ஒபதியாவின் தரிசனம்
ஒபதியாவின் தரிசனம். ஆமோ 1:11-12யோவே 3:19எசேக் 25:12-14எசேக் 35:3-15ஏசா 63:1-6மல்கி 1:3-4சங் 137:7எரே 6:4-5
யெகோவாவாகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்:
“எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம் செய்ய வாருங்கள்”
என்று ஜனங்களிடம் சொல்லுவதற்காக
ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான்,
என்ற செய்தியை யெகோவா சொல்லக்கேட்டோம்.
“இதோ, நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதாக்குவேன்; ஏசா 23:9எண் 24:18லூக் 1:51-52யோபு 34:25-29மீகா 7:101 சாமு 2:7-8எசேக் 29:15சங் 107:39-40
நீ முற்றிலும் அவமதிக்கப்படுவாய்.
கற்பாறை பிளவுகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, ஏசா 14:13-15நீதி 29:23எரே 49:162இராஜா 14:7ஏசா 16:6ஏசா 47:7-8மல்கி 1:4நீதி 16:18
‘என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்?’ என்று
உன் இருதயத்தில் சொல்லுகிறவனே,
உன் இருதயத்தின் அகந்தை
உன்னை மோசம்போக்குகிறது.
நீ கழுகைப்போல உயரப்போனாலும், ஆமோ 9:2ஆப 2:9ஏசா 14:12-15யோபு 20:6-7எரே 49:16எரே 51:53யோபு 39:27-28
நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும்,
அங்கிருந்தும் நான் உன்னைக் கீழே விழத்தள்ளுவேன்” என்று
யெகோவா அறிவிக்கிறார்.
“நீ எவ்வளவாய்ச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! உபா 24:21எரே 49:92 சாமு 1:19ஏசா 17:6புலம் 1:1ஏசா 14:12ஏசா 24:13எரே 50:23
திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும்
உன்னிடத்தில் வந்தால்,
தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ?
திராட்சைப் பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால்,
சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?
ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் ஆராய்ந்தெடுக்கப்பட்டது; எரே 49:10தானி 2:22மத் 6:19-20சங் 139:1ஏசா 10:13-14ஏசா 45:3எரே 50:37
அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாய் சூறையாடப்பட்டது.
உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் சங் 41:9யோவா 13:18எரே 30:14எரே 49:7எசேக் 23:22-25ஓசி 13:13ஏசா 19:11-14ஏசா 27:11
உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்;
உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி,
உன்னை மேற்கொண்டார்கள்;
உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள்,
ஆனால் நீ அதைக் கண்டுகொள்ளமாட்டாய்.
“அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசா 29:14யோபு 5:12-14சங் 33:10ஏசா 19:13-14ஏசா 19:31 கொரி 3:19-20
ஏசாவின் மலைமேலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன்,
என்று யெகோவா சொல்லுகிறார்.
தேமானே, ஏசாவின் மலைமேலுள்ள மனுஷர் யாவரும் எசேக் 25:13ஆமோ 1:12ஏசா 63:1-3ஆதி 36:11ஏசா 34:5-8எரே 49:22எரே 49:7யோபு 2:11
கொலையினால் சங்கரிக்கப்படும்படி
உன் வலிமைமிக்க வீரர்கள் கலங்குவார்கள்.
நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம், ஆமோ 1:11ஆதி 27:41மல்கி 1:3-4எசேக் 35:9சங் 137:7சங் 89:45எசேக் 25:12-14எசேக் 35:5-7
வெட்கம் உன்னை மூடும்;
நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப் போவாய்.
நீ எதிர்த்து நின்ற நாளிலும், சங் 137:7யோவே 3:3நாகூ 3:10சங் 50:182இராஜா 25:11எரே 52:28-302இராஜா 24:10-16
பிறநாட்டார் அவன் சேனையைச் சிறைப்பிடித்துப்போன நாளிலும்,
வெளிநாட்டார் அவன் வாசல்களுக்குள் புகுந்து,
எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில்,
நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய்.
உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீதி 17:5எசேக் 35:15மீகா 4:111 சாமு 2:3மத் 27:40-43நீதி 24:17-182 பேது 2:18எசேக் 25:6-7
நீ பிரியத்தோடே பாராமலும்,
யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும்,
அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே
நீ பெருமையாய்ப் பேசாமலும்
இருக்கவேண்டியதாயிருந்தது.
என் ஜனத்தின் ஆபத்துநாளிலே எசேக் 35:5சகரி 1:152 சாமு 16:12எசேக் 35:10சங் 22:17
நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும்,
அவர்கள் ஆபத்துநாளிலே
அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும்,
அவர்கள் ஆபத்துநாளிலே
அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும்,
அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி ஆமோ 1:6ஆமோ 1:9ஆதி 35:3ஏசா 37:3எரே 30:7ஒபதி 1:12சங் 31:8
வழிச்சந்திகளிலே நிற்காமலும்,
இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக்
காட்டிக்கொடாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
“எல்லா நாடுகளுக்கும் விரோதமான நாளாகிய யாக் 2:13ஆப 2:8மத் 7:2எசேக் 30:3நியாயாதி 1:7எரே 49:12எரே 50:29யோவே 3:11-14
யெகோவாவினுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது;
நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்;
உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே யோவே 3:17எரே 49:12ஏசா 51:22-23எரே 25:15-161 பேது 4:17ஆப 1:9ஏசா 29:7-8ஏசா 49:25-26
எல்லா நாடுகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்;
அவர்கள் குடித்துக்கொண்டே இருப்பார்கள்,
குடித்து மயங்கியிருப்பார்கள்.
ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பார் உண்டு, ஆமோ 9:11-15வெளி 21:27ஏசா 14:1-2யோவே 3:19-21ஆமோ 9:8யோவே 2:32ஏசா 60:21யோவே 3:17
அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்;
யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய உரிமைச்சொத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், சகரி 12:6ஏசா 10:17எசேக் 37:19மீகா 5:8ஏசா 5:241 கொரி 3:122 சாமு 19:20ஆமோ 5:15
யோசேப்பு வம்சத்தார் அக்கினிஜூவாலையுமாய் இருப்பார்கள்;
ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்;
அவர்கள் இவர்களைக் கொளுத்தி,
ஏசாவின் வம்சத்தில்
மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்.”
யெகோவா இதைச் சொன்னார்.
நெகேவில் இருப்பவர்கள் ஏசாவின் மலையையும், ஆமோ 9:12எரே 32:44செப்ப 2:4-7எசேக் 36:28எசேக் 37:21-25எரே 31:4-6மல்கி 1:4-51 நாளாக 5:26
செபேலாவைச் சேர்ந்தவர்கள் பெலிஸ்தரின் நாட்டையும்
சுதந்தரித்துக்கொள்வார்கள்;
அவர்கள் எப்பிராயீமிம், சமாரியா நாடுகளையும்
சுதந்தரித்துக்கொள்வார்கள்;
பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
சாரெபாத்வரை கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன 1 இராஜா 17:9-10லூக் 4:26எரே 32:44எரே 33:13ஆமோ 9:14-15எசேக் 34:12-13ஓசி 1:10-11எரே 13:19
இஸ்ரயேல் புத்திரராகிய இந்தச் சேனையும்,
சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும்
நெகேவின் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
ஏசாவின் மலையை ஆள்வதற்காக சகரி 14:9யாக் 5:20தானி 7:27வெளி 11:151 தீமோ 4:16ஏசா 19:20சங் 22:281 கொரி 6:2-3
இரட்சகர்கள் சீயோன் மலையில் வந்தேறுவார்கள்;
அப்பொழுது அரசாட்சி யெகோவாவினுடையதாய் இருக்கும்.