சங்கீதங்கள் 89

Psalms 89
சங்கீதம் 89

எஸ்ராகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் சங்கீதம்.

யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்; சங் 101:1சங் 89:8புலம் 3:23சங் 119:90சங் 89:33சங் 36:5சங் 89:4-5சங் 106:1

எல்லாத் தலைமுறைகளுக்கும்

உமது சத்தியத்தை என் வாயினால் தெரியப்படுத்துவேன்.

உமது உடன்படிக்கையின் அன்பு சங் 36:5நெகே 9:31எபி 6:18எண் 23:19சங் 103:17சங் 89:5எபே 1:6-7லூக் 1:50

என்றென்றைக்கும் உறுதியாய் நிலைக்கிறது என்று அறிவிப்பேன்;

நீர் உமது சத்தியத்தை வானத்தில் நிறுவினீர் என்பதையும் நான் அறிவிப்பேன்.

“நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்; சங் 132:112 சாமு 7:10-161 இராஜா 8:16அப் 2:30எபி 7:21சங் 89:282 சாமு 23:5எசேக் 34:23-24

என் அடியவனாகிய தாவீதுக்கு ஆணையிட்டிருக்கிறேன்.

‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி, 2 சாமு 7:12-16லூக் 1:32-33ஏசா 9:6-7சங் 132:121 நாளாக 17:10-141 நாளாக 22:101 இராஜா 9:5பிலி 2:9-11

எல்லாத் தலைமுறைகளிலும் உன் சிங்காசனத்தை உறுதிப்படுத்துவேன்’ ”

என்று நீர் சொன்னீர்.

யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன; சங் 19:1சங் 97:6ஏசா 44:232 தெச 1:7சங் 50:6வெளி 7:10-121 பேது 1:12தானி 7:10

அவை பரிசுத்தவான்களின் சபையிலே உமது சத்தியத்தைப் புகழ்கின்றன.

மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்? சங் 86:8எரே 10:6சங் 71:19யாத் 15:11சங் 113:5சங் 29:1சங் 73:25சங் 40:5

பரலோக தூதர்களின் மத்தியில் யெகோவாவைப் போன்றவர் யார்?

பரிசுத்தவான்களின் சபையில் இறைவனே மிகவும் பயத்திற்கு உரியவராயிருக்கிறார்; சங் 47:2சங் 76:7-11எபி 12:28-29எரே 10:7அப் 5:11ஏசா 6:2-7எரே 10:10லூக் 12:4-5

தம்மைச் சுற்றியுள்ள எல்லாரைப்பார்க்கிலும் அவரே பிரமிக்கத்தக்கவர்.

சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? சங் 71:191 சாமு 2:2எரே 32:17ஏசா 40:25-26சங் 147:5சங் 24:8சங் 35:10சங் 84:12

யெகோவாவே, நீர் வல்லவர்; உமது சத்தியம் உம்மைச் சூழ்ந்திருக்கிறது.

பொங்கியெழும் கடலின்மேல் நீர் ஆளுகை செய்கிறீர்; சங் 65:7சங் 107:25-29மாற் 4:41மத் 8:24-27மாற் 4:39சங் 93:3-4யோபு 38:8-11சங் 29:10

அதின் அலைகள் பயங்கரமாக எழும்பும்போது நீர் அவற்றை அமைதியாக்குகிறீர்.

நீர் ராகாபை அழிந்தவர்களில் ஒருவரைப்போல் நொறுக்கினீர்; சங் 144:6சங் 68:30சங் 87:4உபா 4:34யாத் 3:19-20யாத் 7:1-15ஏசா 24:1சங் 105:27-45

உமது பலமுள்ள புயத்தினால் உமது பகைவரைச் சிதறடித்தீர்.

வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே; 1 நாளாக 29:11ஆதி 1:1சங் 115:16சங் 24:1-21 கொரி 10:26சங் 50:12ஆதி 2:11 கொரி 10:28

உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே நிலைநிறுத்தினீர்.

வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்; யோபு 26:7யோசு 12:1யோசு 19:22உபா 3:8-9நியாயாதி 4:12நியாயாதி 4:6சங் 133:3சங் 98:8

தாபோரும் எர்மோனும் உமது பெயரில் மகிழ்ந்து பாடுகின்றன.

உமது புயம் வலிமைமிக்கது; சங் 62:11தானி 4:34-35சங் 89:10மத் 6:13

உமது கரம் பலமுள்ளது, உமது வலதுகரம் உயர்த்தப்பட்டுள்ளது.

நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்; சங் 97:2நீதி 16:12சங் 45:6-7சங் 145:17சங் 85:13உபா 32:4சங் 99:4வெளி 15:3

அன்பும் சத்தியமும் உமக்குமுன் செல்கின்றன.

யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; சங் 44:3ஏசா 2:5யோபு 29:3சங் 4:6அப் 2:28ஏசா 52:7-8சங் 100:1எண் 6:26

அவர்கள் உமது பிரசன்னத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள்.

அவர்கள் நாள்தோறும் உமது பெயரில் களிகூருகிறார்கள்; பிலி 3:9பிலி 4:4சங் 29:72 கொரி 5:21லூக் 1:47சங் 89:12சங் 40:10ஏசா 46:13

அவர்கள் உமது நீதியில் மேன்மை அடைவார்கள்.

நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்; சங் 75:10சங் 92:10சங் 148:141 கொரி 1:30-311 சாமு 2:102 கொரி 12:9-10சங் 112:91 சாமு 2:1

நீர் உமது தயவினால் எங்கள் பலத்தை உயரப்பண்ணினீர்.

உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது; சங் 47:9சங் 71:22ஏசா 33:22ஏசா 1:4ஏசா 12:6ஏசா 43:3சங் 84:11சங் 91:1-2

எங்கள் அரசர் இஸ்ரயேலின் பரிசுத்தருக்குரியவர்.

நீர் ஒருமுறை தரிசனத்தில், 1 சாமு 16:181 இராஜா 11:342 சாமு 7:8-17எபி 2:9-17ஏசா 9:6பிலி 2:6-111 சாமு 16:12 பேது 1:21

உமக்கு உண்மையான மக்களுடன் பேசிச் சொன்னதாவது:

“நான் ஒரு வீரனைப் பலத்தால் நிறைத்தேன்; மக்கள் மத்தியிலிருந்து நான்

ஓர் இளைஞனை உயர்த்தியிருக்கிறேன்.

நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்; 1 சாமு 16:12-13ஏசா 61:1-31 சாமு 16:1யோவா 3:34அப் 13:22

என் பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.

என் கரம் அவனைத் தாங்கும்; ஏசா 42:1சங் 18:32-39ஏசா 41:10சங் 89:13எசேக் 30:24-25சங் 80:15-172 சாமு 7:8-16ஏசா 49:8

நிச்சயமாகவே என் புயம் அவனைப் பலப்படுத்தும்.

பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்; 2 சாமு 7:101 நாளாக 17:9யோவா 17:12மத் 4:1-102 தெச 2:3

கொடியவன் அவனை ஒடுக்கவுமாட்டான்.

நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன், 2 சாமு 7:92 சாமு 22:40-442 சாமு 3:12 சாமு 7:1யோவா 15:23சங் 132:18சங் 18:40சங் 21:8-9

அவனுடைய விரோதிகளை அடித்து வீழ்த்துவேன்.

என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்; 2 கொரி 1:20சங் 89:16-17சங் 91:141 சாமு 2:1யோவா 1:17யோவா 17:11யோவா 17:6சங் 20:1

என் பெயரால் அவன் பலம் உயரும்.

நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும், சங் 80:111 இராஜா 4:21சங் 2:8சங் 72:8-11வெளி 11:15

அவனுடைய ஆட்சியை ஆறுகளுக்கு மேலாகவும் பரப்புவேன்.

அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன், 2 சாமு 7:142 சாமு 22:47சங் 95:1சங் 62:6-7மத் 26:42சங் 62:21 நாளாக 22:10யோவா 11:41

என் இறைவன், என் இரட்சகராகிய கன்மலை’ என்று கூப்பிடுவான்.

நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும், கொலோ 1:15கொலோ 1:18சங் 2:7வெளி 19:16ரோம 8:29சங் 72:11எண் 24:7யாத் 4:22

பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன்.

நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்; ஏசா 55:3அப் 13:32-34ஏசா 54:10எரே 33:20-212 சாமு 23:52 சாமு 7:15-16சங் 111:5சங் 111:9

நான் அவனோடு செய்யும் உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.

நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்; சங் 89:4உபா 11:21ஏசா 9:7சங் 89:36தானி 2:44லூக் 1:32-331 நாளாக 17:11-121 நாளாக 22:10

அவனுடைய சிங்காசனத்தை வானங்கள் உள்ளமட்டும் நிலைப்படுத்துவேன்.

“அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு, 2 சாமு 7:141 நாளாக 28:9நீதி 28:4சங் 119:53சங் 132:122 நாளாக 7:17-22எசேக் 18:17எசேக் 20:19

என் நியமங்களைப் பின்பற்றாது போனால்,

என் விதிமுறைகளை மீறி, சங் 55:20

எனது கட்டளைகளைக் கைக்கொள்ளத் தவறினால்,

நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும், 2 சாமு 7:14எபி 12:6-11நீதி 3:11-121 இராஜா 11:391 இராஜா 11:14ஆமோ 3:21 கொரி 11:31-321 இராஜா 11:31

அவர்களுடைய அநியாயத்தை சவுக்கடியினாலும் தண்டிப்பேன்;

ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்; ஏசா 54:8-102 சாமு 7:15புலம் 3:31-32எபி 6:18எரே 33:20-261 சாமு 15:291 இராஜா 11:361 இராஜா 11:13

என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன்.

நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்; எண் 23:19மத் 24:35யாக் 1:17மல்கி 3:6ரோம 11:29எரே 14:21லேவி 26:44எரே 33:20

என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன்.

ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்; சங் 132:11எபி 6:13தீத் 1:2எபி 6:17ஆமோ 4:2சங் 110:4ஆமோ 8:72 தெச 2:13

தாவீதுக்கு நான் பொய்சொல்லமாட்டேன்:

அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும், சங் 72:5சங் 89:29ஏசா 59:21சங் 72:17லூக் 1:332 சாமு 7:16ஏசா 9:7சங் 89:4

அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்;

அது ஆகாயத்தின் உண்மையான சாட்சியாக எரே 31:35-36ஆதி 1:14-18சங் 104:19ஆதி 9:13-16ஏசா 54:9-10சங் 72:7

சந்திரனைப்போல என்றென்றைக்கும் நிலைநிறுத்தப்படும்.”

ஆனாலும், இப்பொழுது நீர் அவனைத் தள்ளி, 1 நாளாக 28:9உபா 32:19சங் 106:40சங் 89:512 நாளாக 12:1-122 சாமு 1:212 சாமு 15:26ஓசி 9:17

அவனைப் புறக்கணித்து விட்டிருக்கிறீர்;

நீர் அபிஷேகம் பண்ணியவன்மேல் கோபமாயிருக்கிறீர்.

உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு, புலம் 5:16சங் 74:7ஏசா 43:28சங் 89:34-36ஏசா 25:12யோவா 13:7சங் 116:11சங் 143:3

அவனுடைய கிரீடத்தைத் தூசியில் தள்ளி அவமானப்படுத்தினீர்.

நீர் அவனுடைய மதில்களைத் தகர்த்து, சங் 80:12புலம் 2:2புலம் 2:5ஏசா 5:5-6யோபு 1:102 நாளாக 12:2-52 நாளாக 15:5வெளி 13:1-7

அவனுடைய அரண்களையெல்லாம் இடித்துத் தூளாக்கினீர்.

கடந்து செல்லும் அனைவருமே அவனைக் கொள்ளையிட்டார்கள்; சங் 79:4தானி 9:16உபா 28:37எசேக் 5:14-15ஏசா 10:6எரே 24:9எரே 29:18எரே 42:18

அவன் தனது அயலவர்களின் இகழ்ச்சிக்குள்ளானான்.

நீர் அவனுடைய எதிரிகளின் வலதுகையை உயர்த்தினீர்; சங் 80:6வெளி 11:10உபா 28:25உபா 28:43யோவா 16:20புலம் 2:17லேவி 26:17லேவி 26:25

அவனுடைய பகைவர் அனைவரும் மகிழும்படி செய்தீர்.

நீர் அவனுடைய வாளின் முனையை மழுங்கப்பண்ணி, 2 நாளாக 25:8எசேக் 30:21-25யோசு 7:4-5யோசு 7:8-12லேவி 26:36-37எண் 14:42எண் 14:45சங் 44:10

யுத்தத்தில் அவனுக்குத் துணைசெய்யாதிருந்தீர்.

நீர் அவனுடைய சிறப்புக்கு முடிவை ஏற்படுத்தி, 1 இராஜா 12:16-201 இராஜா 14:25-281 சாமு 4:21-222 தெச 2:3-10தானி 7:20-25புலம் 4:1-2சங் 89:39

அவனுடைய சிங்காசனத்தை தரையிலே தள்ளினீர்.

நீர் அவனுடைய வாலிப நாட்களை குறுகப்பண்ணி, சங் 109:29சங் 44:15மீகா 7:10சங் 102:232 நாளாக 10:19ஏசா 63:18சங் 71:13சங் 89:28-29

அவனை வெட்கத்தின் உடையால் மூடினீர்.

யெகோவாவே, நீர் எவ்வளவு காலத்திற்கு மறைந்திருப்பீர்? சங் 79:5சங் 78:63ஏசா 45:15ஏசா 8:17சங் 88:14சங் 90:132 தெச 1:8எபி 12:29

நீர் என்றென்றுமாய் மறைந்திருப்பீரோ?

எவ்வளவு காலத்திற்கு உமது கோபம் நெருப்பைப்போல் பற்றியெரியும்?

என் வாழ்வு எவ்வளவு துரிதமாய் முடிவடைகிறது என்பதை நினைத்துக்கொள்ளும்; யோபு 14:1யோபு 10:9யோபு 7:7யாக் 4:14யோபு 9:25-26சங் 144:4சங் 119:84சங் 39:5-6

பயனற்ற நோக்கத்திற்காகவா நீர் எல்லா மக்களையும் படைத்தீர்!

மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? பிரச 9:5எபி 11:5சங் 49:15பிரச 12:7பிரச 8:8சங் 49:7-9யோவா 8:51யோபு 30:23

அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்?

யெகோவாவே, நீர் உமது சத்தியத்தில் தாவீதுக்கு ஆணையிட்ட 2 சாமு 7:15எபி 7:21ஏசா 55:32 சாமு 3:9ஏசா 63:7-15சங் 132:11-12சங் 54:5சங் 77:9-10

உமது முந்தைய உடன்படிக்கையின் அன்பு எங்கே?

யெகோவாவே, உமது அடியவன் எவ்வளவாய் ஏளனம் செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும் சங் 74:18சங் 74:22சங் 69:9ரோம 15:3சங் 44:13-16சங் 69:19-20சங் 79:10-12

எல்லா நாட்டு மக்களின் நிந்தைகளை நான் என் இருதயத்தில்

எவ்வாறு சகிக்கிறேன் என்பதையும் நினைத்துக்கொள்ளும்.

யெகோவாவே, உமது பகைவர் ஏளனம் செய்த நிந்தனை வார்த்தைகளையும், 1 பேது 4:14-16சங் 74:101 கொரி 4:12-131 பேது 2:20-211 பேது 3:162 சாமு 16:7-8அப் 5:41எபி 10:33

நீர் அபிஷேகித்தவரின் ஒவ்வொரு காலடிகளையும்

அவர்கள் ஏளனம் செய்ததையும் நினைத்துக்கொள்ளும்.

யெகோவாவுக்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக! சங் 41:13சங் 72:18-191 தீமோ 1:17ஆப 3:17-19சங் 106:48மத் 6:13நெகே 9:5

ஆமென், ஆமென்.