எருசலேமின் எதிர்காலம்
கலகம் செய்கிறவர்களும், கறைப்பட்டவர்களும், எரே 6:6ஏசா 30:12ஏசா 59:13எசேக் 22:7மல்கி 3:5சகரி 7:10ஏசா 5:7எரே 22:17
அடக்கி ஒடுக்குகிறவர்களும் வாழும் நகரமே! உனக்கு ஐயோ கேடு.
அவள் ஒருவருக்கும் கீழ்ப்படிய மாட்டாள், எரே 22:21எரே 5:3எரே 7:23-28சங் 73:28சங் 78:22உபா 28:15-68ஏசா 29:13ஏசா 43:22
அவள் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.
அவள் யெகோவாவை நம்புவதில்லை,
அவள் தனது இறைவனிடத்தில் நெருங்குவதுமில்லை.
அவளுடைய அதிகாரிகள் ஆப 1:8எசேக் 22:25-27எரே 5:6எசேக் 22:6ஏசா 1:23எரே 22:17யோபு 4:8-11மீகா 3:1-4
கெர்ச்சிக்கும் சிங்கங்கள்.
அவளுடைய ஆளுநர்கள் மாலை நேரத்து ஓநாய்கள்.
காலைப்பொழுதிற்காக ஒன்றையும் விட்டுவைக்காத ஓநாய்கள்.
அவளுடைய இறைவாக்கினர் அகந்தை உடையவர்கள்; எசேக் 22:26ஓசி 9:7புலம் 2:14மல்கி 2:8ஏசா 56:10-12ஏசா 9:15எரே 23:25-27எரே 5:31
அவர்கள் துரோகிகள்.
அவளுடைய ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தை கறைப்படுத்தி,
சட்டத்தை மீறுகிறார்கள்.
இன்னும் அவள் நடுவில் இருக்கும் யெகோவா நீதியுள்ளவர்; உபா 32:4புலம் 3:23சங் 145:17செப்ப 3:15உபா 23:14ஏசா 12:6ஏசா 28:19செப்ப 3:17
அவர் அநியாயம் செய்வதில்லை;
அவர் காலைதோறும் தமது நீதியை வெளிப்படுத்துகிறார்.
அவர் ஒவ்வொரு புதிய நாளிலும் தவறாமல் அதை வெளிப்படுத்துகிறார்,
ஆயினும் நீதியற்றவர்கள் தங்கள் தீமையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்;
அவர்கள் வெட்கத்தை அறியமாட்டார்கள்.
எருசலேம் மனந்திரும்பாமல் உள்ளது
நான் நாடுகள் பலவற்றை முழுவதும் தண்டித்துப்போட்டேன்; 1 கொரி 10:6செப்ப 2:51 கொரி 10:11ஏசா 37:24-26எரே 25:9-11ஏசா 10:1-34ஏசா 15:1-9ஏசா 19:1-25
அவர்களின் கோட்டைகள் அழிக்கப்பட்டுவிட்டன.
நான் அவர்களின் வீதிகளில் யாரும் கடந்துபோகாதபடி,
அவற்றை வெறிச்சோடப் பண்ணினேன்.
அவர்களுடைய பட்டணங்கள் அழிக்கப்பட்டன;
ஒருவரும் மீந்திருக்கவில்லை. நடந்ததைச் சொல்வதற்குக்கூட ஒருவருமே இல்லை.
எனவே நான் எருசலேம் பட்டணத்தைப் பார்த்து, ஓசி 9:9எரே 36:3எரே 25:5எரே 7:7மீகா 2:1-2செப்ப 3:22 நாளாக 28:6-82 நாளாக 32:1-2
“நிச்சயமாக நீ என்னில் பயமுள்ளவளாயிரு,
என் சீர்திருத்தலை ஏற்றுக்கொள்!” என்று சொன்னேன்.
அப்போது அவளுடைய குடியிருப்பு அகற்றப்படுவதில்லை.
என் தண்டனைகள் எல்லாம் அவள்மேல் வருவதில்லை என நான் எண்ணினேன்.
ஆனால் அவர்களோ தாங்கள் செய்த எல்லாத் தீமையான செயல்கள்மீதும்,
இன்னும் வாஞ்சையாயிருந்தார்கள்.
ஆகவே, “நான் எழுந்து குற்றஞ்சுமத்தும் நாள் வருமளவும் யோவே 3:2செப்ப 1:18மீகா 7:7சங் 27:142 பேது 3:10சகரி 14:2-3ஆப 2:3ஓசி 12:6
நீ எனக்காகக் காத்திரு” என்று யெகோவா அறிவிக்கிறார்.
நான் எல்லா நாடுகளையும்
அரசுகளையும் ஒன்றுகூட்டி,
என் கடுங்கோபத்தை
அவர்கள்மேல் ஊற்றுவதற்குத் தீர்மானித்துள்ளேன்.
அப்பொழுது என் வைராக்கியமான கோபத்தின் நெருப்பினால்
முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.
இஸ்ரயேலின் சிதறியதாக மறுசீரமைப்பு
நான் அவ்வேளையில் மக்கள் கூட்டங்களின் உதடுகளைத் தூய்மைப்படுத்துவேன். ஆதி 11:1ஏசா 19:18சங் 22:27சங் 86:9-10சகரி 2:11அப் 2:4-13ஆப 2:14சகரி 8:20-23
அவர்கள் யாவரும், யெகோவாவின் பெயரை வழிபட்டு,
தோளுக்குத் தோள்கொடுத்து பணிசெய்வார்கள்.
எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால் இருக்கிற என்னை ஆராதிக்கிறவர்களான, ஏசா 11:11சங் 68:31ஏசா 18:11 பேது 1:1ரோம 15:16அப் 24:17அப் 8:27ஏசா 18:7
சிதறுண்ட என் மக்கள்,
எனக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.
அந்த நாளில் தங்கள் பெருமையில் களிகூருகிற ஏசா 54:4ஏசா 11:9யோவே 2:26-27ஏசா 61:71 பேது 2:6தானி 9:16ஏசா 45:17எரே 7:4
அனைவரையும் இந்த பட்டணத்திலிருந்து அகற்றிப்போடுவேன்.
அதனால் நீங்கள் எனக்குச் செய்த எல்லா அநியாயங்களுக்காகவும்
நீங்கள் வெட்கப்பட மாட்டீர்கள்.
இனி ஒருபோதும் என் பரிசுத்த மலையில் நீங்கள்
அகந்தையுள்ளவர்களாய் இருக்கமாட்டீர்கள்.
எனினும் யெகோவாவின் பெயரில் நம்பிக்கை கொண்டிருக்கிற, ஏசா 14:32நாகூ 1:7ஏசா 61:1-3சகரி 13:8-9ஏசா 50:10மத் 5:3யாக் 2:51 கொரி 1:27-28
சாந்தகுணமுள்ளோரையும்,
தாழ்மையுள்ளோரையும்
உன் பட்டணத்தின் நடுவில் மீதியாக விட்டுவைப்பேன்.
இஸ்ரயேலில் மீந்திருப்போர் வெளி 14:5ஏசா 60:21மீகா 4:7செப்ப 2:7எசேக் 34:13-15மீகா 4:4ஏசா 17:2யோவா 1:47
அநியாயம் செய்யமாட்டார்கள்;
அவர்கள் பொய் பேசமாட்டார்கள்;
அவர்களின் வாயில் வஞ்சகம் காணப்படுவதுமில்லை.
அவர்கள் சாப்பிட்டு படுத்திருப்பார்கள்.
ஒருவரும் அவர்களைப் பயமுறுத்தமாட்டார்கள்.
சீயோன் மகளே, பாடு; இஸ்ரயேலே, ஏசா 12:6மீகா 4:8சகரி 2:10-11ஏசா 65:18-19சங் 95:1-2சகரி 9:9-10ஏசா 24:14-16ஏசா 35:2
பலமாய்ச் சத்தமிடு;
எருசலேம் மகளே,
உன் முழு உள்ளத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
யெகோவா உன் தண்டனையை நீக்கிப்போட்டார், ஏசா 51:22ஏசா 60:18ஆமோ 9:15செப்ப 3:5எசேக் 39:29ஆதி 30:23ஏசா 40:1-2எசேக் 37:24-28
அவர் உன் பகைவரைத் துரத்திவிட்டார்.
இஸ்ரயேலின் அரசனாகிய யெகோவாவே உன்னுடன் இருக்கிறார்;
நீ இனி ஒருபோதும் எவ்வித தீங்கைக் குறித்தும் பயப்படமாட்டாய்.
அந்த நாளில் எபி 12:12ஏசா 35:3-4ஏசா 41:10எபே 3:13கலா 6:92 கொரி 4:1ஏசா 44:2வெளி 2:3
அவர்கள் எருசலேமைப் பார்த்துச் சொல்வதாவது,
“சீயோனே, பயப்படாதே;
உன் கைகளைச் சோர்ந்துபோக விடாதே.
உன் இறைவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார். சங் 149:4சங் 147:11எபி 7:25ஏசா 62:4-5எரே 32:41ஏசா 12:2செப்ப 3:15உபா 30:9
அவர் உன்னை இரட்சிக்க வல்லவர்.
உன்னில் அவர் மகிழ்ந்து களிகூருவார்.
அவர் தம்முடைய அன்பினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார்.
அவர் உன்னைக்குறித்துப் பாடல்களுடன் மகிழ்வார்.”
“நியமிக்கப்பட்ட உங்கள் பண்டிகைகளை இழந்ததால் நீங்கள் அடைந்த துக்கத்தை, சங் 42:2-4எசேக் 36:24எரே 23:3எரே 31:8-9புலம் 1:4புலம் 2:6-7செப்ப 3:20எசேக் 34:13
நான் உங்களைவிட்டு நீக்குவேன்.
அவை உங்களுக்குப் பாரமாயும் நிந்தையாயும் இருக்கின்றன.
அக்காலத்தில் உன்னை ஒடுக்கிய அனைவரையும் நான் தண்டிப்பேன். ஏசா 49:25-26ஏசா 60:14எரே 30:16செப்ப 3:15மீகா 7:10ஏசா 61:7எசேக் 34:16மீகா 4:6-7
முடமானவர்களைத் தப்புவித்துச்
சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன்.
அவர்கள் வெட்கத்திற்குள்ளான
நாடுகளில் எல்லாம் அவர்களுக்குப் புகழ்ச்சியையும்,
மேன்மையையும் கொடுப்பேன்.
அக்காலத்தில் நான் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; மல்கி 3:12எரே 29:14ஏசா 56:5ஏசா 60:15ஆமோ 9:14யோவே 3:1எசேக் 34:16ஏசா 66:22
அக்காலத்தில் நான் உங்களை உங்கள் வீட்டிற்குக் கொண்டுவருவேன்.
உங்கள் கண்களுக்கு முன்பாக நீங்கள் இழந்த செல்வங்களையும்
நாடுகடத்தப்பட்டு வந்த மக்களையும் நான் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன்.
அப்போது பூமியின் மக்கள் அனைவருக்குள்ளும் உங்களுக்குப் புகழ்ச்சியையும்,
மேன்மையையும் கொடுப்பேன்
என யெகோவா சொல்கிறார்.”