தாவீதின் சங்கீதம்.
பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்; சங் 96:7-9வெளி 5:11-14எரே 13:16-181 நாளாக 16:28-29ஏசா 60:12சங் 68:31-34சங் 2:10-12
அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.
யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; சங் 96:8-91 நாளாக 16:28-292 நாளாக 20:21சங் 110:3சங் 27:4சங் 97:9சங் 113:3-6சங் 145:3-7
பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.
யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது; யோபு 37:2-5சங் 93:3-4யாத் 9:33யாத் 19:16யாத் 9:28மத் 8:26-27சங் 18:13-15சங் 77:16-19
மகிமையின் இறைவன் முழங்குகிறார்;
பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார்.
யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது; எசேக் 10:5சங் 33:9எரே 51:15-16லூக் 4:36சங் 68:33ஏசா 66:6லூக் 8:25யோபு 40:9-12
யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது.
யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது; ஏசா 2:13நியாயாதி 9:15சங் 104:16
யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.
அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும், உபா 3:9எண் 23:22சங் 114:4-7ஆப 3:6-11எரே 4:23-25சங் 92:10வெளி 20:11
சிரியோன் 1 மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
யெகோவாவினுடைய குரல் சங் 77:18யாத் 9:23லேவி 10:2சங் 144:5-62இராஜா 1:10-12யோபு 37:3யோபு 38:35எண் 16:35
மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.
யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது; எண் 13:26ஏசா 13:13யோபு 9:6சங் 18:7சங் 46:3ஆகா 2:21ஆகா 2:6எபி 12:26
காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார்.
யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது. சங் 46:2-5எசேக் 20:46-48யோபு 39:1-3சங் 26:8சங் 48:9ஏசா 10:18-19ஏசா 9:18சங் 134:1-2
காடுகளை அழித்து வெளியாக்குகிறது;
அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள்.
யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; 1 தீமோ 1:17ஆதி 6:17சங் 10:16மாற் 4:41ஆதி 8:1-2யோபு 38:8-11தானி 2:44யோபு 38:25
யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்; ஏசா 40:31எண் 6:24-272 தெச 3:16ஏசா 41:10யோவா 16:33ஏசா 40:29சங் 37:11சங் 68:35
யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.