விசுவாசிகளிடையே பிரச்சனைகள்
உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடம் போகாமல், அநியாயக்காரர்களிடம் போகத் துணிகிறதென்ன? மத் 18:15-17அப் 19:381 கொரி 14:331 கொரி 16:11 கொரி 6:6-7அப் 18:14-151 கொரி 1:21 கொரி 16:15 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று உங்களுக்குத் தெரியாதா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, சாதாரண வழக்குகளைத் தீர்க்க நீங்கள் தகுதியற்றவர்களா? மத் 19:28தானி 7:22வெளி 20:4லூக் 22:30வெளி 3:21வெளி 2:26-27தானி 7:181 கொரி 6:4 நாம் தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க, இந்த வாழ்க்கைக்குரியவைகளை நீங்கள் நியாயந்தீர்த்துக்கொள்ளமுடியாதிருக்கிறது எப்படி? யூதா 1:6மத் 25:411 கொரி 6:4லூக் 8:142 பேது 2:42 தீமோ 2:42 தீமோ 4:10லூக் 21:34 இந்த வாழ்க்கைக்குரிய வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் சாதாரணமாக எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள். 1 கொரி 5:12அப் 6:2-4 உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க பகுத்தறிவு உள்ளவன் ஒருவன்கூட உங்களுக்குள் இல்லையா? 1 கொரி 15:341 கொரி 4:14யாக் 3:13-181 கொரி 11:141 கொரி 3:181 கொரி 4:10யாக் 1:5நீதி 14:8 சகோதரனோடு சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச்செய்கிறான். பிலி 2:14-151 யோவா 2:9-111 யோவா 3:11-152 கொரி 6:141 கொரி 6:11 கொரி 6:7அப் 7:26ஆதி 13:7-9 நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எல்லாவிதத்திலும் குற்றமாக இருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை? ரோம 12:17-19நீதி 20:221 பேது 2:19-231 பேது 3:9மத் 5:39-41யாக் 4:1-31 தெச 5:15லூக் 6:29 நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; உங்கள் சகோதரர்களுக்கும் அப்படிச் செய்கிறீர்களே. 1 தெச 4:6கொலோ 3:25யாக் 5:4லேவி 19:13மல்கி 3:5மீகா 2:2மாற் 10:19 அநியாயக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாமலிருங்கள்; வேசிமார்க்கத்தார்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், விபசாரக்காரர்களும், சுயபுணர்ச்சிக்காரர்களும், ஆண்புணர்ச்சிக்காரர்களும், 1 தீமோ 1:9-10கலா 5:19-21எபே 5:4-5லேவி 20:13லேவி 18:22வெளி 21:8வெளி 22:151 கொரி 6:10 திருடர்களும், பொருளாசைக்காரர்களும், வெறியர்களும், உதாசினக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. 1 கொரி 5:11கலா 5:21எபே 4:28எசேக் 22:291 பேது 4:15எசேக் 22:27மத் 23:331 தெச 4:6 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாக இருந்தீர்கள்; ஆனாலும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவ ஆவியானவராலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். 1 கொரி 1:30கொலோ 3:5-71 கொரி 1:2ரோம 6:17-19அப் 22:161 பேது 1:2ரோம 8:30தீத் 3:3-7
வேசித்தனச் சீர்கேடுகள்
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 1 கொரி 10:23-331 கொரி 9:27எபி 12:15-16ரோம 14:14-231 கொரி 8:7-132 தெச 3:91 கொரி 8:41 கொரி 9:12 வயிற்றுக்கு உணவும், உணவிற்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியச்செய்வார். சரீரமோ வேசித்தனத்திற்கு அல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தர் சரீரத்திற்குரியவைகளைத் தந்தருளுவார். 1 கொரி 6:191 கொரி 3:16ரோம 6:121 கொரி 6:151 தெச 4:3-7எபே 5:23மத் 15:17ரோம 12:1 தேவன் கர்த்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். 2 கொரி 4:14ரோம 8:11எபே 1:19-20பிலி 3:21அப் 2:24யோவா 6:39-40ரோம 6:4-81 தெச 4:14 உங்களுடைய சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யக்கூடாதே. எபே 5:30ரோம 12:5எபே 4:15-16கொலோ 2:191 கொரி 12:27எபே 4:121 கொரி 11:31 கொரி 6:19 வேசியோடு இணைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாக இருக்கிறானென்று உங்களுக்குத் தெரியாதா? இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே. ஆதி 2:24எபே 5:31மாற் 10:8மத் 19:5-6மத் 21:31-32ஆதி 34:31ஆதி 38:24எபி 11:31 அப்படியே கர்த்தரோடு இணைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாக இருக்கிறான். யோவா 17:21-23கலா 2:201 கொரி 12:13எபே 4:3-4யோவா 3:6எபே 5:30பிலி 2:5 வேசித்தனத்திற்கு விலகி ஓடுங்கள். மனிதன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்கு வெளியே இருக்கும்; வேசித்தனம் செய்கிறவனோ தன் சொந்த சரீரத்திற்கு விரோதமாகப் பாவம் செய்கிறான். 1 பேது 2:111 தெச 4:3கொலோ 3:5ரோம 6:12-132 தீமோ 2:22எபி 13:41 கொரி 6:9எபே 5:3 உங்களுடைய சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்றும் உங்களுக்குத் தெரியாதா? 1 கொரி 3:162 கொரி 6:161 பேது 2:5எபே 2:21-221 கொரி 6:15-16சங் 100:3தீத் 2:14ரோம 14:7-9 விலைக்கு வாங்கப்பட்டீர்களே; ஆகவே, தேவனுக்கு உடையவைகளாகிய உங்களுடைய சரீரத்தினாலும் உங்களுடைய ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். 1 கொரி 7:23ரோம 12:11 பேது 2:91 பேது 1:18எபி 9:12பிலி 1:20அப் 20:28கலா 3:13