ஏசாயா 6

Isaiah 6

ஏசாயாவின் அழைப்பு

உசியா அரசன் இறந்த வருடத்தில், யெகோவா உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அவருடைய நீண்டிருந்த மேலுடை ஆலயத்தை நிரப்பியிருந்தது. யோவா 12:41வெளி 15:8தானி 7:9வெளி 7:15-17சங் 113:5மத் 25:31ஏசா 66:1யோவா 1:18 அவருக்கு மேலாக சேராபீன்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவை இரு சிறகுகளால் தங்கள் முகங்களை மூடிக்கொண்டும், இரு சிறகுகளால் தங்கள் பாதங்களை மூடிக்கொண்டும், இரு சிறகுகளால் பறந்துகொண்டும் இருந்தன. வெளி 4:8எசேக் 1:11சங் 103:20சங் 104:41 இராஜா 6:24ஏசா 6:6சங் 18:10சகரி 3:4 அவை ஒன்றையொன்று அழைத்து இவ்வாறு கூறியது: வெளி 4:8-9சங் 72:19யாத் 15:11எஸ்றா 3:11எண் 14:21யாத் 15:20-21ஏசா 11:9-10ஏசா 40:5

“எல்லாம் வல்ல யெகோவா, பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,

பூமி முழுவதும் அவரது மகிமையால் நிறைந்திருக்கிறது.”

அவைகளுடைய குரல்களின் சத்தத்தினால் ஆலயக் கதவு நிலைகளும், வாசற்படிகளும் அதிர்ந்தன, ஆலயம் புகையினாலும் நிரம்பியது. வெளி 15:81 இராஜா 8:10-122 நாளாக 5:13யாத் 40:34வெளி 11:19எசேக் 10:5ஆமோ 9:1சங் 18:8

அப்பொழுது நான், “எனக்கு ஐயோ, நான் அழிந்தேன்! நானோ அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகள் உள்ள மக்கள் மத்தியில் வாழ்கிறேன். என் கண்கள், எல்லாம் வல்ல யெகோவாவாகிய அரசரைக் கண்டுவிட்டனவே” என்று சொன்னேன். லூக் 5:8-9யாக் 3:6-10எரே 1:6எரே 9:3-8மத் 12:34-37யாத் 6:30யாத் 4:10எசேக் 2:6-8

அப்பொழுது சேராபீன்களுள் ஒருவன், பலிபீடத்திலிருந்து எரியும் நெருப்புத் தணலொன்றைக் குறட்டினால் எடுத்து, அதைத் தன் கையில் பிடித்துக்கொண்டு என்னிடம் பறந்து வந்தான். வெளி 8:3-5எபி 9:22-26எசேக் 10:2எபி 1:7எபி 13:10ஏசா 6:2லேவி 16:12அப் 2:3 அவன் எனது வாயை அதனால் தொட்டு, “பார், இது உனது உதடுகளைத் தொட்டுள்ளது; உனது குற்றம் நீங்கி, உனது பாவம் நிவிர்த்தியாக்கப்பட்டது” என்றான். எரே 1:91 யோவா 1:7ஏசா 43:25தானி 10:16எபி 9:13-14ஏசா 53:10ஏசா 53:5மத் 9:2

பின்பு நான், யெகோவாவின் குரலைக் கேட்டேன், அவர், “யாரை நான் அனுப்புவேன்? யார் நமக்காகப் போவான்?” என்றார். யாத் 4:10-13அப் 26:16-17எபே 3:8அப் 22:21ஏசா 65:1மத் 4:20-22அப் 20:24உபா 4:33-36

அதற்கு நான், “இதோ, நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்!” என்றேன்.

அப்பொழுது அவர், “நீ இந்த மக்களிடம்போய் சொல்லவேண்டியது: மத் 13:14-15லூக் 8:10மாற் 4:12யோவா 12:40அப் 28:26-27ரோம 11:8ஏசா 29:13ஏசா 43:8

“ ‘நீங்கள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டும் ஒருபோதும் உணராமலும்,

எப்பொழுதும் பார்த்துக்கொண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளாமலும் இருங்கள்.’

இந்த மக்களின் இருதயத்தைக் கடினமாக்கு, மத் 13:15அப் 28:27எரே 5:21எரே 6:10யோவா 3:19-20சகரி 7:11ஏசா 29:10ஏசா 63:17

அவர்களின் காதுகளை மந்தமாக்கு,

அவர்கள் கண்களை மூடிவிடு.

ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும்,

தங்கள் காதுகளால் கேட்காமலும்,

இருதயங்களினால் உணர்ந்து,

மனமாறி, குணமடையாமலும் இருக்கச் செய்.”

அப்பொழுது நான், “யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு?” என்றேன். ஏசா 1:7ஏசா 24:1-12ஏசா 3:26லேவி 26:31சங் 90:13சங் 94:3சங் 79:5சங் 74:10

அதற்கு அவர் சொன்னதாவது:

“பட்டணங்கள் குடியிருப்பாரின்றிப்

பாழாக்கப்பட்டு,

வீடுகள் கைவிடப்பட்டு,

வயல்கள் பாழாகி சூறையாடப்பட்டு,

யெகோவா ஒவ்வொருவரையும் வெகுதூரத்துக்கு அனுப்பி எரே 4:29உபா 28:642இராஜா 25:112இராஜா 25:21ஏசா 26:15எரே 12:7எரே 15:4எரே 52:28-30

நாடு முற்றிலும் கைவிடப்படும் வரைக்குமே அது அப்படியிருக்கும்.

நாட்டின் பத்தில் ஒரு பங்கு மிஞ்சியிருந்த போதிலும் யோபு 14:7-9ரோம 11:5-6ஆதி 22:18ஏசா 65:8-9ரோம 11:16-29எஸ்றா 9:2கலா 3:16-19கலா 3:28-29

மீண்டும் அதுவும் அழிக்கப்படும்.

ஆனால் தேவதாரு மரமும், கர்வாலி மரமும் வெட்டப்படும்போது,

அடிமரம் விடப்படுவதுபோல்

பரிசுத்த விதை நாட்டில் அடிமரமாக இருக்கும்.”