மாம்ச இயல்பில் மனவுறுதி வேண்டாம்
கடைசியாக, பிரியமானவர்களே, கர்த்தரில் சந்தோஷமாயிருங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்கு கஷ்டமானதல்ல. அது உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும். பிலி 4:4ரோம 5:11யாக் 1:21 பேது 4:131 தெச 5:16எபே 6:10யோவே 2:23பிலி 4:8 நாய்களுக்கு ஜாக்கிரதையாயிருங்கள், விருத்தசேதனம் வேண்டும் என்பவர்களைக்குறித்து கவனமாயிருங்கள். தீமை செய்கிறவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். 2 கொரி 11:13தீத் 1:16வெளி 22:15ஏசா 56:10-112 தீமோ 3:1-6கலா 5:15பிலி 3:19சங் 22:16 மாம்சத்தில் மனவுறுதி வைக்காமல் இறைவனின் ஆவியானவரின் துணையுடன் வழிபட்டு, கிறிஸ்து இயேசுவை மகிமைப்படுத்தும் நாமே, உண்மையான விருத்தசேதனமுள்ளவர்கள். கொலோ 2:11உபா 30:6ரோம 7:6கலா 6:13-15ரோம 8:15கலா 5:25ரோம 2:25-29யோவா 4:23-24 மாம்சத்தின்மேல் மனவுறுதிகொள்வதற்கு என்னிடமும் தன்மைகள் உண்டு. 2 கொரி 11:18-22
யாராவது மனுஷிக விஷயத்தில் மனவுறுதி வைக்கும் தன்மைகள் தன்னிடம் இருப்பதாக எண்ணினால், என்னிடம் அது அதிகமாய் இருக்கிறது: ஏனெனில் நான் பிறந்து எட்டாம் நாளிலேயே விருத்தசேதனம் பெற்றவன். இஸ்ரயேல் வம்சத்தைச் சேர்ந்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். எபிரெயரில் பிறந்த எபிரெயன்; மோசேயின் சட்டத்தின்படி நான் ஒரு பரிசேயன். 2 கொரி 11:22ரோம 11:1அப் 23:6அப் 22:3அப் 26:4-5ஆதி 17:12யோவா 7:21-24லூக் 1:59 பக்தி வைராக்கியத்தின் நிமித்தம் திருச்சபையைத் துன்புறுத்தியவன்; மோசேயினுடைய சட்டத்தின் நீதியைப் பொறுத்தவரையில் குற்றமற்றவன். கலா 1:13-14அப் 8:3அப் 26:9-10அப் 22:3-4அப் 26:5மத் 5:20ரோம 9:31-321 கொரி 15:9
ஆனால் எனக்கு எவைகளெல்லாம் பயனுள்ளவைகளாய் இருந்தனவோ, அவை எல்லாமே இப்பொழுது கிறிஸ்து என்னில் செய்தவற்றின் நிமித்தம், எனக்கு பயனற்றவை என்று கருதுகிறேன். லூக் 14:33மத் 16:26மத் 13:44-46லூக் 14:26நீதி 13:8பிலி 3:8-10லூக் 17:31-33ஆதி 19:17 அதுமட்டுமல்ல, நான் என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் அவைகளை ஒப்பிடும்போது, எல்லாமே நஷ்டம் என்று கருதுகிறேன். நான் அவருக்காக எல்லாவற்றையும் அகற்றி, கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன். எரே 9:23-24ரோம 8:18அப் 20:24பிலி 3:7யோவா 17:3பிலி 3:102 பேது 1:31 கொரி 2:2 நான் அவரோடு, இணைந்திருக்கவே விரும்புகிறேன். மோசேயின் சட்டத்தினால் வரும் சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலம் கொடுக்கப்பட்ட அவருடைய நீதியை உடையவனாய் இருக்கவே விரும்புகிறேன். இந்த நீதி இறைவனிலிருந்து விசுவாசத்தினால் வருகிறதாயிருக்கிறது. 2 கொரி 5:211 கொரி 1:30கலா 2:16ரோம 4:13-15ரோம 4:5-6ரோம 1:17ரோம 8:1ஏசா 53:11 நான் கிறிஸ்துவை அறியவும், அவரின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறியவும் விரும்புகிறேன். அத்துடன் அவருடைய மரணத்தில் அவரைப் போலாகி, அவருடைய துன்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் ஐக்கியத்தையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். கலா 2:201 பேது 4:1-22 தீமோ 2:11-12ரோம 8:17ரோம 6:3-11எபே 1:19-211 பேது 4:13-141 யோவா 2:3 இவ்வாறு எப்படியாகிலும், மரித்தோரின் உயிர்த்தெழுதலை நானும் அடைந்துகொள்ள முடியும். லூக் 20:35-36வெளி 20:5அப் 23:6அப் 26:72 கொரி 11:3எபி 11:351 கொரி 9:221 கொரி 9:27
இவை எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே முழுமை நிலையை அடைந்துவிட்டேன் என்றோ நான் கூறவில்லை. ஆனால் கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்றே தொடர்ந்து கடும் முயற்சிசெய்கிறேன். 1 தீமோ 6:11-122 பேது 1:5-8சங் 138:8ஓசி 6:31 பேது 3:11-132 கொரி 7:1ஏசா 51:1எபி 13:21 பிரியமானவர்களே, நான் அந்த இலக்கை அடைந்துவிட்டேன் என்று எண்ணவில்லை. ஆனால் நான் ஒன்றுசெய்கிறேன்: கடந்து போனவற்றை மறந்து, எனக்கு முன்னதாக உள்ளவற்றை நோக்கி, அவற்றை அடைவதற்காக கடும் முயற்சி எடுக்கிறேன். லூக் 9:62எபி 12:1-2பிலி 3:121 கொரி 9:24-27சங் 27:4பிலி 3:8எபி 6:1பிலி 4:11-13 நான் இறைவன் கொடுக்கப்போகும் பரிசை வென்றெடுப்பதற்காக, இலக்கை நோக்கி முன்னேற கடுமையாய் தொடருகிறேன். அந்தப் பரிசை, அதாவது பரலோக வாழ்வைப் பெறும்படியாகவே, இறைவன் என்னை கிறிஸ்து இயேசுவின் மூலமாக அழைத்திருக்கிறார். 1 கொரி 9:241 பேது 5:10வெளி 3:212 தீமோ 4:7-8ரோம 8:28-301 தெச 2:122 பேது 1:3எபி 3:1
பவுலின் முன்மாதிரியை பின்பற்றுதல்
எனவே நம்மில் முதிர்ச்சி அடைந்தோர் யாவரும், இவ்வாறான சிந்தையே கொண்டிருக்கவேண்டும். எதைப்பற்றியாவது உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமானால், அதையும்கூட, இறைவனே உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். யோவா 7:171 கொரி 2:6கலா 5:10நீதி 2:3-6யாக் 1:4-5கொலோ 4:121 கொரி 14:20மத் 5:48 ஆனால் நாம் ஏற்கெனவே அடைந்திருந்த வளர்ச்சிக்கு ஏற்றவிதமாய் வாழமுயல்வோம். கொலோ 2:6வெளி 3:3வெளி 2:4-5கலா 6:16எபி 10:38-39பிலி 1:27ரோம 15:5பிலி 2:2
பிரியமானவர்களே, என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களோடு, நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய எடுத்துக்காட்டின்படி வாழ்கிறவர்களையும் கவனித்துக் கற்றுக்கொள்ளுங்கள். பிலி 4:91 கொரி 4:161 பேது 5:31 தீமோ 4:12எபி 13:72 தெச 3:72 தெச 3:91 கொரி 10:32 ஏனெனில், அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாகவே வாழ்கிறார்கள். இதைப்பற்றி நான் உங்களுக்கு அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இப்பொழுது மீண்டும் அதைக் கண்ணீருடன் உங்களுக்குச் சொல்கிறேன். எபே 4:17ஏசா 8:11கலா 6:12கலா 1:7கலா 2:14எரே 13:171 தெச 4:62 பேது 2:10 பேரழிவே அவர்களது முடிவு, அவர்களுடைய வயிறே அவர்களது தெய்வம், வெட்கக்கேடானது அவர்களது மேன்மை, பூமிக்குரியவைகளைப் பற்றியே அவர்களது சிந்தனை. ரோம 16:18ரோம 8:5-72 பேது 2:3கொலோ 3:22 கொரி 11:15யூதா 1:12-132 பேது 2:12 கொரி 11:12 ஆனால் நமது குடியுரிமை பரலோகத்திற்கே உரியது. அங்கிருந்தே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவாரென எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம். எபே 2:19கொலோ 3:1-32 கொரி 4:18எபி 12:221 பேது 1:3-42 தீமோ 4:8எபே 2:61 தெச 1:10 அவர் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர தமது வல்லமையான ஆற்றலைக் கொடுக்கும்படியே நமது பலவீனமான அழிவுக்குரிய உடல்களை மகிமையுள்ள உடலைப்போல் மாற்றுவார். 1 யோவா 3:2கொலோ 3:41 கொரி 15:42-56ரோம 8:29யோவா 11:24-26ஏசா 26:19மத் 17:2மத் 28:18