திருமணத்தைக்குறித்த போதனைகள்
நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது. 1 கொரி 7:81 கொரி 7:26-27மத் 19:10-111 கொரி 7:37-38ஆதி 20:6நீதி 6:29ரூத் 2:9 ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும். எபே 5:28எபே 5:331 கொரி 7:9நீதி 18:22நீதி 5:18-191 கொரி 6:18மல்கி 2:14நீதி 19:14 கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யவேண்டும்; அப்படியே மனைவியும் தன் கணவனுக்குச் செய்யவேண்டும். 1 பேது 3:7யாத் 21:10 மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. ஓசி 3:3மத் 19:9மாற் 10:11-12 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள். யாத் 19:15யோவே 2:161 சாமு 21:4-5சகரி 12:12-141 தெச 3:5மத் 19:11மத் 4:10சகரி 7:3 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், ஆலோசனையாகச் சொல்லுகிறேன். 2 கொரி 8:81 கொரி 7:251 கொரி 7:122 கொரி 11:17 எல்லா மனிதர்களும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது. மத் 19:11-121 கொரி 7:81 கொரி 9:5ரோம 12:61 கொரி 12:41 கொரி 12:11அப் 26:291 கொரி 9:15 திருமணம் செய்யாதவர்களையும், விதவை பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாக இருக்கும். 1 கொரி 7:321 கொரி 7:34-351 கொரி 7:26-271 கொரி 7:71 கொரி 7:1 ஆனாலும் அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் திருமணம்செய்துகொள்ளக்கடவர்கள்; வேகிறதைவிட திருமணம்செய்கிறது நல்லது. 1 கொரி 7:21 தீமோ 5:141 தீமோ 5:111 கொரி 7:281 கொரி 7:361 கொரி 7:39 திருமணம்செய்துகொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது. மத் 5:32லூக் 16:18மல்கி 2:14-16மத் 19:3-9மாற் 10:11-121 கொரி 7:15எரே 3:201 கொரி 7:12 பிரிந்துபோனால் அவள் திருமணம் செய்யாதிருக்கவேண்டும், அல்லது கணவனோடு சமாதானமாகவேண்டும்; கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது. எரே 3:11 கொரி 7:10உபா 22:19ஏசா 50:1நியாயாதி 19:2-3மாற் 10:2 மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். 1 கொரி 7:62 கொரி 11:171 கொரி 7:25எஸ்றா 10:11-19எஸ்றா 10:2-3 அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். ஏனென்றால், விசுவாசம் இல்லாத கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் இல்லாத மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் அசுத்தமாக இருக்குமே; இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள். மல்கி 2:15-161 தீமோ 4:5ஏசா 52:1தீத் 1:15ரோம 11:161 கொரி 6:15-17எஸ்றா 9:1-2அப் 10:23 ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். ரோம 14:19யாக் 3:17-182 கொரி 13:111 கொரி 14:33மத் 12:50ரோம 12:18கலா 5:22எபி 12:14 மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? 1 பேது 3:1-21 கொரி 9:22ரோம 11:141 தீமோ 4:16யாக் 5:19-20லூக் 15:10நீதி 11:30 தேவன் அவனவனுக்குப் பங்களித்தது எப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கவேண்டும். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம் செய்கிறேன். 1 கொரி 4:171 கொரி 7:241 கொரி 7:20-21ரோம 12:3-81 கொரி 7:182 கொரி 11:282 கொரி 8:181 கொரி 7:7 ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாக இருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக. அப் 15:5அப் 15:19அப் 15:24அப் 15:28கொலோ 3:11கலா 5:1-3அப் 15:1-2 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதே முக்கியமான காரியம். கலா 5:6கலா 6:151 யோவா 2:3-41 யோவா 3:22-24ரோம 2:25-29கொலோ 3:11வெளி 22:141 கொரி 8:8 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கவேண்டும். 1 கொரி 7:171 தெச 4:111 கொரி 7:21-242 தெச 3:12நீதி 27:8லூக் 3:10-14 அடிமையாக நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ விடுதலையாக முடியுமானால், அதை செய். 1 பேது 2:18-24கொலோ 3:111 கொரி 12:13லூக் 10:40-41லூக் 12:291 பேது 5:7கலா 3:28எபி 13:5 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய விடுதலைபெற்றவனாக இருக்கிறான்; அப்படியே விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்ட விடுதலைபெற்றவன் கிறிஸ்துவினுடைய அடிமையாக இருக்கிறான். 1 பேது 2:16பிலே 1:16கொலோ 3:22-24கலா 5:1கலா 5:13ரோம 6:18-222 பேது 1:1சங் 116:16 நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்; மனிதர்களுக்கு அடிமைகளாகாமல் இருங்கள். 1 கொரி 6:201 பேது 1:18-19தீத் 2:14லேவி 25:42வெளி 5:91 பேது 3:18அப் 20:28கலா 2:4 சகோதரர்களே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்குமுன்பாக நிலைத்திருக்கவேண்டும். 1 கொரி 7:20கொலோ 3:23-241 கொரி 7:171 கொரி 10:31ஆதி 17:1ஆதி 5:22-241 சாமு 14:45 அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன். 1 கொரி 7:61 கொரி 4:21 கொரி 7:402 கொரி 8:8-101 கொரி 7:121 கொரி 15:101 கொரி 7:101 கொரி 7:28 அது என்னவென்றால், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் திருமணம் இல்லாமலிருக்கிறது மனிதனுக்கு நலமாக இருக்குமென்று நினைக்கிறேன். 1 கொரி 7:11 கொரி 7:81 பேது 4:17லூக் 23:28-291 கொரி 7:281 கொரி 7:35-38எரே 16:2-4லூக் 21:23 நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே. 1 கொரி 7:12-141 கொரி 7:20 நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்று விரும்புகிறேன். எபி 13:41 கொரி 7:261 கொரி 7:32-362 கொரி 1:23 மேலும், சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போலவும், 1 யோவா 2:171 கொரி 7:31ரோம 13:11-12எபி 13:13-14யாக் 4:13-161 பேது 4:72 பேது 3:8-9பிரச 12:13-14 அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், வாங்குகிறவர்கள் வாங்காதவர்கள்போலவும், பிரச 3:4யோவா 16:22லூக் 6:21லூக் 6:25சங் 126:5-6சங் 30:5வெளி 7:17ஏசா 25:8 இந்த உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாக அனுபவிக்காதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இந்த உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. 1 யோவா 2:171 பேது 4:7யாக் 4:14லூக் 21:341 பேது 1:24பிரச 9:7-101 தீமோ 6:17-18பிரச 1:4 நீங்கள் கவலை இல்லாதவர்களாக இருக்கவிரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். மத் 6:25-341 தீமோ 5:5பிலி 4:6சங் 55:22மத் 13:22 திருமணம் செய்தவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 1 பேது 3:7கொலோ 3:191 தீமோ 5:8எபே 5:25-331 கொரி 7:31 சாமு 1:4-8லூக் 12:22நெகே 5:1-5 அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிப்பெண்ணுக்கும் வித்தியாசமுண்டு. திருமணம் செய்யாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாக இருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; திருமணம் செய்தவள் தன் கணவனுக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். லூக் 10:40-421 கொரி 6:20லூக் 2:36-37ரோம 12:1-22 கொரி 11:28பிலி 1:20ரோம 6:131 தெச 5:23 இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன். 1 கொரி 7:33-341 கொரி 7:36லூக் 8:141 கொரி 7:2பிலி 4:8லூக் 10:40-42லூக் 21:34மத் 19:12 ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும். 1 கொரி 7:371 கொரி 7:91 சாமு 2:33 ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான். இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான். எபி 13:41 கொரி 7:1-21 கொரி 7:32-341 கொரி 7:371 கொரி 7:81 கொரி 7:26 மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் இறந்தபின்பு தனக்கு விருப்பமானவனாகவும் கர்த்தருக்கு உட்பட்டவனாகவும் இருக்கிற யாரையாவது திருமணம் செய்துகொள்ள விடுதலையாக இருக்கிறாள். ரோம 7:2-32 கொரி 6:14-161 கொரி 7:101 கொரி 7:15மல்கி 2:11உபா 7:3-4ஆதி 6:2 ஆனாலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாக இருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவியானவர் உண்டு என்று நினைக்கிறேன். 1 கொரி 7:11 கொரி 7:25-261 கொரி 7:81 கொரி 14:36-371 கொரி 7:351 கொரி 7:61 கொரி 9:1-31 தெச 4:8