இயேசு சோதிக்கப்படுதல்
அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார். எபி 2:18லூக் 4:1-13மாற் 1:12-15எபி 4:15-16ரோம 8:14எசேக் 43:5யோவா 14:30எசேக் 3:14 இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின், பசியாயிருந்தார். உபா 9:18யாத் 34:281 இராஜா 19:8லூக் 4:2உபா 9:9உபா 9:25யாத் 24:18உபா 18:18 சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து, “நீர் இறைவனின் மகன் என்றால், இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும்” என்றான். 1 தெச 3:5ஆதி 3:1-5எண் 11:4-6லூக் 22:31-32வெளி 2:10சங் 78:17-20ஆதி 25:29-34யோபு 1:9-12
அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” 1 எனப் பதிலளித்தார். உபா 8:3லூக் 4:4யோவா 6:63யோவா 6:31-59ரோம 15:4எபே 6:17யாத் 16:15லூக் 4:8
பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான். லூக் 4:9மத் 27:53வெளி 11:2ஏசா 48:2தானி 9:16தானி 9:24ஏசா 52:1யோவா 19:11 அவன், “நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும். ஏனெனில்: சங் 91:11-12எபி 1:14சங் 34:72 கொரி 11:14சங் 34:20மத் 4:4யோபு 5:23யோபு 1:10
“ ‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்.
உமது கால்கள் கல்லில் மோதாதபடி,
அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் 2 என்று எழுதியிருக்கிறதே,’ ”
என்றான்.
அதற்கு இயேசு, “உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே” 3 எனப் பதிலளித்தார். உபா 6:161 கொரி 10:9சங் 78:41சங் 78:18எபி 3:9யாத் 17:2யாத் 17:7அப் 5:9
மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான். 1 யோவா 2:15-16வெளி 11:15லூக் 4:5-7மத் 16:26சங் 49:16-171 பேது 1:24எபி 11:24-26தானி 4:30 “நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.” 2 கொரி 4:4தானி 5:18-19யோவா 16:11வெளி 19:10வெளி 22:8-91 கொரி 10:20-21சங் 72:111 சாமு 2:7-8
இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ ” என்றும் எழுதியிருக்கிறது 4 என்று சொன்னார். உபா 6:13-14உபா 10:20யோசு 24:14லூக் 4:81 சாமு 7:3யாக் 4:7மத் 16:231 பேது 5:9
அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள். மத் 26:53லூக் 22:43எபி 1:14லூக் 4:13வெளி 5:11-12எபி 1:6லூக் 22:53மத் 28:2-5
இயேசு பிரசங்கிக்க ஆரம்பித்தல்
யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார். மாற் 1:14லூக் 3:20மத் 14:3லூக் 4:14யோவா 3:24மாற் 6:17யோவா 4:43யோவா 4:54 அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது. யோவா 4:46மாற் 1:21மத் 11:23யோவா 6:24யோவா 6:59யோவா 2:12யோவா 6:17யோசு 19:10-16 இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்: ஏசா 9:1-2மத் 2:23லூக் 24:44லூக் 22:37மத் 12:17-21மத் 2:15யோவா 15:25யோவா 19:28
“செபுலோன் நாடே, நப்தலி நாடே, ஏசா 9:1யோசு 21:322இராஜா 15:291 இராஜா 9:11யோசு 20:7
யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே,
யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே,
இருளில் வாழும் மக்கள் ஏசா 9:2ஏசா 42:6-7லூக் 1:78-79ஏசா 60:1-3மீகா 7:8லூக் 2:32சங் 107:10-14ஆமோ 5:8
பேரொளியைக் கண்டார்கள்;
மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல்
வெளிச்சம் பிரகாசித்தது,” 5
என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். மத் 3:2அப் 2:38மாற் 1:14-15லூக் 5:32லூக் 24:47அப் 17:30அப் 26:20லூக் 15:7
இயேசு முதல் சீடர்களை அழைத்தல்
இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். யோவா 1:40-42மத் 10:2மாற் 1:16-20லூக் 6:14லூக் 5:1-11மத் 16:181 கொரி 1:27-29யோவா 21:1 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார். மாற் 1:17-18யோவா 12:26மத் 16:24லூக் 9:59யோவா 1:43யோவா 21:22லூக் 5:27மாற் 2:14 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். மாற் 10:28-31மத் 19:271 இராஜா 19:21லூக் 18:28-30சங் 119:60கலா 1:16மத் 10:37
இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார். மத் 10:2மாற் 1:19-20மாற் 3:17அப் 12:2யோவா 21:2லூக் 5:10-11மத் 17:1மத் 20:20-21 உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். மத் 10:37உபா 33:9-10லூக் 14:26லூக் 9:59-60மாற் 1:202 கொரி 5:16லூக் 14:33
இயேசு நோயாளிகளைக் குணமாக்குதல்
இயேசு கலிலேயா முழுவதும் சென்று, யூதரின் ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார், மக்களுக்கு இருந்த எல்லா விதமான வியாதிகளையும் நோய்களையும் குணமாக்கினார். மத் 9:35மாற் 1:39லூக் 7:22அப் 10:38மத் 11:5லூக் 4:15-18மத் 13:54மத் 24:14 இயேசுவைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வேதனையுற்ற நோயாளிகளையும், தீய ஆவி பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்களைக் குணமாக்கினார். மத் 17:15மத் 8:6லூக் 2:2லூக் 5:15மத் 12:22மத் 15:22மத் 17:18அப் 10:38 கலிலேயா, தெக்கப்போலி 6 எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுபக்கத்திலுமிருந்து பெருந்திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். லூக் 6:17மாற் 5:20மாற் 3:7-8மாற் 7:31லூக் 6:19மத் 12:15மத் 19:2மத் 5:1