பவுலும் பொய்யான அப்போஸ்தலரும்
என் மதியீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக்கொள்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். ஆம்; நீங்கள் ஏற்கெனவே சகித்தும் இருக்கிறீர்கள். 1 கொரி 1:212 கொரி 11:42 கொரி 11:192 கொரி 11:212 கொரி 5:132 கொரி 11:16-171 கொரி 3:181 கொரி 4:10 நான் உங்களைக் கிறிஸ்து என்ற ஒரே கணவருக்கே திருமணம் செய்து கொடுக்கவே வாக்குப்பண்ணியிருக்கிறேன். இப்படி உங்களை ஒரு தூய்மையான கன்னிகையாகக் கொடுக்கவே விரும்புகிறேன். இதனாலேயே இறைவனுக்குத் தன் மக்கள்மேல் இருக்கிற வைராக்கியம், எனக்கும் உங்கள்மேல் இருக்கிறது. ஓசி 2:19-20எபே 5:26-27ஏசா 54:5கொலோ 1:28யோவா 3:29லேவி 21:13-15ஏசா 62:4-5ரோம 7:4 பாம்பு தனது சூழ்ச்சியினாலே ஏவாளை ஏமாற்றியது. அதுபோலவே உங்கள் மனதில் கிறிஸ்துவுக்கு இருக்கிற உண்மையிலும், தூய்மையான பக்தியிலுமிருந்து, நீங்கள் வழிவிலகி நடத்தப்படுவீர்களோ என்று, நான் பயப்படுகிறேன். கொலோ 2:8கலா 1:6எபே 4:141 யோவா 4:1கொலோ 2:4எபி 13:91 தீமோ 2:14வெளி 12:9 ஏனெனில் யாராவது உங்களிடம் வந்து, நாங்கள் பிரசங்கிக்காத ஒரு வித்தியாசமான இயேசுவைப் பிரசங்கிக்கும் போதும், நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவரைத் தவிர, வேறொரு ஆவியை அறிமுகப்படுத்தும் போதும், நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட, வேறொரு நற்செய்தியைக் கொண்டுவரும்போது, அவற்றை எளிதாக ஏற்றுக்கொள்கிறீர்கள். கலா 1:6-81 கொரி 3:111 தீமோ 2:5எபே 4:4-51 கொரி 12:4-11அப் 4:12கலா 3:2ரோம 8:15
அந்த “மாண்புமிகு அப்போஸ்தலர்களை” விட நான் எவ்வகையிலும் குறைவுபட்டவனல்ல என எண்ணுகிறேன். 1 கொரி 15:102 கொரி 12:11-12கலா 2:6-9 நான் ஒரு பயிற்சி பெற்ற பேச்சாளனாய் இல்லாதிருந்தாலும், எனக்கு அறிவு உண்டு என்பதை எல்லாவிதத்திலும் உங்களுக்கு மிகவும் தெளிவுபடுத்தியே இருக்கிறோம். 1 கொரி 1:17எபே 3:41 கொரி 1:212 கொரி 4:21 கொரி 2:1-31 கொரி 2:132 கொரி 10:102 கொரி 12:12 நான் இறைவனுடைய நற்செய்தியை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்தபோது, நீங்கள் உயர்வடையும்படி நான் என்னைத் தாழ்த்தினேன். இப்படிச் செய்தது பாவமா? 2 கொரி 12:131 கொரி 4:10-121 கொரி 9:61 தெச 2:92 கொரி 10:11 கொரி 9:14-182 தெச 3:8அப் 18:1-3 நான் உங்களுக்குப் பணிசெய்வதற்காக மற்றத் திருச்சபைகளிடமிருந்து உதவி பெற்றுக்கொண்டேன். இப்படி உங்களுக்காக நான் அவர்களைக் கொள்ளையிட்டேன். 2 கொரி 11:9பிலி 4:14-16பிலி 4:18 நான் உங்களுடன் இருக்கையில், எனக்குத் தேவையேற்பட்டபோது, அதற்காக நான் யாருக்கும் கஷ்டம் கொடுக்கவில்லை. ஏனெனில் எனக்குத் தேவையானவற்றையெல்லாம், மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்களே கொடுத்து உதவினார்கள். நான் முன்பு செய்ததுபோலவே இனிமேலும், என்னுடைய தேவைகளுக்காக எவ்விதத்திலும் உங்களுக்குப் பாரமாயிருக்க மாட்டேன். 1 தெச 2:61 தெச 2:92 தெச 3:8-9பிலி 4:10-162 கொரி 12:13-162 கொரி 6:42 கொரி 8:1-22 கொரி 9:12 கிறிஸ்துவின் உண்மை எனக்குள் இருப்பது நிச்சயம்போலவே, அகாயா பகுதியிலுள்ள யாரும் என்னுடைய இந்தப் பெருமைபாராட்டுதலை நிறுத்தமுடியாது என்பதும் நிச்சயம். ரோம 9:1அப் 18:12ரோம 1:92 கொரி 1:231 கொரி 16:151 கொரி 9:15-181 தெச 1:7-81 தெச 2:10 ஏன் இதை இப்படிச் சொல்கிறேன்? நான் உங்களில் அன்பாயிராததினாலா? நான் உங்களில் அன்பாயிருக்கிறேன் என்பதை இறைவன் அறிவார். 2 கொரி 12:152 கொரி 6:11-122 கொரி 7:32 கொரி 11:312 கொரி 12:2-3அப் 15:8எபி 4:13யோவா 2:24-25
நாங்கள் ஊழியம் செய்கிறதுபோலவே, தாங்களும் ஊழியம் செய்வதாக பெருமை பேசிக்கொள்கிறவர்கள், அப்படிச் சொல்ல இயலாதபடி நான் இவ்விதமே தொடர்ந்து செய்வேன். 1 கொரி 9:121 கொரி 5:61 தீமோ 5:142 கொரி 1:172 கொரி 10:172 கொரி 11:182 கொரி 11:92 கொரி 5:12 ஏனெனில், இப்படிப்பட்ட மனிதர் பொய்யான அப்போஸ்தலர்கள். கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரைப்போல் வேஷம் தரித்து, ஏமாற்றுகிற வேலைக்காரர்கள். கலா 1:7வெளி 2:21 யோவா 4:1பிலி 3:2கலா 2:4அப் 20:302 கொரி 11:15கொலோ 2:4 அதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், சாத்தானுங்கூட ஒளியின் தூதனைப்போல் வேஷம் தரித்துக்கொள்கிறான். கலா 1:82 கொரி 2:112 கொரி 11:3வெளி 12:9மத் 4:1-10ஆதி 3:1-5 எனவே அவனுடைய வேலைக்காரர்களும், நீதியின் ஊழியக்காரர்கள்போல் வேஷம் தரித்து ஏமாற்றுவது புதுமையான ஒன்று அல்ல. அவர்களின் முடிவோ தங்கள் செயல்களுக்கேற்ற பலனாயிருக்கும். பிலி 3:192 கொரி 3:9வெளி 9:112 கொரி 11:232 பேது 2:13-222 பேது 2:3அப் 13:10ஏசா 9:14-15
பவுலின் பெருமைபாராட்டுதல்
நான் மறுபடியும் சொல்கிறேன்: நான் ஒரு முட்டாள் என்று ஒருவரும் நினைக்கவேண்டாம். அப்படி நீங்கள் நினைத்தால், என்னை முட்டாளாகவே ஏற்றுக்கொண்டு, நான் இன்னும் பெருமையடித்துக் கொள்வதையும் சிறிது கேளுங்கள். 2 கொரி 11:12 கொரி 12:62 கொரி 11:192 கொரி 11:21-232 கொரி 12:11 இந்தப் பெருமை பேசும் விஷயத்தில் நான் கர்த்தர் விரும்பிய விதத்தில் பேசவில்லை. நான் ஒரு முட்டாளைப் போலவே பேசுகிறேன். 1 கொரி 7:122 கொரி 9:4பிலி 3:3-61 கொரி 7:251 கொரி 7:62 கொரி 11:18-27 பலர் உலகரீதியாகப் பெருமை பேசுகிறார்கள். நானும் அப்படியே பெருமை பேசுவேன். 1 கொரி 4:101 பேது 1:242 கொரி 10:12-182 கொரி 11:122 கொரி 11:21-232 கொரி 12:112 கொரி 12:5-62 கொரி 12:9 நீங்களோ எவ்வளவு பெரிய ஞானிகள்! முட்டாள்களை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறீர்கள். 1 கொரி 4:101 கொரி 10:151 கொரி 8:1வெளி 3:17 உங்களை அடிமைப்படுத்துகிறவனையும், உங்களைச் சுரண்டிப் பிழைக்கிறவனையும், உங்களைத் தன் நலனுக்காகப் பயன்படுத்துகிறவனையும், உங்கள் மத்தியில் பெருமையாய் நடக்கிறவனையும் உங்கள் முகத்தில் அடிக்கிறவனையும், நீங்கள் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறீர்கள். கலா 2:4கலா 4:3கலா 4:9கலா 5:12 கொரி 1:24ஏசா 50:6புலம் 3:30லூக் 6:29 நாங்களோ இப்படிப்பட்டவைகளைச் செய்யமுடியாத அளவுக்குப் பலவீனர்களாய் இருந்தோம்! இதை நான் வெட்கத்துடன் ஒத்துக்கொள்கிறேன். 2 கொரி 10:102 கொரி 10:1-22 கொரி 11:172 கொரி 11:22-272 கொரி 13:10பிலி 3:3-6
ஆனால், யாராவது எதைக் குறித்தாவது பெருமைப்படத் துணிந்தால், அவ்விதமாய் பெருமைப்பட்டுக்கொள்ள, நானும் துணிவேன். நான் ஒரு மூடனைப்போல் இதையும் சொல்கிறேன். அவர்கள் எபிரெயரா? அப்படியானால் நானும் எபிரெயன்தான். அவர்கள் இஸ்ரயேலரா? அப்படியானால், நானும் இஸ்ரயேலன்தான். அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளா? அப்படியானால், நானும் ஆபிரகாமின் சந்ததிதான். பிலி 3:5ரோம 11:1ரோம 9:42 நாளாக 20:7அப் 22:3யாத் 10:3யாத் 7:16யாத் 9:1 நான் ஒரு பைத்தியக்காரனைப்போல, பேசுகிறேன். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியரா? அப்படியானால், நான் அவர்களைவிட மிகச்சிறந்த ஊழியன். நான் இந்த ஊழியத்தில் கடுமையாக உழைத்தேன். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டேன். அதிகமாக அடிக்கப்பட்டேன். அநேகந்தரம் மரணத் தருவாயில் இருந்தேன். 2 கொரி 6:4-52 கொரி 1:9-102 கொரி 6:9கொலோ 1:241 கொரி 15:102 கொரி 11:24-252 கொரி 3:6அப் 9:16 நாற்பது அடிகளுக்கு ஒன்று குறைவாக யூதரினால் ஐந்துமுறை சவுக்கால் அடிக்கப்பட்டேன். மாற் 13:9உபா 25:2-3மத் 10:17 மூன்றுதரம் தடியால் அடிக்கப்பட்டேன். ஒருதரம் என்மேல் கல்லெறிந்தார்கள். மூன்றுமுறை நான் பயணம் செய்த கப்பல்கள் உடைந்து சிதைந்தன. ஒருமுறை இரவும் பகலுமாக நடுக்கடலில் கிடந்தேன். அப் 14:19அப் 16:22-23அப் 16:33அப் 16:37அப் 27:1-44எபி 11:37அப் 14:5அப் 7:58-59 ஓயாது பிரயாணம் செய்தேன். அப்பொழுது ஆறுகளில் ஆபத்துக்குள்ளானேன். கொள்ளைக்காரராலும் ஆபத்து ஏற்பட்டது. எனது சொந்த நாட்டு மக்களாலும் ஆபத்து வந்தது; அந்நியராலும் ஆபத்து வந்தது. பட்டணத்திலும் ஆபத்து வந்தது; நாட்டுப்புறத்திலும் ஆபத்து வந்தது; கடலிலும் ஆபத்து வந்தது. கள்ளச் சகோதரராலும் எனக்கு ஆபத்து வந்தது. அப் 14:5அப் 13:50அப் 17:5அப் 20:19அப் 25:32 கொரி 1:8-101 கொரி 15:321 தெச 2:15-16 கடின உழைப்புக்கும், கஷ்டத்திற்கும் உள்ளானேன். பல இரவுகள் நித்திரையின்றியும் இருந்தேன். பசியும், தாகமும் உடையவனாக இருந்தேன். பலமுறை உணவு இல்லாமலும் இருந்தேன். குளிருக்குள் அகப்பட்டும், உடை இல்லாதவனாகவும் இருந்தேன். 2 கொரி 6:5பிலி 4:121 தெச 2:92 தெச 3:81 கொரி 4:11-121 கொரி 7:52 கொரி 11:23அப் 13:2-3 இவை எல்லாவற்றையும்விட, எல்லாத் திருச்சபைகளையும் குறித்து எனக்கிருக்கிற அக்கறையினால் வரும் கவலை நாள்தோறும் என்னை நெருக்கியது. 1 கொரி 7:17ரோம 15:16அப் 20:18-35அப் 15:40-41அப் 18:23கொலோ 2:1ரோம 11:13ரோம 16:4 யாராவது பலவீனமானவனாக இருந்தால், அந்தப் பலவீனத்தைக் குறித்து நான் அக்கறை கொள்ளாதிருப்பேனோ? யாராவது பாவத்திற்குள் வழிநடத்தப்பட்டால், அதைக்குறித்து என் உள்ளத்தில் கொதிப்படையாதிருப்பேனோ? 1 கொரி 8:131 கொரி 9:22கலா 4:8-201 கொரி 11:221 கொரி 12:261 கொரி 15:12-341 கொரி 15:361 கொரி 5:1-5
நான் பெருமைபாராட்ட வேண்டுமானால், எனது பலவீனத்தைக் காண்பிக்கும் காரியங்களைக்குறித்தே நான் பெருமைபாராட்டுவேன். 2 கொரி 12:5-111 கொரி 2:3எரே 9:23-24நீதி 25:272 கொரி 11:16-182 கொரி 12:1நீதி 27:2கொலோ 1:24 இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர். எபே 1:3ரோம 9:51 பேது 1:32 கொரி 1:3கொலோ 1:3யோவா 10:30ரோம 1:25ரோம 15:6 தமஸ்குவில் அரேத்தா அரசனின் கீழே ஆளுநராய் இருந்தவன், என்னைக் கைதுசெய்வதற்காக தமஸ்கருடையப் பட்டணத்தைச் சுற்றிக் காவல் ஏற்படுத்தியிருந்தான். 2 கொரி 11:26அப் 9:24-25 ஆனால் சிலர் என்னை ஒரு கூடையில் வைத்து, பட்டணத்து மதிலிலிருந்த, ஒரு ஜன்னலின் வழியாக என்னை இறக்கிவிட்டார்கள். இவ்விதம் அந்த ஆளுநரின் கைக்கு நான் தப்பினேன். அப் 9:251 சாமு 19:12யோசு 2:18