1 தீமோத்தேயு 6

1 Timothy 6
அத்தியாயம் 6

தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும். 1 பேது 2:17-20எபே 6:5-8தீத் 2:5தீத் 2:8-101 கொரி 7:21-22ரோம 2:24கொலோ 3:22-25மல்கி 1:6 விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்களுடைய எஜமான்கள் சகோதரர்களாக இருப்பதினால் அவர்களை அசட்டைபண்ணாமல், நல்ல வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் விசுவாசிகளும், பிரியமுள்ளவர்களுமாக இருப்பதினால் அவர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்யுங்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு. 1 தீமோ 4:11கொலோ 4:1ஆதி 16:4-51 பேது 5:11 தீமோ 5:12 பேது 2:102 தெச 1:3கொலோ 1:2

பணத்தின்மீதான ஆசை

ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், 1 தீமோ 1:31 தீமோ 1:102 தீமோ 4:3ரோம 16:17தீத் 1:92 தீமோ 1:13தீத் 2:1-21 தெச 4:8 அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி, 2 தீமோ 2:232 தீமோ 3:41 தீமோ 3:62 பேது 2:122 தீமோ 2:14யூதா 1:101 தீமோ 1:41 தீமோ 1:7 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு. 2 பேது 2:32 தீமோ 3:5தீத் 1:112 தீமோ 3:8தீத் 1:15-161 தீமோ 6:6ரோம 16:17-181 தீமோ 3:3 போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். எபி 13:51 தீமோ 6:8பிலி 4:11-13நீதி 16:8லூக் 12:31-321 தீமோ 4:8பிலி 1:21நீதி 15:16 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். யோபு 1:21சங் 49:17லூக் 12:20-21பிரச 5:15-16நீதி 27:24லூக் 16:22-23 உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும். எபி 13:5-6மத் 6:11மத் 6:25-33ஆதி 28:20நீதி 30:8-9உபா 2:7பிரச 3:12-13உபா 8:3-4 செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள். 1 யோவா 2:15-17நீதி 15:27நீதி 28:20-221 தீமோ 3:7அப் 8:202 பேது 2:3மாற் 4:19எபே 4:22 பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நீதி 1:191 தீமோ 6:9சங் 32:10நீதி 1:31தீத் 1:11ஏசா 56:11யூதா 1:11மீகா 3:11

தீமோத்தேயுவிற்கு பவுலின் கட்டளைகள்

நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள். 2 தீமோ 2:221 தீமோ 4:122 தீமோ 3:17எபி 12:142 பேது 1:5-7பிலி 4:8-91 கொரி 10:141 கொரி 6:18 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். 1 பேது 5:101 தீமோ 1:181 கொரி 9:25-262 தீமோ 4:7எபே 6:10-18பிலி 3:12-141 தீமோ 6:13வெளி 3:3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி, யோவா 18:36-371 தீமோ 5:21மத் 27:11யோவா 5:21வெளி 1:5வெளி 3:141 சாமு 2:61 தீமோ 2:5 எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். 2 பேது 3:141 பேது 1:71 தெச 5:23எபி 9:28யூதா 1:24பிலி 1:10தீத் 2:131 நாளாக 28:9-10 இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், வெளி 19:16வெளி 17:141 தீமோ 1:17எரே 10:10சங் 47:21 தீமோ 1:11தானி 2:44-47எரே 46:18 அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 தீமோ 1:17யோவா 1:181 யோவா 1:5கொலோ 1:15சங் 90:2யோவா 6:46யாத் 3:14ஏசா 57:15 இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், நீதி 11:28அப் 14:17மத் 19:231 தீமோ 4:10யாக் 1:9-10நீதி 27:24எரே 9:23-24எரே 17:7-8 நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும், எபி 13:161 யோவா 3:17சங் 37:3ரோம 12:8கலா 6:10லூக் 12:21நீதி 11:24-25தீத் 2:14 நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு. மத் 6:19-211 தீமோ 6:122 தீமோ 2:19லூக் 16:91 பேது 1:4கலா 6:8-9நீதி 31:25எபே 3:17 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு. கொலோ 2:82 தீமோ 2:162 தீமோ 1:12-142 தீமோ 3:14-16கொலோ 2:18ரோம 3:21 தீமோ 6:142 தெச 2:15 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென். 2 தீமோ 2:181 தீமோ 1:191 தீமோ 1:61 தீமோ 6:102 தீமோ 4:22கொலோ 4:18மத் 6:13ரோம 1:7