2 நாளாகமம் 16

2 Chronicles 16
அத்தியாயம் 16

ஆசாவின் இறுதி வருடங்கள்

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருடத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான். 2 நாளாக 15:91 இராஜா 12:271 இராஜா 15:16-222 நாளாக 11:13-172 நாளாக 15:5 அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் உள்ள பொக்கிஷங்களிலிருந்து வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வசிக்கிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடம் அனுப்பி: 2 நாளாக 28:212இராஜா 12:182இராஜா 16:82இராஜா 18:15 எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையை முறித்துப்போடும் என்று சொல்லி அனுப்பினான். சங் 15:42 நாளாக 18:32 நாளாக 19:22 கொரி 6:162 சாமு 21:22 தீமோ 3:3யாத் 32:21எசேக் 17:18-19 பென்னாதாத், ராஜாவாகிய ஆசாவுக்கு செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் அனைத்து சேமிப்புக் கிடங்குகளையும் தாக்கினார்கள். 1 இராஜா 15:201 இராஜா 9:192 நாளாக 17:122 நாளாக 8:6யாத் 1:11ஆதி 14:14நியாயாதி 18:28-29நியாயாதி 20:1 இதை பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைக் கைவிட்டான். அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையும் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான். 1 நாளாக 6:601 இராஜா 15:221 சாமு 10:171 சாமு 7:62 நாளாக 21:17ஏசா 10:29யோசு 15:38யோசு 18:24-26 அக்காலத்திலே தரிசனம் காண்கிறவனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய யெகோவாவைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டதால், சீரியா ராஜாவின் படை உமது கைக்குத் தப்பிப்போனது. 1 இராஜா 16:12 நாளாக 19:2ஏசா 31:1சங் 146:3-62 நாளாக 20:342 நாளாக 32:7-8எபே 1:12-131 நாளாக 5:20 மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரை வீரருமுள்ள எத்தியோப்பியரும் லிபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் யெகோவாவைச் சார்ந்து கொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே. 2 நாளாக 12:32 நாளாக 13:162 நாளாக 14:9-122 நாளாக 16:72 நாளாக 13:18சங் 37:39-40சங் 9:9-10 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த, யெகோவாவுடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்தக் காரியத்தில் அறிவில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு போர்கள் ஏற்படும் என்றான். 1 பேது 3:12நீதி 15:3எரே 16:17நீதி 5:21சங் 34:15யோபு 34:21எபி 4:13சகரி 4:10 அதனால் ஆசா தரிசனம் காண்கிறவன்மேல் கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதைத்தவிர அக்காலத்தில் மக்களுக்குள் சிலரைக் கொடூரமாக நடப்பித்தான். 2 நாளாக 18:262 நாளாக 25:162 நாளாக 26:192 சாமு 11:42 சாமு 12:132 சாமு 12:312 சாமு 24:10-14அப் 16:23-24 ஆசாவின் ஆரம்பம்முதல் முடிவுவரையுள்ள செயல்பாடுகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 1 இராஜா 15:23-242 நாளாக 12:152 நாளாக 20:342 நாளாக 25:262 நாளாக 26:222 நாளாக 27:72 நாளாக 32:322 நாளாக 34:18 ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருடத்திலே தன் கால்களில் வியாதி ஏற்பட்டு, அந்த வியாதி மிகவும் அதிகரித்தது; அவன் தன் வியாதியிலும் யெகோவாவை அல்ல, மருத்துவர்களையே தேடினான். எரே 17:52 நாளாக 28:22மாற் 5:261 நாளாக 10:142 நாளாக 16:9யோபு 13:4மத் 9:12மாற் 2:17 ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருடத்தில் இறந்தான். 1 இராஜா 15:24 தைலக்காரர்களால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனைக் கிடத்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்காக வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்செய்தார்கள். 2 நாளாக 21:19ஆதி 50:2எரே 34:5மாற் 16:12 நாளாக 35:24பிரச 10:1யாத் 30:25-37ஏசா 22:16