:24 அப்பொழுது நானும் என் கோபத்தில் உங்களுடன் பகைமை பாராட்டி, உங்கள் பாவத்திற்காக ஏழுமடங்கு நானே உங்களைத் தண்டிப்பேன். எசேக் 5:13எசேக் 5:15எசேக் 8:18ஏசா 59:18எரே 21:5ஏசா 63:3ஏசா 66:15ஏசா 27:4 நீங்கள் உங்கள் மகன்களுடைய, மகள்களுடைய சதையைச் சாப்பிடுவீர்கள். உபா 28:53-57எசேக் 5:10புலம் 4:10மத் 24:192இராஜா 6:28-29எரே 19:9புலம் 2:20லூக் 23:29 உங்கள் மேடைகளை நான் அழித்து, உங்கள் தூபபீடங்களை இடித்து, உங்கள் இறந்த உடல்களை அச்சிலைகளின் உயிரற்ற உருவங்களின்மேல் வைப்பேன். உங்களை நான் அருவருப்பேன். 2இராஜா 23:20எசேக் 6:13எசேக் 6:3-6ஏசா 27:92 நாளாக 34:3-71 இராஜா 13:22 நாளாக 14:3-52 நாளாக 23:17 உங்கள் பட்டணங்களை இடிபாடுகளாக்குவேன். உங்கள் பரிசுத்த இடங்களைப் பாழாக்கிப்போடுவேன். உங்கள் காணிக்கைகளின் மகிழ்ச்சியூட்டும் நறுமணத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன். நெகே 2:32இராஜா 25:4-10ஆமோ 5:21-23எசேக் 9:6ஆதி 8:21எபி 10:26ஏசா 1:11-14எரே 4:7 நான் உங்கள் நாட்டை பாழாக்கிப்போடுவேன். அப்பொழுது அங்கு வாழும் உங்கள் பகைவர்கள் திகைப்படைவார்கள். எரே 9:11எரே 18:16எரே 19:8எரே 25:111 இராஜா 9:8உபா 28:37எசேக் 5:15எரே 25:18 நாடுகளுக்குள் உங்களை சிதறப்பண்ணி, என் வாளை உருவி உங்களைப் பின்தொடர்ந்து துரத்துவேன். உங்கள் நாடு பாழாக்கப்படும். பட்டணங்களும் இடிபாடுகளாய்க் கிடக்கும். உபா 4:27எசேக் 20:23சகரி 7:14உபா 28:64-66எசேக் 22:15சங் 44:11எசேக் 12:14-16எரே 9:16 நீங்கள் உங்கள் பகைவருடைய நாட்டில் இருக்கையில், நாடு பாழாய்க்கிடக்கும். காலமெல்லாம் அது தன் ஓய்வு வருடங்களை அனுபவிக்கும். அப்பொழுது நாடு ஓய்ந்திருந்து, தனது ஓய்வுநாட்களைக் கொண்டாடும். 2 நாளாக 36:21லேவி 25:2-4லேவி 26:43லேவி 25:10 நாடு பாழாய்க்கிடக்கும் காலமெல்லாம் முன்பு நீங்கள் அதில் வாழ்ந்தபோது, நாடு பெற்றுக்கொள்ளாத ஓய்வு அது இப்பொழுது பெற்றுக்கொள்ளும். ஏசா 24:5-6ரோம 8:22

“ ‘உங்களில் மீதமிருப்போரைக் குறித்தோவெனில், அவர்களுடைய பகைவர்களின் நாடுகளில், அவர்களுடைய இருதயங்களைப் பயம் நிறைந்ததாக்குவேன். அப்பொழுது காற்றினால் அடிக்கப்படும் ஒரு இலையின் சத்தங்கூட அவர்களைப் பயந்தோடப்பண்ணும். அவர்கள் வாளுக்குத் தப்பி ஓடுகிறவர்கள்போல் ஓடுவார்கள். அவர்களை ஒருவரும் துரத்தாதபோதும் அவர்கள் விழுவார்கள். எசேக் 21:7ஏசா 30:17லேவி 26:171 சாமு 17:242 நாளாக 14:142இராஜா 7:6-7உபா 28:65-67எசேக் 21:12 அவர்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் வாளுக்குத் தப்பி ஓடுகிறவர்களைப்போல் ஓடி, ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள். இப்படியாக உங்களுக்கு உங்கள் பகைவர்களை எதிர்த்துநிற்க முடியாதிருக்கும். நியாயாதி 2:14யோசு 7:12-131 சாமு 14:15-16ஏசா 10:4நியாயாதி 7:22எரே 37:10எண் 14:42 நீங்கள் நாடுகளுக்குள் அழிந்துபோவீர்கள். உங்கள் பகைவர்களின் நாடு உங்களை விழுங்கும். உபா 28:48உபா 28:68உபா 4:26-27ஏசா 27:13எரே 42:17-18எரே 42:22எரே 44:12-14எரே 44:27-28 உங்களில் மீதமுள்ளவர்கள் தங்கள் பாவத்திற்காகவும், தங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காகவும் தங்கள் பகைவர்களின் நாட்டில் உருக்குலைந்து போவார்கள். எசேக் 4:17எசேக் 24:23எசேக் 33:10உபா 28:65யாத் 20:5எசேக் 6:9மத் 23:35-36உபா 30:1

“ ‘எனவே அவர்கள் அவர்களுடைய பாவத்தையும், தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அவர்களின் எனக்கெதிரான துரோகங்களையும், என்னுடனிருந்த பகைமையையும் அறிக்கையிடுவார்கள், நீதி 28:131 யோவா 1:8-10நெகே 9:2-5ஓசி 5:15எண் 5:71 இராஜா 8:33-36உபா 30:1-31 இராஜா 8:47 கடைசியாக நான் என் கோபத்தினால் அவர்களை அவர்களுடைய பகைவர்களின் நாடுகளுக்குக் கொண்டுவரும்போது, அவர்களின் விருத்தசேதனம் செய்யப்படாத இருதயங்கள் தாழ்த்தப்பட்டு, அவர்களின் பாவங்களுக்கு அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். 2 நாளாக 12:6-7அப் 7:51எசேக் 44:71 இராஜா 21:29எரே 4:4எரே 9:25-262 நாளாக 32:26கொலோ 2:11 அப்பொழுது நான் யாக்கோபுடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், நினைவுகூருவேன். நாட்டையும் நான் நினைவுகூருவேன். யாத் 2:24யாத் 6:5எசேக் 16:60சங் 106:45சங் 136:23உபா 4:31எசேக் 36:1-15எசேக் 36:33-34 நாடு அவர்களால் கைவிடப்பட்டு, அவர்கள் யாரும் இல்லாமல் பாழாய்க் கிடக்கும்போது அது தன் ஓய்வை கொண்டாடும். ஆனால் அவர்கள் என்னுடைய சட்டங்களைப் புறக்கணித்து, என் கட்டளைகளை வெறுத்தால், தங்கள் பாவத்திற்கான தண்டனையை அனுபவிப்பார்கள். லேவி 26:15லேவி 26:34-35ரோம 8:71 இராஜா 8:46-482 நாளாக 33:122 நாளாக 36:14-162இராஜா 17:7-17ஆமோ 5:10 இப்படியெல்லாமிருந்தும், தங்கள் பகைவர்களின் நாட்டில் அவர்கள் வாழும்போது, அவர்களுடனான என் உடன்படிக்கையை அவர்கள் உடைத்தாலும், நான் அவர்களை முற்றிலும் புறக்கணிக்கவோ, அவர்களை முற்றிலும் அழிக்கும்படி வெறுக்கவோமாட்டேன். ஏனெனில், அவர்களின் இறைவனாகிய யெகோவா நானே. ரோம 11:22இராஜா 13:23உபா 4:29-31நெகே 9:31சங் 94:14எசேக் 14:22-23எசேக் 16:60எரே 14:21 நான் அவர்களுக்கு இறைவனாயிருக்கும்படி, நாடுகளுக்கு முன்பாக எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த அவர்களின் முன்னோர்களோடு, நான் பண்ணின உடன்படிக்கையை, அவர்களுக்காக நினைவுகூருவேன். நானே யெகோவா’ என்றார்.” லேவி 25:38எசேக் 20:22எசேக் 20:9லேவி 22:33சங் 98:2-3எசேக் 20:14ரோம 11:28-292 கொரி 3:15-16

சீனாய் மலையில் யெகோவா தமக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் மோசேயின் மூலம் ஏற்படுத்திய விதிமுறைகளும், சட்டங்களும், ஒழுங்குவிதிகளும் இவையே. லேவி 27:34உபா 12:1உபா 6:1உபா 13:4லேவி 25:1யோவா 1:17லேவி 7:38லேவி 8:36