நீதிமொழிகள் 31

Proverbs 31

அரசன் லேமுயேலின் வார்த்தைகள்

அரசன் லேமுயேலின் வார்த்தைகள்: இது அவனுடைய தாயினால் அவனுக்குப் போதிக்கப்பட்ட இறைவாக்கு. நீதி 6:202 தீமோ 1:5நீதி 1:82 தீமோ 3:15நீதி 30:1

என் மகனே! என் கர்ப்பத்தின் மகனே! ஏசா 49:151 சாமு 1:111 சாமு 1:28

நேர்த்திக்கடன் மூலம் நான் பெற்ற மகனே! கேள்,

நீ பெண்களிடம் உன் பெலனைக் கொடுக்காதே, உபா 17:17நெகே 13:26நீதி 7:26-27நீதி 5:9-111 இராஜா 11:1ஓசி 4:11

அரசர்களை அழிப்பவர்களிடம் சேராதே.

லேமுயேலே, திராட்சைமது அருந்துவது அரசர்களுக்கு உகந்ததல்ல, நீதி 20:1பிரச 10:17ஏசா 5:22ஓசி 4:11-121 இராஜா 20:16-20ஆப 2:5தானி 5:2-4எஸ்த 3:15

அது அரசர்களுக்குத் தகுந்ததல்ல,

ஆளுநர்கள் மதுபானத்தை விரும்புவது நல்லதல்ல.

அரசர்கள் குடிப்பதினால் சட்டத்தை மறந்து போவார்கள் ஆப 2:5

ஒடுக்கப்பட்டவர்களின் சட்ட உரிமைகளை வழங்க மறுப்பார்கள்.

அழிந்து போகிறவர்களுக்கு மதுபானத்தைக் கொடு, 1 தீமோ 5:23சங் 104:151 சாமு 1:101 சாமு 30:62இராஜா 4:27யோபு 29:13யோபு 3:20

வேதனையிலுள்ளவர்களுக்கு திராட்சை மதுவைக் கொடு!

அவர்கள் குடித்துத் தங்கள் வறுமையை மறக்கட்டும், எபே 5:18

தங்கள் துயரத்தை ஒருபோதும் நினையாதிருக்கட்டும்.

தங்களுக்காகப் பேச முடியாதவர்களுக்காகப் பேசு, சங் 82:3-4நீதி 24:11-12எஸ்த 4:13-16எரே 26:24எரே 38:7-10யோபு 29:12-17எரே 26:16-19யோவா 7:51

ஆதரவற்றோர்களின் உரிமைகளுக்காகப் பேசு.

அவர்களுக்காகப் பேசி, நியாயமாகத் தீர்ப்பு வழங்கு; ஏசா 1:17ஆமோ 5:11-12லேவி 19:15உபா 1:16யோபு 29:15-16எரே 22:3தானி 4:27ஏசா 1:23

ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்களின் உரிமைகளைக் காப்பாற்று.

முடிவுரை: நற்குணமுடைய மனைவி

நற்குணமுடைய மனைவியை யாரால் கண்டடைய முடியும்? நீதி 19:14நீதி 12:4நீதி 18:22எபே 5:25-33நீதி 3:15உன்னத 6:8-9ரூத் 3:11பிரச 7:28

அவள் மதிப்போ பவளக்கற்களைவிட மிகவும் உயர்ந்தது.

அவளின் கணவன் அவளில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறான்; 1 பேது 3:1-72இராஜா 4:22-232இராஜா 4:9-10

அவனுக்கு செல்வாக்கு குறையாது.

அவள் தன் வாழ்நாட்கள் முழுவதும் 1 சாமு 25:18-221 சாமு 25:26-27

அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே கொண்டுவருகிறாள்.

அவள் கம்பளியையும் சணலையும் தெரிந்தெடுத்து, 1 தீமோ 5:10தீத் 2:52 தெச 3:10-12அப் 9:39-40ஆதி 18:6-8ஆதி 24:13-14ஆதி 24:18-20ஆதி 29:9-10

மிக ஆர்வத்துடன் தன் கைகளினால் வேலை செய்கிறாள்.

அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை 1 இராஜா 9:26-28எசேக் 27:3-36நீதி 31:242 நாளாக 9:10

ஏற்றிவரும் வியாபாரக் கப்பலைப்போல் இருக்கிறாள்.

அவள் விடியுமுன்னே இருட்டோடே எழும்புகிறாள்; ரோம 12:11லூக் 12:42மாற் 1:35நீதி 20:13பிரச 9:102 நாளாக 36:15யோசு 3:1சங் 119:147-148

அவள் தன் குடும்பத்திற்கு உணவை ஆயத்தப்படுத்தி,

தன் வேலைக்காரிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறாள்.

அவள் ஒரு வயலைப்பற்றிக் கருத்தாய் விசாரித்து, அதை வாங்குகிறாள்; மத் 13:44உன்னத 8:12யோசு 15:18

அவள் தன் வருமானத்தினால் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்குகிறாள்.

மிகவும் சுறுசுறுப்புடன் தன் வேலைகளைச் செய்கிறாள்; யோபு 38:31 பேது 1:13எபே 6:101 இராஜா 18:46எபே 6:14லூக் 12:352இராஜா 4:29ஏசா 44:12

அதைச் செய்ய தனது கைகளை பலப்படுத்துகிறாள்.

தன் தொழில் இலாபகரமாய் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறாள்; 1 தெச 2:9மத் 25:3-102 தெச 3:7-9ஆதி 31:40சங் 127:2

அவளுடைய விளக்கு இரவிலும் அணைவதில்லை 1.

அவள் தன் கைகளில் இராட்டினத்தைப் பிடித்துக்கொண்டு, யாத் 35:25-26

தன் விரல்களினால் நூற்பந்தைப் பற்றிக்கொள்கிறாள்.

அவள் ஏழைகளுக்குத் தன் கைகளைத் திறந்து, எபே 4:28எபி 13:16நீதி 19:17நீதி 22:9அப் 20:34-35உபா 15:11சங் 41:1ரோம 12:13

தேவையுள்ளோர்களுக்குத் தன் உதவிக் கரத்தை நீட்டுகிறாள்.

அவளின் வீட்டார் எல்லோருக்கும் குளிர்க்கால உடை இருப்பதால், ஆதி 45:222 சாமு 1:24நீதி 25:20

உறைபனிக்காலம் வரும்போது அவள் பயப்படமாட்டாள்.

அவள் தனது படுக்கைக்குரிய போர்வையைத் தானே நெய்கிறாள்; வெளி 19:8ஆதி 41:42நீதி 7:161 பேது 3:3எஸ்த 8:15எசேக் 16:10-13நியாயாதி 8:26சங் 45:13-14

சிறந்த பட்டாடை மற்றும் பலவண்ண உடைகளையும் உடுத்திக்கொள்கிறாள்.

அவளுடைய கணவன் பட்டண வாசலில், நீதி 12:4ரூத் 4:1உபா 16:18உபா 21:19யோபு 29:7நீதி 24:7ரூத் 4:11

குடிமக்களின் தலைவர்களோடு உட்கார்ந்திருக்கையில் மதிக்கப்படுகிறான்.

அவள் சிறந்த பட்டாடைகளை நெய்து அவற்றை விற்கிறாள், எசேக் 27:16லூக் 16:191 இராஜா 10:28நியாயாதி 14:12நீதி 31:13நீதி 31:19

அவள் இடைக் கச்சைகளையும் செய்து வியாபாரிகளுக்கு விநியோகம் செய்கிறாள்.

அவள் பெலத்தையும் கவுரவத்தையும் உடுத்தியிருக்கிறாள்; யோபு 40:10ரோம 13:141 தீமோ 2:10எபே 4:24ஏசா 61:10யோபு 29:141 பேது 5:5-6சங் 132:9

வருங்காலத்தை மகிழ்வுடன் எதிர்நோக்குகிறாள்.

அவள் ஞானமாய்ப் பேசுகிறாள், எபே 4:29நீதி 16:24நீதி 10:31நீதி 12:181 பேது 3:4-5கொலோ 4:5நீதி 31:8-91 பேது 3:8-9

அவளுடைய நாவில் தயவான அறிவுரைகள் இருக்கின்றன.

அவள் தன் வீட்டுக் காரியங்கள்மேல் எப்போதும் அக்கறையாயிருக்கிறாள்; 1 தீமோ 5:10தீத் 2:42 தெச 3:6நீதி 14:11 தெச 4:11

அவள் சோம்பலாயிருந்து உணவுக்காக எதிர்பார்த்து இருப்பதில்லை.

அவளுடைய பிள்ளைகள் எழுந்து அவளை, “ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்கிறார்கள்; 2 தீமோ 1:52 தீமோ 3:15-171 இராஜா 2:19நீதி 31:1சங் 116:16ஏசா 62:4-5உன்னத 7:1-9

அவளுடைய கணவனும் அவளை இப்படிப் புகழ்கிறான்:

“அநேகம் பெண்கள் சிறப்பான செயல்களைச் செய்கிறார்கள், உன்னத 6:8-9எபே 5:27

ஆனால் நீயோ அவர்கள் எல்லோரிலும் உயர்வானவள்.”

கவர்ச்சித் தோற்றம் வஞ்சகமானது, அழகும் அழிந்துபோகும்; நீதி 1:71 பேது 3:4-5நீதி 11:22நீதி 8:131 பேது 1:241 கொரி 4:5எஸ்த 1:11-12சங் 147:11

ஆனால் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெண்ணே புகழப்படத்தக்கவள்.

அவளுடைய கைகளின் பலனுக்காக அவளைப் பாராட்டுங்கள், சங் 128:2எபி 6:10மத் 7:16வெளி 14:13ரோம 16:1-4பிலி 4:17நீதி 11:30நீதி 31:16

அவளுடைய செயல்கள் பட்டண வாசலில் அவளுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.