சகரியா 8

Zechariah 8

எருசலேமுக்கு ஆசீர்வாதம்

சேனைகளின் யெகோவாவின் வார்த்தை திரும்பவும் எனக்கு வந்தது.

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சீயோனில் உள்ள அன்பில் நான் வைராக்கியமாய் இருக்கிறேன்; அவளைக் குறித்த அன்பு வைராக்கியத்தினால் அவளுடைய பகைவருடன் கடுங்கோபமாயிருக்கிறேன்.” யோவே 2:18சங் 78:58-59சகரி 1:14-16ஏசா 42:13-14நாகூ 1:2எசேக் 36:5-6ஏசா 59:17ஏசா 63:15

யெகோவா சொல்வது இதுவே: “நான் சீயோனுக்குத் திரும்பிவந்து எருசலேமில் குடிகொள்வேன். அப்பொழுது எருசலேம், சத்தியத்தின் நகரம் என்றும், சேனைகளின் யெகோவாவின் மலை, பரிசுத்த மலை என்றும் அழைக்கப்படும்.” யோவா 1:14சகரி 1:162 கொரி 6:16கொலோ 2:9எபே 2:21-22ஏசா 1:26ஏசா 66:20எரே 30:10-11

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “மறுபடியும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதுள்ள ஆண்களும், பெண்களும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களுடைய முதிர்வயதின் காரணமாக அவர்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும் ஊன்றுகோல் இருக்கும். ஏசா 65:20-22யோபு 42:171 சாமு 2:31எபி 12:22யோபு 5:26புலம் 5:11-15புலம் 2:20-22 நகர வீதிகள், விளையாடுகிற சிறுவர்களாலும், சிறுமிகளாலும் நிறைந்திருக்கும்.” எரே 31:13எரே 30:19-20எரே 31:27எரே 33:11புலம் 2:19மத் 11:16-17சங் 128:3-4சங் 144:12-15

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அந்நாட்களில் இந்த மக்களில் மீதியாய் இருப்பவர்களுக்கு இவையெல்லாம் புதுமையாய்த் தோன்றும். எனினும் இவை என் பார்வையில் புதுமையானவை அல்ல” என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். எரே 32:27லூக் 1:37லூக் 18:27ரோம 4:20-212இராஜா 7:2ஆதி 18:14எரே 32:17லூக் 1:20

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நிச்சயமாகவே நான் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நாடுகளிலிருந்து என் மக்களை மீட்பேன். எரே 31:8ஆமோ 9:14-15ஏசா 27:12-13ஏசா 43:5-6ஏசா 49:12மல்கி 1:11எசேக் 37:19-25ஓசி 11:10-11 நான் மறுபடியும் அவர்களை எருசலேமில் குடியிருப்பதற்கு அழைத்து வருவேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு உண்மையும் நீதியுமுள்ள இறைவனாய் இருப்பேன்.” எசேக் 36:28எசேக் 11:20எரே 31:33எரே 4:2வெளி 21:3வெளி 21:72 கொரி 6:16-18சகரி 13:9

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சேனைகளின் யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரமிட்ட நாட்களில் இருந்த இறைவாக்கினர்களான ஆகாய், சகரியாவினால் சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்பொழுது நினைவுகூருங்கள். ‘ஆலயம் கட்டப்படும்படிக்கு உங்கள் கைகள் பெலனடையட்டும்’ என்று சொன்னார்கள். ஏசா 35:41 நாளாக 22:132 தீமோ 2:1எபே 6:10எஸ்றா 5:1-2ஆகா 2:211 நாளாக 28:20ஆகா 1:1 அந்த நாட்களுக்கு முன்னர் மனிதனுக்கோ, சுமை சுமக்கும் மிருகத்திற்கோ கூலி கொடுக்கப்படவில்லை. ஒருவனாலும் தன் எதிரியின் நிமித்தம், பாதுகாப்பாகத் தன் தொழிலுக்குச் செல்லவும் முடியாதிருந்தது. ஏனெனில், ஒவ்வொருவனையும் அவன் அயலவனுக்கு எதிராக, நானே திருப்பிவிட்டிருந்தேன். ஆகா 1:6-11ஆமோ 9:4ஏசா 19:2ஆமோ 3:6ஆகா 2:16-18நியாயாதி 5:11நியாயாதி 5:6-7எரே 16:16 ஆனால் இப்பொழுதோ நான் இந்த மக்களில் மீதியாயிருப்போரை, முந்தைய நாட்களில் நடத்தியதுபோல நடத்தப் போவதில்லை” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். ஏசா 12:1ஆகா 2:19சங் 103:9சகரி 8:8-9ஏசா 11:13மல்கி 3:9-11

“இனி விதை நன்கு வளரும், திராட்சைக்கொடி தன் பலனைக் கொடுக்கும், நிலம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும்; வானங்கள் பனியைப் பெய்யும், மீதியாயிருக்கும் மக்களுக்கு நான் இவைகளையெல்லாம் சொத்துரிமையாகக் கொடுப்பேன். லேவி 26:4-5உபா 33:13ஆதி 27:28மத் 6:33எசேக் 34:26-27எசேக் 36:30ஆகா 1:10ஆகா 2:19 யூதாவே, இஸ்ரயேலே, நீங்கள் நாடுகளுக்கிடையில் சாபத்துக்குரியவர்களாய் இருந்தீர்கள். ஆனால் நான் உங்களை மீட்பேன், இப்பொழுதோ நீங்கள் ஒரு ஆசீர்வாதமாயிருப்பீர்கள். பயப்படவேண்டாம், உங்கள் கைகளைப் பெலப்படுத்தி ஆலய கட்டிடவேலையில் ஈடுபடுங்கள்.” 1 கொரி 16:13ஆதி 12:2-3சங் 72:17சகரி 8:9செப்ப 3:20எசேக் 5:15ரூத் 4:11-12கலா 3:28-29

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “கடந்த வருடங்களில் உங்கள் முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டிய போது உங்கள்மேலும் தீங்கு வருவிக்கத் தீர்மானித்து, இரக்கம் காட்டாதிருந்தேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். எசேக் 24:14எரே 31:28எரே 4:282 நாளாக 36:16ஏசா 14:24எரே 15:1-6எரே 20:16சங் 33:11 “அதேபோல நான் இப்பொழுது யூதாவுக்கும், எருசலேமுக்கும் திரும்பவும் நன்மை செய்வது எனத் தீர்மானித்துள்ளேன். நீங்கள் பயப்படவேண்டாம். நான் அதை நிச்சயம் செய்வேன். சகரி 8:13மீகா 7:18-20லூக் 12:32எரே 29:11-14எரே 32:42மீகா 4:10-13ஏசா 43:1-2செப்ப 3:16-17 ஆனால் நீங்கள் செய்ய வேண்டியவை இவைகளே: நீங்கள் ஒருவரோடு ஒருவர் உண்மையையே பேசுங்கள்; நீதிமன்றங்களில் உண்மையாயும், நீதியாயும் தீர்ப்பு வழங்குங்கள். எபே 4:25சகரி 7:9சங் 15:2உபா 10:12-13லூக் 3:8-14ஏசா 9:7மத் 5:9நீதி 12:17 உங்கள் அயலவனுக்கு எதிராகத் சதித்திட்டம் வகுக்க வேண்டாம். பொய் சத்தியம் செய்ய பிரியப்பட வேண்டாம். இவையனைத்தையும் நான் வெறுக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். நீதி 6:16-19ஆப 1:13எரே 4:14எரே 44:4மல்கி 3:5மீகா 2:1-3நீதி 3:29சங் 10:3

சேனைகளின் யெகோவாவின் வார்த்தை திரும்பவும் எனக்கு வந்தது.

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நான்காம், ஐந்தாம், ஏழாம், பத்தாம் மாதங்களில் நீங்கள் செய்யும் உபவாசங்கள், யூதாவுக்கு சந்தோஷத்தை உண்டாக்குகிற கொண்டாட்டங்களாகவும், மகிழ்ச்சி தரும் பண்டிகைகளாகவும் மாறும். ஆதலால் உண்மையையும், சமாதானத்தையும் விரும்புங்கள்.” எரே 39:2சகரி 8:16சகரி 7:3சகரி 7:52இராஜா 25:25எரே 52:4சங் 30:112இராஜா 25:3-4

மேலும் சேனைகளின் யெகோவா சொல்வதாவது: “பல மக்கள் கூட்டங்களும், பல நகரக் குடிகளும் இன்னும் வருவார்கள். ஏசா 2:2-3மீகா 4:1-2சகரி 2:11ஏசா 60:3-12எரே 16:19மத் 8:111 இராஜா 8:411 இராஜா 8:43 அப்பொழுது ஒரு நகரத்தின் குடிகள் இன்னொரு நகரத்திற்குப் போய், ‘சேனைகளின் யெகோவாவைத் தேடவும், யெகோவாவின் தயவுக்காக அவரை மன்றாடவும், நாங்கள் போகிறோம். நீங்களும் வாருங்கள். உடனே போவோம்’ என்று சொல்வார்கள். சகரி 7:2சங் 146:1-2ஓசி 6:3சங் 103:22சங் 122:1-9 எனவே அநேக மக்கள் கூட்டங்களும், வலிமைவாய்ந்த நாடுகளும் சேனைகளின் யெகோவாவின் சமுகத்தைத் தேடவும், அவரிடம் தயவை நாடி மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.” சகரி 8:21ஏசா 25:7ஏசா 60:3-22வெளி 15:4வெளி 21:24கலா 3:8ஏசா 55:5ஆகா 2:7

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அந்நாட்களில் பல மொழிகளைப் பேசுவோரிலும் பல மக்களிலுமிருந்து பத்து மனிதர்கள் ஒரு யூதனின் உடையின் தொங்கலைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, ‘இறைவன் உம்மோடிருக்கிறார் எனக் கேள்விப்பட்டோம்; அதனால் நாங்களும், உம்முடனே எருசலேமுக்கு வருகிறோம், என்று சொல்வார்கள்.’ ” ஏசா 55:51 கொரி 14:25ஏசா 45:14ஏசா 60:3அப் 13:47-481 இராஜா 8:42-43ஏசா 66:18யோசு 2:9-13