நாபோத்தின் திராட்சைத்தோட்டம்
இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்திற்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரண்மனையின் அருகில் ஒரு திராட்சைத்தோட்டம் இருந்தது. யோசு 19:181 இராஜா 18:45-462 நாளாக 28:22நியாயாதி 6:331 இராஜா 20:35-431 சாமு 29:1எஸ்றா 9:13-14ஓசி 1:4-5 ஆகாப் நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டம் என்னுடைய வீட்டிற்கு அருகில் இருப்பதால், அதைக் கீரைத்தோட்டமாக்கும்படி எனக்குக் கொடு, அதைவிட நல்ல திராட்சைத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான். 1 சாமு 8:141 தீமோ 6:9யாக் 1:14-151 சாமு 29:61 சாமு 8:62இராஜா 9:27உபா 11:10உபா 5:21 நாபோத் ஆகாபை நோக்கி: நான் என்னுடைய முன்னோர்களின் சுதந்தரத்தை உமக்குத் தராதபடி யெகோவா என்னைக் காப்பாராக என்றான். எண் 36:7லேவி 25:23எசேக் 46:181 நாளாக 11:191 கொரி 6:151 சாமு 12:231 சாமு 24:6கலா 6:14 இப்படி என்னுடைய முன்னோர்களின் சுதந்திரத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடு சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்கு வந்து, சாப்பிட்டாமல், தன்னுடைய கட்டிலின்மேல் படுத்து, தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். 1 இராஜா 20:43யாக் 1:141 இராஜா 21:32 சாமு 13:22 சாமு 13:4பிரச 6:9பிரச 7:8-9எபே 4:27 அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனிடம் வந்து: நீர் சாப்பிடாதபடி, உம்முடைய மனம் சோர்வாக இருப்பது என்ன என்று அவனைக் கேட்டதற்கு, 1 இராஜா 16:311 இராஜா 18:41 இராஜா 19:21 இராஜா 21:252 சாமு 13:4எஸ்த 4:5ஆதி 3:6நெகே 2:2 அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாகக் கொடு; அல்லது உனக்கு பிடித்திருந்தால் அதற்குப் பதிலாக வேறு திராட்சைத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என்னுடைய திராட்சைத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான். 1 இராஜா 21:2-41 தீமோ 6:9-10எஸ்த 5:9-14எஸ்த 6:12யாக் 4:2-7நீதி 14:30 அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்கிறவர் அல்லவா? நீர் எழுந்து சாப்பிட்டு மனமகிழ்ச்சியாக இரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள். 1 இராஜா 21:15-161 சாமு 8:141 சாமு 8:42 சாமு 13:4தானி 5:19-21பிரச 4:1பிரச 8:4மீகா 2:1-2 அவள் ஆகாபின் பெயரால் கடிதங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த கடிதங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடு குடியிருக்கிற மூப்பர்களிடத்திற்கும் பெரியோர்களிடத்திற்கும் அனுப்பினாள். 1 இராஜா 20:71 இராஜா 21:12 நாளாக 32:172இராஜா 10:1-72இராஜா 10:112 சாமு 11:14-15உபா 16:18-19உபா 21:1-9 அந்த கடிதங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி, நாபோத்தை மக்களின் முன்பாக நிறுத்தி, ஏசா 58:4யோவா 18:28லூக் 20:47மத் 2:8மத் 23:13ஆதி 34:13-17 தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற வஞ்சகமான இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படி அவன் மீது கல்லெறியுங்கள் என்று எழுதினாள். யாத் 22:28அப் 6:11லேவி 24:15-16உபா 13:13உபா 19:15அப் 6:13நியாயாதி 19:22யோவா 10:33 அவன் பட்டணத்தில் குடியிருக்கிற மூப்பர்களும் பெரியோர்களுமாகிய அவன் பட்டணத்து மனிதர்கள், யேசபேல் தங்களுக்கு அனுப்பின கடிதங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள். 1 சாமு 22:171 சாமு 23:202 நாளாக 24:212இராஜா 10:6-7அப் 4:19அப் 5:29தானி 3:18-25யாத் 1:17 அவர்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி நாபோத்தை மக்களின் முன்னே நிறுத்தினார்கள். ஏசா 58:41 இராஜா 21:8-10 அப்பொழுது வஞ்சகமான இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று மக்களுக்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படி அவனைக் கல்லெறிந்து, 2இராஜா 9:26அப் 24:5அப் 6:11அப் 7:57-59ஆமோ 7:10உபா 13:10உபா 19:16-21உபா 21:21 பிறகு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியப்பட்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள். 2 சாமு 11:14-24பிரச 5:8பிரச 8:14 நாபோத் கல்லெறியப்பட்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாகக் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடு இல்லை, அவன் செத்துப்போனான் என்றாள். 1 இராஜா 21:7நீதி 1:10-16நீதி 4:17 நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான். 2 பேது 2:152 சாமு 1:13-162 சாமு 11:25-272 சாமு 23:15-172 சாமு 4:9-12ஏசா 33:15ஒபதி 1:12-14சங் 50:18
யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டானது, அவர்: சங் 9:122இராஜா 1:15-162இராஜா 5:26ஏசா 26:21 நீ எழுந்து, சமாரியாவில் இருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான். 1 இராஜா 13:322 நாளாக 22:9 நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று யெகோவா சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். 1 இராஜா 22:382 சாமு 12:92இராஜா 9:25-262 சாமு 12:11எஸ்த 7:10ஆதி 3:11ஆதி 4:9-10ஆப 2:12 அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என்னுடைய பகைவனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய். 2இராஜா 17:17ரோம 7:141 இராஜா 18:171 இராஜா 21:25ஏசா 52:3வெளி 11:101 இராஜா 16:301 இராஜா 22:8 நான் உன்மேல் தீங்கு வரச்செய்து, உன்னுடைய சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாவது இல்லாதபடி இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து, 1 இராஜா 14:101 சாமு 25:221 சாமு 25:342இராஜா 10:1-72இராஜா 10:11-142இராஜா 10:172இராஜா 10:302இராஜா 14:26 நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவம் செய்யச்செய்ததால், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சமமாக்குவேன் என்றார் என்று சொன்னான். 1 இராஜா 16:31 இராஜா 14:161 இராஜா 16:111 இராஜா 12:301 இராஜா 15:29-301 இராஜா 15:341 இராஜா 16:26 யேசேபேலையும் குறித்துக் யெகோவா: நாய்கள் யேசபேலை யெஸ்ரெயேலின் மதில் அருகே தின்னும். 2இராஜா 9:102இராஜா 9:30-371 இராஜா 21:25 ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் சாப்பிடும் என்றார். 1 இராஜா 14:111 இராஜா 16:4எரே 15:3எசேக் 32:4-5எசேக் 39:18-20ஏசா 14:19வெளி 19:18 தன்னுடைய மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. நீதி 22:141 இராஜா 21:201 இராஜா 16:30-33பிரச 7:261 இராஜா 21:7அப் 14:2ரோம 6:191 இராஜா 11:1-4 யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக துரத்திவிட்ட எமோரியர்கள் செய்தபடியெல்லாம், அவன் அருவருப்பான விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் அருவருப்பாய் நடந்துகொண்டான். 2இராஜா 21:11ஆதி 15:16லேவி 18:25-301 இராஜா 15:121 பேது 4:32 நாளாக 15:82 நாளாக 33:22 நாளாக 33:9 ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய சரீரத்தின்மேல் சணலாடையைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்செய்து, சணலாடையில் படுத்துத் தாழ்மையாக நடந்துகொண்டான். 2இராஜா 6:30ஆதி 37:342 சாமு 3:312இராஜா 18:372 சாமு 12:16-17ஏசா 22:12ஏசா 38:15ஏசா 58:5-8 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தியதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறதால், நான் அவனுடைய நாட்களில் அந்த அழிவை வரச்செய்யாமல், அவனுடைய மகனுடைய நாட்களில் அதை அவனுடைய வீட்டின்மேல் வரச்செய்வேன் என்றார். 2 பேது 3:9மீகா 7:182இராஜா 9:25-26சங் 86:152இராஜா 9:332இராஜா 10:11எசேக் 33:10-11சங் 18:44